நாச்சியார் திருமொழி - PART 4 (1.4 to 1.6) Dr VENKATESH UPANYASAM

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2022
  • Hudba

Komentáře • 22

  • @nalinis1843
    @nalinis1843 Před 2 lety +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @shanthamani9772
    @shanthamani9772 Před 2 lety

    Adiyen swamin pranamangals

  • @laxmi6358
    @laxmi6358 Před 2 lety

    Swamigaluku nandri 🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Swamigalukku adiyenin namaskarangal

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 Před 2 lety +1

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம் . நாச்சியார் திருமொழியை , ஆச்சார்யன் பெரியவாச்சான்பிள்ளை வியாக்யானம் மூலம் ஸ்வாமிகள் விளக்கிய விதம் அத்புதம். தன்யோஸ்மி🙏🏾🙏🏾

  • @kanagavallithillainataraja7689

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 2 lety

    Namaskaram

  • @cinderellabala1365
    @cinderellabala1365 Před rokem +1

    Super content and explanations

  • @lakshmank3713
    @lakshmank3713 Před 2 lety

    🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 Před 2 lety

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 அதி அற்புதமான விளக்கம் அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏

  • @kanagavallithillainataraja7689

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 2 lety

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @Meenapoosam3208
    @Meenapoosam3208 Před 11 měsíci

    🪔🙏🏾💐🙏🏾🪔

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    நாச்சியார் திருமொழி- தை ஒரு திங்கள் பதிகத்தில் 4 வது பாசுரமான 'சுவரில் புராண ' என துவங்கும் பாசுரத்திற்க்கு பரம காருணீகர் ஸ்வாமி பெரிய வாச்சான் பிள்ளைவ்யாக்யானத்தின் அடியொற்றி Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அருமையாய் பாசுரார்த்தங்களை வழிமொழிந்தார் .
    அதிலிருந்து -
    அவதாரிகை - கடந்த பாசுரங்களின் ஆண்டாள் நாச்சியார் காமனையும் அவன் சகோதரன் சாமனையும் பூஜை செய்யும் விதமாக - தெருவை அடைத்து கோலமிட்டல் மலர்களால் அர்ச்சித்தல் போன்றவைகளை செய்தாள் இப்பாசுரத்தில் மன்மதனின் பெயரையும் அவன் பரிவாரங்கள் பெயரையும் சுவற்றில் எழுதி வழிபடுகிறாள் .இளம் பிராயத்திலிருந்தே கண்ணன் மேல் கொண்ட தீவிர பக்தியால் மன்மதனையும் அவனின் சுறா மீன் கொடியையும் ,அவன் குதிரைகளையும் சாமரசம் வீசும் பெண்களையும் ,அவன் கையில் பிடித்து இருந்த கரும்பு வில்லையும் சுவற்றில் எழுதி வழிபடுகிறாள் .
    விளக்கம் - புராண காலம்தொட்டு இளம் பிராயத்திலிருந்தே கண்ணன் பால் கொண்ட மீளா ப்ரேமத்தால் அவனை அடையவேண்டும் என்ற ஓரே நோக்கத்தோடு வந்த ருச்சியால் -அந்த ப்ராப்ய துறையில் மன்மதனானவன் ஆதி காலத்திலிருந்து காதலன் காதலியை சேர்த்து வைக்கும் வழக்கம் கொண்டவனாய் இருப்பதால் நாராயணனுக்கே அற்று தீர்ந்தவளான ஆண்டாள் அவனை அடைய மன்மதனை உபாசனம் செய்கிறாள் .கண்ணனை கருத்தில் கொண்டு மன்மதனை ஆராதிக்கிறாள் .இத்தனை நாள் கருடத்வஜத்தை போற்றியவள் தற்போது அவனுக்காக மகரத்வஜத்தை த்யானிக்கிறாள் .பெருமானின் சார்ங்கம் என்னும் வில்லை த்யானித்தவள் தற்சமயம் மன்மதனின் கரும்பு வில்லையும் அவனின் குதிரைகளையும் அவனுக்கு சாமரசம் வீச்சும் பெண்களையும் த்யானிக்கிறாள் .எங்கனம் பெருமானுக்கு திருவராதனை செய்யும்போது ஸமஸ்த பரிவரங்களுடன் கூடிய பெருமானுக்கு திருவாராதனை செய்வது போல் இங்கும் காமனின் பரிவாரங்களுக்கும் சேர்த்து செய்கிறாள் என்றார் .இதை அனைத்துமே ஆண்டாள் தன் சிந்தையால் மானசீகமாக செய்து முடித்தாள் என சாதித்தார் .மேலும் ஆண்டாளின் திருமார்பகங்கள் கண்ணனை குறித்தே உருவாகியிருப்பதால் - இந்த தெய்வீக கிருஷ்ண காமத்தை -துவராகபுரிசனான கண்ணனின் வைதீக காமமாகிய - இந்த உன்னதமான ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தத்தை இதன் மூலம் ஆண்டாள் தெரிவிக்கிறாள் .அவள் திருமார்பகங்களை யும் அவனுக்கென்றே அர்ப்பணித்து தொழுதாள் என இப்பாசுரத்தை Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் நிறைவு செய்தார் .
    சுவாமிகளுக்கு ஜெய ஜெய .
    க்ஷமிக்கா பிரார்த்திக்கின்றேன் .

