மீண்டும் சாக்லேட் பாயாக "சித்தார்த்" | "Miss You" Movie Pooja Video | Siddharth | Ashika Ranganath

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் ‘மிஸ் யூ’ என்ற காதல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் தெலுகு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மாப்ள சிங்கம் & ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் இயக்குனர் N.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படம் காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்குப் படமாகத் தயாராகியுள்ளது. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் '7 miles per second' நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ இப்படத்தைத் தயாரிக்கிறார்.
    வெறும் ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், கேரக்டர் ஆர்டிஸ்ட்கள், நகைச்சுவை நடிகர்கள் சூழ இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர். ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார். சதுரங்க வேட்டை போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். நடனம் தினேஷ் மாஸ்டர். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குனரோடு திரைக்கதையிலும் பங்காற்றியிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது
    📞 For Advertisments, Call: 73739 80355
    Social:
    💥 thiraikadalmedia
    💥 thiraikadalmedia
    💥 x.com/thirai_kadal

Komentáře •