வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் பாடல் HD | ரவிச்சந்திரன் | வாணிஸ்ரீ | பாரதி | தங்க தம்பி .

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2024
  • #theanisai #ravichandran #kvmahadevan #vanisri #bharathi #tamilsongs #lovesongs #sad
    வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் பாடல் HD | ரவிச்சந்திரன் | வாணிஸ்ரீ | பாரதி | தங்க தம்பி . Tamil Lyrics in Description .
    Movie : Thanga Thambi
    Music : K. V. Mahadevan
    Starring : Ravichandran, Bharathi, Vanisri
    Song : Vetkamenna thendral
    Singers : T. M. Soundarajan and P. Susheela
    Lyrics : Avinasi Mani
    பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
    இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
    பாடல் ஆசிரியர் : அவிநாசி மணி
    ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து
    தொட்டாலும் வெட்கமென்ன
    பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
    பட்டாலும் குற்றமென்ன….
    ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து
    தொட்டாலும் வெட்கமென்ன
    பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
    பட்டாலும் குற்றமென்ன..
    ஆண் : வெட்கமென்ன …
    பெண் : ஹா…..ஆ…
    ஆண் : மையளந்த பார்வையாலே
    பொய்யளந்து பேசலாமா
    பெண் : கண்ணளந்த மேனியழகை
    மெய்மறந்து பார்க்கலாமா
    ஆண் : மையளந்த பார்வையாலே
    பொய்யளந்து பேசலாமா
    பெண் : கண்ணளந்த மேனியழகை
    மெய்மறந்து பார்க்கலாமா
    ஆண் : ஆசை என்னை தள்ளும்..
    பெண் : நாணம் என்னைக் கொல்லும்
    ஆண் : {சேலைக் கொண்டு பால் முகத்தை மூடலாமா
    பெண் : காதல் நெஞ்சும் காவலின்றி ஓடலாமா…..} (2)
    ஆண் : ஐயோ வெட்கமென்ன தென்றல் வந்து
    தொட்டாலும் வெட்கமென்ன
    பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
    பட்டாலும் குற்றமென்ன..
    ஆண் : வெட்கமென்ன ….
    பெண் : ஹா
    ஆண் : ஹோ
    இருவர் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்
    பெண் : {ஓடை நீரில் ஆடும்போது
    ஓரக்கண்ணால் பார்க்கலாமா
    ஆண் : உற்றுப் பார்க்கும் கண்ணை விட்டு
    என்னை மட்டும் கேட்கலாமா} (2)
    பெண் : ஆடை மாற்றும் நேரம்……
    ஆண் : வாடை காற்று வீசும்……
    பெண் : {கைகள் கொண்டு மேனியெங்கும் மூடிக் கொள்ளவா
    ஆண் : மனதுக்குள்ளே காதல் ராகம் பாடிக் கொள்ளவா} (2)..
    ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து
    தொட்டாலும் வெட்கமென்ன
    பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
    பட்டாலும் குற்றமென்ன..
    ஆண் : வெட்கமென்ன ….
    பெண் : ஹா
    ஆண் : ஹோ
    இருவர் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்

Komentáře • 6

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +3

    ரலிச்சந்திரன் பாரதி அழகு ஜோடி ❤😂❤😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +1

    அழகான ப்பாடல் ஆடல்! ஜெமினி பாரதி அழகான ஜோடி !எஸ்எம்எஸ் அருமை ! நன்றீ ❤😂❤😂❤😂

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před měsícem +2

    **கண்கள் ஒன்று பட்டாலும் குற்றம் என்ன**. அழகு பாரதியைப் பார்த்தாலே மனம் சிலிர்க்கும்.அந்த காலத்தில் அழகு பதுமை பாரதி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před měsícem +1

    "பாரதி" யின் அழகும்..அதற்
    கேற்ப ஆட்டமும் ஜாஸ்தி தான்!!

  • @vegnes79
    @vegnes79 Před měsícem

    barathibadankuat

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před měsícem

    படம் கேள்வி பட்டது உண்டு!!பாடல் அதிகம் கேட்காததுஅதேபோல் பாடலாசிரியர்!!
    அவினாசிமணி உளுந்தூர்
    பேட்டை ஷண்முகம் ஆத்தூர் விஜயராம் இவர்கள் அதிகம் பாடல்
    எழுதவில்லை போலும்!! தங்கள் ஊருக்கு பெருமை
    தேடித்தந்த நல்ல உள்ளங்கள் நன்றி!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