வற்றாப்பளை வைகாசி பொங்கல் - 2023 | அம்மாளாச்சி | கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கல்

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2023
  • #வற்றாப்பளை_கண்ணகி_அம்மனும்_வைகாசி_பொங்கலும்
    வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம்.
    கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இங்ஙனம் இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.
    கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.
    “பெரிய வதிசயமுடனே
    பேண்ணணங்கு மிலங்கை நண்ணி
    சரியரிய வரங் கொடுத்துத்
    தார்குழல் வற்றாப்பளையில்
    மருவியிருந்த தருள் கொடுத்த
    வளர்கதிரை மலையணுகி”
    கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது. அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய்பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.
    வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது.
    ஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.
    வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.
    “முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
    முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
    பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
    பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
    தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
    தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
    அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
    வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.
    அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
    அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
    பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
    அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
    பாங்கான கண்களோ ராயிரமுண்டு…”
    எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
    பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.
    வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.
    கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.
    இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
    வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. கைவாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.
    தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.
    பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதம் அடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.
    #வற்றாப்பளை #vattappalai #ஆச்சி #நந்திகடல் #வைகாசிபொங்கல் #அம்மன் Mullithivu #அம்மாள்ஆச்சி #2023 #காவடி #அற்புதம் #உப்புநீரில்விளக்குஎரியும்காட்சி #kovil #வருடாந்தபொங்கல் #இடையர் #தீர்த்தம் #காட்டாவிநாயகர் #உப்புநீர் #கடல்நீர் கோயில்

Komentáře • 19

  • @saaa953
    @saaa953 Před rokem +2

    கடவுளே நீ தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் 🙏😭🙏😭🙏 கடவுளே நீ தான் எங்கள் அக்கா வின் நோயை தவிர்க்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @eramburasalingam7057
    @eramburasalingam7057 Před rokem +2

    கண்ணகிஅம்மன்கருனனயாவருக்கும்கினடக்கவேன்டுகின்றேன் நல்ல ஒருபதிவுதம்பி நன்றி

  • @ksp2162
    @ksp2162 Před rokem +1

    வற்றாப்பளை அம்மாளாச்சிக்கு அரோகரா 🙏🏼

  • @niranji-td7re
    @niranji-td7re Před rokem +1

    Om sakthi om athi parasakthi ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @thuraishanthan
    @thuraishanthan Před rokem +1

    ஓம் சக்தி பரா சக்தி
    நல்ல பதிவுடா தம்பி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @hamshamshu3022
    @hamshamshu3022 Před rokem +1

    🙏🙏💚

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 Před rokem +2

    ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kilakshab1824
    @kilakshab1824 Před rokem +1

    🙏🙏🙏

  • @natural4229
    @natural4229 Před rokem +1

    🙏

  • @sayanthannirogini2956
    @sayanthannirogini2956 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kajankajan8464
    @kajankajan8464 Před rokem +2

    ஒம் சக்தி அம்மா தாயே துணை என் கொறிக்கை நெறைவரனும் தாயே துணை என் பிள்ளைக்கள்ளுக்கும் துணை கண்ணீர்

  • @saaa953
    @saaa953 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathadevivinayagamoorthy666

    🙏🙏🙏🙏💐❤️🇨🇭

  • @prabahari9756
    @prabahari9756 Před rokem +1

    14:08 Om Sakthi Om

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Před rokem +1

    ஓம் சக்தி தாயே நீயே துணை

  • @ThiviyaKanagu
    @ThiviyaKanagu Před rokem +1

    நீங்கள் ஒரு பத்திரிகையாளர். உங்களின் காட்சி தொகுப்பு அருமை.
    நீங்கள் காட்சிபடுத்தும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மை.
    இதனை நாடாத்துபவர்களும், பூசாரியாக வருபவர்கள் இக் கோயிலோடு சம்பந்தபடாதவர்கள். அம்பாள் ஒரு பொழுதும் கருணை பாலிக்க மாட்டார் என அப்பப்பா குறிபிடுகிறார்.
    இவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்து கோயில் வெளிபுற மலசல கூடத்தில் போட்டுவிட்டார்களாம். நடந்த ஆண்டு 1982-6-?. அப்பப்பா அந்த காலத்தில் முல்லைத்தீவீல் அரசு வேலையில் இருந்ததாக சொல்கிறார். இந்த கோயில் அவர்களுடைய Casteக்கு உரியது என்றும் சொல்கிறார்.
    அவர் பெயர் பொன்னையா என்கிறார். நாட்டுபிரச்சினையால் வழக்கு நடக்கவில்லையாம்.
    கூலிக்கு கொலை செய்ய வந்தவர்கள் கொட்டடி யாழ்ப்பாணம்.பொக்கனை என்பவனும், திக்கம் மூத்தியும், அவரின் வேலையாளுமாம்.
    1982 திருவிழா நடந்து ஒரு மாதமளவில் கொலை செய்தார்களாம். கோயிலில்தான் திட்டம் போட்டார்களாம். வவுனியா MP, தண்ணி ஊற்று கடைகாரன்களாம் என்கிறார். அந்த காலத்தில் கோயிலில் நடந்த ஒரு பெரிய கொலையாம்.
    காரில் ஏற்றி கொண்டுபோய் தான் கொலைசெய்தார்களாம். Driver காய்ச்சலும், loose motion இருந்தவானாம்.
    அப்பப்பாவுக்கு கொலையுண்டவரை தெரியும் என்கிறார்.
    அப்பா, அம்மாவுக்கும் இந்த கதை தெரிகிறது.
    நீங்கள் இந்த கதையை சொல்லுங்கள். நாங்கள் கேட்க ஆவலாக உள்ளோம்.

  • @jaffnarajith
    @jaffnarajith Před rokem +1

    🙏🙏🙏