எந்நாளுமே துதிப்பாய் l Ennalume Thuthippai l Christian Tamil Keerthanai l Ponnappanagar CSI Choir

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • Ennalume Thuthippai l Tamil Christian Keerthanai l Sung by CSI Ponnappanagar Choir l Kanyakumari District l Tamilnadu l India l Email : choircsipnr‪@gmail.com‬ l Lyrics by : Rev.S.Paramandham, Sankarankovil.
    Lyrics:
    எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
    எந்நாளுமே துதிப்பாய்!
    இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.
    பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன்
    பாவங்கள் எத்தனையோ?
    பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
    பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
    எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே
    எத்தனையோ கிருபை
    நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
    நேயமதாக ஜீவனை மீட்டதால்.
    நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
    நன்மையாலுன் வாயை;
    உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
    ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.
    பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
    பூமிக்கும் வானத்துக்கும்;
    சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
    சாலவும் தங்குமே, சத்திய மேயிது.
    மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
    மன்னிப்பு மாட்சிமையாம்;
    எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
    எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.
    தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
    தந்தைதன் பிள்ளைகட்கு
    எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
    ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.

Komentáře • 7

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 21 dnem +2

    என் நாளுமே துதிப்பாய் அருமையான பாடல் எங்களுடன் பகிர்ந்து கோண்டது மிக மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி

  • @user-qf7dv2ip6g
    @user-qf7dv2ip6g Před 14 dny +1

    பழைய பாடலில் என்றும் மகிமையின் பிரசன்னம் உண்டு.நன்றி.

  • @larsona6967
    @larsona6967 Před 12 hodinami

    Nice song 🙏

  • @user-oh7iu8pg2u
    @user-oh7iu8pg2u Před 9 hodinami +1

    Good news good news rejoice in the Holy Spirit