சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் | மிகவும் பிரபலமான கோயில்கள் | famous temples in salem | location

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2021
  • #famoustemples #salemtemples #கோயில்கள்
    சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் | மிகவும் பிரபலமான கோயில்கள் | famous temples in salem | location
    Powered by SALEM SISCOM MEDIA
    for CZcams & TV Advertising Contact us Via Whatsapp@ 9629 11 7608
    E-Mail : siscom.co@gmail.com
    Salem District, Tamilnadu
    1.தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.
    2.அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் உள்ளது.
    இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.
    மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி,
    பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்
    3.அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்
    ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது
    4.அரங்கனூர் செங்காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், அரங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்
    இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
    5.அப்பா பைத்தியம் சாமிகள் ஜீவசமாதி மற்றும் கோயில், சூரமங்கலம், சேலம்
    அப்பா பைத்தியம் சாமிகள் என்பவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாழ்ந்த சித்தராவார். இவர் கருவூர் கோட்டை ஜமீன் வாரிசாக சித்திரை 8 1859 அன்று பிறந்தவர். பதினாறு வயதில் வீட்டினை விட்டு வெளியேறி பழனியில் தங்கினார். அழுக்கு சுவாமி எனும் சித்தரை குருவாக ஏற்று சித்துகளை கற்றார்.
    பக்தர்களிடம் தன்னை பைத்தியம் என்று இவர் கூறிக்கொண்டமையால் பைத்திய சாமி என்றும், பக்தர்களின் கோரிக்கைகளை தந்தைபோல இருந்து நிறைவேற்றுவதால் அப்பா பைத்தியம் சாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். எண்ணற்ற ஊரில் தங்கி பக்தர்களுக்கு உதவிய இவர் சேலம் சூரமங்கலத்தில் 141வது வயதில் தை 28 2000 த்தில் ஜீவ சமாதி அடைந்தார்
    6.பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் பேளூர் என்னுமிடத்தில் உள்ளது.
    மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது
    7.சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோயில். தென்றல் வீசும் கிராமங்கள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், விண்ணை தொடும் மலைகள் நிறைந்த பகுதியில் கண்ணுக்கு விருந்தாய், கம்பீரமாய் காட்சியளிக்கிறது கந்தசாமி ேகாயில். தைப்பூசம், பங்குனி உத்திரம் என்று முருகனுக்கு உகந்த நாட்கள் மட்டுமல்ல, அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் களை கட்டும். இங்கு நடக்கும் வேண்டுதல்களும், நேர்த்திக்கடன்களும் வியப்புக்குரியவை என்றால் மிகையல்ல. கொடிய பாம்புகள் தீண்டி, விஷம் ஏறியவர்களை கோயில் மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர் மக்கள். பூசாரி அவர்களுக்கு தீர்த்தம் வழங்கி திருநீறு பூசுகிறார்.
    8.குமரகிரி முருகன் கோவில்:
    சேலம் உடையாப்பட்டி புறவழிச்சாலையில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ள அழகிய கோவிலாகும். சேலம் நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ளது
    9.1008 சிவலிங்கம் கோவில்:
    சேலம் கோவை நெடுஞ்சாலையில் அரியானூர் அருகில் உள்ள சிறு குன்றில் விநாயகா குழுமத்தினரால் பராமரிக்கப்படும் இக்கோவிலில் 1008 சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    10.கோட்டை மாரியம்மன் கோவில்:
    இந்த சேரநாட்டை சேர்ந்த சேர அரசனால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இது நகரின் மத்தியிலேயே உள்ளது. இதன் தெய்வம் மலைமாரி என்று அழைக்கப்படுகிறது
    Please Like, Share our Videos & Subscribe Our Channel.
    Our aim is to engage audience of all categories
    Informative | News | Fun & Entertainment (INFY) = SISCOM
    Don’t Forget to Watch, Share & Subscribe... !!!
    Our Facebook Page
    / siscom.mecheri
    Our CZcams Channel
    / siscomindia
    Subscribe our channel & Post your Comment which will help us to fine tune our Videos
  • Zábava

Komentáře • 17

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 11 měsíci +3

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 11 měsíci +1

    ஶ்ரீ முத்துமலை முருகன் துணை🙏

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve Před 9 měsíci +2

    நான் கண்ணன் பொட்டனேரி மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோவில் எனது குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌷🌷🌷🌹🌹🌹🌷🌷🌷🌷🌹🌹🌹

  • @user-es6fy2xg2s
    @user-es6fy2xg2s Před 8 měsíci +2

    நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர்,சோமேஸ்வரர்,பத்ர காளியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன.இவற்றை அவசியம் சேர்க்கவும்.

  • @kanagavalli1552
    @kanagavalli1552 Před rokem

    Thanks

  • @drvivasayam
    @drvivasayam Před 3 lety +1

    Super 👍

  • @saravananslm9479
    @saravananslm9479 Před rokem

    👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @manikandanr6298
    @manikandanr6298 Před 3 lety +1

    Siscom tv channel super sir

  • @n.sakthivelvel1068
    @n.sakthivelvel1068 Před 10 měsíci

    Salem sugavanesvarar temple vitupattathu

  • @c.m.rajendranengineerrajen1321

    ஸ்ரீ அசர பச்சியம்மன் திருக்கோவில் சங்ககிரி வட்டம் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கிராமம் கோவில் வரலாறு சொல்லுங்கள்

    • @a.p.senthilkumar4543
      @a.p.senthilkumar4543 Před rokem +1

      எந்த இடம் விரிவாக கூருங்கள்

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 Před rokem

    Arai kurai padhivu
    Appa paithiyam swami n Santhaanadha Swami pictures avai illai

  • @jowaran7620
    @jowaran7620 Před 2 měsíci

    Vadaku Malaiyaan kovil parthi yarukavathu theriyumah??????

  • @sasikumar.p7091
    @sasikumar.p7091 Před 3 lety

    Sir ongalude cell number kodugo

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Před 3 měsíci

    Sis/1ymodhxoup.mrz.juiksasam