வேருக்கு நீர் - Dr Jayanthasri Balakrishnan | SIEGER SPINTECH | 29th JULY 2023

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2023
  • " வேருக்கு நீர்" Organized By
    SIEGER SPINTECH EQUIPMENTS PVT. LTD
    பேரன்பு பேராசிரியரின் தன்னம்பிக்கை பேச்சு : ‪@jayanthasribala‬
    SIEGER SPINTECH EQUIPMENTS PVT. LTD.,
    SF No. 49 Annur Road, Arasur Post,
    Coimbatore - 641 407, India.
    info@siegerglobal.net

Komentáře • 29

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 Před 9 měsíci +2

    வேருக்கு நீர்
    இதை இதைவிட யாரும் இவ்வளவு அழகாக சொல்லி விட முடியாது
    ஒவ்வருவருடைய ஆழ் மனது என்ற வேருக்கு நம்பிக்கை என்ற நீரை ஊற்ற முடியாது இதனால் வளரும் நல்ல கனி கொடுக்கும் மரம் என்ற மனிதன்
    மிக்க நன்றி வணக்கம்
    அம்மா

  • @vickyarm9308
    @vickyarm9308 Před 10 měsíci +2

    வணங்குகிறேன் அம்மா

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 Před 9 měsíci

    Very inspiring talk. It is applicable to any individual.

  • @sureshan3
    @sureshan3 Před 10 měsíci +1

    Love your Thamil, and working with you. Let us work together,

  • @MahasWowCreations
    @MahasWowCreations Před 10 měsíci

    Her knowledge and love for language is always commendable.. keep rocking more and more

  • @mohana9776
    @mohana9776 Před 10 měsíci

    Ungal speech romba alagu mam

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 Před 10 měsíci

    அற்புதமான பேச்சு! I want to go back to my school days, correct myself, n relive my days again in a meaningful way.

  • @krishnarpanamevergreenmaths
    @krishnarpanamevergreenmaths Před 10 měsíci +1

    அம்மா, உங்கள் அமரத்துவமான வேத வார்த்தைகள் என்னுள் ஊடுருவி, என்னை நானே சந்தித்து கண்ணீர் சிந்த வைத்தன. நன்றி அம்மா...
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🌹

  • @yogambikaibalakrishnan9792
    @yogambikaibalakrishnan9792 Před 10 měsíci +1

    அற்புதமானவார்த்தைகள்மனதைசிந்திக்கவைத்ததுநன்றிகள்❤🎉

  • @veerapathiranp5666
    @veerapathiranp5666 Před 9 měsíci

    😢

  • @manomano403
    @manomano403 Před 10 měsíci

    கொள்ளை இன்பமது, சொல்லில் வார்த்தையில்லை, எங்கும் விளைநிலங்கள் பிரசவ சுகத்தினில் நனையும்..

    • @manomano403
      @manomano403 Před 3 měsíci

      மனம் படைத்தவன் மனிதன்,
      ஐந்து புலன்கள் ஆறு அறிவு கொண்டவன்,
      ஐந்து புலன்கள், அவை புத்தி வாயிலாக செயற்படும் தன்மை உடையது,
      ஆனாலும், நிலைப்படுத்தப்பட்ட இந்த ஒழுங்கியல் சாராமல், இந்த ஐம்புலன்களும் மனம் வழியாகவும் செயற்படும் இயல்பினதாகும்,
      ஐந்து புலன்களும் ஐந்து பொறிகள், ஐந்து உறுப்புக்கள், புத்தி இந்த ஐந்து உறுப்புக்களின் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்து கொண்டு, தனித்துவமான எண்ணங்கள் சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆறாவதான இன்னொரு நிலைப்படுத்தப்பட்ட உறுப்பு என்று கொள்ளலாம்,
      மனம் ஆனது பொறி புலன் அறிவுகள் கடந்த சுயாதீனமான தனித்துவமான ஆற்றல் பொருந்திய உடலின் உறுப்பு ஒன்று அல்லாத ஒரு energy அல்லது power எண்று கொள்ள வேண்டும்,
      புத்திதான் மகா சக்தி பீடம், புத்திக்கு அப்பாற்பட்டு எதுவும் இருக்க முடியாது என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள், புத்தியின் கட்டுப்பாட்டில் மனத்தை நெறிப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்,
      இருக்கட்டும்,
      ஒரு நீர்த்தேக்கம் ஒன்று இருந்தால் அதில் சேகரிக்கப்பட்ட நீரை உரிய கதவுகள் வாயிலாக திறந்து பயன்படுத்துதல் போன்ற ஒரு நிகழ்விற்கு இதனை ஒப்பிடலாம், அவ்வளவும்தான்,புத்தியால் மனத்தை ஆழுதல் ஒரு இராஜாங்க கருமம் போன்றது,
      இவ்வாறெல்லாம் எதனுக்கும் கட்டுப்பட்டு இயங்க வேண்டிய அவசியம் ஒன்றில்லாத பேரெழுச்சியென்று சொல்லக் கூடிய, கங்கு கரையற்ற காட்டாற்று வெள்ளம் போன்ற கட்டுக்கடங்காத நீர்ப் பிரவாகம் போன்றது மனம்,
      இறுதி நிலையில், ஒரு ஆழம் கடலுக்கு உவமை சொல்லக்கூடிய ஐம்பூதங்களில் ஒன்றின் பலத்தை ஒத்தது மனம்,
      மனம் புத்தியை ஆழ அனுமதித்தால் ஒருவனது ஆற்றல் நிலையில் அவன் ஒரு ஞானியாக ஆகிறான்,
      புத்தியால் மனத்தை அடக்குதல் என்பது உலகத்தில் ஏலவே உள்ள பல்வேறு பயித்தியக் காரத் தனங்களில் ஒன்று, ஒரு புறத்தே அது நடந்து கொண்டுதான் இருக்கும்,
      புத்தி என்பது ஐம்பொறிகளின் ஆட்சி,
      மனம் என்பது ஐம்பூதங்களின் ஆட்சி,
      இது, மானுட மேம்படுத்தல் மனித முன்னேற்றங்கள் தொடர்பான உளவள ஆலோசனைப் பணியில் இருக்கின்ற ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்து பதிவு செய்யப்படுகின்ற ஒரு குறிப்பு ஒன்றாகும்,
      பார்க்கலாமா..

