Adi pooram - Varanam Ayiram - Nachiar Tirumozhi - Kum. Sivasri Skandaprasad

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2021
  • Subscribe Sivasri Skandaprasad official channel for more videos
    Courtesy - for english reference go to www.sadagopan.org/pdfuploads/...
    Adi pooram - Varanam Ayiram - Nachiar Tirumozhi - Kum. Sivasri Skandaprasad
    1ஆம் பத்து
    6ஆம் திருமொழி
    வாரணமாயிரம்
    வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
    நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
    பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1
    கல்யாண குணங்கள் நிறைந்த ஸ்ரீமந்நாராயணன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்கள் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே!
    நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
    பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
    கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
    காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
    நாளைக்குத் திருமண முகூர்த்தம் என்று நிச்சயித்து, கமுகம் பாளை முதலியவைகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில், சிங்கம் போன்ற நடையுடன், திருமகள் கேள்வனாகிய கோவிந்தன் என்னும் ஓர் காளை புகுவதை நான் கனவினில் கண்டேன் தோழி!
    இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
    வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
    மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
    அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
    இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூட்டம் இங்கே வந்து, என்னை திருமணப் பெண்ணாக நிச்சயம் பேச, பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் கலந்து பேசி, பின் தனித் தனியே சென்று பேசி முடிவு செய்து, வேத மந்திரங்கள் ஓதித் தூய்மையாக்கிய கூறைப் புடவையைக் கொடுத்து என்னை உடுத்தச் செய்து, துர்க்கையான நாத்தனார் மணம் மிகுந்த மாலையை எனக்குச் சூட்டுவதாக கனவு கண்டேன் தோழி!
    நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
    பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
    பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
    காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
    வைதிகச் சடங்குகளில் வல்ல நல்ல அந்தணர்கள் பலரும் நான்கு திசைகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து தெளித்து, உயர்ந்த குரலில் மணமக்களுக்கு மங்களாசாசனம் செய்ய, பூக்களைச் சூடிய புனிதனான அந்தக் கண்ணனுடன் என்னைச் சேர்த்து வைத்து, கங்கணக் காப்பு கட்டுவதாக கனவு கண்டேன் தோழி!
    கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
    சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
    மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
    அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
    பருவத்தாலும் வடிவத்தாலும் அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி போன்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, மதுரை மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி!
    மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
    முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
    மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, மைத்துனன் முறையுள்ள நம்பியான அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலின் கீழே வந்து நின்று, என் கைத் தலத்தைப் பற்றி அருள்வதாகக் கனவு கண்டேன் தோழி!
    வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
    பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
    காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
    தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
    வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் கண்டேன் தோழி!
    இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
    நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
    செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
    அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
    இந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!
    வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
    எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
    அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
    பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
    வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட என் தமையன்மார்கள் வந்து, ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்ப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!
    குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
    மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
    அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
    மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
    ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!
    ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
    வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
    தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
    வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11
    வேயர் குலத்தில் புகழ் மிக்க திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதை, தான் கண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவை, தூய தமிழ் மாலையாக அருளினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர்.
  • Hudba

Komentáře • 171

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 Před 3 lety +20

    ஆண்டாள் நீயெ என்று நாங்கள் நம்புகிறோம் உன்னை வணங்குகிறேன்

    • @tharmalingamperinpanatan750
      @tharmalingamperinpanatan750 Před 3 lety +2

      Saraswathy devi ungal navil kudi kondu irukkitlal thaiye

    • @tamizantamizan8669
      @tamizantamizan8669 Před 3 lety +5

      சிவஸ்ரியை பார்க்கும் போதும் அவர் பாடிய பாடல்களை கேட்கும் போதும்.. ஆண்டாள் இப்படித்தான் இருந்திருப்பார் என்று ஓர் எண்ணம்...

