இளையராஜா பாட்டு ஒலித்துக் கொண்டே இருப்பதுதான், என் கடையின் அடையாளம் | MERCURY

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2021
  • @MERCURY #Ilayaraja #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
    *************************************************************
    MY FATHER SHOP
    Address : Old No.146, New, No.54, Kodambakkam High Rd, Chennai, Tamil Nadu 600034
    GOOGLE MAPS LOCATION :
    goo.gl/maps/9Vj82bRDkyBZCTRn8
    *************************************************************
    Watch other videos of Mercury :
    Oo Solriya...ஆம்பள புத்தினு நான் எழுதியதை, மத்த மொழியிலும் வச்சுட்டாங்க | LYRICIST VIVEKA :
    • இடுப்பளவு தண்ணீரில் வட...
    இடுப்பளவு தண்ணீரில் வடிவேல் சாரை பார்க்க சென்றேன் - Vengal Rao :
    • இடுப்பளவு தண்ணீரில் வட...
    அதிரடியாய் ஆரம்பமாகும் Mercury மேடை...90's பாடல்களின் கொண்டாட்டம் | தே"வாவ்" :
    • 🔴 Promo | அதிரடியாய் ஆ...
    சமைக்கிறதுல தான் எனக்கு சந்தோசம் | Former Newsreader Vasanth subramaniam :
    • சமைக்கிறதுல தான் எனக்க...
    Actor Aravind Akaksh Interview ;
    • வெங்கட்பிரபுவுக்கு மட்...
    Actor Ravi Maria Interview :
    • TV - ல தான் நான் இயக்க...
    ஜெயில் படம் Director Vasanthabalan Interview :
    • ஜெயில் படம்... உலக சின...
    Actor Manoj Bharathiraja Interview :
    • பெயருக்கு பின்னால், அப...
    Thiruda thirudi Director Subramaniya Siva Interview :
    • Video
    TSK & Sunita Interview | Part - 02 :
    • என்னை கிளாமரா பார்த்தவ...
    இட்லி + பீட்ஷா = இட்லிஷா | Neeya Naana Street Food Part - 3
    • இட்லி + பீட்ஷா = இட்லி...
    2K Kadhali Deepa And Guru Interview
    • 2K Kathali | Ft. Guru ...
    Comedy raja Kalakkal Rani Winner TSK & Sunita Interview
    • TSK - Sunitha | அவ்வளவ...
    இவ்ளோ பெரிய இட்லியா? இளம் தம்பதியரின் அசத்தல் முயற்சி
    • இவ்ளோ பெரிய இட்லியா? இ...
    NEEYA NAANA 90's Vs 2K Singers | PART - 02
    • NEEYA NAANA 90's Vs 2K...
    *************************************
    Connect with us on Social media for more updates.
    FB link: / mercury-digi. .
    Twitter link: Mercury24428354?s....
    Instagram: / mercury_digital. .
  • Zábava

Komentáře • 933

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Před 2 lety +565

    நாங்க தான் வெறிபிடித்த ரசிகர்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் நீர் கொலைவெறிபிடித்த ரசிகராக இருக்கிறீர்.வாழ்க இசைதெய்வத்தோடு பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 2 lety +5

      Me too..

    • @nagarajan1517
      @nagarajan1517 Před 2 lety +4

      👍👍👍

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 2 lety +2

      என்ன சிவ பெருமாள் இதுலையும் தோற்றுவிட்டாய்... எப்போதான் வெளங்குவியோ...

    • @vrcsasi152
      @vrcsasi152 Před 2 lety +2

      Well said.👌👍

    • @venkatraotabla1900
      @venkatraotabla1900 Před 2 lety +2

      மிக்கமகிழ்ச்சி வணக்கம் ஹரி நாராயண்

  • @nagarajan1517
    @nagarajan1517 Před 2 lety +239

    10 ஆஸ்கர் அவார்டு வாங்கின கூட இவ்ளோ சந்தோஷப்பட மாட்டார் இளையராஜா உங்களுடைய பேச்சைக் கேட்கும் போது

  • @SenthilKumar-hy7gb
    @SenthilKumar-hy7gb Před 2 lety +176

    என்ன ரசிகன்டா நீ...?
    எங்களை விட மோசமானவனா இருக்கே!
    வாழ்த்துக்கள்.. சகோதரரே.

