ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை | Ration Shop | Tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • #RationShop #Tamilnadu
    ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை
    நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல் ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றார். இதன்படி ரேஷன் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் பிரத்யேக இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதை நிரப்பி விண்ணப்பித்து, பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 803 அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளில், 98 புள்ளி இரண்டு மூன்று சதவிகித அட்டைகளுக்கு கைரேகை சரி பார்ப்பின் மூலம், பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். கைரேகை மற்றும் இதர பிரச்சனைகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார். மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கண் கரு விழி சரி பார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை ஏற்கனவே உள்ளது என்றும், இதனடிப்படையில், தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார். இத்திட்டம், தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்
    Uploaded On 26/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 516

  • @SS-tr7sl
    @SS-tr7sl Před 2 lety +37

    ரேஷன் கடைகள் மூலம் பயன் பெறுவது மக்கள் அல்ல அக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள்தான் 😂😂😂

  • @aksharadoss1103
    @aksharadoss1103 Před 2 lety +83

    பொருட்கள் வாங்குபவர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்ளுமாறு ஊழியர்களை அரசு அறிவுறுத்த வேண்டும் 🙏🏻. எளியோரை ஏளனம் செய்கிறார்கள் 😞

  • @josepham9746
    @josepham9746 Před 2 lety +87

    முதல்வர் ஐயா அவர்களுக்கு
    ரேஷன் அரிசி தரமானதாக விநியோகிக்க நவடிக்கை எடுத்தால் நிறைய குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்

  • @kdsytchanal1751
    @kdsytchanal1751 Před 2 lety +667

    முதலில் இந்த சோப்பு, சேமியா|அப்பளம் டீ தூள் னு நமக்கு வேண்டாம் என்கிற பொருட்களை வாங்கினால் தான் சர்க்கரை பருப்பு. எண்ணெய் போன்றவை தருவேன் என்கிறார்கள். அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அரிசி இலவசமா தான போடுறாங்க | இதை எல்லாம் வாங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்

    • @Nammachennai7125
      @Nammachennai7125 Před 2 lety +5

      Complaint for tnpds

    • @Nimmishiva
      @Nimmishiva Před 2 lety +8

      அது அரசுக்கு உதவியாக இருக்கும்....மற்றும் அதை விற்றாக வேண்டும் அந்த அலுவலர்களுக்கு.....

    • @semmalakshmi2254
      @semmalakshmi2254 Před 2 lety +8

      Adhuvum mrp ratukku kodukkuranka. Kadaiyil rate kammi.

    • @mk_siva005
      @mk_siva005 Před 2 lety +3

      Yes Ella pakkamum ithan nillamai

    • @kdsytchanal1751
      @kdsytchanal1751 Před 2 lety +21

      நான் 10 ரூபாய் சோப்பு வாங்குற ஆளு 25 ரூபாய் சோப் வாங்கித்தான் ஆகனும்னு கடுப்பேத்துறாங்க

  • @vemiv5658
    @vemiv5658 Před 2 lety +637

    ரேஷன் அரிசி யை சோறாக்கி எந்த அமைச்சராவது உண்பார்களா?

    • @alagirisamyg2156
      @alagirisamyg2156 Před 2 lety +36

      ஏன் அமைச்சர் உண்ணவேண்டும்.?உங்கள் வீட்டு வேலைக்காரி அதைச்சாப்பிடுவாரா ,முதலில் ?

    • @dineshmku4904
      @dineshmku4904 Před 2 lety

      சரியான கேள்வி. தரமற்ற அரிசி. நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும். மனித உரிமை ஆணையமும் ரகசியமாக திடீர் விசிட் தேவை மேலும் 5 கிலோ குறைவாக தான் தரப்படுகிறது. அதுவும் அலைகளிப்பு

    • @mariasundar4602
      @mariasundar4602 Před 2 lety +61

      அமைச்சர் உண்கிறாரோ தெரியவில்லை. என் வீட்டில் ரேஷன் அரிசி யே மூன்று நேர உணவு. உங்களுக்கு திங்க முடியலேன்னா பேசம போயிடுங்க. ரொம்ப கவல படா. தீங்க.

    • @Gajinikanth
      @Gajinikanth Před 2 lety +60

      பல வீடுகளில் அதுதாங்க உணவு❤️🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 2 lety +8

      former - TN CM - KAMARAJ - RATION FOOD ONLY TAKE ???

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety +115

    ஐயா நமஸ்காரம் அரிசியின் அளவை வேண்டுமானாலும் குறைத்து கொள்ளுங்கள்
    ஆனால்
    நல்ல அரிசி கொடுங்க

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před 2 lety +2

      இது தாங்க அவதூறு. ரேசன் கடைகளில் நல்ல தரமான அரிசி தான் வழங்கப் படுகிறது.