    • @raghavanramesh2483
      @raghavanramesh2483 Před 2 lety +3

      அருமையான குரல் வளம், தெய்வீக சாயல் கொண்ட இப் பெண்மணி வாழ்க வளர்க உங்கள் ஆன்மீக பணி

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 3 lety +15

    கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; சிவஸ்ரீ ஆண்டாள் திருமொழியை ஆண்டு அருள்கிறார்.
    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 3 lety +8

    ஆடிப்பூரத்துக்கான சிறப்புப் பாடலாக ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்களை அழகாக பாடி பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி. காலையிலே எழுந்ததும் (இங்கு கனடாவில் காலை) CZcamsல் முதலாவதாக இந்தப் பாடலே கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். இது வரை இந்தப் பத்துப் பாடல்களில் இரண்டை மட்டுமே அறிந்திருந்தேன்; இன்று உங்கள் புண்ணியத்தில் 10 பாடல்களையும் கூடவே பாடலின் பயனை கூறும் பாடலையும் கேட்டு இன்புற்றேன். ஒவ்வொரு சொல்லையும் அழுத்தம் திருத்தமாக பிழையற உச்சரித்து பாடலின் பொருளை உணர்ந்து நீங்கள் பாடுவது மிகவும் சிறப்பு. உங்கள் இசைப்பணி மென்மேலும் சிறப்புற்று விளங்கட்டும்.
    🍁🌻🌸🌹🙏🙏🙏🙏🙏🌹🌸🌻🍁

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 11 měsíci

    Maa Sri Andal Amma Meeru THIRUPAVAI PASURAM 30 Padàla Sulamanģalam Undali Anni Sri Andal Thiruvadikale Saranam ADIYEN

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Před 3 lety +8

    The only times I used to hear this dream Varnams of Sri Andal sung were during weddings of good old days when the bride and groom would play Thengai Uruttal. Hearing it set to tunes and sung this way is only today. Nice attempt Sivasri. I liked it. Vazhga Vetriyudan.

  • @ramanarasimhan7486
    @ramanarasimhan7486 Před 3 lety +2

    ராதே கிருஷ்ணா. உங்களின் குரலில் எம்.எஸ்.வி அம்மா பாடிய குறையொன்றுமில்லை கோவிந்தா என்னும் பாடலை க் கேட்க ஆர்வமாக உள்ளது‌. தயவுசெய்து பாடினால் அனைவரின் மனமும் மகிழும். 🙏🙏

  • @darani123456
    @darani123456 Před 3 lety +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @jayashreeravindran6094
    @jayashreeravindran6094 Před 3 lety +7

    Excellent rendition. Bhavam, Bhakthi Sangeetham and Kural ...all in your rendition God bless you , gifted Child.

  • @vijayasekhary5143
    @vijayasekhary5143 Před 3 lety +4

    ..Amazing ..Sarvam Sri Jagannadha mayam....so b beautifully sung thanks for Desc able to understand ....waah ..what a beautiful poetic narration of Viraha on Kannan..

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 5 měsíci

    Celebrating The Shakti We Call Maa. Mata. Amma

  • @ramanarasimhan7486
    @ramanarasimhan7486 Před 3 lety +2

    ராதே கிருஷ்ணா.
    ஆண்டாள் திருவடிகளே சரணம். 🙏🙏🙏🙏

  • @trvaradarajan7751
    @trvaradarajan7751 Před 3 lety +9

    Blissful Clarity in Rendition🌹. Lovely Presentation. Stay Blessed🙏

  • @kumarasubramanianandakrishnan

    sivasri, proud of you, Good 😊🙏💐♥

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 Před 3 lety +4

    Best Choreography Best Videography...

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 Před 3 lety +2

    கோதை பாடி பின் மறைந்து.. கோதை எங்கே சென்றாய் என்று அழைத்த பின்.. மீண்டும் மறைந்து அடுத்த கனா கண்டு பின் மீண்டும் பாடி.. மறைந்து ..கனா கண்டு.. என இன்று முழுதும் இந்த கனாவில். நாங்கள் மிதக்கும் வண்ணம்.. சிவஸ்ரியின் அற்புதமான படைப்பு.. K RAJAGOPALAN.

  • @drsharadharajathi4975
    @drsharadharajathi4975 Před 3 lety +4

    All the languages suit you..Sivasri.& your Tamizh is too good

  • @trajkumarthangavel8507
    @trajkumarthangavel8507 Před 3 lety +8

    No words to express the dedication and devotion that you have.Stay blessed

  • @srinivasanr3015
    @srinivasanr3015 Před 3 lety +7

    You bring in divinity to music by your devotion and dedicated singing
    I pray god and gurus to bless your shraddhaful singing

  • @chandrasekarannarayanan1706

    அற்புதம், அழகு, கோதை ஶ்ரீ ஆண்டாள் அருளிய இந்த பத்து பாசுரங்களை ஆடி பூரம்
    இசை த்ததால் தாங்கள் எல்லா நலங்களும் பெற்று தங்கள் ரசிகர்கள் எல்லோரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டுமாய் அந்த கோவிந்தனை பிரார்த்திப்போம்....... Solo always best I like it very much......Definitely if a teen age girl sings all the 10 songs immediately she would get a very good bride groom......Super songs our Hindu culture of wedding sequence fantastically brought by Kothai Sri Andal....
    Narayana.......