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    இம்முதல் பதிகத்தின் 5 ம் பாசுரமான ' வானிடை வாழும் வானவர்க்கு என துவங்கும் பாசுரத்திற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை நிரதிசய வ்யாக்யானத்தையும் அநுஸந்தித்து பாசுர அர்த்தங்களை விசேஷித்து அருமையாய் Dr .வெங்கடேஷ் ஸ்வாமிகள் வழங்கினார் .அவர் சாதித்ததிலிருந்து -
    அவதாரிகை - ஸ்வர்க்கலோகத்தில் வாழும் தேவர்களுக்கு என்று சிறப்பாக வேதியர்கள் யாகத்தை புரிந்து அதில் வரும் ஹவுசு பாகத்தை அந்த உயர்ந்த தேவர்களுக்கு என்று ஒதிக்கியதை காட்டில் திரிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு நரி அந்த யாகசாலைக்குள் புகுந்து அந்த ஹவுசு பாகத்தை மோந்து வாசனை பார்த்தாலே அந்த வேள்வி புரிந்ததே வ்யக்தமாய் - வீணாகி போவது போல் ஆண்டாள் சங்குசக்ரத்துடன் இருக்கும் புருஷோத்தமனுக்கு தனது திருமுலைகளான திருமார்பகஙகள் என்று இருக்கும்போது அதை மனிதர்களுக்கு என்று பேசினாலே நான் உயிர் வாழ மாட்டேன் என ஆண்டாள் மன்மதனிடம் பிரார்தித்ததாக ஸ்வாமிகள் கூறினார்
    விளக்கம் - ஸ்வர்க்க லோகத்தில் வாழும் உயர்ந்த தேவர்களுக்கு என வேதியர்கள் புரியும் யாகத்தின் ஹவுசு பாகத்தை பிரத்யோகமாய் தேவர்களுக்கென்றே இட்டிருப்பதை ஷூத்ர - தாழ்ந்த பதார்தமாய் கருதப்படும் நரி அதை முகர்ந்து வாசனை பார்த்தமாத்திரத்திலேயே அது தோஷமாகி தேவர்களுக்கு சமர்ப்பிக்க முடியாமல் பயனற்று போய் விடும் என்பது போல் இளம்பிராயத்திலிருந்தே கண்ணனின் திருநாமத்தை கேட்டு அவன் பேரை சொல்லி அவனுக்கென்றே வளர்ந்து அவன் மேல் தீராக் காதலை வளர்த்துக் கொண்டு அவனுக்கே அற்று தீர்ந்த ஆண்டாள் - அவளின் திருமுலைகளான திருமார்பகங்கள் அதுவும் இடது கையில் பாஞ்ச ஜன்யமும் வலது கையில் திருஆழியும் ஏந்திக்கொண்டு இருக்கும் இருப்பை தன் அடியார்கள் அனுபவிக்க என்று தியாகம் செய்த அழகை அந்த உயர்ந்த உத்தமனாகிய புருஷோத்தமனுக்கு என்று இருக்கும் திருமார்பகங்களை மானிட பிறவிக்கு வெறும் ஒரு வாய் வார்த்தையாய் பேசினாலும் கூட சகிக்க முடியாமல் உயிர் தரிக்கமாட்டேன் சத்தை பெற மாட்டேன் என மன்மதனிடம் தனது எண்ணத்தை - திட மனநிலையை ஆண்டாள் வெளிப்படுத்தினாள் .
    இதற்கு த்ருஷ்டாந்தமாய் ராம ராவண யுத்தத்தில் ஸீதைக்கு மன உளைச்சலை கொடுக்கும்விதத்தில் ராவணன் போலியான ராமனின் உயிரற்ற முகத்தை அந்த மாயையை சீதைக்கு ஏற்படுத்தியும் அவள் மனம் உடைந்துவிடவில்லை ஏனெனில் ராமன் மாண்டான் என்று ஸீதை கேட்ட மாத்திரத்திலேயே அவள் உயிர் தன்னடையே விட்டு விலகிவிடும் அவனுக்கென்றே இவள் இவளுக்கென்றே அவன் என சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் என்று இருந்தாற்போல் ஆண்டாளின் திருமுலைகளை மனிதர்க்கென்று பேசின மாத்திரத்திலேயே ஆண்டாள் உயிர் தரிக்க மாட்டாள் என ஒப்புமைப்படுத்தி அழகாய் ஸ்வாமிகள் விளக்கினார் .
