TAMIL OLD SONG--Vilaketri vaikiren--SOODHATTAM (1971)

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    www.facebook.c...
    சுசீலா குரலில்
    ஒரு இனிய பாடல்...
    பாடல் : விளக்கேற்றி வைக்கிறேன்
    திரைப்படம் : சூதாட்டம் (1971)
    பாடலாசிரியர் : கண்ணதாசன்
    இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர் : பி. சுசீலா
    ~Research of very rare old tamil songs
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com

Komentáře • 562

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt Před 2 lety +45

    குடும்ப அமைப்புக்குள் அடியெடுத்து வைக்கும் மனவொழுக்கம் கொண்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்...
    இது பாடல் அல்ல....தமிழ் பாரம்பரியம் கொண்ட பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாடம்..
    என் வீடு என்பதும் கோவில் என்பதும் ஒன்று தான்...🌺🌹🌺🌺🌹❤️❤️❤️

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Před 22 dny +1

      நீங்கள் ‌சொல்வது‌ முற்றிலும் ‌உண்மை‌‌ நம் தமிழ் பண்பாட்டிற்க்கு ஏற்ற பாடல்❤

  • @thiyagarajanmduthiyagaraja1199

    சுசிலா பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கிறேன். நிறைய பாராட்டுகிறேன். ஆனாலும் இன்னும் என்ன சொல்லி பாராட்ட என்று தெரியவில்லை. அவங்க நமக்கு கிடைத்த வரபிரசாதம்

    • @pushpakk2049
      @pushpakk2049 Před 2 lety +3

      Yes yes yes true 👌👌👌

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +3

      Yes yes yes yes.

    • @florarosari5609
      @florarosari5609 Před rokem +2

      It is true

    • @elangovan8980
      @elangovan8980 Před rokem +2

      என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை

    • @athimarthandans8734
      @athimarthandans8734 Před 10 měsíci +2

      சுசீலா அம்மா நடமாடும் இசை தெய்வம்

  • @thangavelselam9282
    @thangavelselam9282 Před 4 lety +90

    பாடலின் ஆரம்பம் முதல் கடைசிவரை மங்களகரமான வார்த்தைகள். இல்லறகீதம். இந்தப்பாடலை கேட்க கேட்க இல்லறம் செழிக்கும் நல்லறம் வளரும் நன்மை பெருகும்.

  • @puyalranirani1176
    @puyalranirani1176 Před 2 lety +22

    சுசீலாம்மாகுரலில் எந்த பாடலும் அருமையே தெய்வ கடாட்சம் தேவி கலைவாணி சுசீலா அம்மா அவர்கள்.

  • @sivakumar9414
    @sivakumar9414 Před 3 lety +48

    அந்தக் காலத்தில் மாலை நேரத்தில் விவிதபாரதியில் கேட்டு கேட்டு ரசித்த பாடல்

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +51

    இப்பாடலை கேட்கும்போது
    ஊரில் நடக்கும் திருவிழாக்களும்
    திருமண வீடுகளும் நம் கண்முன்
    நிழலாடி கண்களை குழமாக்குகின்றன,
    அருமையான பாடலுக்கேற்ப
    காட்சியமைப்பு,
    மறுபடியும் இதுபோன்ற ஒரு பாடலை உருவாக்க முடியுமா?
    இல்லை, நடிக்கத்தான் இது போன்ற அருமையான ஜோடிகள்
    இருக்கிறார்களா?
    மலர்கிறது நினைவலைகள்
    மீண்டும் கருப்பு வெள்ளையில்.
    உறங்காத நினைவுகள்
    உடன்குடியை நோக்கி.
    படம் : சூதாட்டம்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 3 lety +3

      நினைவு படுத்துகிறதே உடன்குடியை.....

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +2

      @@jeyakodim1979 நினைவு படுத்தி
      விட்டீர்கள் உடன்குடியை,
      இப்பாடலின் சிறப்பை தாங்கள் முழுமையாக உணர்ந்து
      ரசித்திருப்பீர்கள்,
      மங்கலகரமான ஒரு பாடல்
      மறுபடியும் நம் நினைவில்...!

    • @elangokr6708
      @elangokr6708 Před 2 lety +3

      @@nausathali8806 inda. Padal. Orumagalaisai

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +2

      @@elangokr6708 சரியாக சொன்னீர்கள் நன்றி சார்...!

