பொன் மேனி சிவன் ✨ திருமழபாடி திருப்பதிகம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2022
  • சுந்தரர் சோழநாட்டுச் சிவதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, திருவாலம்பொழிலில் தங்கியிருந்தார். இரவில், "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ?" என்ற குரல் கேட்டு அவர் திடுக்கிட்டார். அந்தக் குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்று உணர்ந்தார். உடனே அவர் திருவாலம்பொழிலில் இருந்து எழுந்து திருமழபாடிக்கு சென்று சிவபெருமானை வழிபட்டார். அப்போது அவர் இந்தப் பதிகத்தைப் பாடினார்.
    இந்தப் பதிகம், சுந்தரரின் அன்பின் ஆழத்தையும், சிவபெருமானின் மீது அவர் கொண்டிருந்த பக்தியையும் வெளிப்படுத்துகிறது.
    ஏழாம் திருமுறை
    024 திருமழபாடி
    பாடல் எண் : 1
    பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே
    திருமழபாடி வைத்தியநாதர் கோயில், தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வருகை தந்து, சிவபெருமானின் அருளைப் பெற்று, வாழ்வில் மகிழ்ச்சியும், நலமும் பெறுவோம்.
    கோயில் வரைபடம் goo.gl/maps/AEDVVJSjR9FXuHkG6...
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře •