Three Thirumenigals of Vaishnava philosopher Ramanujar | இராமானுசரின் மூன்று திருமேனிகள்

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2021
  • வைணவப் புரட்சித் துறவி இராமானுசரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:
    தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
    தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
    தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
    இராமானுசர் (1017-1137) கி.பி. 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம், வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நாளில், வியாழக்கிழமை (04-04-1017) அன்று ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். இராமனுசருக்கு யதிராசர் என்ற பெயருமுண்டு. யதி என்ற சொல் துறவி என்று பொருளுடையது. ராசர் எனில் அரசன் யதிராசர் எனில் துறவிகளில் தலைமைப் பண்புடையவர் என்பது பொருள். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தாயாருக்கு யதிராசவல்லித் தாயார் என்ற பெயர் வைணவ மகானான இராமனுசரின் பெயரை ஒட்டி அமைந்துள்ளது வியப்பானது. விசிட்டாத்துவைதம் என்ற தத்துவ இயலை உலகம் முழுதும் பரப்பிய வைணவ புரட்சித் துறவி இவர். இவரை பாஷ்யக்காரர் என்றழைக்கிறார்கள். ஏனெனில் இவர் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் புகழ் பெற்ற உரையை இயற்றினார்.
    வைணவத்தில் புரட்சி
    இராமானுசர் வைணவத்தின் அருமை பெருமைகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றியலைந்து பரவச்செய்தார். மாற்று மதத்தாருடன் எதிர்வாதம் புரிந்து அவர்களை வைணவத்தில் வழிப்படுத்தினார். பல வைணவ மடங்களை நிறுவி பாதுகாத்தார். பல வைணவ ஆன்மீக பிடிப்புள்ள இல்லறத்தாரையும் மடத்தலைவர்களாக நியமித்தார். சாதி பேதம் பாராமல், வைணவம் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரையும் தமிழ் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும் வைணவத்தில் இடமளித்தார். பெருமாள் மேல் அன்பும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி அடையும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டவர் இராமானுசர்.
    மேல்கோட்டை திருநாரணன் கோவில் கைங்கர்யம்
    இராமானுசர் சோழ மன்னனின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்த திருநாராயணன் கோவிலுக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யங்கள் செய்தார். இது இராமனுசரின் அபிமான தலம் ஆகும். வடநாட்டில் ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம் தென் பத்ரிகாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது.
    ஸ்ரீரங்கத்தில் இறுதிக்காலம்
    ஸ்ரீரங்கத்தில் அரங்கன் கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்திய பெருமை இராமனுசரையே சேரும். தினசரி கோவில் நடைமுறைகள் சீரானதும் வைஷ்ணவ மட நிர்வாகம் சிறப்புற்றதும் இவரால் தான். அவர் இயற்றிய பல நூல்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை:
    கீதா பாஷ்யம்
    ஸ்ரீ பாஷ்யம்
    வேதாந்த சங்க்ரஹம்
    வேதாந்த சாரம்
    வேதாந்த தீபம்
    கத்யத்ரயம்
    நித்ய க்ரந்தம்
    இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமிதிதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.
    #Ramanujar
    #Ramanujacharya

Komentáře • 13

  • @SVRK12345
    @SVRK12345 Před rokem +1

    Arumai❤

  • @radharaniadi2559
    @radharaniadi2559 Před rokem +1

    Very beautifully said . ❤

  • @sabarinathan5949
    @sabarinathan5949 Před 3 lety +1

    Blessed to hear such a wonderful detail of Sri Ramanujar.........🙏🙏🙏

  • @sivaradhasivaradha9204
    @sivaradhasivaradha9204 Před 3 lety +1

    🙏🙏

  • @pushparani7892
    @pushparani7892 Před 2 měsíci +1

    ஸ்ரீமத் பகவதே இராமானுஜாய

  • @UmaDevi-ud1de
    @UmaDevi-ud1de Před 2 měsíci +1

    Srimathe ramanujaya namagha

  • @suriyakalask6065
    @suriyakalask6065 Před 3 lety +1

    ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnakrishnamoorthy683
    @swarnakrishnamoorthy683 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @melkoteanandalwarshanthi6136

    Lakshmi Nadha Samarambam Naadha yamini Madhyamam.. Asmath Aacharya Pariantham Vandhe "GURU PARAMPARAM"🙏🙏 EMPERUMANAR JEEYER THIRUVADI GALE SARANAM🙏🙏

  • @manosbi8317
    @manosbi8317 Před 3 lety +1

    ராமனுஜய நாமஹா

  • @niranjanababu4851
    @niranjanababu4851 Před 3 lety +1

    Sree mathey Ramanujaya nama ha

  • @manickavelvenkatachalam9297

    1,திருக்குருகூர்
    2) ஸ்ரீபெரும்புதூர்
    3) திருவரங்கம்

    • @venkatesans1005
      @venkatesans1005 Před 2 měsíci

      திருக்குருகூர் அல்ல திரு நாராயணபுரம்,(அ) மேல் கோட்டை