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 11 měsíci

    Maa Sri Namaskaram and Ei Patta Background Art Design is Great and Beautiful Wonderful One Congratulations ADIYEN

  • @psmran
    @psmran Před 2 lety

    செல்வாய செல்வம்

  • @drsharadharajathi4975
    @drsharadharajathi4975 Před 3 lety +6

    Just superb.. No words to express.. Sivasri..

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 Před 3 lety +3

    நல்வாழ்வு பெற்று நாளும் மகிந்தனரே.. என்று நீங்கள் பாடினால் அது நடக்கும்.. நடக்கும் .. நடக்கும்.. கோதை கண்ட கனவு சிவஸ்ரி கண்ட கனவு எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த உலகில் நன்மை பயக்கட்டும்.. ..K RAJAGOPALAN

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 Před 3 lety +4

    அந்த அச்சுதன் உன்னை கை பிடிக்கட்டும்

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 4 měsíci

    When Life Is Much More Than A Dream

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 Před 3 lety +2

    அளவில்லாத மகிழ்ச்சி. ஆண்டாள் எங்களை ஆண்டாள்...

  • @thenappanmuthuganeshan1052

    Look like Andal singing live

  • @sangeethanarayananmusic
    @sangeethanarayananmusic Před 3 měsíci

    Beautifully rendered ma'am. 🙏 I feel this is the best version of Vaaranamayiram available.

  • @sivamadurai
    @sivamadurai Před 2 lety +1

    மெய் மறந்தேன்.
    அடியேனின் நமஸ்காரங்கள்.
    🙏

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 3 lety +8

    Beautiful singing. The clarity and expression both are so good.wish to hear more from you.😍😍

  • @meenanagarajan8450
    @meenanagarajan8450 Před 3 měsíci

    Aneha kodi namaskarangal 🙏

  • @ramadidamu2868
    @ramadidamu2868 Před 3 lety +6

    wonderful , Thanks for inducing great devotion :)

  • @vijithb2528
    @vijithb2528 Před 3 lety +3

    Perfect control of the voice and pronunciation of Thamizh.. ❤️

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 8 měsíci

    Thali Namaskaram and Extremely Great Beautiful Happy Diwali and Best Wishes ADIYEN ♥️ ❤️ ✨️ 😊 🙏 💕 ♥️

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 4 měsíci

    There Is A Way To Align Your Emotions

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 Před rokem

    Super ma very very nice to hear May God bless you ma ,. 🙏🙏.

  • @mvv4866
    @mvv4866 Před 2 lety

    ஶ்ரீஆண்டாள் திருஅரங்கனை மணங்கொண்ட
    அழகிய கனவினை வழங்கிய
    திருமொழிப் பாசுரங்களைத் தன்
    அமுத்த்தீங் குரலில் கண்முன்
    விரியும் ஆண்டாளின் திருமணக்
    காட்சிகளாய் நல்லிசையோடு
    வழங்கிய சிவஶ்ரீ இசைவானில்
    ஒரு விடிவெள்ளி! இசைத்திறன்
    வாழ்க! வெல்க! வாழ்த்துகள்!

  • @pradeepkk7825
    @pradeepkk7825 Před 3 lety +2

    Yes, this is what we want from you.

  • @ranganathsairaksha7170
    @ranganathsairaksha7170 Před 3 lety +4

    Thanks I throughly enjoyed the singing....u r a highly blessed soul

  • @leelasankar830
    @leelasankar830 Před 6 měsíci

    Verypleasingand,melodius

  • @manithomas5509
    @manithomas5509 Před 3 lety +3

    Beautiful songs! Lovely and sweet voice!❤❤❤

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 Před 3 lety +2

    அறிமுகம் அச்சுதன் கை மேல் கோதை தன் கை வைத்து.... ஆஹா.. .. என்ன ஓர் தெய்வீகத்தை அளித்தீர்கள்.. ..

