Malaysia Vasudevan பாடுவதை நிறுத்தியது ஏன்? Alangudyv ellaichamy உடைக்கும் உண்மைகள்.! Jeeva Cinema

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2024
  • #jeevacinema #malaysiavasudevan #alangudyvellaichamy #malaysiavasudevanhits #tamilcinemanews #cinemaupdates
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 188

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 5 měsíci +21

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @suku-jz8vt
    @suku-jz8vt Před 5 měsíci +55

    மலேசிய வாசுதேவன் குரலில்
    புதுக்கவிதை படத்தில் வா வா வசந்தமே பாட்டு மிகவும் அருமையாக இருக்கும்.

    • @donaldxavier6995
      @donaldxavier6995 Před 5 měsíci +3

      உண்மை தான் அந்த பாடலை பற்றி பேசுவார்கள் என்று நினைத்தேன்.

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te Před 5 měsíci +25

    அய்யா மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே தேன் தேன்தான்

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Před 5 měsíci +24

    மிக அருமையான உரையாடல். மலேசியா வாசுதேவன் தனித்தன்மை கொண்ட குரலோன். ராகங்கள் தொடுகை உள்ள பாடல்களில் அவர் வீச்சு, புரிதல் பிரமிப்பானது. நாட்டுப்பாடல்கள் சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்துவார். உச்சரிப்பில் தனக்கென்று பாணியை கடைபிடித்தவர்.
    பொத்துகிட்டு ஊத்துதடி வானம் என்ற பாடலில் அவர் பாடிய நயம் - வார்த்தை உச்சரிப்பு மற்றும் இசை நுணுக்கம் - ஆஹா போட வைக்கிறது.
    சுகராகமே பாடலில் முதலில் சி எஸ் ஜயராமன் பின் இரண்டாவது சரணத்தில் டி எம் எஸ் ஐ சற்றே ஒட்டி அழுத்தமாக ஆனால் தன் குரலின் அழகையும் காட்டியிருப்பார். அவர் பாடய அனைத்து பாடல்களும் சூப்பர் தான். சற்றே கரகரப்பான மென்மை காட்டும் குரல் - அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா பாடல் ஒரு உதாரணம்.
    கடைசி வரை சிவாஜிக்கு டி எம் எஸ் பின்பு, எஸ் பி பி பொருந்தவே யில்லை. மலேசியா தான் அதைப் பூர்த்தி செய்தார்.
    மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் பாடல் ஒரு மைல்கல். ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு சுகமானது.
    என்றென்றும் ஆனந்தமே பாடல் - சரசாங்கி ராகத்தில் மேற்கத்திய இசை கோர்ப்பு (bass guitar top grade) இவர் பாடிய style ஒரு உச்சம்.
    இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. ❤❤

  • @rajakumaran4355
    @rajakumaran4355 Před 5 měsíci +12

    அய்யா மலேசியா வாசுதேவனின் வாழ்நாள் ரசிகன் நான்....

  • @ShanthiShanthi-uy4jr
    @ShanthiShanthi-uy4jr Před 3 měsíci +2

    மலேஷியா வாசுதேவன் குரலில் பூங்காத்து திரும்புமா பொன்மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் பாடல் என்றும் மறக்க முடியாத பாடல்கள்.❤❤❤

  • @govindt4219
    @govindt4219 Před 5 měsíci +13

    நீ இன்டெர்வியூக்கு கூப்பிட்ட மனிதர்களில் உருப்படியான மனிதர் இவர் மட்டும் தான். நல்ல interview

  • @balajee5003
    @balajee5003 Před 5 měsíci +17

    Malaysia Vasudevan is under rated singer. My favourite singer

  • @gunaseger
    @gunaseger Před 5 měsíci +13

    Malaysia Vasudevan great singer,lengend ❤

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k Před 5 měsíci +11

    இவரின் போராடடா
    ஒரு வாளேந்தடா
    மிக முக்கியமான பாடல்

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Před 5 měsíci +12

    எங்க கேப்டனுக்கு பொன்மனச்செல்வன் படத்தில் மலேசியாவும் மனோவும் இணைந்து பாடிய "நீ பொட்டு வச்ச தங்ககுடம் " என்னோட ஆல்டைம் ஃப்பேவைரைட் .