    • @selvamani235
      @selvamani235 Před 2 lety

      @@adhavamuruganjawahar2999 போனமாதம் பச்சரிசி வாங்கினேன் முக்கால் வாசி புழுங்கல் அரிசி கலந்து இருக்கிறது யாரையும் அவதூறாக பேசகூடாது துன்பம் தரகூடாது அவர்கள் விரோதியா சொல்லுங்க

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před 2 lety

      @@selvamani235 உங்களுடைய விரோதி யார் ?

    • @selvamani235
      @selvamani235 Před 2 lety

      @@adhavamuruganjawahar2999 யாரையுமே விரோதியாக பார்க்க மாட்டேன் துன்பபட்டால் மனசு வருத்தபடுவேன்

  • @karthikarthi1993
    @karthikarthi1993 Před 2 lety +80

    இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் ரேஷன் அரிசியை உண்கிறார்கள அப்படி என்றால் தமிழகத்தில் தெருவுக்குத் தெரு அரிசி கடைகள் உள்ளது எதற்கு ரேஷனில் போடும் அரிசி தரம் குறைந்தது அதற்கு பதில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு தரமானதாக கொடுக்கலாம் கடைகளை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அதை 20 ரூபாய்க்கு கொடுத்தாலே எங்களுக்குப் போதும்

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 Před 2 lety +41

    ஊழியர்கள் முதியோர் களிடம் அன்புடன் நடந்து கொள்வதை முதலில் நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்..

  • @Gajinikanth
    @Gajinikanth Před 2 lety +195

    முதல்ல அரிசி மூட்டைகளை திருடாம கடத்தாம ஏழை மக்களுக்கு ஒழுங்கா போடுங்க.. அப்பரமா இதல்லாம் பன்னலாம்

  • @g.sangareswari.sangareswa3120

    ரேசன் கடையில் முதல்ல தரமான பொருட்களை விநியோகம் செய்யவும்.

  • @muthupandiasir6437
    @muthupandiasir6437 Před 2 lety +57

    வாங்காத பொருட்களுக்கு மெசேஜ் வந்து கொள்ளை அடிக்காங்க... Complaint மெசேஜ் மூலம் செய்தால் அரசு.. கண்டுக் கொள்ளவில்லை.. சும்மா எல்லாம் 110 விதியாக இருக்கிறது....

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Před 2 lety +18

    ரேஷன் அரிசியில் உணவு சாப்பிட்ட ஒரே முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் ஆனால் அவர் அருமை இறந்த பிறகுதான் மக்களுக்கு தெரிகிறது

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Před 2 lety +1

      @ குரு: தாங்கள் சொல்வது 100% - சரி. பாராட்டுக்கள்.
      ரேஷன் அரிசி சாப்பிட்ட புனிதமான முதலமைச்சர் காமராஜர் அவர்களை சட்டசபை தேர்தலில் தோற்கடித்தவர்கள்தான் அன்றைய காலகட்ட தமிழக மக்கள். அந்த கவலையில் தான் அவர் நோய்வாய்ப்பட்டார்!!!🙄🙄ஆனால் , இன்றைக்கு அவரைப் பற்றி பெருமை பேசி என்ன பயன்??!!🙄🙄.

  • @SelvaKumar-vk7pd
    @SelvaKumar-vk7pd Před 2 lety +168

    தரமற்ற Scanner ஐ கொண்டு வந்து.. நம்ப👁️கண்ண💥ஒழிக்க போறாங்க 😑

    • @paathaivizhigal9052
      @paathaivizhigal9052 Před 2 lety +6

      ஓட்டுக்கு கொடுத்த காசை ஸ்கேனரால் கமிஷன் வசூல் நடக்கும்...சகோதரா...

    • @durairaj5874
      @durairaj5874 Před 2 lety +2

      கண்ணை மட்டும் அல்ல மொத்தத்தில்

    • @krishnanhariharan5203
      @krishnanhariharan5203 Před 2 lety +3

      ஊரெல்லாம் மெட்ராஸ் ஐ வரப்போகுது. எல்லாரும் இனி கருப்பு கண்ணாடிதான்! அபபுறம் தான் இவங்களுக்கு புத்தி வரும். பகுத்தறிவுன்னா சும்மாவா! 😇

    • @durairaj5874
      @durairaj5874 Před 2 lety +1

      ஓட்டு ஒன்று மட்டும்

    • @venkatpmk87
      @venkatpmk87 Před 2 lety

      😀😀

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Před 2 lety +44

    ரேசன் அரிசி தரமானதாக இல்லை விலைக்கு தந்தாலும் வாங்கி கொள்ளலாம் உண்பதற்கு தரமான உணவு பொருட்களை ‌வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அமைச்சர் உணவு தானியங்களை உபயோகித்து அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும்

    • @thangamshanthi1021
      @thangamshanthi1021 Před 2 lety

      அரிசி மட்டுமில்ல அரசு கொடுக்கின்ற இலவசங்கள் எல்லாமே தரமற்றதாகவே உள்ளது.முறையற்தாகவும் உள்ளது.இலவசப்பேருந்து வரை .ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குரவங்களும் இலவசமா பயனம் செய்யராங்க.ஏழைகளும் இல்லாதவங்களும் பயனம்செய்யுராங்க .அரிசி இல்லாதவங்களுக்கு சரியாகிடைக்க மாட்டேங்குது.மத்நவங்க மூட்டை மூட்டையா கடத்துராங்க.சிரமப்பட்டு விளைவிக்கிர நெல் கொள்முதல் செய்யாம மழைல நனைஞ்சு வீனாகுது......இப்படியே நீளும் பட்டியல்.ஓட்டுக்கா. இலவசங்களை அறிவிக்கிறாங்க.

