2 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் | Tirupati | Tirupati Devasthanam | Tirupati Theft

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • திருப்பதி உண்டியல் காணிக்கையை
    திருடி ₹100 கோடி சொத்து சேர்ப்பு
    உடைந்தது ரகசியம்!
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
    பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளும் தினமும் கோடிக்கணக்கில் வருகிறது.
    கோவிட்டுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 100 கோடிக்கு குறையாமல் காணிக்கை சேருகிறது.
    இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 670 கோடியே 21 லட்சம் காணிக்கையாக வந்துள்ளது.
    இந்த சூழலில் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் 100 கோடி அளவில் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    தமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்தார்.
    இதன் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் திருப்பதி காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது.
    20 ஆண்டுகளாக வேலை செய்த ரவிக்குமார் மீது 2 ஆண்டுகளுக்கு முன் சந்தேகம் வந்தது.
    காணிக்கை எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்த அவரது நடவடிக்கையை கண்காணித்தனர்.
    தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அவரை தனி அறையில் வைத்து சோதனை நடத்தினர்.
    மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
    தேவஸ்தானம் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.
    விசாரணையில் பல ஆண்டுகளாக காணிக்கை பணம், வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ரவிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
    அந்த பணத்தை வைத்து 100 கோடி அளவில் நகை, அடுக்குமாடி வீடு, மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை குவித்ததும் தெரிய வந்தது.
    இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை குறைந்துவிடும் என்பதால் தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றது.
    லோக் அதாலத்தில் சொத்துகளின் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பது போல ரவிகுமாரிடமிருந்து எழுதி வாங்கியுள்ளனர்.#Tirupati #TirupatiDevasthanam #TirupatiTemple #Theft

Komentáře • 135