Murudeshwer-முருடேஸ்வர் ₹1100/- செலவில் சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்ய

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2022
  • முருகதீசுவரன் கோவில்
    Jog Falls Video Link:-
    • Jog Falls - Just RS.84...
    இராஜகோபுரம்:-
    20 தளங்கள் கொண்ட கோபுரம்
    இக்கோவில் கன்டூக மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.
    கருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).
    சிவனின் சிலை:-
    உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது..
    சிவன் கோயில்:-
    முருடேஸ்வர் கடற்கரை சிறிய அலைகளை கொண்ட கடற்கரையாக இருக்கிறது. அதனால் இங்கு நீராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒருபக்கம் மக்கள் நீராடினாலும் கோயிலின் மறுபக்க கரையோரம் மீன்பிடி படகுகள் நிற்கின்றன.
    கோயிலுக்கு முன்பே மீன் மார்க்கட் இருக்கிறது. ஒரு சிவன் கோயில் அருகே இப்படிப்பட்ட காட்சிகள் காண்பது அரிதான ஒன்றுதான். ஆனாலும் நாங்கள் சென்ற மழைக்காலத்தில் கூட மீன் வாடை அடிக்காமல் இருந்தது ஆச்சரியமான விஷயம்.
    கோவில் வரலாறு:-
    முருடேஸ்வர் கோயில் பார்ப்பதற்கு நவீன கட்டடக்கலையில் கட்டப்பட்டதாக தெரிந்தாலும், இதன் வரலாறு இராமாயண காலத்திலிருந்தே தொடங்குகிறது.
    நாங்கள் இங்கு கேட்டுத் தெரிந்துகொண்ட இக்கோயிலின் வரலாற்றை இவ்வீடியோப்பதிவில் விவரித்துள்ளோம்..

Komentáře • 22