திருமூலர் சித்தரின் ஜீவசமாதி # 63 நாயனார்களில் இவரும் ஒருவர்

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • திருமூலர் - பதினெண் சித்தர்களில் ஒருவரும் ,63 நாயன்மார்களுள் ஒருவரும், முதல் சித்தரும் ஆவார்.
    திருமூலர் திருக்கயிலை மலையில் வாழ்ந்திருந்தவர்.
    சிவபக்தர். நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்றவர். சிறந்த சிவயோகி. வேத சாஸ்திரங்களில் தேர்ந்த ஞானி. அகத்தியரைச் சந்திக்கவும், சிவத்தலங்களை தரிசிக்கவும் தென்னாடு வந்தவர். தில்லையம்பதி சென்று பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோருடன் தவம் செய்தவர்.
    திருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
  • Hudba

Komentáře • 1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem

    🙏சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