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před měsícem +2

    எனது அருமை அண்ணன் மலேசியா வாசுதேவன் ஐயாவின்
    பல தகவல்களை வழங்கிய
    தொகுப்பாளர்கள் உனக்கு அனைத்து மலேசியா வாசுதேவன்
    ரசிகர்கள் சார்பில் நன்றி
    யானைக்கும் அடிசறுக்கும்
    சில தகவல்களில் சிறு தவறுகள்
    ஆயிரம் நிலவே வா பாடல்
    இடம்பெற்ற படம் அடிமைப்பெண்
    கல்யானராமன் பட டைரக்டர்
    G.n.ரங்கராஜன்
    M.g.r.க்கு நல்லதை நாடு கேட்கும்
    படத்தில் வாசு சார் ஒரு பாடல்
    பாடியிருக்கிறார்
    காதல் வைபோகமே பாடல் இடம்
    பெற்ற படம் சுவரில்லாத சித்திரங்கள்
    கராத்தே மணி பல வருடங்களுக்கு முன்பே மறைந்து விட்டார்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 5 měsíci +24

    ஆசை நூறு வகை song தான் பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பியது. அதிசய பிறவி முழுவதும் மலேசிய வாசுதேவன் தான்

  • @AbdulKader-ns4ri
    @AbdulKader-ns4ri Před 5 měsíci +60

    தண்ணீ கருத்துடிச்சு,ஆகாய கங்கை,ஆசை 100 வகை, வான் மேகங்களே,கூடையில கருவாடு,பட்டு வண்ணச்சேலைக்காரி,பூங்காற்று திரும்புமா? இன்றும் ரசிக்கிறோம்

  • @rrao7963
    @rrao7963 Před 5 měsíci +13

    Malaysia vasudevan great singer unfortunate didnt get the recognition as other singers

  • @anbusekar7544
    @anbusekar7544 Před 5 měsíci +4

    நீங்கள் இருவரும் பேசும் போது என்னை அந்த நாள்களுக்கு கொண்டு சென்றது நன்றி வாழ்த்துக்கள்

  • @ranand9395
    @ranand9395 Před 5 měsíci +9

    Big fan of malaysia vasu❤

  • @sadasivank6082
    @sadasivank6082 Před 5 měsíci +6

    Malaysia Vasudevan was a man with a magnetic voice. Immortal voice.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 4 měsíci +2

    மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பாடலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் மலர்களே நாதஸ்வரங்கள் இந்தப் பாடல் ஓராயிரம் முறை கேட்டாலும் சலிக்கவே செய்யாது

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 5 měsíci +3

    ❤ 🎉💐 என்றும் மலேசியா வாசுதேவன் சார் பாடல்கள் இனிய மனிதன் மனிதன் 🙏👌🤠

  • @JA-qp9oh
    @JA-qp9oh Před 5 měsíci +12

    Semma Jolly interview 🎉

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Před 5 měsíci +6

    Singer MV is a great singer his Tamil pronouncing is pure after TMS.

  • @PVtvg
    @PVtvg Před 4 měsíci +3

    ஆகாய கங்கை, ஒரு தங்க ரதத்தில்.....🎉🎉❤❤❤

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 5 měsíci +5

    மலேசியா வாசுதேவன் அவர நோக்கி என்னை.த்திரும்ப வைத்தது சட்டகிழிஞ்சுட்டா தச்சிமுடிசிடலாம் நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்கு முறையிடலாம்!?.........😢 வரிசையா கவனிக்க ஆரம்பித்தேன்😔😔😢

  • @san8672
    @san8672 Před 5 měsíci +3

    தோழர்கள் இருவரின் உரையாடல் அருமை❤

  • @sridharan8571
    @sridharan8571 Před 5 měsíci +2

    Malaysia vasudevan great singer and I like his attitude towards respecting senior singers

  • @user-qe5rd8mb2b
    @user-qe5rd8mb2b Před 5 měsíci +7

    மலேசியா சாறு பாட்டு எல்லாமே சூப்பரா இருக்குங்க அருமையான குரல் வளம் உள்ள மனிதன்

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Před 5 měsíci +5

    ரங்கா படத்தில் நடிகர்கள் ரவீந்தர், சில்க் ஸ்மிதா இருவருக்கும் ஒரு பாடல் உள்ளது அழகான பட்டுப் பூச்சி ஆடை கொண்டது, இப் பாடல் வாசுதேவன், சுசிலா இருவரும் பாடியிருப்பார்கள் ள, SPB யும் வாசுதேவன் இருவரும் சங்கர் கணேஷ் இசையில் பாடிய நான் ஒரு கோவில் நீ ஒரு தெய்வம் என்ற நெல்லிக்கனி படத்தில் இடம்பெற்ற பாடல் அருமையான பாடலாகும்