    • @palanikumar2124
      @palanikumar2124 Před rokem +3

      Same feelings

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +50

    அன்றைய நாட்களில் திருமண
    வீட்டில் அதிகமாக ஒலித்த பாடல!
    கேட்க நல்ல பாடல், super👌

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +23

    விரசமில்லாத அற்புதமான.. குடும்பப் பாங்கான பாடல்..!! நல்ல வாழ்க்கை அமைந்த மாதிரியான திருப்தி!👍👌

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 Před 4 lety +20

    விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, மஞ்சளிலிலே..!, நீ..?, கொடுத்தாய்..!, மங்கலம்..?, இந்த..!, மஞ்சத்திலே..?, நான்..!, தருவேன்..?, மந்திரம்..??, மஞ்சளிலிலே..!, நீ..?, கொடுத்தாய்..!, மங்கலம்..?, இந்த..!, மஞ்சத்திலே..?, நான்..!, தருவேன்..?, மந்திரம்..??, நெஞ்சத்திலே..?, பூசி..!, விடும்..!!, சந்தனம்..?, அதைக்..!, கொஞ்சட்டுமே..?, நீ..??, கொடுத்த..!, குங்குமம்..?, நெஞ்சத்திலே..?, பூசி..!, விடும்..!!, சந்தனம்..?, அதைக்..!, கொஞ்சட்டுமே..?, நீ..??, கொடுத்த..!, குங்குமம்..?, உனைத்..!, தஞ்சமென்று..?, தழுவிக்..!, கொண்டது..?, பெண்..!, மனம்..?, இனிக்..!, கொஞ்ச..?, மல்ல..!, கோடிக்..?, கொள்ளும்..!, உன்..!!, மனம்..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, ஓஓஓஹா..ஓஓஓஹா..ஓஓஓஹா..ஹாஹாஹா..!, ஆஆஆ..ஆஹாஆஹா ஆஆஆ..ஆஹாஆஹா..ஹா..ஹா..!, ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..!, கருணை..!, மிகும்..?, மாரியம்மன்..!, துணையிலே..?, நல்ல..!, கல்வியுடன்..?, செல்வமுண்டு..!, மனையிலே..?, பொறுமையுடன்..!, பாசமுண்டு..?, பெண்ணிலே..??, அதன்..!, பூஜையெல்லாம்..?, எதிரொலிக்கும்..!, விண்ணிலே..?, என்..!, வீடு..?, என்பதும்..!, கோயில்..?, என்பதும்..!, ஒன்று..?, தான்..??, நான்..?, வாழ்வு..!, என்பது..?, காண..!, வந்தது..?, இங்கு..!, தான்..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, பருவங்கண்டு..!, ஓடிவரும்..?, மழையிலே..??, நல்ல..!, பழங்களுண்டு..?, நெல்லுமுண்டு..!, வயலிலே..?, பருவங்கண்டு..!, ஓடிவரும்..?, மழையிலே..??, நல்ல..!, பழங்களுண்டு..?, நெல்லுமுண்டு..!, வயலிலே..?, கணவனெனும்..!, மேகம்..?, தந்த..!, மழையிலே..?, இளம்..!, மனைவியிடம்..?, மழலை..!, வரும்..!!, மடியிலே..?, நான்..?, காதல்..!, தெய்வம்..?, காண..!, வேண்டும்..?, பண்பிலே..??, நீ..?, காவல்..!, தெய்வம்..?, ஆகவேண்டும்..!, அன்பிலே..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, ஓஓஓஹா..ஓஓஓஹா..ஓஓஓஹா..ஹாஹாஹா..!, ஆஆஆ..ஆஹாஆஹா ஆஆஆ..ஆஹாஆஹா..ஹா..ஹா..!, - Vilakketri vaikkiren - MOVIE:- SOOTHADDAM (சூதாட்டம்)

    • @ragavanbethanasamy3554
      @ragavanbethanasamy3554 Před rokem

      You go and listen this song, enjoy the beauty of our tamil., thanks to kaviarasar

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Před 3 lety +74

    இலங்கை வானொலியில் இரவு சேவை தொடங்கிய போது ஒலிபரப்பான முதல் பாடல்.மங்கலகரமான பாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +56

    இளமையில் இதயத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்..முதுமையில் மனதிற்கு நெருக்கமான பாடலாகிப் போனது.துவண்டு போய் இருண்ட மனதில் விளக்கேற்றும் அற்புதமான அட்டகாசமான அருமையான பாடல்.

    • @alwariyer6185
      @alwariyer6185 Před rokem +3

      ARUMAYAANA PAATTU AMAITHEYAANA Rsaiyodu kalantha paadl

    • @rangaranga3623
      @rangaranga3623 Před 9 měsíci

      ​@@alwariyer6185ட் ஹர

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 Před 5 lety +67

    அருமையான தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் தத்துவ முள்ள குடும்பத் தலைவியின் பிரார்த்தனை வெளிப்படுத்தும் பாடல் மற்றும் காட்சிகள்,,,, நன்றி,,,,(கருத்து பதிவிட்ட நாள் 19-Oct.2018 )

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před rokem +14

    நல்ல மங்களகரமான வார்த்தைகள் கொண்ட பாடல் கேட்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சி

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 2 lety +11

    பி எஸ் அம்மாவின் குரலைப்போல இன்னொன்றை பிரம்மாவாலும் படைக்க முடியாவிட்டாலும், இந்த கே ஆர் விஜயா வின் இயல்பு, உடல் இலக்கணம், நளினம், நடிப்பு, திறமை எந்த ஹீரோ வுடனும் இரண்டறக்கலந்து ஒன்றிவிடும் சிறப்பு - எந்த நடிகையிடமும் காணப்பெறாத உயர்வு. வாழ்க அவரின் வனப்பு.