  • @tseetharaman
    @tseetharaman Před 2 lety +33

    நான் 60 வயது ரசிகன் ஆனால் இளையராஜா ரசிகன் என்பதால் இளமையாக இருக்கிறேன். இளையராஜா சாரை சந்திக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆனால் இன்னும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதனால் நான் ஐயாவை சந்திக்க விரும்புகிறேன்🙏

  • @charan5859
    @charan5859 Před 2 měsíci +11

    இசைஞானி இளையராஜா இந்தப் பிரபஞ்சம் ஈன்றெடுத்த ஈடு இனையற்ற வரம்❤

  • @masilamaninatarajan8989
    @masilamaninatarajan8989 Před 2 lety +97

    எனக்கு இப்போது 64 வயது. எங்க ஊர்ல உள்ள டீ கடைகாரர்கள் எல்லாம் இன்று வசதியாக இருக்க காரணம் இளையராஜா. இவருடைய பாட்டை கேட்கவே நாங்கள் எல்லாம் 3 டீ குடிப்போம்

    • @skmuthuskmuthu6770
      @skmuthuskmuthu6770 Před 2 lety +9

      இப்போ நாங்க (அப்பா கடை )நுங்கம்பாக்கம் போனா
      வாடிக்கையாளர்கள் கூட எத்தனை டீ குடிப்போம் என்று எங்களுக்கே தெரியாது

  • @meerav6323
    @meerav6323 Před 2 lety +217

    இளையராஜாவின் உண்மை யான ரசிகர் என்று கூறுவதை விட ஆத்மார்த்தமான ரசிகர். உணர்வு பூர்வமாக பேசுகிறார். கண்டிப்பாக உங்கள் கடைக்கு ஒரு நாள் வருவேன் அண்ணா

  • @saravananchelladurai7822
    @saravananchelladurai7822 Před 2 lety +104

    அட பாவி, என்னய்யா மனுசன் நீ? ரசிகர் வடிவில் ஒரு ராட்சசன்.ரசிக்கும் மனமே இசையின் கோயில்.வாழ்க நீ எம்மான்!!!.

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 2 lety +91

    அடேய் யப்பா ராசா நீ எங்கடா இருக்கே.... உன்னை உச்சி முதல் பாதம் வரை தடவி ரசிக்கனும்டா.....
    நாமெல்லாம் செத்தாலும் ஆவியா வந்து இளையராஜா பாட்டு போடற இடத்தில உங்கார்ந்திருவோம்... போடா போடா போயி கண்னை துடைச்சிட்டு எனக்கு ஒரு டீ போட்டுக் கொடு..... உன் கையால் ஒரு டீ குடிச்சுட்டுதான் உசிர விடனும் .🙏🙏🙏

  • @D-Pro
    @D-Pro Před 2 lety +162

    எல்லா ரசிகர்களின் உணர்வும் இந்த ஒரு ரசிகரின் மூலம் எதிரொலிக்கிறது. One and Only Raaja 👏

  • @mohanrajraj896
    @mohanrajraj896 Před 2 lety +28

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @kannanviswanathan5917
    @kannanviswanathan5917 Před 2 lety +92

    நானும் ஐயாவோட தீவிர ரசிகன் தான். ஆனால் இவரைப் பார்த்த பிறகு, நானெல்லாம் ஒண்ணுமேயில்லை.. ரசிகர்களின் தலையாயவர் நீங்கள்..

  • @kanrajur8283
    @kanrajur8283 Před 2 lety +30

    இளைய ராஜா சாரின் இசை உயிரில் கலந்த உணர்வு. டீ கடை அண்ணாவுக்கு நன்றியும் வணக்கமும் வாழ்த்துக்களும்.

  • @jeyamurugansingaravelan7432

    இசை கடவுள் இளையராஜா என்பதை எத்தனைபேர்ஏற்றுக் கொள்கிறீர்கள்....

