Video není dostupné.
Omlouváme se.

கொஞ்சம் சாகசம் நிறைய ஜாலி | உடுப்பி மால்பே பீச் | செயின்ட் மேரி தீவு [அசத்தல் சுற்றுலா]

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2020
  • உடுப்பி சுற்றுலாவின் முதல் காணொளியாக உடுப்பி கிருஷ்ணர் கோயில் பற்றி பார்த்தோம். இந்த காணொளியில் உடுப்பியின் கடற்கரை பற்றி பார்க்கப் போகிறோம். உடுப்பி கடற்கரைகள் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை.
    நீங்கள் உங்கள் விடுமுறையை அமைதியான கடலோரத்தில் செலவிட விரும்பினால் அதற்கு தோதான கடற்கரை ஒன்று இங்குள்ளது. அந்த கடற்கரையின் பெயர் மால்பே.
    உடுப்பி நகரிலிருந்து கிட்டத்தட்ட 6 கிமீ தொலைவில் இந்தக் கடற்கரை அமைந்துள்ளது. மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
    கடற்கரையின் நுழைவு வாசலிலேயே காந்தி அமர்ந்த நிலையில் நம்மை வரவேற்கிறார். அதற்கடுத்து கடல் வரை பெரிய மணற்பரப்பு தெரிகிறது. மிதமான அலைகள் கொண்ட கடல். அதனால் அமைதியாக ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு இந்த இடம் ஓர் அட்டகாசமான விருந்து. ஓய்வெடுப்பதற்கென்றே கடற்கரையில் நீளமான பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன. இதில் பார்வையாளர்கள் அமர்ந்து குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம்.
    இந்தியாவில் முதல் இலவச வை-ஃபை வசதி பெற்ற கடற்கரை இதுவாகும். முதல் 30 நிமிடங்கள் இலவசமாக இந்த சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    அதுபோக இங்கு ஏரளமான சிறிய உணவு கடைகள் தெருவோரம் நிரம்பியுள்ளன. இந்தக் கடைகளில் மசால் தடவப்பட்ட பொரித்த மீன்கள் வகைவகையாக கிடைக்கின்றன. 80 ரூபாய் விலையிலிருந்து மீன்கள் உள்ளன. கடல் உணவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம்.
    தெருவோர கடைகளில் நம்மை சாப்பிடவிடாமல். தெருநாய்கள் நம்மை சூழ்ந்து நிற்பது அருவருப்பை தருகிறது. இதை தவிர்ப்பதற்கு நல்ல உணவு விடுதிகளை தேர்வு செய்து சாப்பிடுவது முக்கியம். இல்லையென்றால் நாய்களை விரட்டுவதே நமக்கு ஒரு வேலையாக இருக்கும்.
    கடற்கரையில் ஒரு வாட்ச் டவர் அமைத்து மக்களை காவலர்கள் கண்காணிக்கிறார்கள். இது பார்வைக்கு அமைதியான கடலாக தெரிந்தாலும் ஆபத்தான கடல்தான். அதற்காகத்தான் இந்தக் கண்காணிப்பு.
    #TravelsNext #tourism #touristplace #touristspot #சுற்றுலா #malpebeach #karnataka
    இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
    www.thagaval36...
    -----------------------------------------------------------------
    Subscribe and hit the bell to see a new video
    Subscribe here ► goo.gl/PWixWj
    ► SPS MEDIA: goo.gl/QNBEHC
    ► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
    Facebook : / travels-next-188384645...
    Twitter :
    / senthilmsp
    -------------------------------------------------------------------

Komentáře • 7

  • @muruganvmn
    @muruganvmn Před 2 lety +1

    மிக நேர்த்தியான படப்பிடிப்பு..தெளிவான விளக்கம். விரைவில் பயணம்..

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Před 4 lety +1

    Nice

  • @Ammu_17
    @Ammu_17 Před 8 měsíci

    நன்று

  • @ramachandran427
    @ramachandran427 Před 4 lety +3

    St.Mary island i Madhwachar island. ena change pannanum.

  • @rithikayuvaraj154
    @rithikayuvaraj154 Před 2 lety

    Yes

  • @sss-no3di
    @sss-no3di Před 4 lety

    Nice
    Udupi le innu neraya place irukku
    Matrum kovil irukku very important temple adha pathi oru video podunge

  • @narendrababu4185
    @narendrababu4185 Před 4 lety +1

    Hlo travels next.. this channel hav a non tamil subscribers also.. so pls try to give title in English also.....