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Před 5 měsíci +4

    மலேசியா வாசுதேவன் நடிக்கத்தான் இந்தியா சென்றார். அவர் குடும்பமே கலைக் குடும்பம் இங்கு எங்கள் நாட்டில்.

  • @user-jc7rm5pd5h
    @user-jc7rm5pd5h Před 5 měsíci +3

    மலேசியா வாசுதேவன் குரல் ரஜினிக்கு மிக பொருத்தம்
    ஒரு தங்க ரத்த்தில்
    வா வா வசந்தமே
    வென்மேகம் மண்ணில்

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Před 4 měsíci +2

    TMS ன் கம்பீரக்குரலும் SPBயின் கொஞ்சலும் குழைவும் கலந்த அருமையான காந்தர்வக் குரல்தான் மலேசியா வாசுதேவன் அவர்களின் நடிக்கும் குரல்

  • @ragavik2696
    @ragavik2696 Před 5 měsíci +3

    Ennaku Romba pidicha Paadal Nila Kayuthu neram Vetti veru vassam Song🎉🎉❤❤

  • @RameshThamizpiriyan
    @RameshThamizpiriyan Před 5 měsíci +6

    ஆர் வி டி மணி என்கிற கராத்தே மணி காலம் ஆகிவிட்டார் சினிமாவை விட்டு விலகியதும் சில ஆண்டுகாலம் இந்திய ராணுவ துறைக்கு கராத்தே பயிற்சியாளராக பணியாற்றினார் இந்த நிகழ்வை அவரே பொதிகை தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தது

  • @tmrlingam
    @tmrlingam Před 3 měsíci

    ஆலங்குடி always ALL IN ONEகுடி of தமிழ் Cinema 🎉🎉🎉

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Před 4 měsíci +1

    அருமையான காணெளி
    பார்க்க கேட்க நன்றாக இருந்தது வாசு தேவன் போல் அவர் பாட்டு பாடிகாட்டினர்கள் அருமை

  • @rajancroos4210
    @rajancroos4210 Před 4 měsíci +1

    அற்புதமான பாடல் விமர்சனம். இதேபோல், நாளை நமதே படத்தில் TMS & SPB இரட்டைக் குரலில் வந்த, பாடலைப்பற்றியும் தங்கள் விபரிப்பை எதிர்பார்க்கின்றோம்.

  • @kpsy048
    @kpsy048 Před 5 měsíci +6

    *ஆகாய கங்கை* ❤

  • @ssmusicbreeze544
    @ssmusicbreeze544 Před 4 měsíci +1

    கோடைகால காற்றே என்று பாடலில் அவர் குரலில் ஊட்டியின் குளிரை பாடலில் பிரதிபலிக்க செய்த ஒரே பாடகர் மலேசியா மட்டுமே
    ஆசை நூறு வகை பாடாத இசை கச்சேரி இன்றுவரை கிடையாது

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn Před 5 měsíci +9

    எஜமான் காலடி மண் எடுத்து ,❤❤❤

  • @sasikala5949
    @sasikala5949 Před 5 měsíci +6

    Jeeva you are singing beautiful ly

  • @InbarajaRaja
    @InbarajaRaja Před 4 měsíci +1

    Maaveeran all songs malesiyaa sir ❤❤❤❤❤

  • @arula9794
    @arula9794 Před 5 měsíci +3

    Its genius of Ilayaraja to introduce different voices from the usual, that how we got Malaysia Vasudevan 🙏👌

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 4 měsíci +2

    கராத்தே மணி மறைந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆயிடுச்சு ! தனது 58 ம் வயதில் மறைந்து போனார் ! ஏறத்தாழ அதே காலத்தில் தனது 64 வயதில் மலேசியா வாசு மலேசியாவிலேயே மறைந்தார் ! மிகச்சிறந்த கலந்துரை ! மலரும் நினைவுகள்👍🙏💥

  • @ragavik2696
    @ragavik2696 Před 5 měsíci +9

    Hai Jeeva Anna 🎉🎉🎉❤❤❤❤

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Před 5 měsíci +9

    My country man, beautiful voice.