  • @C77K77
    @C77K77 Před 2 lety +43

    இளையராஜாவின் *தீவிர ரசிகனான* என்னை மிஞ்சி விட்டாய்...நீ இளையராஜாவின் *தீவிரவாதி ரசிகன்* 🙏👍🤣

  • @Yogamn2227
    @Yogamn2227 Před 2 lety +113

    உங்களை பார்க்கும் போது பொறாமையாக உள்ளது... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இவரை நேர்காணல் கண்டதற்க்கு...
    அனைவரின் உள்ளம் கவர்ந்த கள்ளவன் அவன்...அவனே எங்களை ஆட்டி படைக்கும் இசையின் அவதாரம்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 2 lety +36

    இசைக்கு மொழி இல்லை. இளையராஜாவுக்கு எல்லை இல்லை 😍

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js Před 11 měsíci +23

    தயவு செஞ்சு இதை இளையராஜா சார் வந்து இந்த பேட்டியை கட்டாயம் பாக்கணும்

  • @ragu9131
    @ragu9131 Před 2 lety +30

    நூற்றில் ஒரு வார்த்தை இளையராஜா ஒரு டைம் மிசின்.உதிரிபூக்கள் கேட்கும்போது 2வயதும்,தளபதி பாடல் கேட்கும் போது20வயதும் ...ஒரே நேரத்துல குழந்தையாகவும்,குமரனாகவும்,கிழவனாகவும் மாறுகிறேன்..்அது இளையராஜவின் மாயஜாலம்.

    • @vijayakumarkasiviswanathan1412
      @vijayakumarkasiviswanathan1412 Před rokem +1

      அற்புதமான வார்த்தைகள்...இசை தேவன் வாழ்கிறார் எந்நாளும்...❤

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Před 2 lety +138

    இளையராஜாவின்🎶🎵
    இசையை நேசிக்கும், இசையோடு வாழும்,
    நம் தேனீர் தமிழர்💪
    அருமையான நேர்காணல்👍
    வாழ்த்துக்கள்🙏

  • @kumaresank9452
    @kumaresank9452 Před 2 lety +59

    ராஜாவை ஒவ் ஓர் நிமிடகளாக ரசித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் மகா ரசிகன்..
    அவர் பேசும் பேச்சு கவிதையாக இருக்ககறது
    பாடலை விளக்குவது இசையாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள் நன்பரே....

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 Před 2 lety +110

    Super, மனதார பாராட்டும் ரசிகரை வியந்து பார்க்கிறேன். அனைத்தும் இளையராஜா சாரின் உழைப்பு, தொழில் பக்தி, அர்ப்பணிப்பு. மிக்க சிறப்பான பேட்டி.

  • @ssivan4414
    @ssivan4414 Před 2 lety +68

    நான் இசை ஞானி அவர்களின் பெரிய விசிறி. அவர் எந்த நொய் நொடி இல்லாமல் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @rexrex7471
    @rexrex7471 Před 2 lety +130

    நமக்கு கிடைத்த இசைகடவுள் உலகம் இருக்குமவரை இளையராஜா நம்முடன் இருந்து கொண்டே இருப்பார் . அவர் காலத்தில் நாம் எல்லோருமே வாழ்ந்து கொண்டிருப்பது இறைவனின் செயல் .

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Před 2 lety +16

    ஒரு தமிழ் இசை அமைப்பாளர் notes எடுத்து ஜப்பான் music school ல class எடுக்குறாங்கன்னா..... No words... I really be proud to born in தமிழ் community.... Mastro mastro mastro........

  • @murugana7563
    @murugana7563 Před 2 lety +22

    இவ்ளோ நாள் உங்கள் சேனல் எனக்கு தெரியாமல் போனது சா ரொம்ப feeling கா இருக்கு

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety +19

    அடடா,அடடா! எப்பேர்ப்பட்ட ரசிகர்!! இசையால் உலகையே ஆட்டுவிக்கும் இளையராஜா நீண்ட காலம் வாழ்க!!! அய்யா, நாங்கள் வெறும் தமிழ் பேசும் தமிழர்கள் அவ்வளவே... ஆனால், நீங்களோ தமிழை சுவாசித்து வாழ்கிறீர்கள்.

  • @karthikesan8456
    @karthikesan8456 Před 2 lety +91

    ராஜா இசை என்றாலே உடம்பு புல்லரிக்கிறது

    • @selviindira5141
      @selviindira5141 Před 2 lety +10

      உங்களின் அன்புக்கு இசைஞானி சார்பில் நன்றி

  • @kadhalsaravanan1201
    @kadhalsaravanan1201 Před 2 lety +57

    ஒட்டு மொத்த தமிழர்களின் வெளிப்பாடு இவர் மூலம் வெளிப்படுகிறது.இசை என்றால் அது இளையராஜா மடடும் தான்.