  • @parvathyv9562
    @parvathyv9562 Před 9 měsíci

    Absorbant mind

  • @manomano403
    @manomano403 Před 11 měsíci

    Kanakkum selvam nooru vayathu ivaiyum thara nee kadavaaye..

    • @manomano403
      @manomano403 Před 11 měsíci

      எந்த உயிரினமும் உயிர் வேட்கையாலும் பசி தாகத்தினாலும் உந்தப்படுகின்ற வேளையிலே, இன்னொரு உயிர் நிலை அறம் பற்றி சிந்திப்பதில்லை.
      கொன்று புசிக்கின்றன.
      ஒருநாள், இன்னொன்றுக்கு இரையாகின்றன, அல்லது மண்ணோடு மண்ணாக மடிந்து போகின்றது.
      மனிதன் என்ற விலங்கும் இதற்கு விதிவிலக்கானது அல்ல என்று சொல்வாரும் உளர். ஆயின், அவர் விலங்கொடு ஒக்க வாழ்வர்.
      விலங்கிலிருந்து மனிதனும், மனிதனிலிருந்து கடவுளும், தமது எண்ணங்களாலும் செயல்களாலும் முற்றிலும் வேறு படுகின்ற தன்மையை
      மனத்திடை இருத்திச் சிந்தித்தால்,
      அநித்தியமான உலக வாழ்க்கையில், அவலங்கள் மத்தியில்தான் தர்மமும் அறமும் பேசப்படுவதை நீ உணர முடியும்.
      உணர்ந்தால், உன் எண்ணத்தையும் செயலையும் ஒழுங்குபடுத்துவதன் ஊடாக, உன் மனம் தூயதாக்கி, கடவுள் கண் கலங்காமல் இருக்க உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை நீ செவ்வனே செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
      கருமத்தில் பற்றுதல் இல்லாமல் கருமம் ஆற்றுவதும், ஒரு சலனமும் இல்லாத எண்ணங்களில் அல்லது எண்ணங்கள் கடந்த சாந்தி நிலையில் தவம் இயற்றுவதும்தான் உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை நியதி என்பதையும் புரிந்து கொள்வாய்.
      ..
      - மனிதப் பண்பில்லாத மதம் கொண்ட பேர் அறியட்டும் விழலுக்கே நீர் பாய்ச்சும் நீர் -

    • @manomano403
      @manomano403 Před 11 měsíci

      பாதைகள்.. வகுத்த..பின்.. பயந்..தென்ன..லாபம், நட..மனிதா துயர், கட..மனிதா! தொடர்..மனிதத்தின், சங்கிலி அறுந்தால் நல்லமதா!! விடி.. காலைப்.. பொழுதில், துயில்.. கலைந்தே..கையில், தூரிகை..கூட்டியே.. ஓவியம்.. ஒண்ணு.. தீட்டிடுவாய்!!! அதில், உறவுக்கு..அர்த்தம்..இன்சொல் எனப் பொருள்.. மீட்டிடுவாய்!!!!
      ..
      10.08
      04.03.2021
      💚💛🧡💙✔💚💛🧡💙💗

    • @manomano403
      @manomano403 Před 11 měsíci

      எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு..
      ..
      - மானுடம் மகத்துவமானது -
      13.37

    • @manomano403
      @manomano403 Před 11 měsíci

      நமக்கொரு குறையில்லை ,
      யாங்கணும் அறிந்தனம்,
      பாங்கொடு பகிர்தலில்
      பண்புணர்ந்தோம்!
      அந்த,
      பண்படு நிலையினில்
      அவரில்லை,
      அதுவுமோர் குறை இல்லை!!
      வேர் இன்றி மரமில்லை,
      நீர் இன்றி வேரில்லை
      வான் பொழிய
      வளமன்றி வேறில்லை!!!
      அறிவினில் ஒன்றுமில்லை
      அறிந்தது போதும் நினை,
      வீண்பழி
      ஏன் நமக்கு!!!!
      அது என்ன
      இரு பத்து ஏழாகும்,
      ஏன் நாலு நாளால
      கிழக்கென்று ஆகும்?
      ..
      15.27

    • @manomano403
      @manomano403 Před 11 měsíci

      நெடு நாட்களாக விழுந்து எழும்பி சேகரிக்கின்ற அனுபவ அறிவை ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சில மணித் துளிகளில் எந்தவித சிரமமுமின்றி பெறுவதென்பது சாதாரணமானதும் சாத்தியமானதுமான ஒன்றுதான்!
      பெறுகின்றபோது, அவை ஆரம்பத்தில் வெறும் தகவல்களாகவே உட்பொதிவு செய்யப்படும், அனுபவமாக மாறும்வரை அது அவ்வாறேதான் இருக்கும்!!
      அனுபவம், அறிவில் தெளிகிறது, அறிவு, அனுபவத்தில் துலங்குகிறது!!!
      தெளிவு பெற முடியாமல் போனாலும் போகுமே தவிர, அனுபவம், நினைத்ததை முடிக்கும்,
      அனுபவத்தை எட்டாத அறிவு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே!!!!
      ..
      28.08.2023