பகுத்தறிவு என்பதெல்லாம் immortal ruler tamil kalki பெரியார் மணியம்மை திருமணம், மது விலக்கு, டாஸ்மாக்

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2023
  • பகுத்தறிவு என்பதெல்லாம் பாழுடலை கெடுப்பதற்கும் பரமனடி தவிர்ப்பதற்கும் உதவுகின்ற கருவியல்ல. உத்தமனாய் வாழ்வதற்கும் ஒளியுடலை அடைவதற்கும் பிறப்பறுக்க பயன்படும் பேரருளை பெற்றுத் தரும் பெட்டகமாய் அமைய வேண்டும். மீறுகின்ற மனிதனுக்கு மேதினியில் அமைதி வர என்றுமே வழியுமில்லை. அல்லலுக்கு குறைவுமின்றி ஆசைக்கும் எல்லையின்றி அதனாலே தொல்லை வரும். அளவின்றி கோடியுறும் அருள் பெற தகுதியில்லை . வெய்ய குணம் கொன்றபடி விண்ணுலகை வெல்லும் விதி யாருக்கு இங்குளதோ அவ்வுயிரே அந்தணனாய் அம்மையப்பன் வந்தனையை என்றென்றும் பெற்றிடுமே. சிவ வேதம் சொல்லுகின்ற கொல்லாமை நோன்பு கொண்ட சித்தருக்கு மட்டுமின்றி சைவ நெறி கடைபிடிக்கும் சாத்தனுக்கும் சாத்தியமே சாவில்லா வீடடைய சரக்குகளை உனக்கு விற்று சலுகை விலை பெற்றதனால் எனக்கு என்ன பயன் என்பேன்.
    கற்றோரெல்லாம் கண் திறந்தோரிலையே. கண்ணிருந்தும் கசடற சொற்போர் புரிவோர்க்கும் சுழுமுனை விரிவதிலையே. விழிதழலெரியும் விமலனடி வீழ்ந்து வினையறுப்போர்க்கல்லால் பரம பதமதில் பதியக் கூடுமோ. விண்ணவர் வியக்க வண்டமிழை விற்போராயினும் வேண்டுவது யாதெனில் வெற்றிமுகமேறி விரும்பியே அறம் சிதைத்தால் அவனெச்சம் அனைத்தும் வேரொடு விரைந்தழிவது உறுதியே. அவர்க்குரைப்பதும் இறுதியே. அற்பர் உலகில் அழுக்கு இருளில் அறிவிலிகள் இயங்கி தற்குறி பொருள் தர தரம் பிழை உயிர்கள் உயர்வென கருதி ஊளையிடுமே உமையொரு பாகனே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 11

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci +2

    ❤🙏வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 163.
    🌸 அத்தை மகள் அன்பரசி அறியா வயதினிலே அண்ணல் மேல் கொண்டக்காதல் அளவற்றிருந்ததனால் அவள் மீது கண்வைத்து அவனும் தன் அகவை ஈரைந்தில் அன்புற்று நின்றிருப்பான். முற்றத்துள் மேய்ந்து வந்த முற்றிய கோழிகளில் மூன்று பெடைகளது குரல்வளையை அறுத்துக்கொன்றும் புலால் உண்ணா அறம் கொன்றும் பொல்லாதார் வழி நின்றும் போதிப்பார் யாருமின்றி சாதித்த அத்தையவள் சமையல் ஆக்கித்தர ஆசைமயிலள்ளித்தர அன்று முறைப்பெண்ணுடனிருந்து முகுந்தன் புசித்திருப்பான். எண்சாண் யாக்கைக்கு இணையற்றது ஏதென்றால் இடும்பைகூர் வயிறென்றே எம்மானுரைத்ததுண்டு. இன்முகத்து இவன் தாதை இறையோனடி சேர்ந்த பின்னம் எட்டுடன் பத்துகூடி எழும் அகவைக் காலம் தொட்டு கொலைக்களத்துள் நிலைத்தவனை கூப்பிடாது அழைத்தபடி மண்ணுயிரும் பொன்னுயிராய் எவ்வுயிரும் தன்னுயிராய் இறவா கொள்கையுடன் நற்கருணை மணமகனாய் நலம் நாடி குணக்குன்றிலேற்றியவன் குறவஞ்சி பாட்டுடை கொன்றை வேந்தனன்றி கூறிட எவருண்டு !