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před 2 lety +28

    ஹரி நாராயணன் அவர்களே உங்கள் பேச்சைக் கேட்கும் போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 2 lety +72

    இசைஞானியின் பக்தன் நான் என்ற திமிரில் இருக்கும் எனக்கு,
    தலைவன் சரியான போட்டியா இருப்பார் போல.
    anyway வாழ்த்துக்கள்.

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Před 2 lety +59

    அட்டகாசமான மனுஷன அறிமுகம் பன்ன அமலாவுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 2 lety +18

    எத்தனையோ பைத்தியங்கள் இசையிலே இங்கு உண்டு!
    உன் இசையில் பித்து கொண்ட என்னை போல யவருண்டு...!!! இவர் அதுக்கும் மேல்👍
    உன் இசையை கேட்பதால் மனம் புதிதாகுதே...
    இராக தேவன்
    இசைக் கடவுள்
    இசையரசன்
    இசைஞானி
    இளையராஜா அவர்களின் இசையால் ஈர்க்கப்பட்டு கரைக்கப்பட்ட கவலைகள் பல நன்றி🙏💕 தெய்வமே🙏

  • @mayandymasilamany7903
    @mayandymasilamany7903 Před 2 lety +34

    நானும் இசைஞானியின் ஒரு பரம ரசிகன் என்று பெருமையுடன் சொல் லிக் கொள்கிறேன்.
    100 ஆண்டு கடந்தும் ராஜா சார் வாழ வேண்டும்.
    Hard core
    Fan from Bangalore.

  • @rammohan1712
    @rammohan1712 Před 2 lety +178

    அருமை...அருமை...கண்ணீர் வந்துவிட்டது ஐயா நீங்கள் பேசியதை கேட்டு.. இன்றும் நான் "தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் கேட்கும் கண்ணீர் வரும...காரணம் தெரியவில்லை.

  • @manoharanmano4571
    @manoharanmano4571 Před 2 lety +23

    காலத்தின் கட்டாயம் எங்கள் ராஜா

  • @vp774
    @vp774 Před 2 lety +20

    இசை தெய்வம் இசைஞானியார். 🙏

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Před 2 lety +81

    டேய் எப்பா நான் தான் இசைஞானியின் வெறியன் என்று திமிராக நினைத்து கொண்டு இருந்தேன் நீயும்மா வாடா வாடா ராசா

    • @Karthigai
      @Karthigai Před 2 lety +7

      அதையே வழி மொழிக்கிறேன்

    • @nehruarun5122
      @nehruarun5122 Před 2 lety +3

      இங்கு சிகாகோவிலும் உள்ளோம்டாஆஆஆ

    • @pkspice80
      @pkspice80 Před 2 lety +2

      நானும் உங்களுடன்

    • @mohanrajraj896
      @mohanrajraj896 Před 2 lety +2

      என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Před 2 lety +1

      @@mohanrajraj896 ஒவ்வொரு மனிதனும் 25 வயதை கடந்த உடனே இசைஞானியின் வெறியன் ஆகி விடுவான் சாகும் வரை

  • @k.venkateswarankandhasamy8662

    இந்த மனிதர் சொள்வதேற்கு வாய்ப்பு கிட்டியது. எனக்கு கிட்ட வில்லை. அவள்வுதான். கடவுள் இசை ஞானி

  • @venkatrajan799
    @venkatrajan799 Před 2 lety +52

    இளையராஜா ரசிகர் அண்ணா ... நானும் இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகர் உங்கள் டீ கடைக்கு வருகிறேன்.

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 2 lety +24

    நாங்கள் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ரசிகர்கள் அல்ல.
    இசைஞானியின் இசை தீவிர வாதிகள்.

  • @shanmugamp8365
    @shanmugamp8365 Před 3 měsíci +9

    உங்கள் மனசு வெளிப்படுத்தும் சந்தோசத்தில் நானும் பங்குகொள்வதில் மிகுந்த அளவில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @ravichandran9299
    @ravichandran9299 Před 2 lety +60

    இளையராஜா அவர்கள் தனது 75வயது வரை பொது நிகழ்சியில் பங்கு கொள்ளாமல் பெரும் சாதனை படைத்து விட்டார். வயது ஆகுது தவிர இவரின் இசையின் ஆதிக்கம் குறையவில்லை.