    • @anbuk5587
      @anbuk5587 Před rokem +1

      Yes absolutely correct.k.r. Vijaya is very looking homely women.

  • @maharajanm9953
    @maharajanm9953 Před 2 lety +15

    சுசிலா அம்மாவின் குரல் அருமையான இருக்கிறது
    K R விஜயா அவர்கள் நடிப்பு அருமை . வள்ளியூர் மகாராஜன்

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Před 2 lety +1

      சங்கரை ஏன் வட்டுவிட்டீர்
      பால் வடியும் முகம்

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 Před 5 lety +51

    இந்த comments பகுதியில் பாடலின் விவரங்களை மிகத் தெளிவாக பதிவு செய்யும் சகோதரர் கந்தசாமி அவர்களுக்கு எனது பனிவான வணக்கம். உங்கள் பதிவுகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பதிவுகள் அனைத்து பழைய பாடல்களிலும் இருக்க வேண்டும் என்று நான் ஆசையோடு காத்திருக்கிறேன்

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před rokem +7

    Mellisai Mannar MSV will be always No.1 … Sweet Suseelamma rocks !

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Před 5 lety +34

    P .சுசீலா அம்மா அவர்களின் குரல்,மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.....

  • @kamarajs6021
    @kamarajs6021 Před rokem +5

    அடி தூள் எம் எஸ் வி இசைக்காக குழந்தை பிறந்த குழந்தை எங்கள் எம் எஸ் வி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +17

    குயிலையும் மிஞ்சும் குரல். தேனினும் இனிமையான தித்திப்பு. நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாமல் இனிக்கும் பாடல்.

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 4 lety +28

    நல்ல அதிர்வலைகளை உருவாக்கும் பாடல்!

    • @mathivanan5611
      @mathivanan5611 Před 3 lety +2

      மிக மிக மிக மிக மிக இணைய கீதம்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +2

      அருமையாக சொன்னீர்கள்.

  • @manojpandian7924
    @manojpandian7924 Před 8 lety +48

    விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
    நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்
    விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
    நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்
    நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்.............
    மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம் இந்த
    மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்
    நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம் அதை
    கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம் உனை
    தஞ்சம் என்று தழுவிக் கொண்டது பெண்மனம் இனி
    கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன் மனம் (விளக்கேற்றி)
    கருணைமிகும் மாரியம்மன் துணையிலே நல்ல
    கல்வியுடன் செல்வம் உண்டு மனையிலே
    பொறுமையுடன் பாசம் உண்டு பெண்ணிலே அதன்
    பூஜை எல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே
    என் வீடு என்பதும் கோவில் என்பதும் ஒன்று தான்
    நான் வாழ்வு என்பது காண வந்தது இங்கு தான் (விளக்கேற்றி)
    பருவம் கண்டு ஓடிவரும் மழையிலே நல்ல
    பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே
    கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே
    இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே நான்
    காதல் தெய்வம் காண வேண்டும் கண்ணிலே நீ
    காவல் தெய்வம் ஆக வேண்டும் அன்பிலே (விளக்கேற்றி)

    • @thirumurthy6916
      @thirumurthy6916 Před 8 lety +3

      மணவாழ்க்கையின் நல்ல ஆரம்பத்திற்கு
      மங்கல வார்த்தைகளோடு கூடிய இனிய பாடலை பாடியுள்ளார்.Music very fine. Good voice.Jaishankar action with K.R.Vijaya combination very lovely.Unforgettable song.Thanks to everyone.
      🌼🌺🌻

    • @muthulaks7725
      @muthulaks7725 Před 6 lety +2

      Manoj Pandian விளக்கேற்றி வைக்கிறேன் பாடல் அருமை

    • @r15mrider78
      @r15mrider78 Před 5 lety

      De CT by Cr CQ

    • @rajagopalansridhar3245
      @rajagopalansridhar3245 Před 4 lety

      Good

  • @kousalyas9988
    @kousalyas9988 Před 5 lety +24

    அருமையான அர்த்தமுள்ள பாடல். கவியரசரின் பாடல் வரிகள், மெல்லிசை மன்னரின் இசையில், சுசீலாவின் இனிமையான குரலில் அற்புதமான பாடல். Positive energy தரும் பாடல். கண்ணதாசன் அய்யா, MSV அவர்களின் காலம் தமிழ் திரை உலகின் பொற்காலம்.