  • @bnnonline
    @bnnonline Před 3 lety +1

    Kaiththalam patrum nalla naalai aavaludan edhirpaarkkindrom divine kokila!!!! Subhasya sheegram.

  • @india4441
    @india4441 Před 2 lety +2

    மாப்பிள்ளை அழைப்பு
    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
    நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
    பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்,
    தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
    நிச்சயதார்தம்
    நாளை வதுவை மணம் என்று நாளிட்டு,
    பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,
    கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்
    காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!
    பெரியோர்களின் அனுமதி
    இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
    வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,
    மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,
    அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
    காப்பு கட்டுதல்
    நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,
    பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
    பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
    காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
    பிடி சுற்றுதல்
    கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,
    சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,
    மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
    அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!
    பாணி க்ரஹணம்
    மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
    முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!
    ஸப்தபதி
    வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
    பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
    காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,
    தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!
    அம்மி மிதித்தல்
    இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
    நம்மை உடையவன் நாராயணன் நம்பி,
    செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
    அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!
    பொறி இடுதல்
    வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு
    எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,
    அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
    பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
    மஞ்சள் நீர் தெளித்தல்
    குங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,
    மங்கல வீதி வலம் செய்து மணநீர்,
    அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
    மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
    பாராயண பலன்
    ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
    வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,
    தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
    வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!

  • @user-vn5gu9fn4v
    @user-vn5gu9fn4v Před 2 lety

    அன்பு மகளே....தங்களை பார்த்து தான் கோதை தாயாரை நேரில் பார்ப்பது போல் உணர்ந்தோம்.... ஹரி ஓம்

  • @raghavsankapuram8448
    @raghavsankapuram8448 Před 3 lety +1

    Super ji. Andal thiruvadigale sharanam🙏🏻🙏🏻

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 Před 3 lety +1

    amma Narayana...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NavaneethSagarMusic
    @NavaneethSagarMusic Před 2 lety +2

    02:33-03:40 portion in ragam hamsanandi is soulful

  • @srilathanatarajanvellore5872

    Love from Hyderabad

  • @ramaraghuraman5731
    @ramaraghuraman5731 Před 3 lety +2

    Thank you maa.

  • @vallinayagam9178
    @vallinayagam9178 Před 3 lety +3

    No words to thank you

  • @natarajans3179
    @natarajans3179 Před 3 lety +1

    Andal Matha ki Jai

  • @tummalapallivenkatasuryavi2162

    Really awesome👍👏 excellent sweet voice sivasri God bless you

  • @pandiank14
    @pandiank14 Před 3 lety +1

    Sri Aandal thayar sudi kodutha sutar kodiyin varanamayiram pasurathai arputhamaka padi ullikarkal vaazhththukkal sivasri madam 💐🙏

  • @visvaananth861
    @visvaananth861 Před 3 lety +1

    ஓம் சக்தி !. பக்தி மகிமை ! 🌻🕉🌻. Amazing : kum Sivasri skandaprasad .

  • @muralidharan5729
    @muralidharan5729 Před 2 lety

    இதுவல்லவா தூய தமிழ்
    அருமயான பக்தி ரசம்

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 Před 3 lety +1

    SRI RADHE! SRI AANDAAL THIRUVADI ANEGA SARANAM! RADHE RADHE! VERY MUCH ADVANCE SO SWEET NACHIAR TIRUMOZHI - VARANAM AYIRAM. TOMORROW THE 11TH AUG. IS THIRUVAADI POORAM. REALLY YOUR GOODSELF IS VERY MUCH BLESSED DAUGHTER OF SRI SRI SRI SKANDAPRASAD. ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR DIVINE PARENTS. RADHE RADHE! RADHEKRISHNA! LADDU GOPAL!