  • @RameshKumar-qi1qw
    @RameshKumar-qi1qw Před 2 lety +60

    நம்ம ராஜா பாட்ட கேட்கும் போது வரும் ஆனந்தமான அதே உணர்வு உங்கள் பேச்சை கேட்கும் போதும் வருகிறது அதே வேளையில் ஒரு வேற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டவர் நம்ம ராஜாவை நம்மை விட அதிகமாக நேசித்துக் கொண்டு இருக்கறாரே என்று சிறிது சந்தோசமான பொறாமையும் சிறிது அன்பான எரிச்சலும் நிறைய மகிழ்ச்சியும் அதிக ஆச்சர்யமாகவும் உள்ளது.வாழ்த்துகிறேன் பொறாமையுடன்! எங்க ராஜாவை இவரும் கொண்டாடுகின்றாரே என்ற பெருமையுடன்! ராஜாவின் இசை எனக்கானது என்று மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்த வேளையில் இல்லை அது உலகத்தார் அனைவருக்குமானது என்று அசால்டாக உணர்த்தி விட்டார்!

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 2 lety

      Lydia என்ற ரஷ்ய பெண்ணின்‌ you tube channel பாருங்கள்...
      இசைஞானியை பீத்தோவானுக்கு இனையாக கூறியிருப்பார்

    • @RameshKumar-qi1qw
      @RameshKumar-qi1qw Před 2 lety

      @@rkavitha5826 Lidia kotlova அவர் சானலில் நிறைய வீடியோக்கள் பார்த்திருக்கிறேன்!

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g Před 2 měsíci +8

    இளையராஜா போல இசையவே பயம் கொள்ள செய்யும் திறமைசாலி உலகத்தில் எவருமில்லை 🤷‍♂️

  • @Doyouknowgktamil
    @Doyouknowgktamil Před 2 lety +21

    ராஜாவின் பக்தனான நீங்கள் நீடுடி வாழ்க

  • @msviswanathstephen3062
    @msviswanathstephen3062 Před 10 měsíci +14

    உண்மையில் இவர் சாதாரண ரசிகர் இல்லை. இவர் ரசிக்கும் பாடல்கள் எல்லாம் மிகவும். ரசிப்பு தன்மை உடையது.

  • @ramaniramani2553
    @ramaniramani2553 Před 2 lety +32

    இவரது பேசுவதை கேட்கும் போதே கண்ணீர் வழிகின்றது .வாழ்க இசை.இசையின் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 Před 2 lety +30

    உணர்வுபூர்வமான உன்னதமான பேட்டி...இதுதான் எங்கள் இசைக்கடவுள். நன்றி நண்பரே.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci +11

    மிக மிக இனியக்குரல் உடையவர் உமா ரமணன்.இளையராஜா இசையில் பாடியிருக்கிறாரா.அந்தக் குரல் இனிய தெய்வீகக் குரல்.

  • @anbusekaranappandai4030
    @anbusekaranappandai4030 Před 2 lety +71

    நான் ரசித்த அனைத்துப் பாடல்களையும் அதே போலவே ரசிக்கும் மற்றொரு மகா ரசிகன்! 👍

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Před 2 lety +10

      Naamo ninaikurom namakku dhan indha songs elam pidikum nu, naama dhan raja sir oda periya paithiam nu, aana evara madiri oruthara paakum naama onnume illanu thonudhu,

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Před 2 lety +2

      💯💯💯👍👍👍♥️♥️♥️

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před 3 měsíci +9

    இசை கடவுள் இளையராஜா ஐயா அவர்கள் இந்த பூமியில் பிறந்ததற்க்கு நாம் பெருமைக்கொள்ள வேண்டும்🙏🙏🙏 ❤❤❤ நன்றி🙏💕

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy Před 2 lety +21

    இவர் ஒரு ' மகா ரசிகன்', அவரின் உணர்ச்சிகள் தாய் அன்பு போல் அப்பழுக்கற்றது, அவருக்கு வணக்கங்கள்.

  • @yesyesyens7269
    @yesyesyens7269 Před 2 lety +73

    நேர்மையான மனிதருடன் வித்தியாசமான நேர்காணல். பாராட்டுதல்கள், அமலா மோகன்!
    நெஞ்சம் தொடும் தேனினிமை உங்கள் குரல்,

  • @gnanagurukothandapanimurug568

    நானும் என் நண்பர்களும் இவர் டீ கடையில் டீ.. குடித்திருக்கிறோம்.. எந்த நேரத்திலும் இசைஞானி பாடல்கள் ஒளித்துக்கொண்டே இருக்கும் ❤️ சில நேரங்களில் மனதுக்கு கஷ்டமாக இருக்கும் போது.. இந்த கடையில் ஒரு டீ குடித்தால் போதும்.. அந்த சோகம் பறந்து போகும்.. பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🏻 ஐயா ❤️

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 Před 2 lety

      நண்பா சென்னையில் கடை எங்க இருக்கு?

