Video není dostupné.
Omlouváme se.

எங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojai

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2020
  • 1. திருவிளக்கு பூஜை மந்திரம் - முப்பெரும் தேவியர் அருள் பெற
    விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
    சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
    அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
    குளம்போல எண்ணெய் விட்டு
    கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
    ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
    மாளிகையில் சோதியுள்ள
    மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
    சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
    பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
    புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
    அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
    சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
    வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
    முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
    உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
    பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
    சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
    மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
    கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
    தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
    காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
    மங்கள நாயகியை மனங்குளிர
    கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
    அன்னையே அருந்துணையே
    அருகிருந்து காரும் அம்மா
    வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
    தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
    மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
    2. 108 திருவிளக்கு போற்றி
    பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
    போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
    முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
    மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
    வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
    இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
    ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
    பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
    பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
    பேரருட் கடலாம் பொருளே போற்றி
    முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
    மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
    அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
    ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
    ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
    இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
    மங்கள நாயகி மாமணி போற்றி
    வளமை நல்கும் வல்லியை போற்றி
    அறம்வளர் நாயகி அம்மே போற்றி
    மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
    மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
    தையல் நாயகித் தாயே போற்றி
    தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
    முக்கட்சுடரின் முதல்வி போற்றி
    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
    சூளாமணியே சுடரொளி போற்றி
    இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
    அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
    அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
    இல்லக விளக்காம் இறைவி போற்றி
    சுடரே விளக்காம் தூயோய் போற்றி
    இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
    ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
    அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
    தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
    ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
    ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
    இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
    சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
    பலர்காண் பல்லக விளக்கே போற்றி
    நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
    உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
    உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
    உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
    உள்ளத்தகழி விளக்கே போற்றி
    மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
    உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
    இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
    நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
    ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
    அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
    ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
    தில்லைப் பொது நட விளக்கே போற்றி
    கருணையே உருவாம் விளக்கே போற்றி
    கற்பனை கடந்த ஜோதி போற்றி
    அற்புதக்கோல விளக்கே போற்றி
    அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
    சிற்பர வியோம விளக்கே போற்றி
    பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
    உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
    கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
    உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
    பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
    இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
    அருவே உருவே அருவுரு போற்றி
    நந்தா விளக்கே நாயகியே போற்றி
    செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
    தீபமங்கள் ஜோதி போற்றி
    மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
    பாகம் பிரியா பராபரை போற்றி
    ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
    ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
    ஊழி ஊழி உள்ளோய் போற்றி
    ஆழியான் காணா அடியோய் போற்றி
    ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
    அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
    முந்தைய வினையை முடிப்போய் போற்றி
    பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
    தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
    அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
    இருநில மக்கள் இறைவி போற்றி
    குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
    ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
    தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
    பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
    எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
    அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
    தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
    ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
    ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
    எல்லா உலகமும் ஆனாய் போற்றி
    பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
    புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
    செல்வாய செல்வம் தருவாய் போற்றி
    பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
    உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
    உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
    செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
    நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
    விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
    நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
    தாயே நின்னருள் தருவாய் போற்றி
    தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
    போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
    போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
    போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
    போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

Komentáře • 1,6K

  • @sathyashivam565
    @sathyashivam565 Před 4 lety +147

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. பொறுமையாக ஒரு தாய் மகளுக்கு சொல்லி தருவது போல் எங்களுக்கு தாயாக இருந்து சொல்லி கொடுத்த அன்னைக்கு மிக்க நன்றி.. அம்பிகையின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +14

    மிக்க மகிழ்ச்சி அம்மா, இதைப்போன்ற செய்முறை விளக்கப் பதிவைத் தான் நாங்கள் அதிக விருப்பத்துடன் வரவேற்கிறோம். உங்களால் எங்கள் வாழ்க்கை மிக மங்கலகரமாகவும் பிரகாசமாகவும் மெல்ல மெல்ல மாறிவருகிறது. கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களை நினைக்கிறோம். உங்கள் சேனல் உறுப்பினர்களாக இருப்பதற்கு 'என்ன தவம் செய்தனை...' அம்மா....

