இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் மெசின் || Idli Dosa Batter making Machine || idli Mavu machine

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2022
  • Boondi Laddu Recipe • Make Boondi Laddu Like...
    Poriyal Recipes
    • Poriyal Recipes
    Cake Recipes
    • Cake Recipes
    Pizza Doughnut Recipes
    • Pizza & Doughnut Recipes
    Special Rice Recipes
    • Special Rice Recipes
    Soup Recipes
    • Soup Recipes
    Non which spl Recipes
    • Non veg Spl Recipes
    Juice Recipes
    • Juice Recipes
    65 Recipes
    • 65 Recipes
    Evening Snack Recipes
    • Evening snack Recipes
    Sweet Recipes
    • Sweets Recipes
    Kulambu Recipes
    • Kuzhambu Recipes
    Chutney Recipes
    • Kuzhambu Recipes
    இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது பெரும்பாலும் வீட்டில் மொத்தமாக அரைத்து வைத்து விடுவோம், அப்படி அரைக்கும் பொழுது அதிகபட்சம் மூன்று நாள் வரை மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும். நான்காவது நாள் கட்டாயம் எல்லோருக்கும் மாவு புளித்து விடுவது உண்டு. இட்லி தோசைக்கு அரைக்கும் மாவு ஒரு வாரம் ஆனாலும் கொஞ்சம் கூட புளிக்கவே கூடாது என்றால் இந்த முறையில் மாவை அரைக்க வேண்டும்! அது எப்படின்னு? தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
    இட்லி தோசைக்கு அரைக்க அரிசியை அதிகம் ஊற வைக்கக் கூடாது. அதிகபட்சம் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும். அதற்கு மேல் ஊற வைத்தால் மாவு வேகமாக புளிக்க வாய்ப்புகள் அதிகம். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்தாலே போதும் நன்கு ஊறி விடும். மாவு அரைக்கும் பொழுது நீண்ட நேரம் அரைக்கக் கூடாது. சிலர் மாவு அரைத்துக் கொண்டே வேறு வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதில் நேரம் போவது அவர்களுக்கு தெரியாமல் போய்விடும் எனவே மாவு அரைக்கும் பொழுது நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். மாவு அதிக நேரம் அரைபடும் பொழுது கிரைண்டர் சூடாகி அதிலேயே மாவு வேகமாக புளிக்கும்.
    இதனால் மாவு அரைக்கும் பொழுது ஐஸ் வாட்டர் பயன்படுத்தி அரைப்பது நல்ல ஐடியாவாக இருக்கும். முதலில் உளுந்தை போட்டு ஆட்டும் பொழுது சிறிதளவு ஐஸ் வாட்டரை ஊற்றி விட்டு பின்னர் உளுந்தை போட வேண்டும். உளுந்து நன்கு பொங்க பொங்க ஆட்ட தண்ணீரை இடையிடையே ஜில்லென்று தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி ஆட்டினால் உபரி அதிகமாக கிடைக்கும். உளுந்து அரைபட அதிகபட்சம் 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் போதும். அரைக்கும் பொழுது இடை இடையே தள்ளி விடுவதற்கு கைகளை பயன்படுத்தாமல் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
    பின்னர் உளுந்தை தனியே எடுத்து விட்டு அரிசியை போடும் முன் ஐஸ் வாட்டரை சிறிதளவு தெளித்து விட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை போட்டு அரையவிட வேண்டும். அரிசி அரைபட 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை போதும். சற்று கொரகொரப்பாக 90% அரிசி அரைப்பட்டு இருந்தால் போதும். அரிசி அரைபட்டு முடிந்ததும் எடுத்து வைத்துள்ள உளுந்தை அதில் சேர்த்து கிரைண்டரிலேயே கலந்து விடுங்கள். அரிசியும், உளுந்தும் சேர்ந்து கிரைண்டரில் இறுதியாக கலந்த பின்னர் எடுத்து பாத்திரத்திற்கு மாற்றுங்கள். இப்படி கலக்கும் பொழுது அதில் உப்பு சேர்த்து விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
    மாவை பாத்திரத்திற்கு மாற்றிய பின் கைகளை பயன்படுத்தாமல் தேவையான அளவிற்கு இட்லிக்கு மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு மீதம் இருக்கும் மாவை உப்பு போடாமல் அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லிக்கு பாத்திரத்தில் மாற்றிய மாவில் மட்டும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து வெளியில் வைத்து விடுங்கள். நீங்கள் வெளியில் 3 மணி நேரம் வைத்திருந்தால் போதும், அதன் பிறகு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடுங்கள்.
    மீண்டும் காலையில் எழுந்தவுடன் வெளியில் வைத்தால் போதும். நீங்கள் இட்லி சுடுவதற்கு மாவு தேவையான பதத்திற்கு புளித்து விட்டிருக்கும். இப்படி செய்யும் பொழுது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவும், வெளியில் வைத்த மாவு கொஞ்சம் கூட புளிக்காது அப்படியே இருக்கும். எடுத்து வைத்த உப்பு கலக்காத மாவை தேவையான பொழுது தோசைக்கு உப்பு கலந்து சுட்டுக் கொள்ளலாம்.
    👉Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    #idli
    #dosairecipes
    #idlibatter
    #idlirecipe
    #idlibatterrecipe
    #Idli_maavu_araikum_machine
    #recipe
    #cooking
    #foodlover
    #intamil
    #musttryrecipe
    #recipeintamil
    #samayal
    #sasisamayal
    #Idli_dosa_maavu_araipadu_eppadi
    #இட்லிமாவு
    #இட்லி
    #தோசை
    #இட்லிதோசைக்குமாவுஅரைப்பது எப்படி
  • Jak na to + styl

Komentáře •