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 lety +32

    இதுதான் இசைஞானி இளையராஜாவின் இசை👌

  • @sridharnashoknaaarayanan3059

    இதுவரை நான் இளையராஜாவின் ரசிகன். ஆனால் இப்பொழுது முதல்வராக நான், என் இதய தெய்வம் இளையராஜா ரசிகனின் ரசிகன். உங்கள் கடை அட்ரஸ் கொடுங்கள். நாம் நேரில் அடிக்கடி சந்திப்போம்.

    • @harinarayanan3177
      @harinarayanan3177 Před 2 lety +12

      My father shop
      Nungambakkam

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 Před 2 lety +3

      @@harinarayanan3177 Good that your Father has appropriately and very lively communicated his feelings about the Mastroe. Really amazing.

    • @nuttraaj8832
      @nuttraaj8832 Před 2 lety +1

      @@harinarayanan3177 location pls

    • @vinodhdhoniv
      @vinodhdhoniv Před 2 lety +3

      @@anantharamankarthikeyan5117 😂🤣 u misunderstood....shop name itself “my father shop” it’s not his father shop

  • @madhangopal7895
    @madhangopal7895 Před 2 lety +14

    நல்ல பேட்டி நம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளதை உண்மையாக பேசினார்.

  • @panchakshari789
    @panchakshari789 Před měsícem +10

    Great tambi...
    I'm from Andhra...
    I'm also like you, known Tamil for Ilayaraja samy...
    I'm always feeling that, I'm not a fan of samy... But, I'm devotee of Ilayaraja 🙏🙏🙏

  • @ravindraan
    @ravindraan Před 2 lety +41

    இசைஅமைபாளர் என்றால் ராஜா மட்டும்தான்

  • @veeramaniazhagarsamy3939
    @veeramaniazhagarsamy3939 Před 2 lety +20

    இளையராஜாவின் இசை கேட்டுதான் இசைமேல் ஆர்வம் வந்து இசை பழகினேன் வாழ்க இசை அரசர் ❤️

  • @snowdog6887
    @snowdog6887 Před 2 lety +17

    மாதா... பிதா.. குரு... ராஜா ...தெய்வம்🎹🎷🎻🎺📻🎧🎤🎼🎵🎶

  • @natrayankumaravel8584
    @natrayankumaravel8584 Před 2 lety +16

    ப்ப்பா..! இப்படியும் ஒரு ரசிகரா..? என்னை விட ரசிகர் இருக்க முடியாது என்ற கர்வத்தை உடைத்தார்...

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Před 2 lety +17

    இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே- இந்த பாட்டு எல்லோரும் கேட்க வேண்டிய பாடல்

  • @gnanaoli9777
    @gnanaoli9777 Před 2 lety +15

    என் கண்கள் கலங்குகின்றன என்னைபோல் ஒருவனா என்று 😥🙏🙏

  • @kumarn7918
    @kumarn7918 Před 2 lety +46

    அருமையான பதிவு. வியர்க்க விருவிருக்க நம் இசைஞானி இளையராஜாவின் சிறப்பை அவருடைய பாணியில் அழகாக விவரித்தார். நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா.

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Před 2 lety +23

    இசைக்கு மொழி இல்லை, இளையராஜாவின்
    இசைக்கு மொழி இல்லை

  • @ak-mp5pq
    @ak-mp5pq Před 2 lety +15

    இசையின் இறைவன் இசைஞானி இளையராஜா!

  • @vmsenthilbe007
    @vmsenthilbe007 Před 2 lety +22

    நானும் திட்டுவேன்... வித்தியாசமான முறையில் இசை கருவியை பயன் படுத்தி அதனால் வரும் இசையினை கேட்டு உருகும் போது நானும் இப்படி தான் திட்டுவேன்... அப்போது வேற வழியில்ல திட்டதான் தோனும்...

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 Před 2 lety +25

    மெய் சிலிர்க்க வைத்து விட்டார் ... இசை யே கடவுள்... இளையராஜா வும் கடவுளே....