  • @sankarapillaisivapalan.4481

    இளம் வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 Před 5 lety +5

      நானும் அப்படியே.
      வீடியோ , சினிமா பார்க்காமலே , கதை எதுவும் தெரியாமலே இந்த மங்களகரமான பாடல் என்னை கேட்டவுடனே கொள்ளை கொண்டுவிட்டது. இப்போதுதான் சத்தியமாக முதன் முறையாக வீடியோ பதிவு பார்த்தேன் .
      சிறிதும் என்னை முகம் சுளிக்க வைக்காமல் அழகாக நேர்த்தியாக உள்ளது. கே. ஆர். விஜயாவை எனக்கு என்றுமே பிடிக்கும். பழனி முருகனின் அருள்
      கே. ஆர். விஜயா அவர்களுக்கு என்றுமே உண்டு. எப்போதும் சொந்தக்குரலில்தான் அந்தக்கால நடிகைகள் பேசி வந்தனர். கே.ஆர்.விஜயா அவர்களின் நடிப்புத்திறன் ...அப்பப்பா...இன்னும் எத்தனையோ அவர்களின் அருங்குணங்களை பற்றி நான் அறிவேன்.

    • @AbdulRahim-ds4tf
      @AbdulRahim-ds4tf Před 5 lety +1

      Padal varnanai Rajeswarishamugam, Mayilvaganamsaranatha super aah pazhaya padalgal Arumai.

    • @jeyanthilalbv1797
      @jeyanthilalbv1797 Před 4 lety +1

      @@rajalakshmij8400 பூங்கா.. BVJ.பழைய பாடல்கள் கேட்பதில் உள்ளசுகமே அலமாதி இனிமை சுகம்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Před 3 lety +17

    தமிழ்
    தமிழன்
    தமிழ் மண்
    எல்லாவற்றையும் ஒரே நேரத்தில்
    பறைசாற்றும் பாடல்!!

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Před 2 lety +15

    இதுபோன்ற பாடல்களை தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பலாம்.மனம் இல்லையா தெரியவில்லையா.பின் எப்படி வருங்கால இளைஞர்கள் அறிவார்கள்.

    • @rojababu7106
      @rojababu7106 Před 2 lety +1

      .

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Před 2 lety +1

      Now all programs in TV are rubbish

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Před 22 dny +1

      ஆமாம் நீங்கள் சொல்வது போல இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கு நம் வாழ்க்கை முறையை எடுத்து சொல்லும் பாடல்‌‌❤❤❤❤❤

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před rokem +7

    அற சொல் அற்ற பாடல் இது போல் பாடல் வருவது அபூர்வம்

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo Před rokem +5

    இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படமும் நல்ல படம், இந்த காலத்தில் அனைவரும் பார்க்க வேண்டியது.

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 21 dnem +1

      🎉🎉🎉 . Zungal . Rasigan . K. M . R . Madurai

  • @sridharcn6135
    @sridharcn6135 Před 4 lety +19

    இது போன்ற பழைய பாடல்களை கேட்கும் போது இளமை பருவ நினைவுகள் வருவது தவிர்க்க முடியாதது

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 3 lety +29

    விடிந்ததும் காலை நேரத்தில் கேட்க மங்களகரமான பாடல்.

  • @nspremanand1334
    @nspremanand1334 Před rokem +7

    A positive energy song very nice, kANNADASAN lyric and MSV music are golden days tenure.

  • @user-eb8hs6ub1e
    @user-eb8hs6ub1e Před 2 lety +5

    ஜெய சங்கர் நல்ல உள்ளம் படைத்த நடிகர் அவரது சம்பளம் 25,000/- படத்திற்கு உச்சத்தில் உள்ளபொதே அவற்றிலும் படம் தோல்வியுற்ற போது அடுத்த படத்திற்கு இலவசமாக கால்ஷீட் கொடுத்து தயாரிப்பாளரை காப்பாற்றுவார்👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 lety +20

    அருமையானப் பாடல்.அழகான ஜெய்ஷங்கரையும் மங்களகரமான கே.ஆர்.விஜயாவையும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

    • @srirambmhg
      @srirambmhg Před 4 lety

      H P....good song

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 3 lety

      Supersong.rajendran

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      உண்மைதான் மேடம்,
      சரியாக சொன்னீர்கள்...!

    • @alagusamy6597
      @alagusamy6597 Před 2 lety

      @@rajendranmunuswamy41 விமானங்கள் ப சு கோய.
      என்

  • @manoharraju9374
    @manoharraju9374 Před 5 lety +33

    இனிய குரலில் தேன் மதுர கீதம் 👌👌

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +13

    அருமையான பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.

