James Hudson Taylor - Short Biography -Tamil - ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் China Inland Mission என்ற நிறுவனத்தின் நிறுவனர். அவர் தன் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தேவனுடைய சித்தத்தை சிரத்தையோடு நாடுவதில் உறுதியாக இருந்தார். சீனாவில் நற்செய்தி அறிவித்து அங்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் அவருடைய பங்கு மகத்தானது.
    1832இல் பிறந்த ஹட்சன் டெய்லர் இங்கிலாந்தின் யார்க்ஷயரில் வளர்ந்தார். அவருடைய அப்பா ஒரு வேதியியலாளர், மெதடிஸ்ட் போதகர். ஹட்சன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும், இளைஞனாக இருந்தபோது, தான் உண்மையில் தேவனை விசுவாசிக்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தது. ஆழ்ந்த சிந்தனைக்கும், நீண்ட தேடலுக்கும்பிறகு அவர் தேவனிடம் திரும்பி, இரட்சிக்கப்பட்டார்.
    17 வயதிலேயே, தேவன் தன்னை எந்தத் திசையில் நடத்துகிறார் என்றும், தன் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்றும் ஹட்சன் டெய்லருக்குத் திட்டவட்டமாகத் தெரியும். தேவன் அவரைச் சீனாவுக்குச் செல்லுமாறு அழைத்தார். நற்செய்திப் பணிக்காக அவர் சீனாவில் 51 ஆண்டுகள் வாழ்ந்தார்.
    அவர் நிறுவிய China Inland Mission சீனாவுக்குள் 800க்கும் அதிகமான மிஷனரிகளை அனுப்பினார்கள். 125 பள்ளிகளை நிறுவி நடத்தினார்கள். சீனா முழுவதும் 18,000 பேருக்குமேல் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டார்கள்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 49