மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • !! சிவபெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான் !!
    திருச்சிற்றம்பலம்
    பத்தாம் திருமுறை
    திருமந்திரம்
    முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
    பாடல் எண் : 8
    மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
    றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
    ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
    காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
    பொழிப்புரை :
    பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.
    திருமூலதேவ நாயனார் திருவடிகள் போற்றி! போற்றி !!
    www.thevaaram.org

Komentáře • 2