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      நல்லா இருக்குங்க
      இதெல்லாம் சித்தர் பாடல்தானா என்ற சந்தேகமும் சேர்ந்தே வருகிறது, சில நாட்களுக்கு முன்
      60 வயதிலும் இளமையுடன் கின் என இருக்கும் இளைஞனுக்கு பெண் தேடுகிறோம், 30 வயதில் திருமணமாகி ஆண்பிள்ளை பெற்று, அவர் பெற்ற மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைத்து கொள்ளி வைக்க பெயரன் இருந்தும், மனைவி பிரிந்ததால் பெண் தேடுகிறோம் என விளம்பரம் கொடுப்பது போல போட்டீர்கள், இப்ப இப்படி ஒன்று
      முற்றிய கோழிகள் மூன்று அடித்து அத்தை குழம்பு வைத்தாள் அத்தை மகள் ஊட்டி விட்டால் என அடித்து விடுகிறீர்கள்
      குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல உங்கள் கையில் அறம்பாடியார் பாடல் கிடைத்து இருக்கிறது, அதில் இஷ்டத்துக்கு இடை செருகள் செய்து குப்பைபில் கொட்டுவது போல கமெண்ட் போடுகிறீர்கள் என சந்தேகம் வருகிறது,
      உண்மையை சொல்லுங்கள் இது உங்கள் அனுபவம் தானே
      தவறு இல்லை உங்கள் வழி காட்டி 70 வயதில் 30 வயது பெண்ணை கட்டி இருக்கும் போது நீங்கள் 60 வயதில் பெண் தேடுவதில் என்ன தவறு?
      கூச்ச படாம சொல்லுங்கள் ஐயா, யாரும் தவறாக கருத மாட்டார்கள், அது அவர் உரிமை, பள்ளு இருக்கவன் பகோடா சாப்பிடுகிறான் என தான் நினைத்து பொறாமை படுவார்கள்

    • @sivasticker6546
      @sivasticker6546 Před 11 měsíci

      🙄🙄🙄🙄கல்கி வந்தவுடன் சொல்லுங்க 🙄ஐயா அவரை கேட்டேன் என்று 🙄🙄

    • @user-wk6cs5do3b
      @user-wk6cs5do3b Před 11 měsíci +1

      ​@@arampadiyarin-immortal-rulerஐயா கொரோனா வந்த கதை உங்களுக்குத் தெரியுமல்லவா?!

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci +1

      ​@@user-wk6cs5do3bம், ஆமாம் ஐயா, அதை கூட சமாளித்து பொருந்தும் வண்ணம் பொருள் சொல்லி விடலாம், நாற்பதின் நடுவில் அவருடன் பணி செய்த பெண்ணுடன் அன்புடன் நட்புடன் இருந்திருப்பார், அதை யாராவது தவறாக பேசியதால் நட்பை கைவிட்டு இருப்பார்கள், அந்த கால கட்டத்தில் கொரோனா பரவியதை அறம்பாடியார் சொன்னதை பாடலாக்கியவர்கள் மிகை படுத்தி இருப்பார்கள் என கருதலாம் என சமாதானம் ஆகும் அளவு சொல்லலாம், ஆனால் இப்ப வந்து 30 வயதில் கல்யாணம் ஆனவுடன் பையன் பிறந்தான், அவனுக்கு 27 வயதில் பையன் பிறந்தான், அவன்தான் பெயரன், இதை புரிந்து கொள்ள சிவன் அருள் பெற முயல வேண்டும் என்றால்! ஏற்கனவே மொட்டுகள் இரண்டரும்ப என்பதை வலது மீசை ஒரு மொட்டு, இடது மீசை ஒரு மொட்டு ஆக இரண்டு மொட்டு என்றா நாங்கள் விளக்கம் சொல்ல முடியும், எங்களுக்கு தர்ம சங்கடமாக இருக்காதா, அந்த கவலை எங்களுக்கு
      ஏற்கனவே நண்பர் ஒருவர் திருபரப்பு என்ற வார்த்தையையும் அதற்கு நாலு வார்த்தை தள்ளி வந்த அருவி தறியில் அருவி என்பதை பிரித்து எடுத்து திற்பரப்பு அருவி என்றார், அவருக்கு விளக்கம் தர தகவலை தேடிகிட்டு இருக்கோம், இதுல இப்படி முன்னுக்கு பின் முரணான பாடலை போடுகிறாரே என்ற கவலை ஐயா

