கால் மாற்றும் கலை - தி.ம.இராமலிங்கம் - சரக்கலைப் பற்றி திருமூலர் மற்றும் வள்ளலார் கூறும் இரகசியங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2021
  • காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “கால் மாற்றும் கலை”. தொகுப்பு தி.ம.இராமலிங்கம் -
    சரக்கலைப் பற்றி திருமூலர் மற்றும் வள்ளலார் கூறும் இரகசியங்கள் என்ன?
    அன்புடையீர் வணக்கம்!
    கால் மாற்றும் கலையினைப் பற்றி நாம் இப்பதிப்பின் மூலம் தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார் வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்' என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என கொண்டாடும் உலகீர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது அந்தக் காலும் கலையும் அல்ல.
    இங்கே கால் என்பது காற்றை குறிக்கும். அதாவது மூச்சுக்காற்று. கலை என்பது அதனை தமது விருப்பத்திற்கு பழக்கும் வித்தையை குறிக்கும். இவ்வுலகில் நமது தமிழ் சித்தர்கள் தவிர வேறு எவரும் மூச்சுக்கலையைப் பற்றி விரிவாக கூறவில்லை எனலாம். அதிலும் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் என மொத்தம் எண்ணாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். (திருமூலர் மொத்தம் 8000 பாடல்கள் பாடியுள்ளதாக வள்ளலார் கூறுகிறார், அவற்றில் 3000 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன, மேலும் திருமூலர் 3000 ஆண்டுகள் அல்ல, 8000 ஆண்டுகள் பரு உடலுடன் வாழ்ந்துள்ளார்) இதிலிருந்து எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்கள் இந்த மூச்சுக்கலையை பற்றி அறிந்திருந்தனர் என்று ஒருவாறு சொல்லலாம். இவர் பாடிய திருமந்திரத்தில் இந்த மூச்சுக்கலையை பற்றி பல விஷயங்களை நாம் அறிய முடிகிறது. இவருடைய சமாதிஇடம்தான், சிதம்பரம் கோயில் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே. திருமந்திரத்தை வள்ளலார் கூறும்போது, 'இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமெனில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்' என்கிறார்.
    இந்து மதங்களில், எங்கெல்லாம் பாம்பு படங்கள் சிலைகள் உள்ளனவோ அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். நமது மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள் இந்துக்கள். அரசமரத்தடியில் இருக்கும் இருபாம்புகள் பின்னி நிற்குமாறு கல்லில் செதுக்கியிருப்பார்கள். அவை நமது இடங்கலைமூச்சும், பிங்கலை மூச்சும் இணைந்த சுழுமுனை மூச்சை குறிக்கும் அடையாளம். அதாவது அரசமரத்தடியில் அமர்ந்து சுழுமுனை இயக்கத்தில் தியானம் செய்ய இறையருள் கிடைக்கும் என்பதனை புறத்திலே இவ்வாறு செய்திருக்கிறார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, முருகனின் காலடியில் இருக்கும் பாம்பு, விநாயகரின் வயிற்றில் சுற்றியுள்ள பாம்பு, விஷ்ணு பாம்பின்மேல் படுத்திருப்பது, கண்ணன் பாம்பின்மீது நடனம் ஆடுவது போன்ற அனைத்தும் ஒவ்வொரு தத்துவத்திலுள்ள மூச்சுக்காற்றை குறிக்கிறது என்பதை அறியவேண்டும். ஆனால் இந்துக்கள் அதன் உண்மைதெரியாமல் பால், பழம், முட்டை வைத்து குருட்டு பூஜை செய்து செய்துவருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையும் இந்த நமது மூச்சின் நடனத்தையே குறிக்கும்.
    நமது வள்ளலாரும் இந்த மூச்சுப்பயிற்சி பற்றி சில இடங்களில் தமது திருவருட்பாவில் கூறியுள்ளார். எனவே திருஅருட்பா, திருமந்திரம் மற்றும் சித்தர் கருத்துகள் போன்றவை கூறும் சர பயிற்சியினை பற்றிக் காண்போம்.
    அதற்கு முன்னர் பொதுவாக மூச்சுக்காறு பற்றின உண்மையினை காணலாம். நமது நாசியின் வழியே உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும் காற்றுதான் மூச்சுக்காற்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மூச்சுவிடுகிறோம்? ஏன் நமக்கு ஒரு நாசித்துளைக்கு பதிலாக இரு நாசித்துளைகள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு கண்ணுக்கு பதிலாக இரு கண்கள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு காதுக்கு பதிலாக இரண்டுக் காதுகள் உள்ளன? என்று சிந்தித்தோமா?
    இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும் பார்வையும், கேட்கும் சத்தமும் ஒன்றாகவே உள்ளன! பிறகு ஏன் இரண்டு? ஒன்று பழுதானால் இன்னொன்றை பயன்படுத்திக்கொள்ள இறைவன் நமது உடலில் அமைத்த கூடுதல் பாதுகாப்பு (Step-in) அவையங்கள் என்று கூறலாம். ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக் காணலாம்! எப்படி?
    நமது முன்னோர்கள், நமது இடதுபுறம் உள்ள நாசித்துவாரத்தை 'இடகலை' / 'சந்திரகலை' என்றும் வலது புறம் உள்ள நாசித்துவாரத்தை 'பிங்கலை' / சூரியக் கலை என்றும் கூறுவர்.
    1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு.
    2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.
    3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
    ஆக இம்மூன்றுச் செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை 'சரவோட்டம்' என்பார்கள். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
    இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க மாற்றுவதுதான் 'கலை' என்கிறோம்.
    சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
    சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்
    நீண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
    நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும். எனவேதான் வடலூர் ஞானசபையில் இதனை உணர்த்தும் வகையில் நம்பெருமான், ஞானசபையினை சுற்றி 21600 வளையங்கள் கொண்ட இரும்புச் சங்கிலியினைப் பொருத்தியுள்ளார்கள்.
    இவை முன்னோர் வாக்கு.
    www.blogger.com/blog/post/edi...
    T.M.RAMALINGAM
    vallalarmail@gmail.com
    +91 9445545475
    Kindly Subscribe our New crypto channel.
    • Video

Komentáře • 34