அக்னி அஸ்திரம்_Agni Ashthram

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2019
  • அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை
    தேவையான பொருட்கள்:
    நாட்டுப்பசுங் கோமியம் - 20 லிட்டர்
    வேம்பு இலை - 2 கிலோ
    புகையிலை - ½ கிலோ
    பச்சை மிளகாய் - ½ கிலோ
    பூண்டு - 250 கிராம்
    தேவையான உபகரணங்கள்:
    20 லிட்டர் மண்பானை - 1
    கலக்கி விட மூங்கில் குச்சி - 1
    மூடிவைக்க துணி - 1 (தேவையான அளவு)
    தயாரிக்கும் முறை:
    மண்பானையில் நாட்டுபசுங் கோமியத்துடன் இடித்து எடுத்த வேப்ப இலை, புகையிலை, பச்சை மிளகாய், பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், நான்கு முறை நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கி, பானையின் வாயைத் துணியால் கட்டி நிழலில் வைக்கவேண்டும், 48 மணி நேரம் கழித்து அக்னி அஸ்திரத்தை பயன்படுத்தலாம்.
    கவனிக்க வேண்டியவை:
    மண்பானையைத் தவிர வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அக்னி அஸ்திரம் வீரியத்தை இழந்துவிடும்.
    பயன்படுத்தும் முறை:
    10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி. அக்னி அஸ்திரம் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
    பயன்கள்:
    பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் நல்ல பலனைத் தரும். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
    பயன்படுத்தும் காலம்:
    அக்னி அஸ்திரத்தை 3 மாதங்கள் வரை நிழலில் வைத்துப் பயன்படுத்தலாம்.

Komentáře • 18

  • @santhurusankar2121
    @santhurusankar2121 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo Před 3 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @subhashinik851
    @subhashinik851 Před 3 lety +1

    Thanks for your video

  • @sarathis4380
    @sarathis4380 Před 4 lety +8

    கடலை செடியில் பச்சை நிற புழு உள்ளது.இதை பயன்படுத்தினால் அது போய்விடுமா அய்யா

  • @shreestsshreests7055
    @shreestsshreests7055 Před 4 lety

    Tq sir

  • @smanomech
    @smanomech Před 4 lety +1

    Quantity how much per 10 lit

  • @manivelvelayutham8449
    @manivelvelayutham8449 Před 3 lety +6

    மக்காசோளத்திற்கு பயன்படுத்தலாமா?

  • @renugadevi4570
    @renugadevi4570 Před 3 lety +1

    Where to get tobacco sir

  • @karthikmagakarthikmaga2857

    மக்காச்சோளப் பயிர்க்கு பயன்படுத்தளாம

  • @vageeshrajv.s7246
    @vageeshrajv.s7246 Před 3 lety

    வாழை இலை புள்ளிக்கு இதைப் பயன்படுத்தலாமா

  • @kitkat3294
    @kitkat3294 Před 3 lety +2

    மரக்கன்று வேண்டும் ஐயா

  • @panneerselvam8319
    @panneerselvam8319 Před 4 lety +3

    மக்கசோள படைப்புழு கட்டூப்படுமா

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanraj-mm8tf
    @mohanraj-mm8tf Před 4 lety

    Helpful tips

  • @santhurusankar2121
    @santhurusankar2121 Před 3 lety

    இலங்கை

  • @devapriya1188
    @devapriya1188 Před 3 lety

    Pukai illai na ennathu sir konjam sollunga comments la

  • @panneerselvam8319
    @panneerselvam8319 Před 3 lety

    வெங்காய பயிர்க்கு. தெ லீ க்கலாமா