  • @laddu756
    @laddu756 Před 2 lety +33

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல் கேட்பதற்கு எவ்வளவு இனிமை மொழி கடந்து ரசிகர்கள் உண்டு என்று இதற்கு ஒரு எடுத்துக்காட்டு

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před 6 měsíci +10

    ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் என்ற பாடல் உறவாடும் நெஞ்சம் என்ற படம் என் தெய்வமே....

  • @sanjeevikumarxaviet6229
    @sanjeevikumarxaviet6229 Před 2 lety +61

    வேற்றுமொழி...கொண்டவர்...கொண்டாடுகிறார்

  • @v.p.boobpathiv.p.boobpathi5095

    உண்மைதான் எல்லோரையும் மட்டுமல்ல எல்லா மொழியனரை ஆட்டிப்படைக்கிறார் எங்கள் இசைஞானியே..

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 2 lety +2

      Oskar எல்லாம் யாருக்கு வேண்டும்??

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 2 lety +89

    இதைவிட ஆஸ்கர் அவார்ட் பெருசா ?!
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @manis6582
      @manis6582 Před 2 lety +7

      Bro...for this comment, I want to hit a 10,0000 likes for you... !!!

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +33

    இசை என்றால் Raja sir அவர்கள் தான்.நாங்களும் உங்களை போன்றுதான்.

  • @ganeshr7484
    @ganeshr7484 Před 2 lety +7

    நம்மலவிட மோசமான ஆளா இருப்பார் போல 😍😍😍

  • @ravir6052
    @ravir6052 Před 2 lety +9

    இளையராஜா எனும் இசையின் ரசிகனை எங்களுக்கு எப்போதுமே பிடிக்கும் ஆனால் உங்களைப் போன்ற டீக்கடைக்காரர் கல் தான் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சின்னஞ்சிறு கிராமத்திலும் நகரத்திலும் வாழ்வியலோடு ஒட்டிய மனிதர்களுக்கு படங்களை பாடமான பாடல்கள் அனைத்தும் இளையராஜா தந்ததே இதில் வாலில் என்றுள்ள ராட்சசன் ராஜா ஓடு கைகோர்த்து பல வெற்றிகரமான பாடல்களை தந்திருப்பது சாதாரணமானதல்ல நீங்களும் கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு முறையும் மரணித்துப் போகிறார்கள் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து ரசிகனாய் வாழ்கிறார்கள் ராஜாவின் ரசிகனாய் வாழ்கிறேன் நன்றி

  • @akalyasri2263
    @akalyasri2263 Před 2 lety +21

    நீங்கள் மிக பெரிய இசைஞானி பக்தன் 🙏🙏🙏🙏🙏

  • @kalidassc
    @kalidassc Před 2 lety +34

    Illayaraja the man who lives all of our family without his name in the Ration card.. - vivek sir... True words

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Před 2 lety +48

    மண்ணின் இசை மன்னன் இளையராஜா!

  • @len3561
    @len3561 Před 2 lety +31

    ராஜா சார் இசை கடவுள் அவர் பாடல்கள் மட்டுமே என்றும் இதயத்தை வருடும்

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Před 2 lety +20

    அய்யா இசை ஞானி வெறியன் வணங்குகிறேன் தமிழ் பற்று நேசிக்கும் நண்பா நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்இதயம் நீங்கா நண்பா எங்கே டா இருக்கே

  • @advsschandran1
    @advsschandran1 Před 2 lety +31

    நான் இந்த கடைக்கு சென்றிருக்கிறேன். இந்த விஷயத்தை மேலோட்டமாகத்தான் கவனித்தேன். முழுமையாக வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி!

    • @vs6103
      @vs6103 Před 2 lety

      இது எங்குள்ளது நண்பரே?

    • @nuttraaj8832
      @nuttraaj8832 Před 2 lety

      Location pls

    • @advsschandran1
      @advsschandran1 Před 2 lety

      Near Kodambakkam Railway Station. I'll get correct address.

