ஏரி குளங்களை சுத்தம் செய்வது எப்படி Effective Micro Organism ஈ.எம் நுண்ணுயிர்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஈ.எம் நுண்ணுயிர் E.M. Effective Micro Organism
    உங்கள் ஊரில் உள்ள, மாசுபட்ட அல்லது சாக்கடை கலந்த குளம் மற்றும் ஏரிகளை , வருடந்தோறும் ரூபாய் 4000 மட்டும் செலவு செய்து, ஆர்கானிக் முறையில் சுத்தமாக்குவது எப்படி.
    ஈ.எம் எனப்படும் நுன்னுயிர் கருப்பட்டி கரைசலை கொண்டு 45 நாட்களில் ஒரு ஏரியை சுத்தம் செய்யலாம். வருடத்தில இரண்டு முறை (மழைக்கு பின் ) செய்தால் ஏரியை பழைய நிலைமைக்கு மீட்டு விடலாம். நீர் தெளிந்து காணப்படும், ஈ கொசு துற்நாற்றம் ஓடிவிடும் . இது ரசாயணம் இல்லாத ஆபத்தில்லாத கலவை. மீன்கள் பறவைகள் பெருகும் . இந்த முறை ஓடும் ஆறுகளுக்கு பொருந்தாது.
    இது ரசாயணமோ விஷமோ மருந்தோஅல்ல. தயிர் , இட்லி மாவில் காணப்படும் உயிரூட்டப்ட்ட நல்ல நுன்னுயிர் .
    இதற்கு ( வருடத்தில் இரண்டு முறை மட்டும்) தினசரி 20 நிமிடம் அதிகாலை அல்லது மாலையில் 20 நாட்கள் மட்டும் நேரம் ஒதுக்க வேண்டும்.
    ஒரு லிட்டர் மேப்பிள் ஈ.எம்
    Maple Brand EM Efflu clean வாங்கி சுத்தமான 17 லிட்டர் போர்வெல் நீரில் மட்டும், 2 கிலோ சுத்தமான கருப்பட்டியை தூள் செய்து, கலந்து மூன்று நாட்கள் ஒரு நல்ல சுத்தமான 20 லிட்டர் மூடியுடன் உள்ள ட்ரம்மில் கலந்து, நிழலில் மூடிவைக்கவும் . 4 , 5, 6 வது நாள் சிறிதே திறந்து மூடவேண்டும் 9 நாட்களுக்கு பிறகு Activated EM (AEM ) நுன்னுயிர் கரைசல் தயார்.
    கீழே கொடுக்கப்பட்ட Chart படி , அதிகாலை அல்லது மாலையில் ஒரு லிட்டர் AEM கரைசலை எடுத்து, 19 லிட்டர் சுத்தமான 20 லி காலி தண்ணீர் கேனில் போர்வெல் நீருடன் ஊற்றி கலந்து Dilute செய்து, ஏரியை சுற்றி முடிந்தவரை 9 பாகங்களில் சமமாக பிரித்து உடனே குவளையால் ஆங்காங்கே தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் இந்த Diluted கரைசலை மட்டும் ஏரியிலிருந்து 500 மீட்டர் தள்ளி ஏரிக்கு வரும் சாக்கடை நீரில் ஊற்றவும். இதனால் சாக்கடையும் சுத்தமாகும்.
    10 நாட்களில் துற்நாற்றம் போகும் , 20 நாட்களில் நீர் தெளிய தொடங்கும்,
    45 நாட்களில் மீன்கள் பெருகும், பல மீன் கொத்தி , கொக்கு போன்ற பறவைகள் வரத்தொடங்கும் , கொசு ஈக்கள் ஓடி விடும்.
    மழைக்கு பின் மீண்டும் வருடத்தின் இரண்டாவது முறை பயன் படுத்த தொடங்கும்பொழுது ஏரியில் உள்ள மக்கும் குப்பைகள் மக்கி கசடுகள் குறையும், நீரின் கொள்ளளவு பழையநிலைக்கு திரும்பும் . ஏரி பாசனத்தால் பயன் அடையும் நிலங்களில் உப்புதன்மை குறைந்து , பயிர் செழிப்பாகி உற்பத்தி கூடும். அருகில் போர் வெல்களில் மாசில்லா நீர் கிடைக்கும்.
    மேலும் விபரங்களுக்கு கூகுள் செய்து பாருங்கள். Google for " Maple E.M Effective Micro organism " . Search for Mr. Britto raj Videos in youtube on E.M or EM .
    ஈஎம் ஊற்றும் தினங்கள்
    சூரிய உதயத்திற்கும் முன் அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பின் நீங்கள் உருவாக்கிய 20 லிட்டர் AEM கரைசலிருந்து , கீழே உள்ள அட்டவனை படி உள்ள நாளில் , ஒரு லிட்டர் AEM எடுத்து, 19 லிட்டர் போர்வெல் தண்ணீரில் (RO water, Chlorine கலந்த Water கூடாது) கலந்து , ஏரி குளத்தின் நாலா புறமும் ஒரு குவளையில் வீசி தெளிக்க வேண்டும். வரும் கால்வாய்களிலும் அவ்வொப்பொழுது தெளிக்கலாம்.
    AEM உருவாக்கிய உடன் , 45 நாட்களுக்குள் , சத்து இழக்கும் முன் அவ்வொப்பொழுது நீங்கள், நீரில் கலந்து Dilute செய்து தெளிக்க வேண்டிய நாட்கள்
    1,2,3,4,5,6,7,8,11,14,
    17,20,23,26,29,32,35,38,42,45 வது நாள்.
    For free Consultation A.Lakshmanan Hosur Whatsapp to M: 9443365550 96265 65550 or mail to lakman2002@gmail.com

Komentáře • 6

  • @JIA.Levy-Melky
    @JIA.Levy-Melky Před rokem

    தற்போது ஐயா அவர்கள் எனக்கு அழைப்பை ஏற்று விபரம் கொடுத்தார். மிக்க மகிழ்ச்சி. சேவை சிறக்கட்டும். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா...

  • @gokulraj2244
    @gokulraj2244 Před rokem +2

    கிணர் குடி நீர் மற்றும் விவசாயம் ,இதில் Em பயன் படுத்த முடியுமா.

  • @ultimateseedlings8158
    @ultimateseedlings8158 Před měsícem

    விவசாய கிணற்றில் பாசி அதிகம் உள்ளது. சொட்டு நீர் ஃபில்டர் அடிக்கடி அடைத்து கொள்கிறது. Em பயன்படுத்தலாமா.....?

  • @dhanvino3970
    @dhanvino3970 Před 2 lety +3

    அப்போ பாசிகள் எப்படி நீங்கும்?

  • @user-nl5gu7ns4k
    @user-nl5gu7ns4k Před 8 měsíci

    சார் நான் மீன் பண்ணை வைத்திருக்கிறேன் மீன் பண்ணையில் சில கிருமிகள் இருக்கிறது மீன்களுக்கு பாதிப்பில்லாமல் அதை எப்படி அழிப்பது