  • @suyodhanasarvabhouma204
    @suyodhanasarvabhouma204 Před 3 lety +1

    You know.... All letter's are completed in my knowing languages to talk about yours just...🌹🌹👌👌🌹🌹🙏

  • @shankarsubbu5034
    @shankarsubbu5034 Před 2 lety +1

    நீங்கள்நினைத்தகாரியம்
    ஈஸ்வரகிருபையால்
    நிரைவேறும்
    கூடியவிரைவில்

  • @sivakumarrsivakumarr7539

    Your any songs I am like you

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 Před 2 lety

    இந்த குழந்தையின் காது அணிகலன்கள் கூட இசையாடுவதை இன்று பார்த்தோம்.இறைவியே வந்து இந்த கனவை இன்று நனவாக மாற்றினார்.. அன்னை ஆண்டாள் எங்களை ஆண்டாள். K RAJAGOPALAN

  • @rajendirannadarrajendirann8429

    Mahalaxmi ma'am Arul pleasing ❤️🙏❤️🙏🙏🙏🙏

  • @janarthanonjanarthanon4134

    Maa Sri Namaskaram ADIYEN and Best Wishes for Great Wonderful Song Singing Super Nice Voice and Congratulations ADIYEN

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 Před 3 lety +1

    Arumai Arumai

  • @arunkumark4828
    @arunkumark4828 Před 3 lety +1

    💗💗💗 from Kerala

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 11 měsíci

    Andal Thiruvadikale Saranam ADIYEN Singing Beautifully and wonderful Great Super Nice Voice and Every Effort Doing Great Work and keep it up and Best Wishes God Bless you Congratulations ADIYEN

  • @pradeepkk7825
    @pradeepkk7825 Před 2 lety

    I heard 50 times Varanam aayiram and Kathiroli Deepam from this.

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Před 11 měsíci

    Maa Sri Namaskaram and Rajaji Written AWESOME BEAUTIFUL AND WONDERFUL SONG LYRICS KURAi ONDRUM ELLI MARAI MOORTHI KANNA Your Singing Super Nice Voice and Extremely Proud of you Thanks Congratulations ADIYEN

  • @kamalasivanesan6091
    @kamalasivanesan6091 Před 3 lety +1

    Great Sivasiri amma

  • @arjunkrishna5163
    @arjunkrishna5163 Před 3 lety +1

    Love from Kerala 🙏❤️

  • @neelakrishna
    @neelakrishna Před 2 lety

    nAchiyAr Thirumozhi 🙏🏻🙏🏻🌹🌹

  • @SBRox
    @SBRox Před rokem +2

    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
    நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
    பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் (1)
    நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
    பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
    காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (2)
    இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
    வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து
    மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
    அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (3)
    நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
    பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி
    பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
    காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (4)
    கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
    சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
    மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
    அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (5)
    மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
    முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் (6)
    வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
    பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
    காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி
    நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் (7)
    இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
    நம்மை உடையவன் நாராயணன் நம்பி
    செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
    அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான் (8)
    வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
    எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
    அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்
    பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான் (9)
    குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
    மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
    அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
    மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (10)
    ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
    வேயர் புகழி வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
    தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
    வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே

  • @chandranb4433
    @chandranb4433 Před 3 lety +1

    Titikum kural God blessed you,👍Tiruvasagam padungale sister

  • @ezhil2395
    @ezhil2395 Před 2 lety

    Super ma Siv Shri. Always I listen your bakthi songs. Your devotion is excellent. Independence day song also nice

  • @chandrasekaransubramaniam3824

    Wow. Beautiful rendering with true dedication and melody with Ambal blessing.God bless you Sivasri.

  • @duraikumarkumar1443
    @duraikumarkumar1443 Před 3 lety +3

    அருமை! 💐💐💐

  • @rameswarareddyn3422
    @rameswarareddyn3422 Před 2 lety

    🙏Namaskaram AMMA🙏

  • @orruvanchannel
    @orruvanchannel Před 3 lety +1

    மணவாளன் வரும் நேரம் அருகில்

  • @SVNarasimhan
    @SVNarasimhan Před 3 lety +1

    Super dedicated presentation

  • @jayanthilakshman4260
    @jayanthilakshman4260 Před 3 lety

    Ragamalika super 💐💐. God bless you Radhekrishna

  • @rupokdas6821
    @rupokdas6821 Před 2 lety

    Excellent you vioce no daut power of soul direction belence mentening your bajan the problem in I can't undarstud your leguse of words so you know what you do best for lol to undarstend if you create Hindi leguse colour beauti of leguse become you are moor popular and people are enjoying your voice of song joy Shri Krishna

  • @leelasankar830
    @leelasankar830 Před 9 měsíci

    Goodperformance

  • @srikanthhn5138
    @srikanthhn5138 Před 3 lety +3

    Aahaa, What an excellent, wonderful voice, very very beautiful presentation. That which is dancing with you in your ears are creating such a melody as that of golden bangles in hands of a small child which is in its own world of joy playing with its favorite doll, as Meera with the idol of Lord Krishna.