  • @udayakumaris5556
    @udayakumaris5556 Před 3 lety +11

    இவளோ பொறுமையா யாராலும் சொல்லித் தர இயலாது......
    நன்றி அம்மா 🙏

  • @arunthyinthu9163
    @arunthyinthu9163 Před 9 dny +3

    ரொம்ப நன்றி அம்மா. 2024 நீங்கள் காட்டிய முறையில் இன்று நான் பூஜை செய்கிறேன்.

  • @nalinadevis4046
    @nalinadevis4046 Před 4 lety +6

    அருமை.ஒரு அம்பாளே நேரில் வந்து திருவிளக்கு வழிபாடு அம்பாளுக்கு செய்வது போல் உள்ளது.வாழ்க வளமுடன். நன்றியம்மா

  • @Lakshmi-nk6th
    @Lakshmi-nk6th Před 4 lety +34

    ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவில் உங்கள் உழைப்பும், எல்லோரும் எளிய வகையில் அறிந்து கொள்ளும் படி தெளிவான பேச்சும், கேட்பவர்கள் மனமறிந்து அதற்குறிய பதிலும், இன்முகமும் பார்த்து தினமும் வியக்கிறேன் .. இந்த ஒரு மில்லியன் சந்தாதாரர் வரும்போது முதல் நபராக வாழ்த்துக்கள் கூற ஆவலுடன் இருந்தேன்💐வாழ்த்துக்கள் 💐 அன்புடன் சகோதரி🌺

  • @nishanthinisenathirajah9376

    மிகவும் எளிமையான முறையில் சாதாரண மக்களும் பின்பற்றக்கூடிய வகையில் மிக சிறப்பான விளக்கங்களுடன் செய்து காட்டுனீங்க,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @megalaloganathan3079
    @megalaloganathan3079 Před 4 lety +3

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக அமையந்தது கிடைத்த பாக்கியம்.
    நீங்கள் செல்லும் ஆடி வெள்ளி கிழமை பூஜை நன்றாக செய்து வருகிறேன் அம்மா.
    வாழ்க உங்களின் சேவை...

  • @manjushree1395
    @manjushree1395 Před 4 lety +11

    அற்புதம் அக்கா.நீங்கள் செய்த பூஜையை பார்த்ததே மிகுந்த மனநிறைவாக உள்ளது.மிக்க நன்றி

    • @hemapriyad2428
      @hemapriyad2428 Před 3 lety

      സദസദദസസസസതതസതസതതതത

  • @sarithak4074
    @sarithak4074 Před 4 lety +6

    மிக்க மகிழ்ச்சி அம்மா தெரியாத தகவல்களை செய்முறையாக தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி...

  • @arunmozhia8647
    @arunmozhia8647 Před 3 lety +4

    அம்மா மிக அருமையான நுணுக்கமான செயல் முறை விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. குருவே சரணம்.

  • @kishantini747
    @kishantini747 Před 3 lety +2

    வணக்கம் அம்மா. நான் விஜயா மலேசியாவிலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களின் வழிகாட்டியின்வழி நான் இன்று முதல் முறையாக விளக்குப் பூஜையைச் சிறப்பாக செய்து முடித்தேன். நான் உங்களின் தீவிர ரசிகையாவேன்.

