tamil christian songs | Aasirvathiyum karthare | ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2019
  • Please click here: / @christiantamilsongs7203
    Tamil Christian Marriage Song
    Tamil Christian Matrimony Song
    Lyrics:
    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
    நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
    வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாளனே
    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்
    இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
    உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
    உம்மிலே தங்கி தரிக்க
    ஊக்கமருளுமே ( வீசிரோ )
    ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
    பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
    ஏற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )
    பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
    ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
    ஆ! தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )
  • Hudba

Komentáře • 34

  • @christiantamilsongs7203
    @christiantamilsongs7203  Před 4 lety +15

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
    நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
    வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாளனே
    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்
    இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
    உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
    உம்மிலே தங்கி தரிக்க
    ஊக்கமருளுமே ( வீசிரோ )
    ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
    பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
    ஏற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )
    பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
    ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
    ஆ! தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )

  • @drs1952
    @drs1952 Před 2 lety +10

    Story behind the song Aaseervathiyum Kartharey:
    இந்த பாடல் 1924-ம் ஆண்டு Rev. சாமுவேல் பாக்கியநாதன் எனும் ஐ. எம். எஸின் முதல் மிஷ்னரியால் தன்னுடைய மகன் திருமணத்திற்காக எழுதப்பட்டது. இந்த பாடல் எழுதப்பட்டதின் பின்னணியவது: தனது மகன் அஸரிய பாக்கியநாதன் மற்றும் யூனிஸ் பாக்கியநாதன் அவர்களின் திருமணம் பன்னவிலை எனும் கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மருதகுளம் கிராமத்தை சேர்ந்த மணமகளின் உறவினர்கள் பன்னவிலைக்கு வரும் வழியில் பெருங்குளம் என்ற இடத்தில் நிறுத்தி அங்குள்ள குளத்தில் குளித்தனர். இது மேல் ஜாதியினர் குளம் என்பதால் தீட்டு பட்டு விட்டது என்றும், அதில் அவர்கள் சிலைகளை சுத்தம் செய்ய இயலாது என்றும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதை அறிந்த ரெவ். சாமுவேல் பாக்கியநாதன் அவர்கள் முதலில் உச்சரித்த வரி தான் "வீசீரோ வான ஜோதி கதிரிங்கே". இதன் பொருள் "ஆண்டவரே உம்முடைய ஒளியை காட்டுங்கள். இதனால் ஒளியில் இருப்பவர்கள் இந்த ஒளியை காணலாம். மீண்டும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள்". அதே மாலையில் அவர் ஆசீர்வதியும் கர்த்தரே பாடலை எழுதி அந்த திருமணத்தில் முதலில் பாடினார். இதை தொடர்ந்து இந்த பாடல் அனைத்து திருமணங்களிலும் பாடப்படுகிறது.

  • @sharmz8266
    @sharmz8266 Před 9 měsíci

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே…நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே. 
வீசீரோ வானஜோதி கதிரிங்கே…மேசியா எம் மணவாளனே…ஆசாரியரும் வான் ராஜனும். ஆசீர்வதித்திடும்…
    2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே…உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்….இம்மணமக்கள் மீதிறங்கிடவே…இவ்விரு பேரையுங் காக்கவே. 
விண் மக்களாக நடக்கவே..வேந்தா நடத்துமே - வீசீரோ
    3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்…உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்…இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே. 
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே…உம்மிலே தங்கித்தரிக்க…ஊக்கம் அருளுமே - வீசீரோ
    4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே..பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே…வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே…வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம். 
உற்றவான் ராயர் சேயர்க்கே…ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ
    5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே…ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும். 
மாதிரளாக இவர் சந்ததியார்..வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க. 
ஆ தேவ கிருபை தீர்மானம்…ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
    6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே…வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையா……ஆனந்தமாகவே தூய தன்மையதை….ஆடையாய் நீர் ஈயத்தரித்து. 
சேனையோடே நீர் வரையில்….சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
    Sharmini Satgunam !

  • @arulmerry1430
    @arulmerry1430 Před 7 měsíci

    This.song sooths the soul.vanulaga.rajanae.
    Throw.on.us.you light.
    So that.we.shall.be.yours.till.theend.you.are.my.good.shepherd.

  • @simonvethamuthu3495
    @simonvethamuthu3495 Před 3 lety +9

    அருமையான பாடல் இனிமையான குரல் அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் கேட்க இனிமையாக உள்ளது

  • @samueld7860
    @samueld7860 Před rokem

    Ennoda kalyana niyabagam varum inda pattu kekkum podu❤💗❤️

  • @sivachandran6178
    @sivachandran6178 Před 2 lety +3

    தலைசிறந்த இசை அமைப்பு. இனிமையான குரல்
    பாடலை வடிவமைத்தவருக்கு நன்றி

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 Před 3 lety +8

    மலரும் நினைவுகள்

  • @dossdoss603
    @dossdoss603 Před 3 lety +3

    திறமை வாய்ந்த ஞானமும் பெற்ற பாடல்

  • @felixvimala3422
    @felixvimala3422 Před 4 měsíci

    My Favourite song ever seen ❤️❤️❤️🙏🏻👍🏻

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 Před 3 lety +5

    Super super super super super super super

  • @stebeclyd1152
    @stebeclyd1152 Před 9 dny

    Evergreen song

  • @dharmalingam760
    @dharmalingam760 Před 7 měsíci

    Super voice and unforgettable song

  • @rufusk8716
    @rufusk8716 Před 3 lety +5

    Please publish the name of singer

  • @ramdasramdas7358
    @ramdasramdas7358 Před 8 měsíci

    Wonderful song brother thanks

  • @jaslinnayagam2715
    @jaslinnayagam2715 Před 3 lety +6

    Nice voice and music 🎵😀👍

  • @blessingservices
    @blessingservices Před 9 měsíci

    தினமும் கேட்கும் பாடல்

  • @user-kf4on7bp6x
    @user-kf4on7bp6x Před 3 měsíci

    God bless you 🤝🙏👏

  • @Sweet_Sweety38
    @Sweet_Sweety38 Před 8 měsíci

    Such a lovely song 😍

  • @anand4598
    @anand4598 Před 3 lety +4

    Good

  • @user-kf4on7bp6x
    @user-kf4on7bp6x Před 3 měsíci

    wonderful

  • @peterrhythm6752
    @peterrhythm6752 Před 2 lety +3

    Superb Song

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 Před rokem

    Praise the Lord hallelujah 👏👏👏

  • @swintontonyraja5322
    @swintontonyraja5322 Před 3 lety +3

    Very nice voice.....

  • @rajivgandhihomeforhandicap254

    go back sweet dream

  • @johnbrightjohn6705
    @johnbrightjohn6705 Před rokem +1

    Super song

  • @Ephraim1983
    @Ephraim1983 Před 4 lety +5

    Excellent. God bless you.

  • @jeevanyajeevanya9757
    @jeevanyajeevanya9757 Před 2 lety +2

    🥰🥰🎶🎼🎵🎹

  • @mosespattasukadaibennith5644

    Voice good

  • @baburajendran5030
    @baburajendran5030 Před 4 lety +8

    Excellent. The tempo maintained is awesome. Olden days memories will definitely be brought back. The next generation will miss such good tracks..
    But the audio quality is not that good. Please check that. If possible plz redo with out changing anything. Audio dips in the middle. Plz inform if you got a better audio quality. Thanks
    Once again very nice piece of work...

  • @sharmz8266
    @sharmz8266 Před 9 měsíci

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