  • @vijayalakshmimaharajan9750

    இந்த பாடலை வெள்ளிக்கிழமை அன்று காலை கேட்டு விடுங்கள்
    நல்லதாக நடக்கும் .

  • @bas3995
    @bas3995 Před 4 lety +23

    மஞ்சளில் நீ கொடுத்தாய் மங்கலம், இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம், முதல் இரவின் இனிய சங்கமத்தை இதை விட ரசனையாக யாராலும் தர முடியாது. மன்னரை மிஞ்சிய இசை அரசர் யார்?

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 3 lety +1

      காட்சி தெரியாமல் கானத்தின் அர்த்தம் தெரியாமல் ரசித்த பாடல்.அந்தக் காலப் பதின்பருவம் என்னவோ கொஞ்சம் மந்தபுத்தி தான்...

    • @bas3995
      @bas3995 Před 3 lety +1

      @@jeyakodim1979 அது எல்லோருக்கும் உரிய ஒன்றுதான். எனக்கே அதன் அர்த்தம் விளங்க திருமணம் முடிந்து சில வருடங்கள் பிடித்தன ஆகவே இதில் வருத்தம் கொள்ள வேண்டியது இல்லை. எந்த வயதிலும் குறிப்பாக முதுமையில் தம் துணையுடன் ரசிக்க வேண்டிய பாடல் அம்மா

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 2 lety +1

      @@bas3995
      வெகுளி தனமான
      பதிவுக்கு
      அருமையான
      விளக்கம் தந்த
      நண்பருக்கு
      வாழ்த்துக்கள்.
      என்னவென்று
      தெரிய வில்லை
      யூ ட்யூப் பதிவுகள்
      எழுதும் சிலரில்
      உங்கள் மேல் எனக்கு
      மதிப்பும் மட்டும் அல்ல
      மரியாதையும்
      கொண்டுள்ளேன்
      நண்பரே.
      May be u r younger than
      Me.i.am.touching. 70. Years.

    • @bas3995
      @bas3995 Před 2 lety +1

      @@doraiswamyswamy872 அன்புள்ள நண்பரே,
      நம் செந்தமிழில் வரும் பாடல்களை ரசிக்கவும் கருத்து பதிவு செய்யவும் வயது ஒரு தடை அல்ல. நல்ல பாடல்களை ரசிக்கும் மனம் மட்டும் இருந்தால் போதும்
      தங்களை போலவே நானும் 62 அகவை ஆனவந்தான். நிச்சயம் உங்களுக்கு இளையவன் ஆவேன்.
      தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. என் எழுத்துக்கும் ஒரு ரசிகர் இருப்பது எனக்கும் பெருமை அல்லவா?. நிச்சயம் தொடர்ந்து நானும் உங்கள் கருத்துக்கு பதில் பதிவு செய்ய விழைகிறேன்.
      அன்புடன்
      பாஸ்கரன்.ஆர்
      திருவண்ணாமலை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +5

    17.10.22 ல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நினைவு தினம்.
    16.10.22 ல் தற்செயலாக இப் பாடல் கேட்க முடிந்தது என் பாக்கியம்.
    வாழ்க அவர் புகழ்

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +65

    நடக்க போகும் நாள்கள் எல்லாம் நல்லதாக நடக்கும் என்ற கண்ணதாசனின் நம்பிக்கை வரிகள் பலிக்கட்டும்

  • @balakrishan5721
    @balakrishan5721 Před 3 lety +5

    K.r.விஜயா.அழகு.p.சுசிலா.குரல்.சூப்பர்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +13

    சுசீலா அம்மா பாடினால் விளக்கு தானே எரியும்.. SATHIAMOORTHY

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 Před 5 lety +2

      ஆஹா அற்புதமான பதிவு.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety +2

      @@rajalakshmij8400 !!ஆமாம்!! அழகான பதிவு!!

    • @m.s.v..3420
      @m.s.v..3420 Před 4 lety +1

      நல்லா சொன்னீங்க சார் 🙏

  • @baskaran1957
    @baskaran1957 Před 4 lety +35

    என் வீடு என்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான்.
    நான் வாழ்வு என்பதை காண வந்தது இங்குதான் - என்ன களங்கமற்ற அன்பான மனைவியின் வார்த்தைகள். கவிஞர் மனிதரில்லை. கடவுள்.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      அருமையான ஒரு வரிகளை
      தேர்ந்தெடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள்., அருமை!
      பாஸ்கரன் சார்.,!!!

    • @baskaran1957
      @baskaran1957 Před 3 lety +1

      @@nausathali8806 நன்றிகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +7

    அற்புதமான பாடல் என்றாலும்கூட இல்லறமும் நல்லறமாய் !!!அதிசயமான சூதாட்டம் தான்...

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      இனிமேல் இதுபோன்ற ஒரு பாடல்
      வரப்போவதில்லை...!

