கும்பகோணம் கடப்பா இந்த மாதிரி செய்து பாருங்கள் செம டேஸ்ட்/

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa |
    #கும்பகோணம்கடப்பா #KumbakonamKadappaRecipe #SideDishforIdlyDosa #sidedishrecipe #shortsfeed
    கும்பகோணம் கடப்பா
    தேவையான பொருட்கள்
    பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க
    பாசிப்பருப்பு - 1/2 கப்
    உருளைக்கிழங்கு - 3
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    மசாலா விழுது அரைக்க
    துருவிய தேங்காய் - 1 கப்
    பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
    கசகசா - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    இஞ்சி
    பச்சை மிளகாய் - 10
    தண்ணீர்
    கும்பகோணம் கடப்பா செய்ய
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    அன்னாசிப்பூ
    சோம்பு - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை
    தக்காளி - 2 நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    ஒரு பிரஷர் குக்கர்ல ரெண்டு கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, ரெண்டா நறுக்கின 2 உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கர் மூடி அஞ்சு விசில் வர வரைக்கும் வேக விடவும்.
    குக்கர் விசில் வந்ததும் வெந்த உருளை கிழங்கை மட்டும் தனியாக எடுத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
    ஒரு மிக்ஸ்ர் ஜார்ல, பிரெஷ் ஆஹ் துருவிய அரை கப் தேங்காய், ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல்லு பூண்டு, ஒரு துண்டு நறுக்கின இஞ்சி, பத்து பச்சை மிளகாய் ,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
    ஒரு அகலமான கடாயில், மூணு டேபிள் ஸ்பூன் என்னை ஊற்றி, கிராம்பு, , அன்னாசி பூ, சோம்பு , பொடிசா நறுக்கின வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கின ரெண்டு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
    அரைச்ச மசாலா விழுது சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அஞ்சு நிமிஷம் மூடி வைத்து கொதிக்க விடவும் .
    கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
    கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
    இப்போது மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும். பத்து நிமிடம் கொதித்து வரட்டும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
    கும்பகோணம் கடப்பா பரிமாற தயாராக உள்ளது.

Komentáře • 4

  • @kr90lovestudio14
    @kr90lovestudio14 Před 5 dny

    Eppovum edli mavu business panrengala pls sollunga 😊

  • @bestiesaravanaraj6794

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி