நீதியை நிலைநாட்ட ஓர் சிறு முயற்சி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தென்காசி மாவட்டம் பிரானூர் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு, தென்காசி ஊராட்சி ஒன்றிய
    ஆணையாளருக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 27, உட்பிரிவு எண் 3H
    இடத்தில் 03.06.2005ல் மதுரை ஐக்கோர்ட் உத்தரவின் அடிப்படையில்
    அன்றைய தாசில்தார் திரு. அர்ணாச்சலம் தலைமையில், வருவாய்
    ஆய்வாளர் திருமதி.பழனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர்
    திரு.சண்முகம் மற்றும் பிரானூர் பஞ்சாயத்து தலைவர் திரு.பட்டுராஜ்
    ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு சிமெண்ட்
    சாலை அமைத்தனர்.
    தற்போது அதே சாலையை மக்கள் பயன்படுத்தாதபடி பனைஓலை மற்றும்
    தார்பாய் கொண்டு குடில் போன்று அமைத்தும், கழிவுநீர் ஓடையை
    சிமெண்டால் மூடியும் மொத்த சாலையையும் தனிநபர்கள் கட்டுக்குள்
    வைத்துள்ளார்கள்.
    கழிவு நீர் ஓடை அடைபட்டிருப்பதால் கழிவுநீர் தேங்கி பல நோய்கள்
    வருவதற்கு வாய்ப்புள்ளது.
    அரசு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்திருப்பது தவறான
    முன்னுதாரணமாகவும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அச்சுறுத்தும்
    விதமாகவும்அமைந்திருக்கிறது. மக்கள் நலனையும் சட்ட ஒழுங்கையும்
    கருத்தில் கொண்டு தாங்கள் மனமிறங்கி அரசு நிலத்தை மீட்கவும்,
    மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு தக்க நடவடிக்கை எடுக்க
    வேண்டுமென்று மிகுந்த தாழ்மையுடனும் உங்கள்மீதும் அரசின் மீதும்
    சட்டத்தின் மீதும் நம்பிக்கையுடனும் இதனை பதிவிடுகிறேன்

Komentáře • 8