  • @beautyofnature6247
    @beautyofnature6247 Před 4 lety +7

    நன்றி...கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை தரவும்👍🌷

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 Před 3 lety +5

    முதன் முறையாக வீட்டில் திருவிளக்கு பூஜை செய்தது நிறைவாக இருந்தது, மிக்க நன்றி

  • @kiruthikakathirvel7144
    @kiruthikakathirvel7144 Před 4 lety +3

    வாழ்க வளமுடன் Madam!!
    வணக்கம் Mam... உங்களின் தமிழ் இனிக்கிறது... நான் கல்லூரி விடுமுறை நாட்களில் பொதிகைத் தொலைக்காட்சியில் மதியம் 3 மணியளவில் நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்கத் தொடங்கினேன்.... நான் அப்போதிலிருந்தே உங்களின் பேச்சுத் திறனைக் கேட்டு வியந்து இருக்கிறேன்..
    இப்போதும் தினமும் கேட்கிறேன் ஆத்ம ஞான மையமில்..
    துவண்டு இருப்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டால் உற்சாகமாகி விடுவார்கள்..
    திருப்பாவை
    திருவெம்பாவை
    நாயன்மார்கள் வரலாறு
    அபிராமி அந்தாதிப் பாடல்கள்
    தாங்கள் விளக்கும் முறை அற்புதம்....
    உங்களின் ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    இறைவனின் திருவருளால்
    உடல்நலம்
    நீண்ட ஆயுள்
    நிறை செல்வம்
    உயர்ந்த புகழ்
    மனமகிழ்ச்சி
    பெற்று
    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்....
    நல்லவையெல்லாம் உங்களை நாடிப் பெறுகிட வேண்டும்..

  • @jpmithra1341
    @jpmithra1341 Před 2 lety +5

    அறிவாற்றல் பேச்சாற்றல் திறமஐயில் உங்களை போல் இன்னொருவர் மண்ணில் இல்லை ,,,

  • @Dhanyasdynamicframes
    @Dhanyasdynamicframes Před 4 lety +9

    அம்மா நான் உங்களை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். நன்றி🙏💕

  • @reshreshma5190
    @reshreshma5190 Před měsícem +3

    Romba romba romba Nandri Amma 🙏🙏🙏🙏first time thiruvilaku Pooja seiya poren 🙏🙏🙏🙏🙏Shivaya Namah🙏🙏🙏🙏

  • @senthilraja385
    @senthilraja385 Před 3 měsíci +1

    வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சேலத்தில் இருந்து உங்கள் சகோதரன் பேசுகிறேன் தாங்கள் செய்து காட்டிய திருவிளக்கு பூஜை மிகவும் அற்புதமாக உள்ளது தாங்கள் பூஜை செய்த விதமும் எங்களுக்கு எடுத்துக் கூறிய விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது எங்களின் ஆழ் மனதில் அப்படியே பதிந்து விட்டது நல்லதொரு பதிவை தந்த சகோதரிக்கு அண்ணனின் ஆசி கலந்த அன்பும் வணக்கமும் நன்றியும்

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 4 lety +1

    கலையாத கல்வியும்... சந்தேகம் கொண்டேன் அருமையான விளக்கமளித்த்ர்கள் அம்மா,மிக்க நன்றி🙏🙏 வாழ்க நீங்களும் உங்கள் திருத்தொண்டும் 🙏🙏

  • @sandhiyam8773
    @sandhiyam8773 Před 4 lety +10

    அம்மா சொல்வதற்கு வார்த்தையே இல்லை அம்மா கொரானா காரணமாக கோவிலுக்கு போக முடியவில்லை என்ற குறை இருந்தது அந்த குறை தீர்ந்தது கொரானா வந்ததும் நல்லது தான் ஏன் என்றால் நீங்கள் ஓய்வாக இருப்பதால் தான் இந்த பதிவு எல்லாம் போடுகிறீர்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் நன்றி அம்மா

  • @saravanane1605
    @saravanane1605 Před 3 lety +3

    நன்றி சகோதரி உங்களின் வழிகாட்டுதலின்படி இந்த பூஜையை எங்கள் இல்லத்தில் இன்று செய்ய உள்ளேன்🙏

  • @dharanimahendhiran9344
    @dharanimahendhiran9344 Před 4 lety +2

    மிகவும் அருமையான பதிவு நாங்களும் பூஜைகள் நடைபெறும் போது இங்கு இருந்து சாமி தரிசனம் செய்தனர் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sathyamk8sathyamk584
    @sathyamk8sathyamk584 Před 4 lety +5

    தெளிவான பதிவு. மிகவும் அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 Před měsícem +4

    மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் அம்மா

  • @saranyamurali5795
    @saranyamurali5795 Před 4 lety +7

    கை நிறைய வளையல் போட்டு மிகவும் அழகாக இருக்கின்றீர்கள் அக்கா

  • @lalithap.m.sivanesanp.m7854

    அருமையான விளக்கம். அன்பு அகலாத கணவனும் என்று பாடலாமா என்பதை யார் யாரிடமோ கேட்டேன். ஆனால் விளக்கம் இன்று உங்களிடம் கிடைத்தது. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த ஐயங்கள் நீங்கின. நன்றி அம்மா.

  • @ezhil2395
    @ezhil2395 Před 3 lety +3

    மிக்க நன்றி மா . மிக பொருமையாக அருமையாக அழகாக எளிமையாகவும் சொல்லி இவ்வுலக நன்மைக் கருதி செய்த பூஜை மிக மிக பயனுடையதாக அமைந்தது.

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b Před 4 lety +16

    Plz plz plz வேல் பூஜை எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 Před 3 lety +4

    Today I did vilaku poojai in my home...it was a divine experience ....followed all your advice ka....remba remba thanks

  • @saraswathi3634
    @saraswathi3634 Před rokem +1

    இன்று ஆடி முதல் வெள்ளி. நன்றி muthalmuthalaga செய்கிறேன் வாழ்த்துங்கள் அம்மா 🙏🙏🙏🙏. எளிமை யான பதிவு.🙏🙏🙏🙏

  • @karkuvel1992
    @karkuvel1992 Před 3 lety +2

    இன்று குரு தினம் அம்மா எங்களை ஆசிர்வதித்து அருளை வேண்டும் அம்மா வணக்கம் நன்றிகள் கோடி

  • @vairamranjitham2266
    @vairamranjitham2266 Před 4 lety +4

    இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அக்கா🙏🙏🙏

  • @sornambigair8531
    @sornambigair8531 Před rokem +3

    Mugam niraitha sirippodu amma intha pathivu arumaii with yellow saree antha Lakshmi devii yee pesura mathri irukku maa be blessed with long life maaa

  • @aksami5688
    @aksami5688 Před 3 lety

    அன்பு சகோதரிக்கு, எங்களின் வீட்டில் திருவிளக்கு பூஜை செய்த நிறைவை தந்தது தாங்கள் செய்த திருவிளக்கு பூஜை.மிகவும் நன்றிம்மா. 🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 2 lety +2

    குத்து விளக்கு பூஜை முறைகளைப் பற்றி கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.

  • @rajeshwarinithiyadev3045
    @rajeshwarinithiyadev3045 Před 4 lety +3

    Amma romba nandrima ithu mathiri innum pala payanulla pathivugal thodarnthu tharungal ungalai pola suththa vilakkamaga yarum kooruvathillai itharku miga nanri

  • @jaisudhas656
    @jaisudhas656 Před 4 lety +3

    நன்றிகள் பல🙏🌸🌼🌸🙏எளிமையாகவும் சிறப்பாகவும் வீட்டில் செய்ய மிக உதவியாக இருக்கிறது

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 2 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வாழ்விலும் விளக்கேற்றி இருளகற்ற வழி காட்டி உதவிய குருவே ! உள்ளத்திலும் இல்லத்திலும் நீங்கா இடம்பெற்ற அம்மா மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @harinishreer2447
    @harinishreer2447 Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா. எங்கள் வீட்டில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.மிகவும் மகிழ்ச்சி.

  • @priyam.s9884
    @priyam.s9884 Před 4 lety +3

    First time I m gng to do this pooja ma..after watching your varalakshmi pooja video I also did the same ma...very much thank u...after the pooja is over white cow came to our home..I wanted to share this with u..nw I have planned to do thiruvilakku pooja..

