சிந்துவெளி நாகரீகம் சித்திரக்கலை உயர்தரம் A/L Art notes Indus valley civilization

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம்மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை
    பசுபதி முத்திரை, விலங்குகளால் சூழப்பட்ட யோகியின் தலையில் காளையின் கொம்புகள் மற்றும் திரிசூலத்துடன் கூடிய உருவம்
    சமயச் சடங்குகளோடுதொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில்அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதிபற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.
    அரப்பா (Harappa) என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது[1]. அரப்பா என்ற இத்தளத்தின் பெயர் ராவி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள நவீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்நதி தற்போது இத்தளத்திர்கு வடக்கில் 8 கிலோ மீட்டர் தொலைவில் (5 மைல்) ஓடுகிறது. தற்போது அரப்பா என்றழைக்கப்படும் கிராமம் பண்டைய தொல்லியல் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளது. நவீன அரப்பா பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு மரபுரிமை ரயில் நிலையமாக இருந்தாலும், இன்றும் அந்நகரம் 15,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட ஊராக உள்ளது.

Komentáře • 23

  • @tironshock
    @tironshock Před 2 lety +4

    Happy to see this video …!!!
    Useful youtube channel

  • @SilentTheWorld
    @SilentTheWorld Před 6 měsíci +2

    Nice ur teaching ❤

  • @kuppusangeetha6742
    @kuppusangeetha6742 Před 7 měsíci +2

    Very useful this video

  • @DineshSha-vv3ks
    @DineshSha-vv3ks Před 2 měsíci +1

    Super sir umesh

  • @RockRock-bh8nr
    @RockRock-bh8nr Před 2 lety +3

    Super.👍a/l exam varuthu innum neraya vedios podunga sir. Plz.....

  • @shiyamdev724
    @shiyamdev724 Před rokem +2

    Really very nice Effort yours Satheesh... Great applause 👏 to your progression ❤ useful Channel

  • @SilentTheWorld
    @SilentTheWorld Před 6 měsíci +1

    Thanks broow..❤

    • @ARTVAKADEKA
      @ARTVAKADEKA  Před 6 měsíci

      Wow thanks 😊 for your watching

  • @ranganranganathan2870
    @ranganranganathan2870 Před 11 měsíci +2

    Ella unitum ippudije vedio podunga

  • @shakeeb_art_nintavur
    @shakeeb_art_nintavur Před 2 lety +2

    எகிப்து கலை pattiya videos podunge sir AL ku exam ku use fulla irukkum

  • @user-bu5hq1zp6e
    @user-bu5hq1zp6e Před 23 dny +1

    Sir athu poosaari ila avar oru mathaguru😊

  • @kuppusangeetha6742
    @kuppusangeetha6742 Před 7 měsíci +1

    This type video podunga all subject 6to 10

    • @ARTVAKADEKA
      @ARTVAKADEKA  Před 7 měsíci

      Sure thanks 😊 for your watching

  • @SilentTheWorld
    @SilentTheWorld Před 6 měsíci +1

    Broow sinna mistake unnda video la vic ok but video la 1904 du poddu irukku but 1924 neenga solluraththu ok but video la mistake irukku aththa kojam sari pannunga please 🙏 illa ddi unngalukku bad comment's varalaam