    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தின் அடியொற்றி- நாச்சியார் திருமொழி தையொரு திங்கள் பதிகத்தில் 6வது பாசுரமான உருவுடையார் என துவங்கும் பாசுரத்திற்கு அத்புதமாய் பகவத் அனுபவத்தோடு இறையடியார் களுக்கும் அந்த அனுபவத்தை கொடுத்த Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து -
    அவதாரிகை - அழகுமிக்க யுவாக்களாய் திகழும் காம சாஸ்திரத்தின் படி பிரகரண பலத்தில்
    வாத்சாயனர் சூத்ரப்படி காமசாஸ்திரத்தை முன்னிட்டு கொண்டு ' மன்மதா ' நீ வரும் வழியில் விழி வைத்து உன்னைஎதிர்க்கொண்டு ஆதரத்துடன் வரவேற்று பங்குனி மாதம் பெரிய திருநாளிலே தெளிந்திருந்து நோன்பு நூற்கிறேன் மன்மதனே .நீரை கருவில் உடைய மேகம் போன்ற நிறம் படைத்த காயாம்பூ வண்ண மேனியை உடைய காக்கன் பூ போல் பளபளப்பு உடைய கடல்வண்ணனின் திருக்கண்களை திருந்தவே நோக்கி எனக்கு விசேஷ கடாக்ஷம் புரிய மன்மதனே நீஎனக்கு அருள் புரிவாயாக .
    விளக்கம் - அழகுடையோர் இளம் வயதினராய் காமசாஸ்திரப்படி திகழும் மன்மதனை ரஜோ குணத்தின் விளக்காய் - தேசிகராய் இருப்பவரை முன்னிட்டு கொண்டு மன்மதனை நோக்கி ஆண்டாள் சொல்கிறாள் .
    எங்கனம் பெருமாளை பணிய வேதம்வல்லாரை முன்னிட்டு அடிபணியுமாப்போலே அதுபோல் நாள்தோறும் மன்மதன் வரும் வழியில் விழி வைத்து அழைக்கிறாள் ஆண்டாள் .மேலும் கண்ணனை கருத்தில் கொண்டு கண்ணனுடன் தான் சேரவேண்டும் என்கிற பேர் அவாவில் அந்த துடிப்பில் பங்குனி நாள் அன்று உன்னை குறித்து நோண்பு நூற்கிறேன் காமதேவா அதுவும் தெள்ளந்தெளிவாய் நூற்கிறேன் .அதாவது( ப்ராப்த விஷயமான கண்ணனை நோக்கி நூற்பது எனில் அவன் மேல் இருக்கும் பிரேம ரசத்தால் - பக்தியால் கண்கள் கலங்கி நூற்பாள் ) ஆனால் இது அப்ராப்த விஷயமான தன் ஸ்வரூபத்திற்கு நாசம் விளைவிக்கும் என அறிந்து கண்ணனுக்காக மன்மதனை ப்ரார்த்திப்பதால் தெளிவான நூற்கிறாள் என்றாயிற்று இங்கனம் தெளிவாக மன்மதனை குறித்து நோன்பு நூற்று பலனாய் கண்ணனை அடைவதே ஒரே நோக்காக கொண்டாள் கண்ணனுடைய அழகின் இலக்கணத்தை குறிப்பிடும்போது நீரை கருவில் கொண்ட மேகவண்ணன் காயாம்பூ போல் திருமேனி பளபளப்புடன் மின்னும் ,கருங்குவளை போல் கண்ணுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவன் .கமலதிருமுகத்தில் அவனது திருக்கடாக்ஷமானது ஒரு சோலையை இயல்பாய் பார்ப்பது போல் அன்றி ,விசேஷித்து நோக்குவத்து - கடாக்ஷிப்பது அதுவும் அந்த கடாக்ஷம் ஆண்டாளின் ஆற்றாமை தீர கடாஷிக்காமல் கண்ணன் தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்ளும்படி அந்த திருகடாக்ஷம் அமையனும் என அப்பேர்ப்பட்ட சௌந்தர்யாதிகளை உடைய கண்ணன் என்பதால் காமதேவனை ஆண்டாள் பிரார்திக்கிறாள் .
    ஆண்டாள் நாச்சியார் திவ்ய திருவடிகளே சரணம் .
    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @narayanans3350
    @narayanans3350 Před 2 lety

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Před 2 lety

    🙏🙏