புளிக்கு இந்த ஊர் Famous

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #புளிவியாபாரம
    #tamarindbusiness
    புளியங்கொட்டை.. யோசிக்ககூட முடியல.. இத்துனூண்டு கொட்டையில் இவ்ளோ நன்மையா? வாவ் புளியங்கொட்டை தூள்
    சென்னை: புளிப்பு என்று முகம் சுளிக்க வைக்கும், புளியில்தான் எத்தனை எத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளன தெரியுமா? புளிய இலைகளின் பயன்கள் என்னென்ன தெரியுமா
    புளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பற்களில் பல்கூச்சம் ஏற்பட்டு ஈறுகள் பாதிப்படையும்.. நெஞ்செரிசல், வயிற்றுபுண், தசைகளில் வறட்சி, மூட்டுவலி, தோல் நோய்கள் வர வாய்ப்புள்ளது என்றாலும், புளியை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
    காரணம், 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்கு தேவையான அத்தனை இரும்புச்சத்துக்களும் கிடைக்கின்றன.. அதிகபட்சமாக 100 கிராம் வரை, நாம் புளியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
    புளி நன்மைகள்: நம்முடைய குடும்பங்களில் நெருங்கிய தொடர்பு கொண்டது இந்த புளி - சமையலில், புளிக்குழம்பு, புளி ரசம், புளி சாதம், புளி சட்னி, என சமையல்கள் கமகமக்கும்.. புளி இல்லாத மீன் குழம்பு, காரக்குழம்புகள் கிடையாது.. புளி சேர்த்து சமைத்தால், அந்த உணவுகள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது என்பதால்தான், புளியின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது
    புளியில் வைட்டமின் B1, B3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.. - நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது இந்த புளி.. நமது மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. அத்துடன் புற்றுநோய் செல்களையும் தடுக்கக்கூடியது என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
    கால்சியம்: எலும்புகள் தேய்மானத்தை கணிசமாக குறைப்பதில், புளிக்கு முக்கியமான இடமுண்டு. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. புளியை சமையலில் சேர்த்து சமைப்பதால், தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும்..
    புளிய மரத்தின் இலை, பூ, மரப்பட்டை, கொட்டை என எல்லாமே பலன்தருகிறது.. புளியம் பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும்.. புளிய மரப்பட்டை தாது பலத்தை தரக்கூடியது.. இந்த மரத்தின் இலைகளை, வீக்கம், கட்டி போன்றவற்றை கரைக்கக்கூடியது.. புளியம் பூ குளிர்ச்சியைத்தரக்கூடியது.
    இலைக்கொழுந்து: புளியம் இலை கொழுந்து உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை தணிக்கக்கூடியது.. காய்ச்சம் ஏற்படும்போது ஒரு கைப்பிடி புளியங்கொழுந்தை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் ஜுரம் தணியும்.. காய்ச்சலும் வெகுவாக கட்டப்படும்.
    புளிய இலை உஷ்ணத்தன்மை கொண்டது. அதனால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்திற்கு இதை மருந்தாக பயன்படுத்தலாம.. அதாவது இந்த இலையை, நெருப்பில் வதக்கி ஒத்தடம் கொடுத்தால், மூட்டு வீக்கம் குறையும்.. நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண்களையும், இந்த புளிய இலைகள் போக்குகின்றன.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுடன் இந்த இலைகளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரில் கழுவி வந்தால், நாட்பட்ட புண்களும் ஆற தவங்கும்
    துவையல்: புளியம் பூக்களை அரைத்து சூடு செய்து கண்களை சுற்றி பூசிவந்தால், வெயில் காலத்தில் ஏற்படும் கண் சிவப்பு மாறும்... இதை துவையலும் செய்து சாப்பிடலாம்.. இதனால், வாயில் அதிகமான உமிழ்நீரை சுரக்கச்செய்து ஜீரணத்தை மேம்படுத்துகிறது. வாய் வறட்சியையும் நீக்குகிறது.
    புரதச்சத்து: புளியங்கொட்டையை எடுத்து கொண்டால், இதுவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த கொட்டையின் மேலுள்ள தோலை நீக்கி விட்டு அதன் பருப்பை மட்டும் எடுத்து நீரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.. இந்த புளியங்கொட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.. இது ஆண்களுக்கு அதிக பலத்தை கூடியது..
    இந்த புளியங்கொட்டையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.. கெட்ட கொழுப்பின் அளவையும் குறைத்து, செரிமானத்தை சீராக்குகிறது.. சருமத்தை தொற்றுகளிலிருந்து பாதுகாக்க இந்த கொட்டைகள் உதவுகின்றன.. அதுமட்டுமல்ல, இந்த புளியங்கொட்டையிலிருந்து சாறு எடுத்து குடித்து வந்தால், சிறுநீர் பாதை மற்றும் உணவுக்குழாய் நோய்த்தொற்றுகள் நீங்கிவிடும்.
    பல்பொடி: புளியங்கொட்டையை வறுத்து பொடி செய்து, தினமும் இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இந்த கொட்டையில் பொட்டாசியம் அதிகம் என்பதால், இதய நோய்களும், உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் குறைகிறது. புளியங்கொட்டையை இடித்து தூளாக்கி வைத்து கொண்டு, பற்களை தேய்த்து வரலாம். இதனால், பற்களில் கறை நீங்குவடன்., பற்களின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும்.

Komentáře • 15

  • @jaihind-fz9fe
    @jaihind-fz9fe Před 5 měsíci +4

    அருமை நண்பாஇவஙாலோட அட்ரஸ் கிடைக்குமநண்பா

  • @SatheeshKumar-lv6ok
    @SatheeshKumar-lv6ok Před 2 měsíci +3

    நான் இந்த ஊர் தான், இந்த ஊர் புளி நல்ல புளிப்புசுவை நிறைந்த ஒன்று

    • @seithozhil3602
      @seithozhil3602  Před 2 měsíci

      👍

    • @sowmyasuresh892
      @sowmyasuresh892 Před 2 měsíci +1

      Can you send the contact number of Puli viyaabaari?

    • @seithozhil3602
      @seithozhil3602  Před 2 měsíci

      @@sowmyasuresh892 yes I will send you. This is my WhatsApp number please send text your name
      9865437506

  • @pskumar8414
    @pskumar8414 Před 6 měsíci +1

    நன்றி

  • @gopivfx
    @gopivfx Před 5 měsíci +8

    இந்த ஊர் புலி வியாபாரி காண்டாக்ட் நம்பர் உள்ளதா

    • @user-cr8ub8rs9b
      @user-cr8ub8rs9b Před 4 měsíci +1

      ஸ்பெல்லிங் மிஸ்டேக் புளி நாட் புலி

  • @getzcars9791
    @getzcars9791 Před 8 měsíci +2

    Oho... More info about tamarind

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 8 měsíci +1

    ஊர் பெயரை தெளிவாக சொல்லி விட்டு வீடியோ போடவும்.

    • @seithozhil3602
      @seithozhil3602  Před 8 měsíci +1

      ஊர் பெயர் பலகை உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் வேம்பார்பட்டி.

    • @t.s.gaming9164
      @t.s.gaming9164 Před 5 měsíci

      நன்பா என்னிடம் நகரையா புளி இருக்கு வேவுமா​@@seithozhil3602

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 Před 3 měsíci +2

    நம்பர் இருக்கா