எந்தவிதக் குறையும் இன்றி வாழ இந்த ஒரு பதிகம் போதும் பஞ்சாக்கரத் திருப்பதிகம் Thunjalun Thunjal

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • Panchakshara Pathigam, Panchakara Thirupathigam, பஞ்சாக்கரத் திருப்பதிகம், திருபஞ்சாக்கரத் திருப்பதிகம், பஞ்சாக்கர திருப்பதிகம், Thunjalun Thunjal, Thunjalun Thunjal Song, Thunjalun Thunjal Meaning, துஞ்சலும் துஞ்சலிலாத, துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும், துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும், துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், துஞ்சலும் துஞ்சல்.
    Our Sincere Thanks & Credits to
    Thiruvarul Foundation
    திருவருள் பவுண்டேஷன்
    www.thiruvarul.org
    திருமுறை : மூன்றாம் திருமுறை
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    பண் : காந்தாரபஞ்சமம்
    நாடு : பொது
    தலம் : பொது
    பாடியவர் : திருவிடைமருதூர் S.சம்பந்த தேசிகர்
    துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
    நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
    வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
    அஞ்ச உடைத்தன, அஞ்சு எழுத்துமே.
    மந்திர நால்மறை ஆகி, வானவர்
    சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன
    செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
    அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.
    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
    ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
    ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
    ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
    நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
    செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
    கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
    அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
    கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்து
    அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
    தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
    அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
    அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.
    வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
    பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
    மாடு கொடுப்பன; மன்னு மா நடம்
    ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.
    வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
    பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
    தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
    அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
    கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
    சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
    பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
    ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.
    புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்
    சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
    வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
    அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
    நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
    கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
    அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
    உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
    #aalayamselveer #panniruthirumurai #panchaksharapathigam #panchakarathirupathigam #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong

Komentáře • 15

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před rokem +2

    வணக்கம், நலம் தரும் திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம்

  • @bharathnarayanan9372

    ஓம் நமசிவாய வாழ்க

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 Před rokem +2

    இந்த பதிகத்தின் அர்த்தம் கிடைக்கும்மா?

  • @sangarapillaishanmugam8244

    thiruchitrambalam

  • @sangarapillaishanmugam8244

    excellence second to none iyya ungal paadahal gift of lord siva and sambantha swamihal, nalla sivanadiyarhal thiruchitrambalam

  • @sangarapillaishanmugam8244

    migga migga atumyi iyya no words to express very divine voice with excellent raaga pann

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před rokem

    வணக்கம், நலம் தரும் திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +1

    🙏🥀திருநீலகண்டம்🐘 🌹அருணாச்சலம்🌹🙏🌼சிவ சிவ🌹🙏🦚திருச்சிற்றம்பலம்🌸🌹🙏🙏🙏🙏🌼🌹🌸🍀