கபடி புகழ் ராக்கெட் ஆமூர் | Rocket Amoor Kabaddi | Amoor | Hello Madurai | App | TV | FM | Web

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • ஒத்தக்கடையிலிருந்து திருமோகூருக்கு அடுத்த சில கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் கிராமம். நாம் வேறு ஒரு வீடியோவிற்காக ஆமூர் கிராமம் சென்று இருந்தோம். கிராமத்தின் சாவடி முன்பாக நின்றோம். சாவடி முழுக்க பரிசுக் கோப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டே எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
    எதற்காக இவ்வளவு பரிசு இங்கு இருக்கு என்று. பிறகு நாம் சந்திக்கச் சென்ற அவ்வூரின் இளைஞர் பிரபு அவர்கள், இங்குள்ள பரிசுகள் எல்லாம் எங்க ஊரு பசங்க மற்றும் முன்னாள் தலைமுறையினர் வாங்கியது என்று மிகச் சாதாரணமாக கூறினார். கபடிக்காக ஒரு கிராமமேஇப்படி இருக்கின்றது என்பது பெருமகிழ்ச்சியும், பெரிய ஆச்சர்யமுமாக நாங்கள் பரிசையே பார்த்துக் கொண்டிருக்க, இங்கிருப்பதைபோல் வேறு இரு இடங்களில் உள்ளது என்று மேலும் ஆச்சர்யத்தை அதிகப்படுத்தினார் பிரபு.
    பிறகு நாங்கள் அதை பார்த்துவிட்டு வெறும் வாயில் பாராட்டினால் எப்படி ? அன்றைக்கே வீடியோவாக பதிவு செய்ய ஏற்பாடு செய்ய முடியுமா என்று பிரபுவிடம் கேட்க. அவரும் நிச்சயமாக என்று அன்று மாலை 4 மணிக்கு அனைவரையும் வரவழைத்து சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தார். அதற்கு முன்பாக அருமையான அசத்தலான அசைவ உணவு எங்களுக்கு கிடைத்தது.
    அதன் பிறகு நாங்கள் ஒவ்வொருவரையும் பேட்டிக் காணும்போது அவர்கள் கூறிய செய்திகள் எங்களை மேலும், மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கிட்டதட்ட ஆறு தலைமுறைகளாக இவ்வூரில் கபடி விளையாட்டுக்காக இளைஞர்கள் உருவாகுவதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது.
    இங்குள்ளவர்கள் கபடி போட்டியில் வெற்றி பெறாமல் வருவதில்லை. போட்டிகளில் வெற்றி பெற்று கிடைக்கும் பணத்தை மட்டும் பிரித்துக் கொள்வதும், பரிசுக் கோப்பைகளை ஊரில் உள்ள சாவடியில் பொதுவாக வைப்பதும் இன்றுவரை நடைமுறையில் உள்ள ஒன்றாகும். ஆமாம் நீங்கள் அந்த சாவடியை நேரில் பார்த்தால் எங்களைப் போல் நிச்சயமாக அசந்து விடுவீர்கள்.
    முக்கியமாக வேடர் ஆமூர் கபடி என்ற பெயரானது, இரண்டாம் தலைமுறையினரான உயர்திரு பிச்சை அவர்களின் குழுவின் விளையாட்டுக்கு பிறகு ராக்கெட் ஆமூர் கபடிக் குழு என்று மாறிவிட்டது. அதற்கான காரணத்தை வீடியோவில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    இன்றளவும் ராக்கெட் ஆமூர் கபடி குழுவினருக்கு தமிழக அளவில் தனி பெயருண்டு. ஆனால் இந்த கிராமம் குறித்த தகவல் பெரிய அளவில் வெளி வரவில்லை என்பது வருத்தமான என்றபோதும், அதை ஆவணப்படுத்திய மகிழ்ச்சி எங்களுக்கு எப்பொழுதும் உண்டு.
    இதில் திரு.பிச்சை அவர்கள் பேசிய விதம் பேட்டி எடுக்கும்போது, கபடி மீதான ஆர்வமும், மரியாதையும் அதிகரித்தது. அதில் நாங்க விளையாண்ட காலம் எல்லாம் வீடியோ இல்ல... அதுமட்டும் இருந்திருந்தா இன்னைக்கு எங்க விளையாட்ட பார்த்து அசந்திருப்பீங்க... எங்க பசங்க இன்னும் அந்த மாதிரி ஆடல என்று பேசிய விதம் இன்னும் அவரிடம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்றே எங்களுக்கு தோன்றியது.
    மேலும் கபடி விளையாட்டுக் குறித்து இதுபோன்ற குழுவினர்களை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்ற முனைப்பை கொடுத்துள்ளது. எல்லாவற்றையும் விட இந்த கிராமத்தில் சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் கபடியில் உள்ளவர்களுக்கு கிடையாது. கிராமத்திலும் இவைகள் விற்பனை செய்வதில்லை.
    500 தலைகள் கொண்ட இந்த கிராமம் இன்னும் நிறைய ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. இதுபோல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிராமங்களை அரசு இனம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க முன் வர வேண்டும்.
    உலக அளவில் நடைபெறும் கபடி போட்டியில் இங்கிருந்து ஒரு இளைஞரை கொண்டு சென்று தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்பதே இவ்வூர் மற்றும் எங்களின் ஆசையும். இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆமூர் கிராமத்தின் மீது ஒரு நல்ல மரியாதை நிச்சயமாக ஏற்படும். இன்னும் நிறைய பரிசுகள் வாங்க எங்களின் வாழ்த்துக்கள் எப்போதும். இவ்வூரைத் தாண்டி செல்லுகையில் இதேபோல் கிராமத்தின் பொதுவில் பரிசுக் கோப்பைகள் வைக்கப்பட்டிருந்தை பார்க்க முடிந்தது. நாமும் ஆமூர் கபடிக் குழுவினர் ரசிகர்களாக மாறிப் போனதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
    எங்களுக்கு ஒரு வருத்தம் உண்டு. வீடியோ மிகத் தெளிவாக எடுக்க இயலாத நிலைக்கு அன்றைக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்பது மட்டும். மீண்டும் ஒரு முறை இக்கிராமத்தை வேறு விதமாக காண்பிப்போம் என்ற நம்பிக்கையில் அவ்வூரிலிருக்கும் நொண்டிச்சாமியை வணங்கிவிட்டு கிளம்பினோம் வேறு ஒரு பயணத்தை நோக்கி....
    நீங்களும் இவர்களை வாழ்த்த அழைக்கவும் கபடி புகழ் ராகட்கெட் ஆமூர்: 76394 40380.
    _________________________________________________________
    இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓 Facebook : / maduraivideo
    💓web site :www.hellomaduraitv.com
    💓web site :www.hellomadurai.in
    💓web site :www.tamilvivasayam.com
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