  • @AshokAshok-sf5fn
    @AshokAshok-sf5fn Před 2 lety +17

    அவரை நேர்காணல் செய்த உங்களுக்குத்தான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்கள் எப்படித்தான் தேடி கண்டுபிடித்தீர்கள் நன்றி

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Před 2 lety +18

    மார்கழி மாதம் இசைஞானி பாட்டு கேட்டுட்டு டீ சாப்பிட அலவில்லா ஆனந்தம் நன்றி அண்ணா🙏🙏🙏

  • @PKVeeramanidaasan
    @PKVeeramanidaasan Před 2 lety +30

    ஒரு பேட்டி எடுப்பவர் ,எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சகோதரி ஓர் உதாரணம்… வ

  • @ayyanmuthurengasamy5073
    @ayyanmuthurengasamy5073 Před 2 lety +10

    இசையின் சக்கரவர்த்தி எங்கும் நிறைந்த இசையின் ஆன்மா

  • @manoharana9624
    @manoharana9624 Před 2 lety +40

    This is more than 100 Oscar awards. What else we, the fans of Raja sir can expect

  • @manoharana892
    @manoharana892 Před 2 lety +7

    அழகான, உணர்வுபூர்வமான இன்டெர்வியூ. இளையராஜாவின் இசை என்பது பாடல்கள் அல்ல. அது ஒரு உள்ளுணர்வு, தமிழர்களின் வாழ்வியல், அவர் இசை மூலம் நம்மோடு தினமும் பேசுகிறார், சிரிக்க, சிந்திக்க, அழவைக்க, ஆறுதல் சொல்ல, தத்துவம், காதல் சொல்ல, காதலிக்க அனைத்தையும் உரையாடுகிறார். We are all so love இளையராஜா...💕💕💕💕

  • @valarmathirajan8534
    @valarmathirajan8534 Před 2 lety +11

    அய்யா ராசா நாளைக்கே உன் கடைக்கு வரேன்

  • @raajasathiyamoorthy
    @raajasathiyamoorthy Před 2 lety +39

    ஆகா இவர் கடைக்கு செல்பவருக்கு செவிகளுக்கும் இசைத் தேநீர் உறுதி.

  • @gunasekaran7653
    @gunasekaran7653 Před 2 lety +36

    ஹரி அண்ணா சூப்பர்.
    வாழ்க வளமுடன்.

  • @rajivboyrajivboy341
    @rajivboyrajivboy341 Před 2 lety +42

    நான் கேட்டு ரசித்து அழுதபாடல் கற்பூர பொம்மை படத்திலிருந்து பூங்காவியம் பேசும் ஓவியம் பாடல் இளையராஜாவின் இசையும் கே ஜே ஜேசுதாஸ் அவர்களின் குரலும் மெய்சிலிர்க்க வைத்து அழ வைத்தது

    • @ramiramesh
      @ramiramesh Před 2 lety +3

      மெட்டி ஒலி, பூந்தளீர் ஆட..... எவ்வளவு பாட்டு... ஞானிடா..

    • @rajivboyrajivboy341
      @rajivboyrajivboy341 Před 2 lety +1

      @@ramiramesh ஆமா சகோ அருமையான வரிகள்

  • @krishnakumarpalanichamy5645

    Wow, first class Raja sir rasigan. I do have a friend in Karnataka, who is kanndiga, he learned Tamil to read and write, just because of Illayaraja songs.

  • @sarana3812
    @sarana3812 Před 2 lety +15

    இளையராஜா இசைக்கு எல்லையும் இல்லை மொழியும் இல்லை... அவர் இசையால் தமிழனா மாறிய உங்களுக்கு 🙏🙏🙏🙏மாற்றிய இசை ஞானிக்கு கோடான கோடி 🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenkumar3241
    @praveenkumar3241 Před 2 lety +14

    He is very much clear and smart guy. He is clear on what he likes and what he deserves. Aachariyama iruku , evalo thelivana aaal 😀 summa onu solala , he even comes up with Deepan chakaravarthy songs and his likings doesn't seem like usual ones. He can do PHD at ease 👍 Absolutely fantastic fan boy evaru. En isai theivathuku ethu tha rasigan in anbu. Elayaraja pathi theriyuma pesitu irukum childra pasanga kita evara pesa vidanamum . Summa opening Gilchrist , Jayasuriya mathri pirichutu poitey iruparu. 😂

  • @leeyumku406
    @leeyumku406 Před 2 lety +10

    இப்பவும் தினமும் ராஜாவோட பாடலை கேட்டுவிட்டு தான் தூங்குவேன்

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 2 lety +21

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @venkateshj9638
    @venkateshj9638 Před 2 lety +15

    இசை ஞானி வெறியன் வெங்கட்