vallalar thiruneri
vallalar thiruneri
  • 22
  • 71 324
Jothiyull jothi I ஜோதியுள் ஜோதி I வள்ளலார் திருநெறி I Shravan kalai I vallalar songs I வள்ளலார்
Written by - Ramalinga adigalar
Music Composed, Arranged & Sung by - Shravan Kalai
🎧Kindly use headphones for a better experience
Songs are available in all online stores
[ Amazon, Apple Music, Spotify, Hungama and more ]
Looking forward for all your love and support
பல்லவி
1. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
கண்ணிகள்
2. சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
3. வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
4. சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
5. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
6. ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
7. மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
8. என்பால் வருபவர்க் கின்றே - அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
தென்பால் இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
9. துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
10. பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
11. தற்பர மேவடி வாகி - அது
தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
12. நவவெளி நால்வகை யாதி - ஒரு
நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
13. மேருவெற் புச்சியின் பாலே - நின்று
விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
14. ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
15. பாடல் மறைகளோர் கோடி - அருட்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
16. நீடு சிவாகமங் கோடி - அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
17. பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
18. பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
19. தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
20. எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
21. சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
22. எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
23. எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
24. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
25. வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
26. பாரிடம் வானிட மற்றும் - இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
27. உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
28. உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
29. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
30. பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
சீருறச் செய்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
31. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
zhlédnutí: 1 436

Video

Vennila kanni I வெண்ணிலாக் கண்ணி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி I vallalar
zhlédnutí 1,8KPřed 6 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] வெண்ணிலாக் கண்ணி - 104 இரண்டாம் திருமுறை 1. தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. 2. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே நானும்வர வேண்டுக...
Siva bogam I சிவபோகம் I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I vallalar songs I Vallalar
zhlédnutí 2,1KPřed 7 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 135. போகம் சுகபோகம் ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 1. போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம...
Thirukathavan thirathal I திருக்கதவந் திறத்தல் I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 2KPřed 7 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமு...
Thirunada maniye I திருநட மணியே I I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 1,5KPřed 7 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே. 2. புரையாத மணியே புகலாத...
Arutperumjothi Attakam I அருட்பெருஞ்சோதி அட்டகம் I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 2,5KPřed 7 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் அருட்பெருந் திருவிலே அம...
Aatra Pulambal ஆற்றாப் புலம்பல் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 1,1KPřed 8 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவள வண்ணாவோ நற்றணிகை மன்னாவோஎன்றென்றே எண்ணாவோ துன்பத் திருங்...
Abayam iduthal I அபயம் இடுதல் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 2,9KPřed 8 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒருபே ரருளா ரமுதம் தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ வருவாய் அல...
Sivayoga Nilai I சிவயோக நிலை I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 1,5KPřed 8 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ் சிவனே கதவைத் திற. 2. இந்தார் அருளமுதம் ...
Innan dhayavu I இன்னந் தயவு I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி I Vallalar padalgal
zhlédnutí 1,7KPřed 8 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] பல்லவி 1. இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில் என்ன வர்மஞ் சொலையா. கண்ணிகள் 2. அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும் அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் 3. சின்னஞ்...
Peranbukkani I பேரன்புக் கண்ணி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி
zhlédnutí 1,6KPřed 9 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] 1. கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன் அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே. 2. ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில் ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே...
Neediya Vedham I நீடிய வேதம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 1,3KPřed 9 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. நீடிய வேதம் தேடிய பாதம் நேடிய கீதம் பாடிய பாதம் ஆடிய போதம் கூடிய பாதம் ஆடிய பாதம் ஆடிய பாதம். 2. சாக்கிய வேதம் தேக்கிய பாதம் த...
Vedha Sigaamaniye I வேத சிகாமணியே I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 1,4KPřed 9 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே. 2. ஏக சதாசிவமே ...
Sivapathi vilakkam I சிவபதி விளக்கம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
zhlédnutí 2,3KPřed 9 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே கரைவளர் தருவே தருவளர் கர...
Muthi Upayam I முத்தி உபாயம் I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி I திருவொற்றியூர்
zhlédnutí 797Před 10 měsíci
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai Additional arrangements, Rhythm & Keyboard Programming - Kamalesh 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support முத்தி உபாயம் திருவொற்றியூர் 1. ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே நிற்...
Shanmugar kommi I சண்முகர் கொம்மி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி
zhlédnutí 781Před 10 měsíci
Shanmugar kommi I சண்முகர் கொம்மி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் 1 hour I Shravan kalai I Arutperumjothi mahamandiram I வள்ளலார்திருநெறி
zhlédnutí 17KPřed 10 měsíci
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் 1 hour I Shravan kalai I Arutperumjothi mahamandiram I வள்ளலார்திருநெறி
மங்களம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Mangalam I Vallalar songs
zhlédnutí 1,3KPřed 11 měsíci
மங்களம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Mangalam I Vallalar songs
ஜோதி ஜோதி I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Jothi jothi jothi
zhlédnutí 1,8KPřed 11 měsíci
ஜோதி ஜோதி I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Jothi jothi jothi
நான் ஏன் பிறந்தேன் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Naan yaen piranthen
zhlédnutí 11KPřed 11 měsíci
நான் ஏன் பிறந்தேன் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Naan yaen piranthen
அம்பலத்தரசே I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Vallalar songs I Ambalatharase
zhlédnutí 14KPřed rokem
அம்பலத்தரசே I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Vallalar songs I Ambalatharase
வள்ளலார் திருநெறி I வள்ளலார் பாடல்கள் I Vallalar songs I இராமலிங்க அடிகள்
zhlédnutí 412Před rokem
வள்ளலார் திருநெறி I வள்ளலார் பாடல்கள் I Vallalar songs I இராமலிங்க அடிகள்

