போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்ட தமிழரை மீட்ட போலந்து தமிழ்ச்சங்கம் | Poland Tamil Sangam

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2023
  • போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்ட தமிழரை மீட்ட போலந்து தமிழ்ச்சங்கம் | Poland Tamil Sangam
    Read full story below:
    போலந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, போலியான ஏஜெண்டுகளிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, ஏமாந்து வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் நிலை தொடர்கதையாகி கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், தைரியநாதன் என்கிற சென்னையைச் சேர்ந்த நபர், அப்படி ஒரு போலியான முகவரிடம் சில லட்சங்களைக் கொடுத்து ஆவணங்களைப் பெற்று போலந்து வந்து சேர்ந்திருக்கிறார். உறுதியளிக்கப்பட்ட வேலை கிடைக்காத நிலையில், தற்காலிக வேலைகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு ஆவணங்களையும் தொலைத்து, குளிரிலும் பனியிலும் பேருந்து ரயில் நிலையங்களில் தங்கி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
    இந்நிலையில், சென்னையில் உள்ள தைரியநாதனின் குடும்பத்தினர், போலந்து தமிழ்ச்சங்கத்தை அணுகி உதவி வேண்டியிருக்கும் நிலையில், போலந்து தமிழ்ச்சங்கம் தைரியநாதனை மீட்டு, இந்திய தூதரக உதவியுடன் அவருக்கு அவசரகால கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி, பத்திரமாக மீண்டும் அவரது சொந்த ஊரான சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
    தன்னுடைய நிலைமை மற்ற இளைஞர்களுக்கும் நிகழக்கூடாது எனவும், முற்றிலும் உருக்குலைந்து போன தன்னை மீட்டெடுத்து உதவிய போலந்து தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு அவருடைய நன்றிகளைத் தெரிவித்தார். இப்படியான போலியான முகவர்களை அடையாளம் கண்டு, ஏமாறும் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டி, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலந்து தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.காலேஷா யூசுப் கேட்டுக் கொண்டார்.
    வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம் போன்ற வாக்குறுதிகளை அளித்து, ஏமாற்றும் போலி கும்பல்களை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் போலந்து தமிழ்ச்சங்கம் உறுதி பூண்டுள்ளது. இப்படியான பிரச்சினைகளில் சிக்கியுள்ளோர் புகார் தெரிவிக்க விரும்பினால், போலந்து தமிழ்ச்சங்கத்தை தொடர் கொள்க !
    Contact:
    Tamil Sangam Association of Poland
    Ul.Sielska 136/1, Chylice
    Poland
    Email: info@tamilsangam.pl
    Facebook: / 11055. .
    Instagram: Tamil sangam poland
    Phone: +48 577410288
    ==============================
    Camera & Video editing
    Syed Abdul Kadhar
    Syed Foto Factory
    Instagram: syed_foto_factory
    ==============================

Komentáře • 15