சாலை பாதுகாப்பு விதிகள் - பகுதி 3

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு என்பது சாலையைப் பயன்படுத்தும்
    ஒரு நபர் பலியாவதையோ அல்லது கடுமையாகக் காயப்படுவதையோ தடுக்கும்
    முறைகளையும் நடவடிக்கைகளையும் குறிக்கிறது.
    சாலையின் பயனாளர்கள் யாவரெனின் பாதசாரிகள், மிதிவண்டி, மோட்டார் வாகன ஓட்டிகள் மற்றும் அதன் பயணிகள் ஆகியோர் ஆவர்.
    தற்கால பாதுகாப்பு உத்திகள் மனித தவறுகள் நடக்கக்கூடும் என்பதை மனதில் கொண்டு தீவிர காயம் மற்றும் மரணம் தரும் விபத்துக்களை தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன (சாலை பயனீட்டாளர் சாலை விதிகளை கடைபிடிப்பார் என்று மனதில் கொண்டு வடிவமைக்கப்படும் பழைய பாதுகாப்பு உத்திகள் போலல்லாமல்).
    இன்றளவில்,பாதுகாப்பான சாலை வடிவமைப்பு என்பது மோதல் புள்ளிகளாக (விபத்து நிகழக்கூடிய) கருதப்படும் இடங்களில் வாகன வேகம், விபத்து நடந்தால் பாதிக்கப்படும் சாலை பயனீட்டாளர்கள் கடுமையான காயங்கள் பெறாமலும் உயிரிழப்பு நேராமலும் அமையும்படி குறைவாக இருக்குமாறு உறுதி செய்யும் ஒரு சாலை சூழலை வழங்குவதாகும்.
    அனைத்து தரப்பு சாலைகளுக்கும் பொதுவான தீர்வை அடையாளம் காண இயலவில்லை, குறிப்பாக குறைவான போக்குவரத்து கொண்ட கிராமப்புற சாலைகளை கருத்தில் கொண்டால் இது விளங்கும்.
    இருப்பினும் ஒரு படிநிலைபடிநிலையான கட்டுப்பாட்டை பயன்படுத்த வேண்டும்.
    முதற்படிநிலையாக கடுமையான காயங்கள் மற்றும் மரணம் ஏற்படுத்தும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பது இருக்க வேண்டும்.
    அடுத்த படிநிலையாக ஒரு விபத்து நடந்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்வது போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மூன்றாம் நிலை, சாலை வடிவமைப்பின் தரம், வாகன ஓட்டிகளின் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைப்பது என்பதாக உள்ளது.

Komentáře •