  • @vasusuki7768
    @vasusuki7768 Před 2 lety +19

    ரேஷன் கடையில் கேமரா பொருத்தி கண் காணிங்கள் யாரும் திருடமாட்டாங்கள் மக்களுக்கு சரியாக போய் சேரும்

  • @spy61
    @spy61 Před 2 lety +5

    நடைமுறை புதுசு....
    பொருட்கள் அறத பழசு...
    ஊழல் ரொம்ப ரொம்ப பழமை வாய்ந்தது...

  • @muthupandiasir6437
    @muthupandiasir6437 Před 2 lety +17

    தந்தி டிவி . ஆசிரியர் அவர்களே....ஒரு நாள் முழுவதும் இந்த பிரச்சினை பற்றி உங்களால் அரட்டை அரங்கம் நடத்த முடியுமா? நடத்திப் பாருங்கள் ரேசனில் எவ்வளவு குளறுபடிகள் நடக்கிறது என்று... சும்மா 6 ஊராட்சி கூட்டம் நடத்தினால் போதாது... தினமும் கூட்டம் நடத்தினாலும் ஊழலை தற்போது ஒழிக்க முடியாது...

  • @sivagamia994
    @sivagamia994 Před 2 lety +20

    ரேஷன் வாங்க போனால் தேவை இல்லை என்றாலும் மற்ற பொருள் வாங்க சொல்லி வற்புறுத்தல். அதற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ஐம்பது ரூபாய் என்று சொல்லி தந்தால் கூட பரவாயில்லை.

  • @rajasekarrajkumar486
    @rajasekarrajkumar486 Před 2 lety +17

    வீடு தேடி விநியோகம் செய்தால் கண்விழி சோதனை கைரேகை சோதனை தேவையில்லை.

  • @manokarg4326
    @manokarg4326 Před 2 lety +23

    முதலில் அரிசி பருப்பு ... போன்ற பொருட்களை திருடாமல் மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தாலே போதும். என்ன செய்தாலும் பில் போட்டு விட்டு பொருட்கள் வருவதில்லை .

  • @reowinston1239
    @reowinston1239 Před 2 lety +62

    ஆதார் எடுக்கும் போது கண் நல்லா இருந்தது இப்ப இரண்டு கண்ணிலும் லென்சு வச்சுருக்ககேன் ... இது மாதிரி பிரச்சனை வந்த என்ன செய்றது...

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q Před 2 lety +3

      ஒன்னும் செய்ய முடியாது.

    • @agori6458
      @agori6458 Před 2 lety +1

      அவனுக.எல்லாப். பொருளும். சும்மா வா.தர்ரான்..தரமில்லாத. பொருள்.விலைகம்மியா. போடுறான். அதுலவேற..மளிகை. பொருள். வாங்கினால்தான். ரேசன். பொருள்.போடுகிறான். இதற்கு. ரேசன்கடைக்கு.போகாமலே. இருக்கலாம்.

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 Před 2 lety +3

      கருவிழியை ஸ்கேன் செய்கிறேன் என்று கண்ணை கெடுத்து விடாதீர்கள்.

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety +323

    அடுத்தது DNA test
    செய்வார்கள் அது ஒத்துப் போனதால் தான்
    புழுத்துப்போன அரிசி தருவார்கள்🤒😷😭🤧😳😱😡😠😈👹

    • @vadivelvadi4726
      @vadivelvadi4726 Před 2 lety +16

      உங்கள். கமெண்ட். வேற. லெவல். தல

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      @@vadivelvadi4726
      கொராணா இரண்டாவது அலை வரும்போதே
      அதிவேகமாகப் பரவியது.அப்போதுகூட கைநாட்டு வைக்கவேண்டும் அந்த மிஷினில் என்று சொன்னார்கள். அதன் மூலம் எவ்வளவு பேருக்கு கொராணா பரவியிருக்கும்.
      இப்போது வந்து
      Eye scanner தேவை இல்லாத ஒன்று. அதிகப்படியான செலவாகும். மக்கள் வரிப்பணத்தை வீண் ஆக்குவதற்கு புதுப்புது திட்டங்கள். சானிடைசர் வைக்காத ஒரே இடம் அரசு அலுவலகம் என்றால் அது ரேஷன் கடை தான்.இங்குதான் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவார்கள் என்பதைக்கூட தெரிந்து வைத்திருக்காத அரசு
      அதிகாரிகளாக இருக்கும் முட்டாள்கள்.

