காதல்... வீரம்... தேசபக்தி... ஒரு தேவதாசியின் உண்மைக் கதை | Aanmeegam Anantham

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2024
  • எழுத்தாக்கம் : விவேகப்ரியன்
    அன்றைய ஸ்ரீரங்கத்தின் இரவுப் பொழுது கனத்த அமைதியை சுமந்திருந்தது.
    அரங்கன் குடியிருக்கும் கோயிலுக்குள் அத்துமீறிப் புகுந்து, அங்கிருந்த பொன், வைர ஆபரணங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்களை எல்லாம் கொள்ளையடித்த முகமதியப் படையின் கொள்ளை தாகம் துளியும் குறையாமல் இருந்தது.
    ஒட்டுமொத்த அரங்கன் கோயிலையே தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள், புனிதம் நிறைந்திருந்த கோயில் வளாகங்கள் முழுவதையும் தங்களது படை வீரர்கள் தங்குமிடமாக மாற்றியிருந்தார்கள்.
    நடக்கும் விபரீத நிலவரங்களை எண்ணி மனதுக்குள் கண்ணீர் வடித்தார்கள், ஸ்ரீரங்கத்து மக்கள்!
    ‘நீங்கள் எப்படி எங்கள் ஊர் கோயிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்கலாம்’ என்று வாய் திறந்து கேட்டால்... தங்கள் உயிர் மிஞ்சுமா என்பது சந்தேகம்தான் என்பதால், அவர்கள் வாய்மூடி மவுனம் சாதித்தனர்.
    அதே வேளையில், அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் என்கிற வெள்ளை நாச்சியார், அப்படியொரு முடிவு எடுத்ததையும் ஸ்ரீரங்கத்து மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
    ஸ்ரீரங்க கோயில் கொள்ளைக்கு தலைமை தாங்கியுள்ள முகமதியப் படைத் தளபதி அடில்கானின் மனைவி ஆக சம்மதம் தெரிவித்துவிட்டாள் அவள் என்கிற செய்திதான் அதற்கு காரணம்.
    ‘இப்படியொரு முடிவெடுக்க இவளுக்கு எப்படி மனசு வந்தது? இவளின் வெள்ளைத் தோலைப் பார்த்து அந்த மனித அரக்கன் அடில்கான் இவள் பின்னாலே வந்தானா? அல்லது... அவனது பணத்தையும் புகழையும் பார்த்து அவன் பின்னாலே இவள் போனாளா? எது எப்படியோ... இது ஸ்ரீரங்கத்துக்குப் போதாத காலம்தான்!’ - இப்படி ஊர் முழுக்க, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசினார்கள்.
    ஆனால், வெள்ளையம்மாளின் மனம் என்னவோ அடில்கானையே சுற்றிச்சுற்றி வந்தது...
    #aanmeegam
    #aanmeegakadhaigal
    #kuttystory
    #aanmeegamanantham
    #motivationalvideo
    #motivationalthoughts
    #tamilmotivationalvideos
    #motivetionstory
    #ஆன்மிககதைகள்
    #ஆன்மிகம்ஆனந்தம்
    #tamilmotivationalstory
    #Tamilkathaigal
    #TamilMotivationalVideos
    #துறவிகதை
    #monkstory
    #smallstories
    #motivationalvideosintamil
    #tamilstory
    #orukuttykathai
    #விக்கிரமாதித்தன்கதைகள்
  • Zábava

Komentáře • 6