தமிழருக்குப் பிடித்த கடவுள் யார்? கோவில்களில் மறைந்திருக்கும் செய்தி

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கோ.பாலச்சந்திரன்
    இ.ஆ.ப. (பணி நிறைவு)
    திரு கோபாலன் - திருமதி பாலம்மாள் தம்பதியின் மகனாக சிவகாசியில் பிறந்த கோ. பாலச்சந்திரன் இந்திய ஆட்சிப் பணியில் 1977 ஆம் ஆண்டு இணைந்து, 2012 ஜனவரியில் மேற்கு வங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலர் என்ற பொறுப்போடு ஓய்வு பெற்றவர்.
    தமிழின் மேல் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். தமிழகத்தை விட்டு 35 ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், தமிழை மறக்காமல், தமிழின் மேல் கொண்ட காதலால், தொடர்ந்து பல தமிழ் அமைப்புகளோடு தொடர்பில் இருந்தவர்.
    கொல்கத்தா தமிழ் மன்றத்திற்கு வாழ்நாள் கௌரவத் தலைவராக இவரை அமர்த்தி, கொல்கத்தா தமிழ் மன்றம் அழகு பார்த்தது.
    பாரதி தமிழ்ச் சங்கத்தின் (கொல்கத்தா) புரவலர்களில் ஒருவர் இவர். அந்தப் புரவலர்களில் இன்னொருவர் மறைந்த மேற்கு வங்க முதலமைச்சர் திரு. ஜோதிபாசு அவர்கள்.
    டெல்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணி புரிந்திருக்கிறார்.
    பல நாடுகளில் தமிழைப் பற்றி, தமிழர் வாழ்வு பற்றி, தமிழர் பண்பாடு பற்றி விரிவுரைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
    ஹார்வர்ட், ஹூஸ்டன் , டொரன்டோ ஆகிய 3 பல்கலைக்கழகங்களில், தமிழ் இருக்கைகள் அமைக்கும் முயற்சிகளில் பங்காற்றி அவற்றின் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.
    தமிழர் என்ற இனம் ஓர் உன்னதமான இறந்த காலத்தைக் கொண்டது. மிகவும் உன்னதமான எதிர்காலத்தைத் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் வலிமை பெற்றது என்ற தீவிரமான உணர்வும், இன்று வாழும் தமிழர் தம் உண்மைப் பெருமைகளை இன்னும் அதிகமாக உணர வேண்டும், இல்லாத பெருமைகளைச் சொல்லாமல் இருக்க வேண்டும் என்ற தீவிர உணர்வும் கொண்டவர்.
    யார் என்ன கருத்துக்கள் சொன்னாலும் அவற்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது, எல்லாக் கருத்துக்களையும் ஆய்ந்து, ஆராய்ந்து தன் இயல்பான பகுத்தறிவால் உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற உறுதியான மனப்பான்மை கொண்டவர்.
    #பொங்கல்
    #balachandranias
    #pongal
    #பொங்கல்விழா
    #தமிழர்பாரம்பரியம்
    #libertytamil
    #jenraammedia
    #sharmilatalkies
    #jeevatoday
    #peralaiinterview
    #peralai
    #tamilkuraltv
    #tamilkural

Komentáře • 27