    • @vjy0037
      @vjy0037 Před 2 lety +4

      செம 👌👌

    • @maslj.
      @maslj. Před 2 lety +4

      😁👌👌👌👌😁😁😁😁😁😁😁😁

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Před 2 lety +4

      ஹா ஹா ஹா ஹா ஹா 🤣

  • @raja-ln5qu
    @raja-ln5qu Před 2 lety +61

    எத்தனை முறைகள் கொண்டு வந்தாலும் ரேஷன் கடை ஊழியர்கள் கொள்ளை அடிப்பது உறுதி.அதற்கு வாய்ப்பில்லைனு யாராவது சொல்லமுடியுமா. அதுக்கு ஒரு வழிய சொல்லுங்க

    • @ravichandranva5392
      @ravichandranva5392 Před 2 lety +3

      Intha nanbar soluvathu unmailum unmai

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 2 lety +4

      ரேஷன் கடைகளில் தானியங்கி எந்திரங்களின் மூலமாக உணவுப்பொருட்களை வழங்கினால் தில்லுமுல்லுகள் தவிர்க்கப்படும்.பணம் எடுக்கும் ஏடிஎம் மெஷின்கள் போல அவைகளை வடிவமைக்கவேண்டும்..

    • @maniloguvlog6055
      @maniloguvlog6055 Před 2 lety +1

      Ne patha ration kadaila kolla adichatha

    • @pandisiva89
      @pandisiva89 Před 2 lety

      Evaru aptiyae aruthu thaliruvaaru poda sunni

    • @raghuprasath7631
      @raghuprasath7631 Před 2 lety +1

      இல்லை தற்பொழுது 80 சதவீதம் குறைந்திருக்கிறது

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 2 lety +37

    மக்கள் காசு கொடுத்து தான் வாங்குகின்றனர் வரிப்பணம் தான் இலவசம் இல்லை. பாவம் மக்களுக்கு ஏப்பா புரிய போகுது

  • @Baskar8643
    @Baskar8643 Před 2 lety +52

    எங்களுக்கு இதெல்லாம் தேவையில்ல நல்ல அரிசி கிடைக்குமா 🙄

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 Před 2 lety +7

      நல்ல அரிசி கொடுத்தால் மீண்டும் அதே நல்ல அரசியை தான் கேட்பீர்கள். அதனால் ரேசன் அரிசி கடத்தல் நபர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    • @dhobiaskeyman229
      @dhobiaskeyman229 Před 2 lety +1

      Kidaikkum

    • @Baskar8643
      @Baskar8643 Před 2 lety +1

      @@selvamaninarayanasamy5381 அப்ப கடத்தல நிப்பாட்டணும் 🧐🤭

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 Před 2 lety +1

      @@Baskar8643 அதுக்கு ஒரு மசோதா நிறைவேற்றினால் போச்சு, வழக்கம்போல ஆளுநரை கை காட்டி விடலாம்.

    • @raninatarajan748
      @raninatarajan748 Před 2 lety

      Yarvanthalumnatakkumathikattupatuthamudyatupa

  • @kannankann6139
    @kannankann6139 Před 2 lety +18

    ரேசன் கடைகளில் முதலில் மாதம் மாதம் ஆயில் தரசொல்லுங்க அப்படியே எடையை குறைக்காமல் தரசொல்லுங்க மக்களுக்கு இதைவாங்கு அதைவாங்கு சொல்லாமல் தரும் வகையில் ஆனையிடுங்கள்

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 Před 2 lety +11

    உழைக்கும் மக்களுக்கு சத்தான அரிசி பொருட்களை கொடுங்கள்.. நியாய விலை கடைக்காரர்கள்
    தேவனுக்கு பயந்திருங்கள்.
    (எல்லோரும் அல்ல)

  • @user-pi5nw6tv1u
    @user-pi5nw6tv1u Před 2 lety +180

    மண்ணெண்ணெய் 3 லிட்டரில் இருந்து 1 லிட்டருக்கு வந்து விட்டது 🙏🙏🙏

  • @sugumarj8869
    @sugumarj8869 Před 2 lety +5

    தயவுசெய்து நல்ல அரிசி கொடுக்கவும்.
    வண்டு இல்லாமல்
    நல்ல அரிசி தரவும்

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 2 lety +37

    ரேஷன் அட்டைகளுக்கு ஒரு மாதத்திற்கு ஒருமுறை தான் வாங்க முடியும். பிறகு எதற்கு கைரேகை விழி ரேகை. இதனால் தாமதமாகிறது. ஒருவருடைய அட்டைக்கு வேறு யாராவதா வாங்கமுடியும். கார்டை ஸ்கேன் செய்தாலே போதுமே.

  • @sarkumar1753
    @sarkumar1753 Před 2 lety +2

    ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களில் சமைத்த உணவை நம்மை ஆளும் மாண்பு மிகு பிரதமர் அவர்களே சாப்பிட்டு நமக்கு வழி காட்ட வேண்டும்!

