பொறக்கும்போது பொறந்த குணம் பாடல் | Porakkum Podhu Porandha Gunam song | chakarvathi thirumagal .

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2024
  • #mgr #anjalidevi #tamilsongs #lovesongs #romantic #sad #4koldsongs
    பொறக்கும்போது பொறந்த குணம் பாடல் | Porakkum Podhu Porandha Gunam song | chakarvathi thirumagal . Tamil Lyrics in Description .
    Movie : Chakravarthi Thirumagal
    Music : G. Ramanathan
    Starring : M. G. Ramachandran, Anjali Devi, P. S. Veerappa, S. Varalakshmi
    Song : Porakkum Podhu Porandha Gunam
    Singers : Seerkazhi Govindarajan
    Lyrics : Pattukkottai Kalyanasundaram
    பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
    இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
    பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    ஆண் : உறங்கையிலே பானைகளை
    உருட்டுவது பூனை குணம்
    காண்பதற்கு உருப்படியாய் இருப்பதையும்
    கெடுப்பதுவே குரங்கு குணம்
    ஆண் : ஆற்றில் இறங்குவோரை கொன்று
    இரையாக்கல் முதலை குணம் - ஆனால்
    இத்தனையும் மனிதனிடம்
    மொத்தமாய் வாழுதடா ………
    ஆண் : பொறக்கும்போது பொறந்த குணம்
    போக போக மாறுது
    பொறக்கும்போது பொறந்த குணம்
    போக போக மாறுது
    ஆண் : எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது…
    எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது….
    ஆண் : மனிதன் பொறக்கும்போது
    மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம்
    போக போக மாறுது
    ஆண் : பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
    பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
    ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
    திருடன் என்றே உதைக்குது
    ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
    திருடன் என்றே உதைக்குது……
    ஆண் : மனிதன் பொறக்கும்போது
    மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம்
    போக போக மாறுது
    ஆண் : காலநிலையை மறந்து சிலது
    கம்பையும் கொம்பையும் நீட்டுது
    காலநிலையை மறந்து சிலது
    கம்பையும் கொம்பையும் நீட்டுது
    ஆண் : புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
    வாலை பிடிச்சி ஆட்டுது
    புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
    வாலை பிடிச்சி ஆட்டுது
    ஆண் : வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
    காசை தேடி பூட்டுது
    வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
    காசை தேடி பூட்டுது
    ஆனால் காதோரம் நரச்ச முடி
    கதை முடிவை காட்டுது.
    ஆனால் காதோரம் நரச்ச முடி
    கதை முடிவை காட்டுது…….
    ஆண் : மனிதன் பொறக்கும்போது
    மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம்
    போக போக மாறுது
    புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
    பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
    இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
    ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
    ஆண் : உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்
    உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்
    நம்பி ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்
    உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்
    நம்பி ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் -
    ஆண் : நாம் உளறி என்ன கதறி என்ன
    ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா……
    நாம் உளறி என்ன கதறி என்ன
    ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா
  • Zábava

Komentáře • 6

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před měsícem

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை ஒரு அருமையான தீர்க்கதரிசி அவரது வரிகளை எப்பொழுதும் நீ நேசி அனைத்து மக்களையும் ஒரு கணம் சிந்திக்க வைத்தவர் அதை நீ யோசி

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 3 měsíci +1

    மனிதனுடைய குணத்தை இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் கூற இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மட்டும் அல்ல ஒரு பக்கம் வறுமை மறுபுறம் வளமை இருக்கும் வரை அழிவு என்பதே இல்லை இப்பாடலுக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 100 கோடி மக்கள் வந்தாலும் அனைவருக்கும் இப்பாடலை சம

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci +3

    எம்ஜிஆர் அப்பா சூப்பர் அழகான தாத்தாவா ஜொலிக்கிறார்! பட்டுக்கோட்டையாரின் கவிகள் எம்ஜுயிஆர்அப்பாப்பாடல்களாலேதான் தெரியுது ஹிட்டாவுது !சீர்காழி ஐயா சூப்பர்! அப்பாக்கு இவர்ப்பாடுறதும் பொருந்துறது விந்தையே! நன்றீங்க 👸

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Před 4 měsíci

    Theerakamana karuthu. Thank you

  • @sukumaran6799
    @sukumaran6799 Před 3 měsíci

    Mgr.g