கண்ணதாசன் கவிதைகள் | kannadasan kavithaigal

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2022
  • கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 - 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
    வாழ்க்கைக் குறிப்பு
    கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[3]
    குடும்பம்
    கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[5],[6].
    கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]
    ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
    கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
    அரசியல் ஈடுபாடு
    அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணந்தது..[8][9][10] . அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[11] பின்னர் தமிழ் தேசிய கட்சியில் இருந்தார். தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர்.
    மறைவு
    உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
    மணிமண்டபம்
    தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[12] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. [13] [14][15]
    விருதுகள்
    சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

Komentáře • 31

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před 6 měsíci +4

    சிறப்பு மிகச்சிறப்பு என சொல்லவும் வேண்டுமோ? "
    அதிமதுரமாய் தித்திப்பு மகனே 🙌🙏🌹
    சிவ, 🙏

    • @kotravan2.0
      @kotravan2.0  Před 6 měsíci

      நன்றி அம்மா...

  • @poetvk06
    @poetvk06 Před rokem +5

    அருமையான குரல்... எத்தனை சுகம்.... கேட்க கேட்க சொர்க்கமே சொக்கி வந்து நிக்குது...

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 Před 7 měsíci +3

    மிக மிக அருமை கவியே வந்து படித்தது போல் உள்ளது👌

  • @gsamygsamyngovindasamy9530

    முதல் முறையாக எங்கள் ஆசான் கவிதை உங்கள் குரலில் கேட்டேன் என்ன ரகம் அந்த அந்த மனிதன் நிச்சயமாக அவன் உதிர்த்து நமக்காகவே

  • @sugandeena2188
    @sugandeena2188 Před 21 dnem +1

    அருமை ஐயா... சிறிதளவும் பிசிறில்லை... கேட்டுக் கொண்டே இருந்தேன்... வாழ்த்துகள் ஐயா
    தமிழ்த்தாரகை சுகந்தீனா

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Před rokem +4

    வருங்காலம் வளமான காலம் என இருக்க வேண்டும் 💐💐💐🎉🎉🎉

  • @lokamanisanjeevi8870
    @lokamanisanjeevi8870 Před 2 lety +2

    வேற லெவல் ❤👌

  • @user-tm5cs5zi5i
    @user-tm5cs5zi5i Před 4 měsíci +4

    பாமர ஜாதியில் தனி மனிதன் படைத்ததினால் .... கண்ணதாசன் .... இறைவன்❤

  • @NaalaiNamadhae
    @NaalaiNamadhae Před 2 lety +1

    அழகு
    சிறப்பு 👋👌🏾🙏

  • @chellapandian6565
    @chellapandian6565 Před 2 lety +1

    அற்புதமான பதிவு ஐயா 🙏 வாழ்த்துக்கள் 🌈

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 Před 21 dnem +1

    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்......
    அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்......
    வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்.....
    வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை
    உயர்த்தி பேசுங்கள்......
    ஓயாது குடிப்பவரை
    கடித்து குதறுங்கள்.......
    வாட்டம் கெட்டு போனவரை
    வளைந்து பாருங்கள்.....
    நோட்டு போட்டு நன்றி கடனை
    எழுதி வையுங்கள்......
    கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்......
    கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்.....
    உரசி உரசி உசுப்பேத்தும்
    பொருளை தேடுங்கள்......
    உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்......
    நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்.....
    வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள்
    வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்....
    பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்.....
    போக்கு காட்டும் தோல்விகளை
    துவளச் செய்யுங்கள்.....
    இன்பம் வர அறமும் வர
    உழைத்து முந்துக்கள்.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்.....
    துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்......
    வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்......
    ஆணிவேரு அத்துப்படி
    அதனை பிடியுங்கள்......
    ஆடி பாடி நாடும் உறவை
    இணைந்து வாழுங்கள்....
    ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்......
    அள்ளி தரும் தரும் பழக்கம்
    பழகி கொள்ளுங்கள்......
    அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்......
    வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்.......
    யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்.....
    அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்......
    அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்.......
    அதுபோதும் அதுபோதும்
    அழுத்தி சொல்லுங்கள்.....
    ஆற அமர வேண்டுவதும்
    அறமாய் பாருங்கள்......
    அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்......
    இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்.....
    குரங்கு போல தாவுவதை
    நித்தம் உணருங்கள்......
    வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்......
    வனப்பை கூட்டி வாழ்வை
    காட்ட ஒன்று சொல்லுங்கள்......
    வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்.......
    அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்.......
    சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்......
    💐💐💐💐💐💐💐💐
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்....
    வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்......
    வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்.....
    பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்......
    நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்.....
    ஓடியப்பின் ஒய்வெடுக்கும்
    நிலையில் ஆழுங்கள்......
    வென்று செல்லும் யாவையிலும்
    நின்று சொல்லுங்கள்......
    நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில்
    நில்லுங்கள்......
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......

  • @saravanan-sb1nw
    @saravanan-sb1nw Před 17 dny +1

  • @aravind-456
    @aravind-456 Před 2 lety +1

    அருமை...

  • @dhanasekaranperumal4723

    SUPER...

  • @user-sz2lj3kb6q
    @user-sz2lj3kb6q Před 11 měsíci +1

    Avan senra idam ellam valga

  • @monisha4573
    @monisha4573 Před 2 lety

    Fantastic

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Před 2 lety

    நனியருமை தம்பி.

  • @cseeva3890
    @cseeva3890 Před 5 měsíci +1

    ❤🤗🤗

  • @sekura81
    @sekura81 Před 10 měsíci +1

    அருமை...நன்றி

  • @saravanan-sb1nw
    @saravanan-sb1nw Před 17 dny +1

    கொஞ்சம் கேட்கலாம் என்றால்....
    நெஞ்சம் சொன்னது - கவிதை
    பஞ்சத்தில் இருந்தவன் நீயே
    பாதியில் எழுந்திருக்க இயலுமா? என்று!

  • @pmkandasamy
    @pmkandasamy Před měsícem +1

    கவி பேரரசு😅 எத்தனையோ தடவைகள் கேட்டாலும் திகட்டாது

  • @user-sz2lj3kb6q
    @user-sz2lj3kb6q Před 11 měsíci +1

    Avan nenaivil en ugaingalooum marakeeinrana