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 2 lety

      Yes...no....cance....friend.....super....song....

    • @florarosari5609
      @florarosari5609 Před rokem

      surely we won't hear song like this

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +7

    தி கிரேட் ஜெய்ஷங்கர் சிறிய வயதில் வானொலியில் கேட்டு மகிழ்ந்தேன் என் கூட பிறக்காத இரு அக்காமார்கள் மேரி தனலஷ்மி இருவரும் இந்த பாடலை அருமையாக பாடுவார்கள் அவர்கள் பாடிய பாடல்களை எல்லாம் கேட்கும் போது இப்பொழுது எனக்கு அழுகை வருகிறது

    • @estherthomas4481
      @estherthomas4481 Před 4 lety +1

      அந்த கால நாகரீகமான நட்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    • @thangaswamyanbazhagan6451
      @thangaswamyanbazhagan6451 Před 3 lety +1

      Kavingar enthal padalai avarudaya
      Ninaivutri avar Annaba ullam
      Isaikirarthu mantri vanakkam
      Anbazhagan

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +4

    மெல்லசை அரசி சுசீலா அம்மாவின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறோம்

  • @rkmobile32
    @rkmobile32 Před 3 lety +3

    பி.சுசிலாவின்.இனிமையான.பாடல்.எத்தனைஆண்டுகள்.கடந்தாலும்.மறக்கமுடியாத.காணம்

  • @Ma93635
    @Ma93635 Před 3 lety +2

    ஒருவனுக்கு நல்ல குணவதி அமைந்துவிட்டால் அவனது வாழ்க்கை வம்சம் சந்தோஷத்தில் பூத்து குலுங்கும் என்பதை காதலுடன் சொன்ன கவித்துவமான கருத்துள்ள இனிமையான பாட்டு. உங்களின் தொகுப்ப அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @vengadasalams9585
    @vengadasalams9585 Před 5 lety +8

    இல்லறம் நன்கு இருக்க இந்த பாடல் கேட்டால் போதும் என்றும் இனிமையான பாடல்

  • @wingelliJohn
    @wingelliJohn Před 19 hodinami

    சத்யாம்மா அம்மா ரொம்ப விரும்பி கேட்கிற பாடல் சமர்ப்பிக்கிறேன் சாயங்காலம் வரேன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +3

    இதுவும் கண்ணதாசன் பாடலா.ஐயோ நன்றி.

  • @mathavangopal6881
    @mathavangopal6881 Před 2 lety +3

    கண்ணதாசனுக்கு மலேஷியா தமிழகள் அடிமை

  • @kboologam4279
    @kboologam4279 Před 5 lety +23

    நடக்கபோகும்நாட்கள்
    நல்லதாகநடக்கட்டும்

  • @balasubramanianbalabalasub3572

    குரல் இனிமைக்கு மறுபெயர் சுசிலா

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 Před 9 lety +38

    "கணவனெனும் காதல்( காவல் ) தெய்வம் துணையிலே நல்ல
    கல்வியும், செல்வமும், பண்பும், பாசமும் கிடைக்க வேண்டும்"--என்ன அருமை. கவிஞருக்கும் வேம்பர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    • @prakashsd928
      @prakashsd928 Před 5 lety +4

      கல்யாண வீடுகளில் மணப்பெண் வரும்பொழுது போடும் பாடல் மிக அருமை அருமை அருமை

    • @pazhaniyammalsinnu5471
      @pazhaniyammalsinnu5471 Před 3 lety +2

      H

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 6 lety +26

    THE ONE AND ONLY M.S.V. THE TOPMOST GREATEST MUSIC DIRECTOR OF THE UNIVERSE

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu Před 5 lety +23

    நன்றி வேம்பார்! நல்ல பாடலுக்கு.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 5 lety +27

    என்னை கவர்ந்த பாடல், நன்றி , msv ayya, kavarasu, ps.

  • @subramanianangithumuthu1852

    என்னவென்று சொல்வது அவ்வளவும் மங்கல வார்த்தைகள்

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 Před 3 lety +1

      என் தமிழ் மொழியில் அழகான பாடல்

    • @palanikumar337
      @palanikumar337 Před 2 lety

      Correct comment

    • @barkathh3710
      @barkathh3710 Před 2 lety

      P

    • @palanikumar337
      @palanikumar337 Před 2 lety

      @@barkathh3710 what is the meaning of "p"

    • @indtechkasim
      @indtechkasim Před 2 lety

      சூதாட்டம் என்ற ஒரு அமங்கல
      வார்த்தைகளாக
      எல்லா வார்த்தைகளும் மங்கள வார்த்தைகள்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 lety +20

    No 1 music director in world
    UNGAL ENGAL....
    ...M...S...V..........
    🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @gopalmuthusamy2165
    @gopalmuthusamy2165 Před 7 lety +32

    இனிய. குரல் .. தெய்வீகம் தவழும் இல்லறம்

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 3 lety +14

    Msv brilliant
    Msv excellent
    Music of msv evergreen
    Nobody can replace

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 3 lety +3

    நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்ல தாக நடக்கட்டும்.18.7.21

  • @radhakrishnansundaramani847

    அருமையான அழகான அமைதியான பாடல். My favorite song

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +3

    ஒருவர் மனதை ஒருவர் சூதாடினால்
    வாழ்க்கை சுகமாகத் தானே இருக்கும்

  • @ayyarp812
    @ayyarp812 Před 4 lety +24

    காலத்தால், அழியா பாடல்...