Komentáře • 16

  • @muni-editing-tn-59
    @muni-editing-tn-59 Před 2 lety +3

    💐வாழ்த்துக்கள்....
    🔥ராக்கெட் ஆமூர்🔥
    💥மிக சிறப்பு 💥ஹலோ மதுரை 💥

  • @-vinsmedia-2519
    @-vinsmedia-2519 Před 3 lety +4

    அருமை நண்பா !
    இதுபோன்ற கிராம நிகழ்வினை தேடி அடயாளம் செய்தமைக்கு .
    என் வாழ்த்துகள் நண்பா👍🏻

  • @kavinkumara8144
    @kavinkumara8144 Před 3 lety +11

    ஆமூர்ரில் மற்றெரு சிரப்பும் உள்ளது 25வயதிற்க்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு போதைபொருள் வழங்கபடாது (சீகரட்,போன்ற பொருட்கள்)👍🔥

  • @vijayrocky5742
    @vijayrocky5742 Před rokem

    Vasanth bro💥💥💥

  • @ramashramash1956
    @ramashramash1956 Před 3 lety +4

    Kompadiyan super rider

  • @vinothr466
    @vinothr466 Před 2 lety

    Karthi Anna super player..

  • @saran07772
    @saran07772 Před 2 lety +1

    Chittampatti..🔥

  • @funytgame1286
    @funytgame1286 Před 3 lety +1

    Super pro

  • @vishnuknp4630
    @vishnuknp4630 Před 3 lety +1

    Super

  • @suryastr1868
    @suryastr1868 Před 3 lety +1

    Super dears

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v Před měsícem +1

    ❤❤❤🎉🎉🎉 நான் திருப்பூர் ஆட்டோ செந்தில் நான் மூன்று முறை ஆம்பூர் அணியை அழைத்து திருப்பூரில் விளையாடி இருக்கிறேன் மூன்று முறையும் ஆமூர் அணி விளையாண்ட விளையாட்டை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது திருப்பூர் பக்கத்தில் ஊத்துக்குளி அப்படிங்கிற ஊருக்கு பக்கத்துல ஒரு மேட்ச் விளையாண்டா அந்த மேட்ச்ல தம்பி கார்த்தி சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசை வாங்கினார் பரிசை வாங்கினார் 2008 2009 காலகட்டத்தில் ஆம்பூர் அணி திருப்பூருக்கு விளையாட வருது அப்படினே ஆடியன்ஸ் எல்லாமே விரும்பி பாப்பாங்க எங்களுடைய அணி பெயர் திருப்பூர் கார்த்தி பிரதர்ஸ்

  • @md.santa007
    @md.santa007 Před 2 lety

    Bro me Amoor bro

  • @prasanthprasanna2584
    @prasanthprasanna2584 Před 3 lety +2

    Nanum amooran

  • @leninmedia6453
    @leninmedia6453 Před 3 lety +1

    Super

  • @user-qv7fn6vh5b
    @user-qv7fn6vh5b Před 3 lety +1

    Super