பங்களாதேஷில் இடைக்கால அரசு அமைக்க ராணுவம் உதவும் - ராணுவ தளபதி ஜென்ரல் வக்கார் உஸ் ஜமோன்

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • பங்களாதேஷில் இடைக்கால அரசு அமைக்க ராணுவம் உதவும் என அந்நாட்டு ராணுவ தளபதி ஜென்ரல் வக்கார் உஸ் ஜமோன் தெரிவித்துள்ளார்.
    பிரதமர் ஷேக் ஹஸீனா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து டாக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் சட்டம், ஒழுங்கு பராமரிப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருப்பதாக கூறினார்.
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
    பிரதமர் ஷேக் ஹஸீனா நாட்டைவிட்டு தப்பி சென்றதை உறுதி செய்த ராணுவத்தளபதி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    இதனிடையே பங்களாதேஷ் போராட்டங்கள் எதிரொலியாக அந்நாட்டை ஒட்டிய இந்திய எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    மேலும், அங்கு நிலைமை சீரடையும் வரை இந்தியர்கள் யாரும் பங்களாதேஷிற்கு செல்ல வேண்டாம் எனவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Komentáře •