  • @venkats4489
    @venkats4489 Před 2 lety +12

    எல்லாத்தையும் சரிபார்க்கிற நீ அரிசி யை சரி பார்க்கிறியா.நீங்க தின்பிங்கிளா. நீங்க மட்டும் கறி விருந்து சாப்பிடுங்க

  • @rameshsaritha8646
    @rameshsaritha8646 Před 2 lety +74

    அதெல்லாம் சரி , தரமற்ற பொருட்களை கொடுக்கும் நீங்கள் ,எப்படி நியாயவிலை கடை என சொல்கிறீர்கள் , பேசுவதில் நியாயம் வேண்டாம....

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 Před 2 lety +2

      Correct bro.

    • @sivakumarr8056
      @sivakumarr8056 Před 2 lety +2

      அதுஎல்லாம் சரி தை பொங்கல் மஞ்சபை எங்க ரூபாய்5 ஆட்டய போட்ச்சா 2கோடி கார்டு

    • @thomasjoseph802
      @thomasjoseph802 Před 2 lety

      😀😀

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 2 lety +2

      நியாய விலைக்கடை என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.நியாய எடைக்கடை என்று பெயர் வைக்கவில்லை.அநியாய எடைக்கடை என்று வேண்டுமானால் பெயர் மாற்றம் செய்யலாம்.

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 Před 2 lety

      Super🤣🤣🤣🤣🤣😁

  • @akak4118
    @akak4118 Před 2 lety +29

    Rice is very bad. Most of days people don't buy it on seeing the color itself.

  • @vishalveramani3483
    @vishalveramani3483 Před 2 lety +24

    விடியல்அரசேநல்ல அரிசியாவதுகொடுங்கள்

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před 2 lety +36

    முதலில் ரேஷன் கடைக்கு சி சி கேமரா வச்சி கண் காணியுங்க மக்களுக்கு கொடுக்க வேண்டிய உணவு பொருட்கள் எங்கு செல்கிறது என்று

    • @krishnanhariharan5203
      @krishnanhariharan5203 Před 2 lety +2

      Super!!!

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 Před 2 lety

      Waste.அதை நாங்க வேலை செய்யாம செய்திடுவோம்..பராமரிக்க மாட்டோம்.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před 2 lety

      @@subbiahsundarakrishnan6442 👍🏻🤣🤣

    • @thanaathanaakarthik6635
      @thanaathanaakarthik6635 Před 2 lety +1

      Wow super sister 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍💞💞 super

  • @DineshKumar-qd5zp
    @DineshKumar-qd5zp Před 2 lety +9

    திமுக ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீட்டுக்கே வரும் என்று சொன்னார்களே என்னாச்சு????

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb Před 2 lety +2

      அந்த வாக்குறிதிகள் காற்றோடு கலந்து காணாமல் போய்விட்டது. Cm. Mind voice adap பாவிங்களா இன்னுமாட எங்கள நம்பரீங்க.

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 Před 2 lety +7

    ரேஷன் கடைகளில் தரமற்ற பொருளை தான் வினியோகம் செய்யறாங்க இந்த லக்ஷணத்துக்கு கண் விழிகள் scan செய்யறாங்ளாம் வேடிக்கையாக உள்ளது

  • @duraic6673
    @duraic6673 Před 2 lety +6

    ரேஷன் கடையில் அரிசி வாங்கி ஒரு நாள் எந்த அமை ச்சர் சாப்பிட முடியும்.20 கிலோ வேண்டாம்.5 கிலோ கொடு. பொன்னி அரிசி கொடுக்கலாமே.

    • @sasirekha431
      @sasirekha431 Před 2 lety +1

      20கிலோ புளுத்துபொன அரிசிக்கு பதிலா நல்ல தரமான அரிசி 5கிலோ கொடுத்தா எவ்ளோ நல்லாருக்கும்

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Před 2 lety +3

    ரேஷன் கடைக்காரர்கள் எங்களிடம் மற்ற பொருட்களை (சோப்பு/டீதூள்/மளிகை)வாங்கினால்தான் பொருட்கள்
    தரப்படும் என்கிறார்கள். இதைக்கேட்க யாருமில்லை. இந்த விற்பனையில் யாருக்கெல்லாம் பங்கு
    உள்ளதோ தெரியவில்லை.

  • @chotu5781
    @chotu5781 Před 2 lety +28

    Many old people suffer because of finger print

  • @jhonwilliam3488
    @jhonwilliam3488 Před 2 lety +2

    எங்க ஊர் பல்லடம் வட்டம் குன்னாங்கல்பாளையம் ரேசனில் வழங்கும். அரிசி மிகவும். மோசம் அரசு. கவனிக்கவேண்டும்........

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 Před 2 lety +4

    விரலை ஸ்கேன் பண்ற மெஷினை தராம வச்சுக்க முடியலை...
    கருவிழியை ஸ்கேன் பண்ற மெஷின் வாங்க போறாங்களாம்
    🤣🤣🤣

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Před 2 lety +2

    இவங்க திருடர்து நேர்மை நமக்கு போடற ரேஷன் பொருளை வாங்கி நாம் அனைவரும் தேச துரோகம் செய்து விடுவோம் . காலக் கொடுமை,😭😭😭😭😤

  • @thivakaran3780
    @thivakaran3780 Před 2 lety +26

    முதலில் தரமற்ற பொருட்களை கொடுப்பதை நிப்பாட்டி விட்டு தரமுள்ள பொருட்களை கொடுங்கள் 😡😡😡

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 2 lety

      எங்கள் பகுதியில் பொருட்கள் தரமாகத்தான் இருக்கின்றன சார்.