  • @ramachandren7455
    @ramachandren7455 Před 2 lety +5

    அற்புதமானபாடல்

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g Před 21 dnem

    ஆஹா என்ன அற்புதமான பாடல் கொஞ்சம் கூட விரசமில்லாம் இல்லறம் துவங்கும் நாளை எவ்வளவு அற்புதமாக இலை மறைவு காயாய்‌ காட்சி படுத்தியுள்ளார்கள் பாடலின் ஒவ்வொரு வரியும் வைரங்களாய் ஜொலிக்கிறது மங்களகரமான வார்த்தைகள் நல்லதொரு இல்லற வாழ்க்கை வாழ்ந்த நிறைவு இந்த பாடலை கேட்க்க போது மனதில் தோன்றுகிறது இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறையினர் இந்த‌பாடலை பார்க்கவம் கேட்கவும் வேண்டும் நம் பண்பாடு கலாச்சாரம் எல்லங அவர்களுக்கு தெரிய‌‌. வேண்டும் ஜெய்சங்கர் சாரும் கே ஆர் விஜயா மேடமும் ஆழகாக நடித்திருக்கிறார்கள் சுசீலாமாவின்‌ ‌குரலும் எம் எஸ் வியின் இசையும் கண்ணதாசனின் பாடல் வரிகளும் அற்புதம் இந்த‌பாடலை பதிவு செய்ததற்க்கு. மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +2

    SUPPER SONG GREAT SINGER P.SUSILA KURAL EXALENT

  • @raviaguva1
    @raviaguva1 Před 4 lety +15

    My God! what a tone Susheela Ji's. There will be never any one like Susheela Ji.

  • @kboologam4279
    @kboologam4279 Před 4 lety +12

    என்றும் எம் எஸ்வி

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +2

    The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +2

    என்ன ஒரு மங்களகரமான பாடல் கேட்கும் போது என்ன ஒரு சுகம்

  • @malathimurali112
    @malathimurali112 Před 3 lety +5

    There is a story about this song creation. This movie was Madurai thirumaran’s 1st movie production. Once the inaugural Pooja was over Msv and Kannadasan were to compose a song. Kannadasan asked the name of the movie. The producers said ‘Soodhattam’. Kannadasan was shocked and said movie making itself is like a gambling and asked them to change the title since it was their 1st production. But they insisted that the story is such that they can’t change the title.
    So Kannadasan asked for the story line and picked up the first song which can imbibe positive vibration. Hence once he got narrated this sequence he started the Pallavi as
    ‘vilakketri vaikkiren Vidya Vidaya eriyattum
    Nadakka pogum naatkkal ellam nalladhaga nadakkattum’

  • @arulzelian336
    @arulzelian336 Před 4 lety +4

    இந்த பாடல் எல்லாம் கேட்கும் போது, பழைய ஞாபகம் வருது !

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 lety +60

    This kind of Melodies always keep our spirits at a high level. It was the spontaneity of MSV in producing such spectacular tunes in the Light Music Genre that put him above the rest. Elegant Melody with an aristocratic touch. MSV & KVM used P Susheela aptly and gave her many such beautiful songs as they had known how to use this mellifluous voice excellently. Kannadasan's Beautiful lyrics emit positive words at the very beginning itself which might have also propelled MSV to come up with such a brilliant tune. Made for Each Other!

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +4

      Vasudevan Cv
      Almost all the music directors have given the chance of singing
      to PS in their composing of songs since her elegant voice is so cute and melodious.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 5 lety +6

      @@rangasamyk4912 That's right. What I wanted to convey was these Two Ace composers' First Preference among female voices was always P Susheela for a very long time.

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 Před 5 lety +3

      ​@@vasudevancv8470 Do you know the utterly useless uberscreeeeechy voiced ( ilayaraja's ever favourite) s.janaki ( I am entitled to have my own opinions...& the freedom to express them too...those HURT & wounded please feel free to commit mass harakiri & quit this world for GOOD)
      was so full of envy & malice towards P.Susheela & the unethical chicanery she hatched along with one music composer ( Telugu) .... Thamizhvanan also mentioned certain facts . Arm twistings have aalways taken place . MGR's autocratic unethical arm twistings of Kannadasan & TMS ...Chinnappa Dhevar....I alone know. This was how utterly demonic asuric spb ( his voice & character according to ME are asuric & demonic Period ) bulldozed into ....thus with the frenzied connivance of EVIL s.janaki ....