  • @suryaprakash72771
    @suryaprakash72771 Před 5 měsíci +3

    Proud to say that MV is from my country
    💪🏿💪🏿💪🏿

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y Před 5 měsíci +7

    Mr. Please invite your Guest with "Vanakkam Sir" not with mere "Vanakkam". If us justified, please accept, if you do not accept, please leave it. It is upto you. Thank you. You are such a Hard worker that I have ever witnessed thro" your Videos. It also highly-rated on Social awareness, Social equality and an all this. Hats off to you for your tireless work. Still so many Good things on your way. GOD BLESS YOU MY CHILD. THANK YOU.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 5 měsíci

      என்னா ஒரு சந்தோஷதருணம்!! I too like to bless the youngesters!! வாழ்க!! வளர்க!! வெல்க!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UnKnown-sw8qq
    @UnKnown-sw8qq Před 4 měsíci +1

    அண்ணன் மலேசியாவின் மந்திரக் குரல் ❤❤❤

  • @mohanpn1875
    @mohanpn1875 Před měsícem

    Malasyia Vasudevan was a wonderful singer.. His voice is mesmerizing.. Folk songs.. Only he can sing with such perfection.. His Tamil pronounciation is super after great TMS.. Always a pleasant & humble person ... My respects to this legend.. Prof. Mohan ( Retd.).. 🙏.. Discussion between these two respected persons very interesting & valuable... Best wishes..

  • @bharat4282
    @bharat4282 Před 5 měsíci +3

    25 years iam waiting for this interview, and this 25 years i think why no one speak about malisiya Vasudevan sir talent. Now god given this opportunity see this video.

  • @bharat4282
    @bharat4282 Před 5 měsíci +3

    I am realy mesmerized and stunned due to how he have different type of voice in one throat, and how he give 101% output in is work realy god given this talent.

  • @divanetcorner
    @divanetcorner Před 5 měsíci +4

    கரும்புவில் படத்தில் இடம்பெற்ற "மலர்களிலே ஆராதனை" என்ற மிக கடினமான அழகான பாடலைப்பற்றி பேசுவீர்கள் என்று நினைத்தேன். தவற விட்டுவிட்டீர்களே....... ஐயா.....
    😪😪😪😪😪😪😪😪😪

  • @bharat4282
    @bharat4282 Před 5 měsíci +3

    Orukutu killiyaga song continuesly i heared morethan 1 year. Vervai adhu sindamal velli panama, this word thought a lot to me.

  • @vanikaedward1793
    @vanikaedward1793 Před 5 měsíci +4

    Nalla paadureenga nalla iruku. Nice interview

  • @selvams485
    @selvams485 Před 4 měsíci +2

    அள்ளித்தந்தவானம்அன்னையல்லவா.மனதைபிசையும்பாடல்

  • @RameshM-tu6ot
    @RameshM-tu6ot Před 5 měsíci

    ஜீவா சார், song - ல் உங்கள் இன்னொரு அற்புதமான face தெரிகிறது. Very super 🌹இன்னும்
    நிறைய இது போன்று எதிர்பார்க்கிறோம்.

  • @GaneshThamu
    @GaneshThamu Před 5 měsíci +5

    ஒருமூடன் கதைசொன்னான்.(மலேசியா வாசுதேவன்) குரல்.

  • @romuiyer5791
    @romuiyer5791 Před 5 měsíci +2

    Malaysia Vasudevan's first song is "Paalu vikkira pathumaa" from the movie "Delhi To Madras" - music by V. Kumar. Then simultaneously he sang "maalaiyittu poo mudithu" solo song for "Thalai Prasavam" and "india naadu ennaadu" for "Bharatha Vilas" both by MSV.

