கும்பகோணம் நாச்சியார் கோயில்|108 திருப்பதிகள்|கல்கருட பகவான் தலம்|அனுஷம் நட்சத்திர தலம் Nachiyarkoil

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2021
  • #நாச்சியார்_கோவில்
    #அருள்மிகு_திருநறையூர்_நம்பி #திருக்கோயில்
    #மூலவர்:திருநறையூர் நம்பி (சீனிவாச பெருமாள் )
    #உற்சவர்:இடர்கடுத்த திருவாளன்
    #அம்மன்/தாயார்:வஞ்சுளவல்லி
    #தல_விருட்சம்:வகுளம் ( வஞ்சுளம்)
    #தீர்த்தம்:மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
    #ஆகமம்/பூஜை:வைகானஸம்
    பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
    #புராண பெயர்:சுகந்தகிரி க்ஷேத்ரம்
    #ஊர்:நாச்சியார்கோயில்
    #மாவட்டம்:தஞ்சாவூர்
    #மாநிலம்:தமிழ்நாடு
    #தலவரலாறு:
    மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.
    #கல்கருடபகவான்_சிறப்புகள் :
    மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.
    கருடாழ்வார் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
    நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.
    #திறக்கும்_நேரம்:
    காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
    #திருவிழா:
    மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
    #தல_சிறப்பு:
    பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 14 வது திவ்ய தேசம்.
    #பிரார்த்தனை
    வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.
    #அமைவிடம்:
    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 11 கி.மீ தொலைவில் நாச்சியார் கோயில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்துகள் நாச்சியார் கோயில் வழியாக செல்கிறது. கும்பகோணம், திருவாரூர், பூந்தோட்டம், நாகப்பட்டினம் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் இருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    கோயில் Google map link
    maps.google.com/?cid=83677290...
    திருக்கண்ணபுரம் CZcams link
    • திருக்கண்ணபுரம் சௌரிரா...
    - தமிழ்

Komentáře • 39

  • @mathina
    @mathina  Před rokem +3

    நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம் குடவாசல் கோனேஸ்வர் கோயில்
    czcams.com/video/geB89GGAKy4/video.html

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Před 8 měsíci +5

    கும்பகோணம் என்ற இடம் ஆன்மீகத்தில் சிறந்த இடமாக பிரபஞ்சம் காட்டியது
    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 7 měsíci +1

    Hi sir
    Super sir😊

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 Před 4 měsíci

    அருமைகாட்சி❤

  • @kpstechnologies5498
    @kpstechnologies5498 Před 2 lety +4

    Ungal sevai intha nattukku thevai

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @dhamodharandhamodharan4663

    Super koyel I like

  • @hariharan9534
    @hariharan9534 Před 2 lety +2

    Enga ooru 😻🔥

  • @SriNivasan-ze4yk
    @SriNivasan-ze4yk Před 4 měsíci

    thirumanam viravil nadakka vendukiren om namo narayana porti porti porti porti porti porti porti porti ...🙏🙏

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் மிகவும் நன்றி..😊

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 Před rokem

    நன்றி
    நற்பவி

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem

    ஓம் நமோ நாராயணா நமஹா ஓம் நமோ நாராயணா நமஹா ஓம் நமோ நாராயணா நமஹா

  • @harishsudharsanam1493
    @harishsudharsanam1493 Před 11 měsíci +2

    Thanks!

    • @harishsudharsanam1493
      @harishsudharsanam1493 Před 11 měsíci +1

      Thank you so much for ur information. Let the service go on with the blessings of God..

    • @mathina
      @mathina  Před 11 měsíci +1

      Welcome!

  • @nivedithakarthick5118
    @nivedithakarthick5118 Před 2 lety +2

    Thank you bro.. very informative video. Ohm namo narayanaya

  • @chitrachitra5155
    @chitrachitra5155 Před rokem

    பெருமாள் துணை

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 Před 2 lety

    Thanks

  • @shobanar6430
    @shobanar6430 Před 2 lety

    Thank u sir...

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 11 měsíci

    ஓம் நமோ நாராயணாய

  • @meenakshik4527
    @meenakshik4527 Před 2 lety +1

    ഇങ്ങനെ എടുത്ത ഈ വീഡിയോ കണ്ടാൽ അമ്മ ഒരുപാട് സന്തോഷിക്കും

  • @user-nn8sv6ku2j
    @user-nn8sv6ku2j Před 6 měsíci

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @devdharen2147
    @devdharen2147 Před rokem

    Om Namo Narayana

  • @top10cinemafacts97
    @top10cinemafacts97 Před rokem

    Enga uruuu pa 🤗🔥

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 10 měsíci

    Om namo narayana

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Před 7 měsíci +1

    Cost of visiting this place approximately how much has not mentioned please do mention it bro Thanks for posting this video.

  • @ranjithsekar9043
    @ranjithsekar9043 Před rokem

    நாச்சியார்கோயில்

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 Před 11 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ragupathyb5571
    @ragupathyb5571 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏💐

  • @narayanannarasimhachari5499

    Enga ooru kadagambadi near poonthottam

  • @grraja778
    @grraja778 Před rokem

    Thiruvathirai nachathiram kovil sollunga pls

  • @jayasudhad9758
    @jayasudhad9758 Před rokem

    Nachiyar amman kovil phone no pls

  • @b.kv.s4304
    @b.kv.s4304 Před 5 měsíci

    Why archaghar mobile no not given

    • @mathina
      @mathina  Před 5 měsíci +1

      Archagar ph number they not given us

  • @kumart1850
    @kumart1850 Před rokem

    Koil time kodungal

    • @mathina
      @mathina  Před rokem

      காலை 07 மணி முதல் பகல் 12.30
      மாலை 04:00 மணி முதல் இரவு 08.30 வரை திறந்திருக்கும்

  • @annamalaik4237
    @annamalaik4237 Před 2 lety +1

    Thanks