Komentáře

  • @sankarnallathambi7085
    @sankarnallathambi7085 Před 6 hodinami

  • @vijayakannan5755
    @vijayakannan5755 Před 8 hodinami

    Super❤

  • @renusivaprakasam8507

    Nice

  • @j.mahesanjagadeesan6937

    அருமை 🙏🙏🙏

  • @karthigainathanvelupillai5103

    இராமலிங்க பெருமானே போற்றி போற்றி

  • @user-hm6fi9vh2s
    @user-hm6fi9vh2s Před 11 dny

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க😊

  • @csb2.aruljothee.baruljothe630

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-um7xt4qr7n
    @user-um7xt4qr7n Před 13 dny

    மிகவும் அருமை ஐயா

  • @Vallalar555
    @Vallalar555 Před 26 dny

    அற்புதமானகுரல்வளம்அருமையான இசைநயம்வாழ்த்துக்கள்

  • @Vallalar555
    @Vallalar555 Před 26 dny

    பெருமானின்இந்தப்பாடலைஅனுபவித்துபாடுகிறீர்கள்கண்களில்கண்ணீரைவரவழைத்தீர்கள்நன்றிகள்பல இன்புற்றுவாழ்க

  • @fidougovinden1659
    @fidougovinden1659 Před 26 dny

    Vanakkam ayya can I have the English lyrics pls

  • @niranjaninaicker1801
    @niranjaninaicker1801 Před 27 dny

    Omnamasivaya

  • @chandj3161
    @chandj3161 Před 29 dny

    Great composing. May Vallalar bless the singer!!

  • @Srinivasarajaraja
    @Srinivasarajaraja Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @rajubettan2565
    @rajubettan2565 Před měsícem

    வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இப்படிதான் வேண்டியிருப்பார்.

  • @rajubettan2565
    @rajubettan2565 Před měsícem

    ஆத்மார்த்மாக பாடும் இசைக்குழு.

  • @rajubettan2565
    @rajubettan2565 Před měsícem

    செவி பெற்ற பயன்.

  • @rajubettan2565
    @rajubettan2565 Před měsícem

    காலத்தே வெளிப்பட்ட உயிர்ப்புள்ள கீதம். வள்ளலாரின் பரிபூரண கருணைக்கு பாத்திரமானவர்.இசை உலகத்திற்கு உங்களின் ஈர்ப்புள்ள இராகத்தை சன்மார்க்க உலகம் தழைக்க வழங்க வேண்டும்.

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 Před měsícem

    Nandri. Vandanam. Arutperunjoothi Arutperunjoothi Thaniperungkarunai Arutperunjoothi.

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 Před měsícem

    Arumai. Arutperunjoothi Arutperunjoothi Thaniperungkarunai Arutperunjoothi. Aiyyavin peirarulaal Wulaham muluthum Thiru Arutpaa paadalhal Puthumaiyaana muraiyil paravuhirathu.