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Před 5 měsíci +3

    SPB யின் முதல் பாடல் தமிழில் பால் குடம் படத்தில் இடம்பெற்ற மல்லிகை பூ வாங்கி வந்தேன் என்ற பாடல்தான் பதிவு செய்யப்பட்பது , மலேசிய வாசுதேவன் முதலில் தமிழில் பாடிய பாடல் 1972 யில் வெளிவந்த டெல்லி டூ மெட்ராஸ் படத்தில் இடம் பெற்ற பால் விக்கிற பத்மா 1973 யில் தலைபிரசவம் படத்தில் மாலையிட்டு பூ முடித்து மணமகளாக 1974 யில் குமஸ்தாவின் மகள் படத்தில் காலம் செய்யும் விளையாட்டு போன்ற பாடல்களின் பின்னர்தான் 16 வயதினிலே படத்தில் இளையராஜா இசையில் செவ்வந்தி பூ முடித்த என்ற பாடல்தான் அவர் இசையில் முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது ஆனால் இப் படத்தில் இப் பாடல் இடம் பெறவில்லை இசை தட்டில் உள்ளது , பின்னர் இதே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு அவர் பாடிய இந்த பாடல் படத்தில் இடம்பெற்றது

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865 Před 4 měsíci +1

    மலேசியா அவர்கள் சினிமா இயக்குநராக போனதுதான் அவருக்கு பின்னடைவு!

  • @Rajasekar-cf4qy
    @Rajasekar-cf4qy Před 5 měsíci +12

    Jayachandran pathi pesunga

    • @user-ty6ys1ee3g
      @user-ty6ys1ee3g Před 5 měsíci

      He is also a top-class singer; his is also melodious voice!

  • @jeyanthipadmanabhan4916
    @jeyanthipadmanabhan4916 Před 3 měsíci +1

    ஐயா, மலேசியா வாசுதேவன் அவர்கள் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் வர்ணனையை அருமையாக பாடி இருப்பார். சுமார் 35 வருடங்களுக்கு முன் தினமும் காலை வேளையில் எங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்படியோ அந்த கேசட் எங்கோ தவறவிட்டு விட்டோம். நீண்ட நாட்களாக தேடிக்கிட்டு இருக்கிறோம், சிடியும் கிடைக்கவில்லை, அவருடைய ப்ளே லிஸ்ட்ல யும் கிடைக்கவில்லை, கிடைத்தால் அவர் லிஸ்டில் கொண்டு வர முடியுமா ஐயா. ப்ளீஸ்.?

  • @naveen3077
    @naveen3077 Před 4 měsíci +1

    Malaysia vasudevan great sir

  • @domrajzhrajezh7537
    @domrajzhrajezh7537 Před 5 měsíci +1

    Gr8 conversation & finally due credit to Malaysia Vasudevan. I would have loved to hear ,"Vaa Maccha Vaa " from the movie," Vandi Chakaram" in Malaysia Vasudevan's voice.

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b Před 4 měsíci

    Best interview!! Finally a appreciation video for an underrated genious, Mr. Malaysia Vasudevan sir!

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq Před 5 měsíci +4

    மலேஷியா வாசுதேவனுடைய பல அருமையான பாடல்கள் இருக்கிறது குரல் ரஜினிக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் ரஜினிகாந்த்துக்கு அதிகமாக பாடவில்லை இந்த பதிவில் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை பற்றி அதில் அப்பாவித்தனமாக பாடி இருந்ததாக சொல்லி இருக்கிறார் ஆனால் இளையராஜாவே அதை மறுத்து இருக்கிறார் அதில் எஸ் பி பி‌ பாட வேண்டியது ஆனால் முன்னிரவு எஸ் பி பி‌ ஐஸ்கிரீம் சாப்பிட்டு குரல் கெட்டு போனதால் அந்த பாடலை பாட முடியாது போனதால் வாய்ப்புக்காக காத்திருந்த மலேஷியா வாசுதேவனுக்கு அந்த வாய்ப்பு போனது இளையராஜா அவருக்கு தெளிவாக இது ஒரு அப்பாவி போல பாட வேண்டும் என்று விளக்கி இருந்தும் மலேஷியா வாசுதேவன் இவ்வளவு காலமாக காத்திருந்த வாய்ப்பு கிடைத்தது இதை ஒரு அப்பாவி கிராமத்தான் பாடுவதை போல பாடினால் எங்கே தமக்கு பின்னாளில் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து துவக்கத்தில் அப்பாவி மாதிரி துவங்கி பிறகு கணீரென்ற குரலில் சம்பந்தமில்லாமல் அப்பாவி கிராமத்தான் குரலிலிருந்து மாறுபட்டு பாடி இருப்பார் இதை இப்போது கேட்டாலும் அந்த வேறுபாடு விளங்கும் அதுவே கல்யாணராமன் படத்தில் அப்போது அவரும் வளர்ந்து வாய்ப்பு பற்றிய பயம் அப்போது இல்லாததால் முழுக்க அப்பாவி மாதிரியே பாடி இருப்பார்