    • @thivakaran3780
      @thivakaran3780 Před 2 lety

      @@nandhakumar9632 நல்லம் தானே வாங்கி சாப்பிடுங்கள் 👍👍

  • @mohamadali4172
    @mohamadali4172 Před 2 lety +17

    ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் எடை என்றைக்கும்/ எந்த ரேஷன் கடையிலும் சரியாக இருக்காது! இதை சரிசெய்ய அமைச்சரால் உத்தரவாதம் தரமுடியுமா? 20 கலோ அரிசியை சரியாக எடைபோட்டால் 18 கிலோதான் இருக்கிறது. இந்த தியரி எல்லா ரேஷன் கடைகளும் பொருந்தும்.

    • @sevukamoorthyg3538
      @sevukamoorthyg3538 Před 2 lety +1

      அங்கிருக்கும் 50 கிலோ மூட்டையை எடை வைத்து பாருங்கள் 48 கிலோ மட்டும் இருக்கும்.... இது நியாயவிலை கடை ஊழியர்களின் தவறில்லை..... அவர்களுக்கு குறைவாக வரும்போது நமக்கு எப்படி நிறைவாக கொடுக்க முடியும்

    • @jennethjenneth5466
      @jennethjenneth5466 Před 2 lety +1

      பாதி அரிசியை கடைக்காரனே மூட்டைகட்டி கொண்டு போறான் கேட்டா எங்களுக்கு சம்பளமே இதுதான் என்கிறார் என்ன செய்வது.

  • @chotu5781
    @chotu5781 Před 2 lety +18

    Govt should allow guardians to get the things incase if there is no one in the family except the old person

  • @chandrasekaranannamalai3696

    தடையற்ற வேகமாக இயங்கும் வகையில் இணைய வசதி அளிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும்.

  • @SivaKumar-ni7vu
    @SivaKumar-ni7vu Před 2 lety +1

    தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் தரமான அரிசி தொடர்ந்து வழங்கபடுகிறது ஏன் இந்த பாரபட்சம்?

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Před 2 lety +23

    டேய்..வேலைக்கு முதல ஆளுகல எடுங்கடா...இவனுங்க எங்க எடுக்க போரானுக...7..8 வருசமா எடுக்காமாலயே வச்சிருகானுக....ரேசன்.... பஞ்சாயத்து ஊராட்சி...சென்னை பெருநகாட்சி வாரியம்...கட்டுமான வாரியம்...தமிழ்நாடு ஸ்லம்ஸ்... ஆவின்.....இப்படி சொல்லிகிட்டே போகலாம்....அட அதிமுக ஆட்சில வேலைய போட்டதையாவது எடுங்கடா அத கூட எடுக்கமாட்டிகிறாங்களே... ஜாலியா உக்காந்துகிட்டு பேசிட்டு சிரிச்சிகிட்டு இருகாங்க.... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️... இவனுங்க எடுத்து..

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 Před 2 lety +2

      கால்நடை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். விலை 7 லட்சம்.
      ( முதலில் வருபவருக்கே முன்னுரிமை. 2ஜி மெத்தர்ட்.)

    • @jollyshankar7872
      @jollyshankar7872 Před 2 lety

      @@selvamaninarayanasamy5381 ஓ..ஓகோ அப்புடியா விசயம்.. 7 லட்சமா..😲😲😲😲

  • @vjy0037
    @vjy0037 Před 2 lety +2

    தரம் முக்கியம் அமைச்சரே

  • @maheshmm3554
    @maheshmm3554 Před 2 lety +1

    ரேஷன் கடைகளில் இலவச பொருட்களை தவிர கட்டாய படுத்தி பொருட்களை விற்பனை செய்தல் நிறுத்துங்கள்

  • @rcn1263
    @rcn1263 Před 2 lety +9

    தமிழகத்தில் எத்தனை ரேசன் கார்டுகள் உள்ளன எங்க மருக்கா ஒரு முறை சொல்லு? 2 கோடிய 2 இலட்சம் னு சொல்றீங்க .....