    • @abdulraheemv788
      @abdulraheemv788 Před 5 lety +2

      In my childhood I heard this song from Sri Lanka radio.

    • @vengadasalams9585
      @vengadasalams9585 Před 5 lety +2

      Good song and good content

  • @aaraaara5475
    @aaraaara5475 Před 8 dny

    இலங்கை வானொலியில். காலை 7.30 க்கு பொங்கும் பூம்புனலில் தினமும் இந்த பாடல் ஒலிபரப்ப படும்.

  • @pnarayanan5984
    @pnarayanan5984 Před 2 lety +4

    Eniya paadal ! .... Thanks for playing!!!!!

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +13

    A fabulous song of susilamma superb lyrics MSV music composition is very nice thanks Mani

    • @jeevanantham4708
      @jeevanantham4708 Před 5 lety +1

      சுசீலா அம்மா பாடலுக்கு
      ஈடு இணை உண்டா ???

  • @manis5453
    @manis5453 Před 4 lety +12

    Very positive lyrics.

  • @dhandapaniangamuthu5748

    அருமையான பாடல்
    பி சுசீலா குரலில்
    கவிஞர் கண்ணதாசன்
    கைவண்ணத்தில்
    உருவான இனிய கீதம்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @sundaramk1909
    @sundaramk1909 Před 3 lety +4

    மிகச்சிறந்த பாடல் அருமை.

  • @Jothibasschokkalingam1960

    எனது இதய தேவதை அன்பு மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @muthamizhanpalanimuthu1597

    சார் வணக்கம்..என்றுமே இனிக்கும் கவிதை..இசை...
    அழகான பதிவு...நன்றி..

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 9 měsíci +1

    இனிமை சேர்க்கும் இதயத்தை புதிய மயக்கம் 😮 செய்யும் ஆழ்ந்த மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ள அற்புதமான பாடல் ❤

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +4

    என்றும் இனிமையான பாடல்

  • @secularindian1949
    @secularindian1949 Před 4 lety +4

    இளமை இனிமை பழமை ஆனால் ஆனால் அத்தனையும் இன்றுவரை, உலகம் உள்ளவரை புதுமை.

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 6 lety +14

    Tamil cinema is not restricted in mgr & Sivaji , it also has good actors gemini, Jaisankar,muthraman, Ravichandran,avmrajan,Sivakumar,major,Nagesh, also they are all pillars of tamilcinema!

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 Před 4 lety +1

      You have omitted another great actor SSR

    • @kaundasamy6kannai420
      @kaundasamy6kannai420 Před 3 lety +1

      @@venkatramankrishnamurthy4600 j by oh by 24 Ugleyn ft

    • @bas3995
      @bas3995 Před 3 lety +1

      திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் மிக சிறந்த நடிகர். சிவாஜிக்கு அடுத்து சுத்தமான கம்பீரமான தமிழ் உச்சரிப்பு இவருடையது மட்டுமே

  • @raghuram7321
    @raghuram7321 Před 3 lety +6

    The world music super star the one and only the great isaikkadavul msv ayya.

  • @sugi370
    @sugi370 Před 7 lety +26

    Nice and meaningful song.Golden voice of Susila.This song was very popular in Radio Ceylon in the 1970s.

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 Před 5 lety +1

      Yes indeed. This particular song thus was repeatedly broadcast.

  • @dorairajmurali8048
    @dorairajmurali8048 Před 5 lety +17

    P.Susheela should be conferred with Dada Sabah Plake award for her outstanding singing in south Indian languages.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety +1

    Excellent my favourite super song

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +2

    சூதாட்டம் படம்... நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை நன்றி நன்றி...

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 Před 2 lety +2

    இந்தப் பாடல் நல்ல நாளில் கண்டிப்பாக எல்லா ரேடியோவில் ஒளிபரப்பாகும்.

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 11 lety +20

    One of P. Susheela's Hits.

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u Před rokem +2

    நன்றாக உள்ளது இந்த பாடல்😊

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze Před rokem +1

    சூப்பர்கிரேட் பாடல்

  • @pitchiahsankar3292
    @pitchiahsankar3292 Před rokem +1

    It is famous song of Cylon radio at the time of 1975

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před 2 lety +1

    எனக்கு பிரியமான பாடல் ,

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před rokem +2

    Old is gold what a beautiful visualation what a woderful practical actions by sri jeysankat smt vijaya and nirmala once again old is gold always

  • @balasubaramanian8883
    @balasubaramanian8883 Před 6 lety +9

    Excellent song. Golden time to Suseela amma.