மாயை என்றால் என்ன? | Mayai Enraal Enna?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • மாயையிலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கி செல்வதே ஆன்மீகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எது மாயை? எது ஞானம்? என்பது முதலில் தெரிந்தால்தானே ஞானத்தை நோக்கி செல்வது சாத்தியமாகும்!
    கடவுளை காண்பதற்கு திரையாக மாயை இருக்கிறது.
    ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.
    உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.
    பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது.
    பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது.
    மாயை என்பது அறியாமை, நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம், மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்று மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுபோல் எல்லாம் எண்ணங்கள் வேரூன்றியிருக்கின்றன.
    உண்மையில் மாயையே பிரம்மத்தை அறிவதற்கான திறவுகோலாக உள்ளது.

Komentáře • 19