ஆற்காடு தோப்புக்கனா 1000 ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • ராணிப்பேட்டை மாவட்டம்.
    1000 ஆண்டு பழமையான கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் - ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்..
    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கனா பகுதியில், 1000 ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
    ஆற்காடு அடுத்த தோப்புக்கனா பகுதியில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்ற ஆலயமான கங்காதர ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு வருடம் பங்குனி பிரம்மோற்சவத்தை ஒட்டி தேரோட்டம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு தேரோட்ட நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள மூலவருக்கும், அன்னபூரணி அம்மனுக்கும் பால், மஞ்சள், தேன், சந்தனம், தயிர் ஆகியவற்றை கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரினை சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.
  • Zábava

Komentáře •