    • @bharathj9151
      @bharathj9151 Před 2 lety

      நல்லா கவனிச்சிருக்கிங்க.. நீங்க எதிர்க்கட்சியா இருந்திருக்கலாம் Bro...!👍

  • @govindarajjeyaraman9418

    மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே ரேஷன் பொருட்கள் வாங்கும் வசதி செய்து தரவேண்டும்

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 Před 2 lety

      இந்த நாட்டில் பிறந்தமைக்காகவும், பொறுப்புடன் தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டதற்காகவும், தினமும் யாரவது மூன்று வேளை சாப்பாடு கொண்டு வந்து ஊட்டி விட்டால் நல்லது. மற்றபடி என்னைப் பெற்றவருக்கு அல்லது எனக்குப் பிறந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது / சுமத்தக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  • @rajarajan506
    @rajarajan506 Před 2 lety +2

    ரேஷன் அரிசி அருமைத் தேரியும் சாப்பிட்டால் தேரியும் பிடித்த எனக்கு

  • @நரவேட்டையன்1992

    அகிலா நீ எங்கள் குல தெய்வத்தின் திருபெயரை வைத்ததால் தப்பிச்சிட டார்லிங் இல்லை என்றால் கசக்கி பிழிந்திருப்பேன்

  • @jistr4399
    @jistr4399 Před 3 měsíci

    . கைரேகை மூலம் கொடுப்பதனால் கொள்ளையடிப்பது தவிர்க்கப்படுகிறது மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்

  • @AjithAjith-fz7en
    @AjithAjith-fz7en Před 2 lety +7

    முதல்ல நல்ல அரிசி கொடுங்கையா. அப்புறம் கண்ண பத்தி பேசலாம் 🤨🤨

  • @poondighanavelmurugan6362

    தரமற்ற ரேஷன் அரிசி மக்கள் மத்தியில் ஒரு கிலோ விலை ரூபாய் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அரசின் கொள்முதல் விலை 40 ரூபாய்க்கு மேல் உள்ளது அதை பணமாக மக்களுக்கு கொடுத்தாள் தனியார் கடையில் பொன்னி அரிசியை வாங்கி சாப்பிடுவாங்க மக்கள் அந்தப் பணத்தில்.

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 Před 2 lety +30

    For a month in s year ration rice must be given to Mlas and Ministers and the rice being used by Mlas must be given to Ration card holders.This is what we can call Social justice or in Tamil Samooha Needhi.

  • @prakash-zo3op
    @prakash-zo3op Před 2 lety +9

    எடப்பாடி இருந்த அப்போ வீட்டுக்கே வந்த ரேஷன் பொருள், இப்ப கடைக்கு போனாலும் நாலு நாள் கழித்து தான் கிடைக்குது!
    பொருள் எல்லாம் அதிகாரி,அரசியல்வாதி வீட்டுக்கு போய்ட்டு வர நேரம் ஆகுது போல!
    மிச்சம் போன போகட்டும் னு அனுப்புறாங்க!

  • @vasudevanr2570
    @vasudevanr2570 Před 2 lety

    மோடி வழங்கிய அரிசி தமி ழ கத்தில் வழங்க - வில்லை அமைச்சர் கவனிங்க வேண்டும் சொசைட்டி கூட்டுறவு மூலம் நடத்தும் கடைகளை நீக்கி TN Ce கடை மூலம் பொருள் வழங்க வேண்டும்

  • @aravind270
    @aravind270 Před 2 lety

    எண் இரு கண்களை தற்போது என்னவளிடம் தந்துவிட்டேன்...இனி எனக்கு ரேஷன் இல்லை 😍

  • @pattu9786
    @pattu9786 Před 2 lety

    இந்த Coment boxla ௭ல்லா௫ம் அரிசி சரி இல்லனுதான் அதிகமா சொல்லி௫க்கா௩்...அதனால இத அரசு கவனத்திற்கு இந்த ஊடகமே கொண்டு செல்ல வேண்டும்🙏🙏🙏

  • @rajendiranarumugam4585
    @rajendiranarumugam4585 Před 2 lety +3

    Minister
    Mla
    Inimel Ration rice than Sapdanum

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv Před 2 lety +1

    MLA hostal satta sabai canteen ration shop material use pannunga first

  • @ponnanseenivasagam7239
    @ponnanseenivasagam7239 Před 2 lety +2

    இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதானே கொள்ளைக்கூட்டத்துக்கு ஓட்டுப்போட்டு சந்தோசப்படுறீங்க.

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 Před 2 lety

      கொள்ளை அடிக்காதவன் எங்கேஇருக்கிறான்

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 Před 2 lety +1

    Correct. First let them eat.. Atleast only once

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 2 lety +4

    கண் ஆப்ரேசன் செய்தவர்களுக்கு எப்படி ஸ்கேனர் வேலை செய்யும் 🙄🙄🙄

    • @ragupathyen
      @ragupathyen Před 2 lety

      குடும்ப அட்டையில் உள்ள யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்

  • @saravanann410
    @saravanann410 Před 2 lety +1

    idellam sari pannalam mudalla nalla arisi nalla parupu idellam podunga eppa ponalum puluthu pona arisi poduran

  • @sanchanasn3979
    @sanchanasn3979 Před 2 lety

    நமது முதலமைச்சர் வாழ்க வாழ்க

  • @user-zs4rl5dh9m
    @user-zs4rl5dh9m Před 2 lety +1

    சூப்பர் 👌👌👌👌

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 Před 2 lety +3

    Package Cheithae Anupallam anaithu porulgalaium.Weight yedupathil cut seiya matargal.Standard agavum irrugum.Nalla Porulgal kodungal.yenyental they are ulyaigum makkal.