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 11 měsíci

      ​@@arampadiyarin-immortal-ruler
      ​எனக்கு ஒன்றும் இப்படிப்பட்ட அனுபவம் இல்லை ஐயா. பாடலில் ஒரு சில வேண்டுமானால் எனக்கு பொருந்தலாம் 70 வயதில் 30 வயது பெண்ணை கட்டுவது பெரியாரின் விருப்பம். அதுவே மானியம்மையின் விருப்பம். 30 வயதுடைய பெண்மணி சிறுமியல்ல. சிந்தித்து முடிவெடுக்கிற மனப்பக்குவோம் உள்ள ஒரு பெண். பெரியாரைப் பற்றி நீங்கள் மனதில் வைத்திருந்த விஷயத்தை என்னிடம் வாந்தி எடுத்து என்ன பிரயோஜனம் ஐயா ?
      எனக்கு பெண் பார்த்து வையுங்கள் என்று நான் உங்களிடம் கேட்கவே இல்லையே ஐயா. உங்களைப் பற்றி நான் மேன்மையாக நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது.
      பாடலில் சொல்லப்பட்டதை என்னுடைய வயது என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாடலில் 50 வயது என்று இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். 60 வயது என்று சொல்லப்பட்டதால் பழியை என் மீது தூக்கிப் போடுகிறீர்கள்.
      ஏதோ பாடல் வருகிறது. அதை பதிவேற்றுகிறேன். அதற்காக பெரியாரை என் வழிகாட்டி என்றும் அவர் அயோக்கியம் என்றும் நீங்கள் வசைபாட வேண்டாம். உங்களுக்கு என் மீது பல சந்தேகங்கள் வந்துவிட்டன. சந்தேகத்தோடு நீங்கள் இருக்க இனி நான் உங்கள் சேனலில் சித்தர் பாடலை பதிவேற்றுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. ஏனென்றால் உங்களுக்கு சம்பந்தமில்லாததை இடைச்சொருகள் என்று சொல்லுவதும் உங்களுக்குப் பொருந்தி போவதை சித்தர் பாடல் என்று சொல்லுவதும் எந்த விதத்தில் நியாயம். . உங்களுக்கு வாழ்க்கையில் பொருந்தாததையெல்லாம் அறன்பாடி சித்தர் பாடலில் கொண்டு வந்தால் அந்த சந்தேகம் வருவது இயற்கை தானே. நீங்களும் என்னைப்போல் சராசரி மனிதர் தானே. இவ்வளவு நாளும் வீடியோ வெளியிட்டு சித்தர் பாடல்ளுக்கு ஏற்றது போல் முட்டுக்கட்டி பார்த்தீர்கள். முடியாமல் போனதால் இது சித்தர் பாட்டு தானா என்றும் இது உங்களது அனுபவம் தானா என்றும் எரிச்சலுடன் கேட்பதால் சித்தர் பாடலை உங்கள் சேனலில் பதிவேற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லி சிவனடியார்களும் விரும்புகிறார்கள்.
      எல்லோரைப் போலவும் எனது கமெண்ட் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் Hide செய்யலாம். எந்த திராவிட கட்சிகளையும் நான் ஆதரிக்கவில்லை. நீங்கள் ஆதரிக்கின்ற பிஜேபி ஆர் எஸ் எஸ் கட்சியும் ஊழல் கட்சி தான். காங்கிரசும் ஊழல் கட்சி தான். எனக்கென்று எந்த கட்சியும் இல்லை. பெரியாரை எனக்கு பிடிக்கும். உங்களுக்கு வேண்டிய அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள்தான். இதில் திமுகவை மட்டும் கோடிட்டு காட்டுவது எதற்கு .
      உங்களது உள்நோக்கம் அறம்பாடி சித்தர் பாடலுக்கு அவதூறு பரப்பும் நோக்கத்தில் யூடியூபில் வீடியோ போட்டது போல் இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி சிவனடியார்களும் நானும் செயல்படுகிறோம். நான் நாகரீகமாகத்தான் எல்லோருக்கும் கமெண்ட் செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றிருப்பது தெரிகிறது.
      வழக்கமாக எனக்கு ஆடியோ பைலை அனுப்பி தந்த நீங்கள் திடீரென்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லி ஆடியோ பைல் அனுப்பி தருவதை நிறுத்திய உடன் நான் வேறு சிலரை தொடர்பு கொண்டு உண்மையை அறிந்து கொண்டேன். எப்பொழுது உங்களது வார்த்தைகளில் இருந்து வன்மம் வெடிக்கிறதோ அப்பொழுது பேசலாம் என்று இருந்தேன். இப்பொழுது அதற்கான காலம் வந்து விட்டது. யார்யருடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றும் எனக்கு தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இப்பொழுதும் சொல்லுகிறேன் யாரும் கல்கி இல்லை நானும் கல்கி இல்லை. இனி மனப்பால் குடிப்பதில் அர்த்தம் இல்லை. அந்த கல்கி ஆனவர் வேறு யாரோ ஒருவர் நிச்சயமாக குழுவில் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
      அது மட்டுமல்ல....இன்று ஒரு சேனல் லிங்கை எனக்கு அனுப்பி அதில் பாடலை நீங்கள் எழுதி போடுங்கள் என்று என்னை பார்த்து நக்கல் அடிக்கிறீர்கள். இவ்வளவு திறமை இருந்தால் நான் ஏன் வறுமையோடு இருக்க வேண்டும். உங்களைவிட கை நிறைய சம்பாதிப்பேனே ஐயா.

  • @sivasticker6546
    @sivasticker6546 Před 11 měsíci

    👌👌👌💞

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci

    மிக சிறப்பு

  • @phaarezz
    @phaarezz Před 11 měsíci

    பிறப்பறுப்பு என்றால் என்ன?😢

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      மறு பிறப்பு இல்லாமல் அதாவது கர்மாவை கழிக்க மீண்டும் மீண்டும் பிறக்காமல் இறைவனுடன் இணைந்து விடல்