  • @balakrishnanv8274
    @balakrishnanv8274 Před 2 lety

    Living Andal is Sivasri

  • @krishnakantic3851
    @krishnakantic3851 Před 2 lety

    Varanam Ayiram
    By
    Sri Andal
    Translated by
    P.R.Ramachander
    (This is a part of the great work called Nachiyar Thirumozhi of the great Vaishnavite saint Sri Andal. She was brought up by Nammazhvar another great saint and fell deeply in love with Lord Ranganatha . In this portion she tells her friends about her dream in which she got married to Ranganatha . In the ten stanzas she makes reference to the ten important steps of the marriage ceremony viz
    1. Reception of the bride groom (Mappilai azhaippu -Janavasam)
    2. Announcement of wedding ceremony (Niscayatartham)
    3. Dressing up bride by her sister in law (Nattanar kodi uduttal)
    4. Tying the protecting band called Kappu(KAppu kattal)
    5. Removing the obstacles (Pidissurudal )
    6. The groom holding hands of the bride (Panigrahanam)
    7. Taking seven steps together, wedding vows (saptapati)
    8. Stepping on the stone (ammi midittal)
    9. Offering of puffed rice (laja homam)
    10. Visiting friends and relatives and taking holy bath (Manjal neerattal )
    Even today it is customary to sing this song during marriages of Sri Vaishnavas. It is believed that by singing this prayer girl’s whose marriage gets postponed can easily get married.)
    1.Vaaranam aayiram soozha valam vandhu ,
    Naarana Nambi nadakkindraan yendredhir,
    Poorana pokudam vaithu , puramengum ,
    Thoranam naatta kana kanden thozhi , naan.
    1.Oh dear friend in my dream I saw,
    That Lord Narayana was walking around the town,
    Surrounded by one thousand elephants and,
    He is being received by with golden poorna Kumbhams,
    And that the town is being decorated with streamers.
    2.Nalai Vadhuvai manamendru naalittu,
    Palai Kamuku , parisudai panther keezh,
    Kolari Madhavan Govindhan yenpaanor,
    Kaalai pugutha Kana kanden thozhi, naan
    2. Oh dear friend in my dream I saw,
    That they have fixed tomorrow as the wedding day ,
    And I saw the lad named as Madhava and Govinda,
    Entering the Pandhal decorated by betelnut trees.
    3.Indhiran ullitta devar kuzhaam yellam ,
    Vandhirundhu yennai makal pesi mandhirithu,
    Manthira kodi uduthi , mana maalai ,
    Anthari chootta kanaa kanden thozhi naan
    3. Oh dear friend in my dream I saw,
    That Indra and all other devas have come,
    And were talking about me to be made as a bride,
    And Durga Devi made me wear new auspicious cloths ,
    And the wedding garlands .(sweet scented garland)
    4.Naaal disai theertham konnthu nani nalgi ,
    Paarppana chittarkal pallaar edutheththi,
    Poopunai kanni punithanodu endrannai ,
    Kaapu naan katta kanaa kanden thozhi , naan.
    4. Oh dear friend in my dream I saw,
    That several learned Brahmins bringing sacred waters,
    From all the four directions and sanctify it by Manthras,
    And sprinkle on me who is a maid and ,
    Tied my wrist with a protective band to those of the pure one.
    5.Kadir oli deepam kalasamudan yenthi,
    Chadir ila mangayar thaam vanthu yethir kolla,
    Mathhurayaar mannan adi nilai thottengum,
    Adhira pugudha kana kanden thozhi , naan.
    5. Oh dear friend in my dream I saw,
    Pretty maids carrying lighted lamps which were shining like sun,
    Along with pots of water , receiving that king of sweetness,
    Whose walking steps were making the earth shake.
    6.Maddalam kotta vari sangam nindru oodha ,
    Muthudai thamam nirai thaazhntha pandhar keezh,
    Maithunan nambi madhu soodanan vandhu yennai,
    Kaithalam paththa kanaa kanden thozhi, naan.
    6. Oh dear friend in my dream I saw,
    That with the playing of drums and booming of conches,
    Below the pandhal which was decorated with low strands of pearl,
    The killer of Madhu who is my betrothed, holding my hands.
    7.Vaai nallar nalla marayothi manthirathaal,
    Pachilai naanal paduthu , parithi vaithu,
    Kaichina maakali rannan , yen kai pathi,
    Thhevalam cheyya kanaa kanden, thozhi.
    7 Oh dear friend in my dream I saw,
    That when those with good voice chanted the Manthras from Vedas,
    Spread grass all round the fire , offered dry holy sticks to it
    That one came like an angry elephant , held my hands and lead me round the fire.
    8.Immaikkum ezhezh piravikkum paththaavaan,
    Nammai udayavan naaranan nambi,
    Chemmai udaya kayyal thaal pathi,
    Ammi mithikka kanaa kanden, thozhi , naan.
    8. Oh dear friend in my dream I saw,,
    That the Narayana who is our main stay in heaven and in several births ,
    And to whom all of us belong , holding my feet by his red tinged hand,
    And placing it on the grinding stone.
    9.Varisilai vaal mukathu yennaimar thaam vandhittu,
    Yeri mukam paarithu yennai munne niruthi ,
    Arimukan achyuthan kai mel yen kai vaithu,
    Pori mukham thatta kanden thozhi naan.
    9. Oh dear friend in my dream I saw,
    That after that my brothers with pretty eye brows came,
    Made me stand near the sacred fire in front ,
    Placed my palms on the palms of the lion faced Achyutha,
    And made the puffed rice in my hand fall in fire.
    10.Kukumam appi kulir chantham mattithu ,
    Mangala veedhi valam cheithu mana neer ,
    Angu avanodum udan chendru angu aanai mel,
    Manjana matta kana kanden thozhi, naan.
    10. Oh dear friend in my dream I saw,
    That Kumkuma and cool sandal paste were applied on us,
    And I along with him went round the streets of the auspicious town,
    Riding on an elephant and then we were given a holy bath.
    11.Aayanukkaka thaan kanda kanaavinai,
    Veyar pugazh vill puthoor kon kothai chol,
    Thooya thamizh malai eerainthum vallavar ,
    Vaayum nan makkalai pethu magizhvare.
    11.If these ten verses in pure Tamil composed,
    By Godha who is daughter of the king of Villiputhur(Nammazghvar),
    Who is famous for his writings describing ,
    The dream she saw for marrying the cowherd(Sri Krishna),
    Are chanted, they would get good children and be happy.