  • @devarajdevaraj373
    @devarajdevaraj373 Před měsícem

    அருமை. கேட்க கேட்க திகட்டாமல் இனிக்கிறது. கண்ணில் நீர் வருகிறது

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Před měsícem

    இசை என்பது கருவில் உருவாகும் குழந்தையின் இதயத்துடிப்பை போன்றது அந்த துடிப்பை கொடுத்த தாயும் தந்தையும் sharvan kalai அருட்பெரும் ஜோதி ஆண்டவரே நன்றி நல்லது ❤

    • @vallalarthiruneri
      @vallalarthiruneri Před měsícem

      நன்றிகள் ஐயா ☺☺☺🙏🙏. அருட்பெருஞ்ஜோதியின் ஆசீர்வாதம்🙏🙏

  • @vallalargnanapaadasaalai
    @vallalargnanapaadasaalai Před měsícem

    வாழ்த்துக்கள் ஐயா 1K Subscribers அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @eduvumseivom-tamil2599
    @eduvumseivom-tamil2599 Před měsícem

    Awesome bro

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před měsícem

    God bless you ❤❤❤❤❤

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před měsícem

    Through god grace i found your channel sir. God bless you 😊😊😊😊😊😊

  • @hemalathavenkatachalapathy9909

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி. வள்ளல்பெருமான் மலர்திருவடி கோடானுகோடி நமஸ்கா ரங்கள் 🌹❤️🙏🏻

  • @mramalingam2694
    @mramalingam2694 Před měsícem

    🎉

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 Před měsícem

    I love this song🎶 i really enjoyed repeat mode many times am hearing thank you so much guys, this composed music wonderful and singing person soulful voice love u guys and keep upload many videos.. ❤❤❤❤

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 Před 2 měsíci

    கோடி நன்றிகள்❤❤❤..shravan kalai sir... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி...

    • @vallalarthiruneri
      @vallalarthiruneri Před 2 měsíci

      மகிழ்ச்சியும் நன்றிகளும் 😊🙏

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 Před 2 měsíci

    Melting hearts❤💞

  • @pmumapmuma
    @pmumapmuma Před 2 měsíci

    Super 🙏🙏🙏

  • @pmumapmuma
    @pmumapmuma Před 2 měsíci

    Arutperunjothi Arutperunjothi

  • @pmumapmuma
    @pmumapmuma Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar2024
    @nandhakumar2024 Před 2 měsíci

    அருமையான தெய்வ பதம்

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 Před 2 měsíci

    All song I heard repeatedly awesome

  • @ajanthadevi6139
    @ajanthadevi6139 Před 2 měsíci

    Wow best

  • @rajoriflame
    @rajoriflame Před 2 měsíci

    அற்புதமான முயற்சி . வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    இதுவும் மிகவும் நன்றாக உள்ளது

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    இந்த பாடல் செந்தில் தாஸ் மற்றும் ஐயா தருமலிங்கம் நினைக்கிறேன் நன்றாக பண்ணி இருப்பார்கள் தாங்கள் அந்த இசை வடிவில் தங்கள் குரலில் அமைத்து வெளியிட்டால் உற்சாகம் தரும்

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    சூப்பர் க்ளாஸ் 🎉🎉🎉

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    இந்த பாடல் செந்தில் தாஸ் இரண்டு விதமான தாக பாடி இருப்பார் நான் அதிகம் அதை கேட்டு விட்டு இதை கேட்கிறேன் நீங்களும் நல்ல முயற்சி தான்

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    அற்புதம் 🎉

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    ரம்யமான இசை பயணம் அருளோடு தொடர வேண்டும்

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த திருவருட்பா பாடல் நல்ல இசை சேர்க்கை அருமை தங்கள் குரல் கல் நெஞ்சை கரைக்கிறது

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    நன்றாக இருந்ததது மற்றும் இந்த இசை பாபா படத்தில் சக்தி கொடு பாடலை ஒத்து வருகிறது இருந்தும் உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    நன்று

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    உற்சாகம் தரும் வகையில் இந்த பாடல் அமைத்துள்ளீர்கள்

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🎉

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 2 měsíci

    அருமை இசை பயணம் அருளோடு தொடர வேண்டும்