  • @ktk4411
    @ktk4411 Před 5 měsíci +3

    Very interesting

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 4 měsíci +1

    நான் போட்ட சவால் படாத்திலிருந்து சுகம் சுகமே தொட தொடத்தானே 👌🏾👌🏾👌🏾

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Před 2 dny

    One interview M.V said that TMS is his manasega guru.Every stage programme he never failed to sing the song. Malarkalaipol thangai urangukiral in paasamalar film

  • @sbalakumar4124
    @sbalakumar4124 Před 4 měsíci

    Supper keep it up

  • @gopalradha3418
    @gopalradha3418 Před 5 měsíci +1

    Really great song

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Před 5 měsíci +3

    குஷ்பூ நடித்த ரண தீரா கன்னட படத்தை தியேட்டரில் உட்கார சீட்டு இல்லாத நிலையிலும் நின்று கொண்டே பார்த்திருக்கிறேன்பாட்ஷா படத்தை என் தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு போய் பார்த்திருக்கிறேன்சித்ரா அம்மாவின் பாடலை இப்போதும் கேட்காமல் தூங்குவதில்லை நம்மை எல்லாம் கலை என்ற கயிறால் கட்டி இழுத்து அவர்களுக்குப் பிடித்த அரசியல்வாதி இடம் நம்மை விற்று விடுவதே கலைஞர்களின் சிறப்பம்சம் இதில் விதிவிலக்கு எம்ஜிஆர் அவர் இதயத்திலே நம்மை கட்டிப் போட்டுக் கொண்டார்

  • @user-hs6rt8fy6u
    @user-hs6rt8fy6u Před 5 měsíci

    Sar.kural.super

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Před 5 měsíci

    Host!! You are fantastic ji✌👏👌🏻🤝

  • @shanthia714
    @shanthia714 Před 5 měsíci +5

    🎉🎉🎉🎉

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Před 5 měsíci

    Super 🌹💐🤝👍👌🙏

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 4 měsíci

    MV worked as music director in two films ,Pakku vethala ,Samandhipoo..' kanavugale orrkolam ' ,agayam boomi ' hit songs.

  • @shakilaidayathullah471
    @shakilaidayathullah471 Před 5 měsíci

    Sir your voice superb

  • @thirunavu160559
    @thirunavu160559 Před 4 měsíci

    காட்டி மணி இறந்து விட்டதாக அறிந்தேன்.
    பின்நாளில் அவர் மதுவுக்கு அடிமையானார்.
    Drகாந்தராஜ்க்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 Před 5 měsíci +1

    Super

  • @user-jc7rm5pd5h
    @user-jc7rm5pd5h Před 5 měsíci

    கராத்தே மணி ஜப்பானில் கராத்தே கற்ற முதல் தமிழர் முதல் பிளாக் பெல்ட் பெற்றவர் சென்னையில் முதலில் கராத்தே பள்ளியை தொடங்கினார் பின் தமிழ் படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் ஆனார் அன்புக்கு நான் அடிமை அவர் நடித்த முதல் தமிழ் படம் ரங்கா போன்று சில படங்களில் நடித்தார் பின் குடிக்கு அடிமையானவர் 1993 ல் காலமாணார்

  • @r.ramesh4443
    @r.ramesh4443 Před 3 měsíci

    Annan mv.devan dopic eduthu pesiyatharkku nanri avarkuralil padayaralum mudiyathu

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 4 měsíci +1

    அந்த காலத்தில் 16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டை இட்டு இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் விழித்துக் கொண்டே இருந்தது

  • @jailania1300
    @jailania1300 Před 5 měsíci +2

    Dr. காந்தராஜ் அவர்களின் மருத்துவ கல்லூரி நண்பர் தான் டாக்டர் கராத்தே மணி அவர்கள்.
    Dr.காந்தஹார் அவர்களின் பேட்டியளித்த செய்தி.

