Dhaagam Theerntha thadi anname || தாகம் தீர்ந்ததடி அன்னமே...

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2020
  • தாகம் தீர்ந்ததடி அன்னமே........
    தங்கமே....சொர்ணமே....அன்னமே.....
    என் மோகம் தீரவில்லை இன்னுமே.......
    தங்கமே.....சொர்ணமே......அன்னமே.......
    தாகம் தீர்ந்ததடி அன்னமே.- என்
    மோகம் தீரவில்லை இன்னுமே
    மழை மேகம் போல வந்து தழுவிக் கொண்டாலே
    என் தேகமே குளிர்ந்து போகுமே
    கால நேரம் ஏதும் இல்லாம
    கண்ட நேரம் எல்லாம் வந்து நில்லாம
    காத்திருக்க வேணும் ராத்திரி வரும் வரை
    துரையே.....! இது முறையே.......(தாகம்)
    ராத்திரி வரும்வரை மயிலே - நான்
    காத்திருப்பேனடி குயிலே - இப்ப
    கட்டி அணைத்தொரு முத்தமே தந்தால்
    நினைத்து மகிழும் என் சித்தமே
    ஆத்தில் ஓடும் தண்ணியில்ல ஐயாவே -இது
    அடித்துக் கொண்டு போவதற்கு மெய்யாவே
    கிணத்தில் ஊறும் தண்ணி இந்த ரோஜாவே -இத
    நெனச்சுப் பார்த்து பொறுத்திருங்க ராசாவே
    ஆச ராஜாவே........நானும் ரோசாவே........
    களை எடுக்கும்போது கனியே -உன்
    வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
    கலகலத்துப் போச்சே மனசு - இந்த
    கிளுகிளுப்பு ரொம்ப புதுசு ...
    காட்டுக்குள்ளே வந்தா என்ன சிங்கமே -நம்ம
    வீட்டுக்குத்தான் போங்க இப்ப தங்கமே
    அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன் -உங்க
    ஆச தீர எல்லாமே நான் தந்திடுவேன்
    நானும் தந்திடுவேன்....... நானும் தந்திடுவேன்.......
    முக்கனியாய் இனிக்கும் உந்தன் பேச்சிலே
    என் மோகம் எல்லாம் தீர்ந்தது என் மூச்சிலே
    மொத்தமாக நம்முடைய உறவிலே.......
    ரெண்டு முத்துகளை பெத்துக்கலாம் நம்ம வரவிலே....

Komentáře • 4