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 3 lety +6

    மிக்க நன்றி அம்மா நாளை நான் முதன் முதலாக செய்யப்போகிறேன் நீங்கள் சொல்லிதந்தவறே 🙏🙏🙏🙏🙏

  • @jeyaramanraman5760
    @jeyaramanraman5760 Před 3 lety

    😘அம்மா அருமையான விளக்கம். நாங்கள் உங்களால் அம்பாளின் அருளைப் பறிபுரனமாக பெற்றோம்🙏🙏. உங்களை நேரில் காணும் வாய்ப்பு எங்களுக்கு வர வேண்டும் அம்மா. நன்றி அம்மா🙏. Love you amma😘

  • @saranyarajendiranjssaro1728

    மிக்க நன்றி அம்மா😍 என் வீட்டில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது உங்களின் பதிவுபடி

  • @lobguide3809
    @lobguide3809 Před rokem +2

    I did the Thiruvilakku poojai according to this video.Thank you so much.

  • @rsnchannel6144
    @rsnchannel6144 Před 3 lety +4

    Romba clear ah soilurenga mam thanks mam

  • @rameshkavitha9142
    @rameshkavitha9142 Před 4 lety

    அம்மா நான் எங்க வீட்டில் முதல் முறையாக விளக்கு பூசை செய்தேன் ரொம்ப நன்றி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mahalakshmikpm9470
    @mahalakshmikpm9470 Před 4 lety

    Thank u so much mam.. nenga pooja panratha pakara pothu antha ammana pakara mathiri iruku. Enaku neraya positive thoughts varuthu. Mikka nanri..

  • @muthumari1240
    @muthumari1240 Před rokem +4

    Antha mahalakshmi ye neril vanthu solra Mari iruku sister nenga avlo supera irukenga. Eanaku ungalai romba pudikum❤

  • @Tulasi586
    @Tulasi586 Před 4 lety +6

    இது போல எல்லா வீடியோவும் செய்முறை செய்து காட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @kulanthaikalumarokkiyamum1544

    நீங்கள் செய்த முறையில் நானும் வீட்டில் பூஜை செய்தேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது 🙏🙏🙏 நன்றி அம்மா

  • @devisabapathi4205
    @devisabapathi4205 Před 3 lety

    மிகவும் எளிமையான முறையில் தெளிவாக விளக்கம் அளித்த அம்மாவிற்கு நன்றி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @varahivarahi7836
    @varahivarahi7836 Před 4 lety +3

    கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
    பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b Před 4 lety +29

    உங்களுடைய அடுத்த பதிவு வேல் பூஜை பற்றியதாக இருக்க வேண்டும் அம்மா

  • @kanikak5040
    @kanikak5040 Před 2 měsíci

    அற்புதம் அம்மா! இறை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
    ஓம் மகா சரஸ்வதியை நமஹ!
    ஓம் மகா லட்சுமியை நமஹ!
    ஓம் மகா தேவியை நமஹ!

  • @varathanpriya6954
    @varathanpriya6954 Před 3 lety +2

    Mikka nandri Amma,.payanulla tagaval.vilakku pujai video,manathirku megavum or amaitheyai tandathu.

  • @veerag580
    @veerag580 Před 4 lety +5

    குரு மாதா ரொம்ப அழகா பூஜை செய்திர்கள் அழகாகவும் இருந்தீர்கள்

  • @ranjithadevi4900
    @ranjithadevi4900 Před 3 lety +6

    Neengale amman mari deiva kadaksham ah irukinga..💐💐

  • @vallikannuvairavan2311
    @vallikannuvairavan2311 Před 4 lety +2

    .அருமையாக இருந்தது ரொம்ப அருமையாக செய்து கான்பித்ததற்கு நன்றி அம்மா

  • @sarveshramsarvesh6455
    @sarveshramsarvesh6455 Před 2 lety +2

    உங்களுடைய தகவல்கள் பூஜை முறைகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது மிக்க நன்றி

  • @mahachandran9174
    @mahachandran9174 Před 4 lety +4

    1M subscribers reached!!! வாழ்த்துக்கள் குரு மாதா 👏👏

  • @kannank.b5757
    @kannank.b5757 Před 4 lety +4

    உங்க பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு

  • @anbuselvik5430
    @anbuselvik5430 Před 3 lety +1

    சினேகிதி எனக்கு எப்பவும் உங்கலை குருவாக ஏற்று கொன்டு உள்ளேன் இன்று உங்களுக்கு என்னுடைய நன்றி சகோதரியே நன்றி நன்றி நன்றி,