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety

    இனிவரும் காலங்களில் அடி கரும்பை அளவெடுத்து அதற்கேற்ப அரிசி சர்க்கரை போடுவார்கள் என நினைக்கிறேன்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +1

    .இலவச அரிசி இருந்தாலும் விலை குறைந்த தரமான அரிசியை மக்கள் விரும்பி வாங்குகிறார்களா? என்பதை சோதனை முறையில் செய்து பார்க்கலாம்.

  • @dreamnature2894
    @dreamnature2894 Před 2 lety +9

    புழுகு மூட்டைகளும்
    புழுத்து போன அரிசிகளும்.

  • @ganesankandasami1980
    @ganesankandasami1980 Před 2 lety +2

    எப்ரல் மாதம் வாங்கிய ரேஷன் அரிசியை சமைத்து நாத்தம் அடிகிரது

  • @sankaraveilappan1262
    @sankaraveilappan1262 Před 2 lety

    Respected C.M.sir............First focus on Quality RICE Distribution please...........

  • @saralgrace2900
    @saralgrace2900 Před 2 lety

    மட்டமானதை மக்கள் தலையில் கட்டுவது தான் வேலை.

  • @Yazhichannel11
    @Yazhichannel11 Před 2 lety

    காலம் காலமா Eapodhum pola வாக்குன மாதிரி இருந்தா நல்லா இருக்கும் முதியவர் ku எந்த problems வராது

  • @eswarans3124
    @eswarans3124 Před 2 lety +1

    கண் scaner மூலமாக நோய் பரவும் வாய்ப்பு உள்ளது

  • @sasikumarrss1170
    @sasikumarrss1170 Před 2 lety

    70 வருடம் சுகந்திரம் சூப்பர் காந்தி வாழ்க
    Trb இந்த அரிசியை சாப்பிடுவாறா 😀😀😀😭

  • @Rkuma50
    @Rkuma50 Před 2 lety

    Before that we need battery backup ...karandu illanu muditu poiranga

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 Před 2 lety

    They sell for cattlefeed .many ppl resell at rs 7 per kg and the buyers sell to ricemills. The authorised mills give the same old rice to govt for ration shops. Part of rice is coming in rotation. Many doing idli batter business depends on this rice. No one is cultivating paddy specially for govt. But in govt procuring spots they spoil the quality by keeping in rain. This dept need committee to restructure the system.

  • @sellasellasenthil1804
    @sellasellasenthil1804 Před 2 lety +2

    ஏங்க நீங்க போடுற அரிசி தெருநாய் கூட திங்க மாட்டேங்குது மனிதன் எப்படி சாப்பிடுவான்

  • @rajeswariv1684
    @rajeswariv1684 Před 2 lety +4

    Pulutha porul podarathukku ithu thevaya

  • @Krishnantvs
    @Krishnantvs Před 2 lety

    Intha government vantha piragu quality good in more ration shops . If problem found to be inform the area coucilar or panchayat office . They will Take sivior action .

  • @kulandairajloorthu3387

    Mostly ration shops won't distribute all things in one time it must change Pl take action immediately..

  • @amaldumeel8082
    @amaldumeel8082 Před 2 lety +1

    Yes 105 ₹ration porul 145 ₹ vamguranha

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 Před 2 lety

    In future ration raise super aaga
    Don't worry varum

  • @spkumarappan3047
    @spkumarappan3047 Před 2 lety

    Resan Arisiyai Aravaikku Koduththal
    Rice Millil Araikka Marukkirarkal Adhanal Arasu Arusiyai Mavaka
    Koduththal Nallathu (pulunkal Rice) Raw Rice Araikkirarkal

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Před 8 měsíci

    How they are going to control ration smuggling to neibhouring states?

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Před 2 lety +2

    first we need rice bags with standard weight the measuring guys everytime not measuring

  • @smvveera
    @smvveera Před 2 lety

    கண் கருவிழி சரிபார்ப்பு செய்தால் கொரோனா, மெட்ராஸ் ஐ பரவ அதிக வாய்ப்பு உண்டு

  • @lordmuruga9840
    @lordmuruga9840 Před 2 lety

    கை ரேகையே பொருத்த முடியலயா இதுல இன்னோரு மிசின் கேக்குதோ🥱

  • @pattu9786
    @pattu9786 Před 2 lety

    ௭ல்லா இட௩்ளிலும் CCTV camera வைக்கி௩்க ...ரேசன்லயும் கண்டிப்பா வை௩்க

  • @sivanantham7866
    @sivanantham7866 Před 2 lety

    Super .

  • @jbargavi9694
    @jbargavi9694 Před 2 lety

    First koncham taramana arisi kudunga sir apparama ration porul vanguvadharku application kudukkalam

  • @sudevpalaiyan1982
    @sudevpalaiyan1982 Před 2 lety +1

    போற போக்க பாத்தா சாமான் இருக்கான்னு பாத்துதான் ரேஷன் குடுப்பாங்க.

  • @ksk3300
    @ksk3300 Před 2 lety

    Four digit pin number may be considered. Like how people are using their ATM card.