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p Před 4 měsíci

    My favorite song kuiluk koru manamirukku

  • @hasankadar5789
    @hasankadar5789 Před 5 měsíci +1

    கரேத்தே மணி தமிழர் பெண்மை கலந்த குரல் 92 ல் மறைந்துவிட்டார்

  • @ragunaths2507
    @ragunaths2507 Před 5 měsíci +1

    அதற்கும் முன்பு குமாஸ்தாவின் மகள் படத்தில் காலம் செய்யும் விளையாட்டு என்ற பாடலையும் தலைப்பிரசவம் என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியிருப்பார்.

  • @marthandancsm2622
    @marthandancsm2622 Před 4 měsíci

    பாரத விலாஸ்....1973... இந்திய நாடு என் நாடு

  • @naga406
    @naga406 Před 5 měsíci +2

    கராத்தே மணி (Karate Mani, 1944 -1993 ) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட நடிகர், தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும், எதிர்மறைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
    முன் வாழ்க்கை
    கராத்தே மணி 1944 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின், சென்னையில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலையான கராத்தேயில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி கராத்தே ஆசிரியர்களிடம் முறையாக கராத்தே கற்றார். கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்ற முதல் தமிழர் இவராவார். கராத்தேவின் உயர்ந்த பட்டமான ‘ரென்ஷி’ பட்டத்தையும் இவர் பெற்றார். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். மேலும் கராத்தே மணி டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Před 4 měsíci

    MVsir tamil pronounce is very clear no one beat him after TMS. Tamil music director's are not utilized MV and Vanijayaram properly.

  • @elumalaiperiyan9723
    @elumalaiperiyan9723 Před 5 měsíci

    Kaadu potta kaadu my favourite song

  • @vvtalkies3786
    @vvtalkies3786 Před 4 měsíci

    100% correct. I was feeled with same .

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 5 měsíci +1

    மலேசியா வாசுதேவன் சினிமாவில் வெறும் 8000 plus பாடல்கள் மட்டுமே பாடி இருக்கார்..காரணம் பல படங்களில் வில்லன்,குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகனாக மாறி விட்டதால் பல பாடல்கள் பாடும் வாய்ப்பை பெரிதும் இழந்து விட்டார்.அது பெரிய வருத்தம்.ஆனால் s.p.பாலசுப்ரமணியம் சினிமாவில் 40000 பாடல்கள் வரை பாடி இருக்கார்.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 4 měsíci

    MV voice in Nerolac paint ad gingle of ARR is also noteworthy.

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 5 měsíci +1

    கோழிகூவுது படத்தில் பூவே இளைய பூவே பாட்டு எப்பொழுது கேட்டாலும் அப்படியே சொக்கவைத்துவிடுவார் மலேசியா வாசுதேவன்

  • @jeyasinghdevapiriyam5896
    @jeyasinghdevapiriyam5896 Před 4 měsíci

    Kalyanaraman (1979) directed by G.N. Rangarajan sir.
    Japanil Kalyanaraman, directed by S.P. Muthuraman sir

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 5 měsíci +1

    கராத்தே மணி ஸ்டான்லி லா அண்ணன் அண்ணி(,அப்ப லவர்ஸ்) classmate நேரிலே வில்லன் மாதிரிதான்!! அப்பா force பண்ணதால் படிப்பதாக சொன்னார். காது கொஞ்சம் கேட்காது என சொன்னமாதிரி நினைவு!! நல்லமனிதர் m.b.b.s முடித்தாரா தெரில 😊

  • @MRB00777
    @MRB00777 Před 4 měsíci +2

    முதல் பாடல்: பாலு விக்கிற பத்துமா.
    படம்: டில்லி டூ மெட்ராஸ்.(1972)
    இரண்டாவது பாடல்: மாலையிட்டு பூ முடித்து மணமகளாக.
    படம்: தலைப்பிரசவம் (1973)

  • @bharat4282
    @bharat4282 Před 5 měsíci +2

    Why Thai thathuku thathuku song you did not speak, in that day this song is super duper hit. I am slave for Malaysia Vasudevan and mano and sbp sir and all singers in that period.

  • @anbusekar7544
    @anbusekar7544 Před 5 měsíci +1

    நண்டு படத்தில். அள்ளித் தந்த பூமி அன்னைஅல்லவா