  • @nalinisridharan8026
    @nalinisridharan8026 Před rokem

    Soulful rendition in a beautiful voice with excellent pronunciation
    May Andal Nachiar bless you

  • @rajendrand8313
    @rajendrand8313 Před 2 lety

    Azhakaana kuralil aandaal paadalkal arputham aranganin arul ungalukku eppothum undu

  • @nagarajanramasubramanian1307

    No words to explain. Wonderful Tamil song

  • @vnarayanan5648
    @vnarayanan5648 Před 2 lety

    மிகத் தெளிவான உச்சரிப்பு 👏👏🙏

  • @thulasidasm.b6695
    @thulasidasm.b6695 Před 2 lety

    Humble pranam🙏🙏🙏

  • @jagannathrao6689
    @jagannathrao6689 Před 2 lety

    Superb.

  • @chandramouliss7311
    @chandramouliss7311 Před 3 lety +2

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SurajKumar-tm9cb
    @SurajKumar-tm9cb Před 2 lety

    மனதை உருக்கும் இசை ஞானம், குரல் வளம். இறைவனின் அருட்கொடை. செவிக்கும், மனதிற்கு ம் அரிய விருந்து. ஒவ்வொரு பாடலின் ராகத்தை தெரிவிக்க முடியுமா. நன்றி🙏🙏

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 Před 2 lety +2

    sivasri,please sing the entire Goda stuti by Desikan It will be a fitting remembrance of Adippoooram

  • @LoveyReddy-gi1fu
    @LoveyReddy-gi1fu Před 9 měsíci

    Cool, calm and crispy rendition 🙏🙏🙏❤

  • @mlaks6586
    @mlaks6586 Před 2 lety

    Amazing talent!

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před rokem

    🙏🙏🙏🙏👌

  • @prabas6755
    @prabas6755 Před 3 lety +1

    Very nice !

  • @rajeshravindran6149
    @rajeshravindran6149 Před 2 lety

    Beautiful 🙏

  • @subramaniamsivadas
    @subramaniamsivadas Před 3 lety

    Excellent!!!!!!!