பச்சைப்பயறு பணியாரம் | Green Gram Paniyaram In Tamil | பச்சை பயறு டோக்லா | Green Gram Dhokla |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பச்சைப்பயறு பணியாரம் | Green Gram Paniyaram In Tamil | பச்சை பயறு டோக்லா | Green Gram Dhokla |
    #greengrampaniyaram #பச்சைப்பயறுபணியாரம் #paniyaramrecipe #pachaipayarupaniyaram #vinayagarchathurthispecial #healthysnackrecipe #indiansnacksrecipe #greengramdhokla #பச்சைபயறுடோக்லா #dhoklarecipe #steamedfood #healthyrecipes #steamedsnacks #proteinrich #greengramrecipes #greengram #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Green Gram Paniyaram: • Green Gram Paniyaram |...
    Green Gram Dhokla: • Green Gram Dhokla | Mo...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பச்சைப்பயறு பணியாரம்
    தேவையான பொருட்கள்
    பச்சைப்பயறு - 1 கப்
    உளுத்தம் பருப்பு - 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
    கடுகு - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது
    கறிவேப்பில்லை நறுக்கியது
    எண்ணெய்
    தண்ணீர்
    செய்முறை
    1. பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
    2. ஊறிய பயறை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்
    3. உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
    4. இதையும் விழுதாக அரைத்து, பயறு மாவுடன் சேர்க்கவும்.
    5. இதில் உப்பு போட்டு, கலந்து, 3 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
    6. கடாயில், எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
    7. வெங்காயம் பாதி வதங்கியதும், இதை மாவில் போட்டு கலக்கவும்.
    8. பணியார சட்டியை சூடு செய்து, எண்ணெய் ஊற்றவும்.
    9. முக்கால் அளவு மாவு ஊற்றி, சுடவும்.
    10. இருபுறமும் பொன்னிறமானதும், எடுக்கவும்.
    11. சுவையான பச்சைப்பயறு பணியாரம் தயார்.
    பச்சை பயறு டோக்லா
    தேவையான பொருட்கள்
    பச்சை பயறு - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1" துண்டு நறுக்கியது
    எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்
    ஈனோ ப்ரூட் சால்ட் - 1 1/2 தேக்கரண்டி
    சிரப் செய்ய
    தண்ணீர்
    உப்பு
    சர்க்கரை - 3 தேக்கரண்டி
    எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
    தாளிப்பு செய்ய
    எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 4 கீறியது
    கறிவேப்பில்லை
    செய்முறை
    1. பச்சை பயறை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
    2. ஊறிய பச்சை பயறை மிக்ஸில் போட்டு, இதனுடன், பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சைபழச்சாறு, உப்பு சேர்த்து அரைக்கவும் .
    3. அரைத்த மாவுடன், ஈனோ ப்ரூட் சால்ட் சேர்த்து கலக்கவும்.
    4. இட்லி குக்கர்'ரில் தண்ணீர் ஊற்றி, சூடாக்கவும்.
    5. கேக் டின்'னை கிரீஸ் செய்து, பச்சை பயறு மாவை ஊற்றவும்.
    6. குக்கர்'ரில் வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும்
    7. சிரப் செய்ய, பாத்திரத்தில், தண்ணீர் சூடு செய்து, இதில் உப்பு, சர்க்கரை, எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலக்கவும்.
    8. வெந்த டோக்லா மீது, சிரப்'பை ஊற்றவும்.
    9. தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். இதை டோக்லா மீது ஊற்றவும்
    10. பரிமாறும் போது, இதன் மேல் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை தூவவும் .
    11. பச்சை பயறு டோக்லா தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Komentáře • 51