  • @selvimadhavan2445
    @selvimadhavan2445 Před 4 lety +1

    திருவிளக்கு பூஜை மிக அருமை.நன்றி🙏🙏🙏

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b Před 4 lety +16

    வேல் பூஜை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @sakthimalar2013
    @sakthimalar2013 Před rokem +3

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @deepthij2893
    @deepthij2893 Před 4 lety +1

    How these people r disliking the wonderful and devotional videos really don't no Amma 🙏🏻 ur really super ma

  • @radham279
    @radham279 Před 2 lety +2

    Lots of thanks, for giving clear explanation with complete patience and tolerance.
    Thank you, ma'am!

  • @kavithamurugesan6170
    @kavithamurugesan6170 Před rokem +3

    அருமை அம்மா

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 Před 2 lety +2

    Migavum அருமை amma... அப்டியே mei slirka vaithu vitirkal amma... Thangal teivakadatcham udaiyavar amma.... Nengal pallsndu வாழ வேண்டும் amma

  • @rmhvl7142
    @rmhvl7142 Před 4 lety +1

    மிக சிறப்பாக இருந்தது அம்மா.நன்றி.உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @Lakshika-p56
    @Lakshika-p56 Před rokem +1

    அருமை அம்மா.நாங்களும் எங்கள் வீட்டில் திருவிளக்கு பூஜை செய்து அம்பிகையின் அருள் பெற வேண்டும் என்று நினைத்த நின் அருள் தொண்டு ஓங்கி வளரட்டும்.வாழ்க வளமுடன்.நன்றி

  • @varahivarahi7836
    @varahivarahi7836 Před 4 lety +12

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே!

  • @sudhab1645
    @sudhab1645 Před 4 lety +14

    மேடம் உங்கள் பூஜை அறையை காட்டுங்க

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 2 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான அற்புதமான பயனுள்ள பதிவு அம்மா ! மகாலெஷ்மி தங்கள் வீட்டில் எழுந்தருளி, திருவிளக்கு பூஜை செய்தது போல உள்ளது அம்மா ! குருவாக திருவிளக்கு பூஜை வழிபாடு செய்யும் வழிமுறைகளை சொல்லி தந்தருளியுள்ளீர்கள் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @ravikumarankm7720
    @ravikumarankm7720 Před 3 lety +2

    அம்மா..... எங்கள் வீட்டில் இந்த பூஜை நல்லபடியாக செய்து விட்டோம்.. 🙏🏻

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 Před rokem +1

    Ivlo theliva yaralaum solla mudiyathu thank you ma

  • @kavitasuthahar3800
    @kavitasuthahar3800 Před 4 lety +7

    Madam Can we see your Pooja room please

  • @priyamuthu4831
    @priyamuthu4831 Před 3 lety

    நன்றி அம்மா. ஆன்மிக தகவல்களை அள்ளி வழங்கும் குருவுக்கு நன்றி அம்மா. எங்களை வாழ்த்துங்கள் அம்மா

  • @anidharma
    @anidharma Před 3 lety +2

    மிக்க நன்றி சகோதரி. உங்கள் சேவை தொடர அம்பிகை அருள் செய்ய வேண்டுகிறேன்

  • @htmlbasic9673
    @htmlbasic9673 Před 4 lety +5

    I was waiting for long time ma.i was keep asking people. No one said.by gods grace u uploaded this video.thank u mam

  • @saganavisaka7125
    @saganavisaka7125 Před 4 lety +3

    நன்றி அம்மா

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 4 lety +1

    அருமை பிரமாதம்..சூப்பர்..நல்லா சொல்லிக் கொடுத்திட்டீங்க...🙏

  • @baskaranekbaskaranek9321
    @baskaranekbaskaranek9321 Před 2 lety +1

    🌹மிகவும் சிறப்பான விரிவான விளக்கமான மிகதெளிவான பதிவு அருமை 🙏🏻

  • @aswinianand7464
    @aswinianand7464 Před 3 lety +6

    அம்மா தினசரி பூஜை முறை பற்றி ஒரு செய்முறை பதிவு தாருங்கள். எப்பொழுதெல்லாம் மணி அடிக்க வேண்டும். நெய்வேத்தியம் சுற்றி நீர் விடுவது.

  • @pkvetrivel-2977
    @pkvetrivel-2977 Před 3 lety +3

    Thanks a lot sister

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 4 lety +1

    I was blessed by your Prayer 🙏🙏🌹👏👏🌹🌹❤❤🌹🌹

  • @veerakumar6118
    @veerakumar6118 Před 4 lety +4

    Super akka manasukku ethamaka eruntusi akka

  • @kokilasubramanian8037
    @kokilasubramanian8037 Před 4 lety +5

    அம்மா பூஜை அறையில் சாமி கும்பிடும் பொழுது கீழே இருக்கும் தீபத்தில் ஊதுபத்தி பத்த வைக்கும் பொழுது கீழே இருக்கும் தீபத்தில் நைட்டியில் லேசாக தீப்பிடித்தது மனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது... எனக்கு பலன் சொல்லுங்கள்...

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +6

    உங்கள் முன் உள்ள அந்த பிரம்மாண்ட குத்து விளக்கைப் பற்றி கூறுங்கள். அதில் தீபம் ஏற்ற உகந்ததா அல்லது காட்சிப் பொருளா?‌ அதன் விலை என்ன?

  • @valliammalnalliannan2742
    @valliammalnalliannan2742 Před 4 lety +1

    அருமை ...அம்மா உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @babaiyermanispiritualandpo2062

    Energetic stronger and more powerful orator and presentation.

  • @kanika5951
    @kanika5951 Před 3 lety +4

    * விளக்கு பூஜை ...............!
    * செயல்முறை விளக்கம் .....
    * எளிமை! அருமை ! அற்புதம்!
    * பலருக்கும் பயன்படும் இப்பதிவு .......................
    * ஒரு பொக்கிசமே !
    * நன்றி அம்மா !
    * ஒரு சந்தேகம்!
    * ஐயப்ப பூஜையில் .............
    ஐயன் மார்கள் விளக்கு பூஜை செய்வது போல .............
    * வீட்டிலும் பூஜை செய்யும் அனுபவம் உள்ள ஆண்கள் .................
    * இந்த திருவிளக்கு பூஜை செய்திட .......................
    * நமது கலாசார பண்புகளில் அனுமதி உண்டா அம்மா!
    * பதில் வேண்டுகிறேன் தாயே!
    * நன்றி !

  • @suganthimurugananthan1059

    Can we use the once used kumkum again for another thiruvizhakku poojai?

  • @user-uo4tj5eb3j
    @user-uo4tj5eb3j Před rokem +2

    அருமையான பதிவு மிக்க நன்றி தோழியே❤❤❤❤❤

  • @selvakumarumadevi3307
    @selvakumarumadevi3307 Před 4 lety +1

    Thank you very much madam.
    I m watching your all poja and other and following accordingly. Thank you.

  • @hasinim4893
    @hasinim4893 Před 3 lety +7

    மா விளக்கு ஏற்றுவது பற்றி ஓரு தெளிவான விளக்கம் சொல்லுக் அம்மா ஆடி மாதம் வரும் முன்பு

  • @kalaidivya1439
    @kalaidivya1439 Před 4 lety +5

    இதே மாறிசங்கட சதுர்த்தி பூஜை செஞ்சு காமிங்க ப்ளீஸ் அக்கா

  • @dhatchinamoorthysubramani9930
    @dhatchinamoorthysubramani9930 Před měsícem +2

    மிக மிக சிறப்பு ஓம்

  • @karthikasankar471
    @karthikasankar471 Před 3 lety +1

    மிக மிக தெளிவான பதிவு அம்மா.. மிக்க நன்றி