பராபரக்கண்ணி

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2017
  • Thayumanavar Songs Paraparakkanni
    இசையமைத்துப் பாடியவர்
    பிரபாகர்

Komentáře • 296

  • @user-nn8ph7re1m
    @user-nn8ph7re1m Před 2 měsíci +16

    0 இங்கு வெட்டவெளி தான் இருக்கிறது ஒன்றுமே இல்லை எடுத்துப் போக சிவனே தவிர தில்லை அம்பலத்து அரசன் தவிர ஒன்றுமே இல்லை ஒன்று இருக்கிறது எல்லா உயிரும் இன்பமாக வாழ கருத்தோடு காரியம் சாதித்து எல்லா உயிரையும் ஆசீர்வதித்து போக வேண்டியதுதான் நீயும் கடவுள் தான் சிவமே போற்றி

    • @nagalakhmi1232
      @nagalakhmi1232 Před 18 dny +1

      ஆம் உண்னம 🙏🏻🙏🏻🙏🏻❤

    • @ohmrasankar
      @ohmrasankar Před 12 dny

      அந்த வெட்டவெளிதான் சிவமே!

  • @sivaayyappan8373
    @sivaayyappan8373 Před 4 lety +43

    அய்யா எத்தனை முறை கேட்டாலும்,ஊனும் உருகி,ஊயிரும் உருகுது அய்யா

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 2 lety +15

    செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே

  • @ramiahn5300
    @ramiahn5300 Před 2 lety +11

    ஞானியின் வான் கருத்து தேன் போல் காதில் பாயுதய்யா!

  • @gnanamg18
    @gnanamg18 Před rokem +19

    பராபரமே என்று நம்மயும் சொல்ல வைக்கிறது, இசயும் இசைப்பும். பாதம் பணிந்தேன் பராபரமே!!!!!!!!!!!

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před rokem +10

    தாயுமானவர்
    பாடல் வரிகள் அனைத்தும் சதுர் வேதங்களின் இனிய தமிழ் மொழியில் மொழி ஆக்கம் செய்யப்பட்ட
    தெய்வ மொழி வடிவென்றால் அதை மறுக்க யாராலும் இயலாதே
    கேட்குங்கால் தொடர்ச்சியாக என் கன்னில் நீர் வழிய கேட்டேன் கேட்டேன் கேட்டுக் கொன்டே இருப்பேன்
    குருநாதர் தாயுமானவர் திருத்தாள் சரணம்.....

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 2 lety +14

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

  • @sanjeevikumar6240
    @sanjeevikumar6240 Před rokem +13

    சிவசிவ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமை.தாயுமாணவர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.. குரல் வளம் இனிமை.. 🙏🏻🙏🏻

  • @VallalarViswa
    @VallalarViswa Před 3 dny

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před rokem +7

    . அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 Před 8 měsíci +6

    வேதாந்த சித்தாந்த நாதாந்த அனந்தானந்த அவதாரவரிஸ்ட குருதேவா❤😊🎉சரணம் சரணம் சரணம் 🌺🌺🌺🌺🌺🌺

    • @Googl973
      @Googl973 Před 6 měsíci

      ❤❤❤❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வே

  • @radhakavi6724
    @radhakavi6724 Před měsícem

    இன்றைய நிகழ்வு என் மனதின் தவிப்பு வேண்டுவது உன்பாதங்களில்உடனே சேர்துக்கொண்டு வி டு ஐயப்பா

  • @veerappathiranveerappathir6163

    இடுக்கம்இந்தாஇல்லாரம்விட்டுபரந்தவெளிபரமனந்தாத்தைஅடைவதுஎப்போது. சிவானே

  • @velayuthakumarkumar1444
    @velayuthakumarkumar1444 Před rokem +6

    ஐயா குருவுக்கு நன்றி வாழ்க வளமுடன் எல்லாப்புகழும் இறைவனுக்கே

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +11

    வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
    அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே. 121.
    எந்தப் படியுன் இதயம் இருந்ததெமக்
    கந்தப் படிவருவ தன்றோ பராபரமே. 122.
    எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச்
    சிந்தைகுடி கொண்டஅருள் தேவே பராபரமே. 123.
    அஞ்சல் அஞ்சல் என்றடிமைக் கப்போதைக் கப்போதே
    நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே. 124.
    என்னையுன்றன் கைக்களித்தார் யாவரென்னை யான்கொடுத்துப்
    பின்னை யுன்னாற் பெற்றநலம் பேசேன் பராபரமே. 125.
    வாய்பேசா யூமையென வைக்கவென்றோ நீமவுனத்
    தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே. 126.
    தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக்
    கென்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே.127.
    மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டைஉன்னிப்
    பார்க்கின்அன் பர்க்கென்ன பயங்காண் பராபரமே.128.
    சுட்டியுண ராமல் துரியநிலை யாய்வெளியில்
    விட்டநின்னை யானோ வியப்பேன் பராபரமே.129.
    சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய்
    ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.130.
    வாயொன்றும் பேசா மவுனியாய் வந்தாண்ட
    தேயொன்றும் போதாதோ இன்பம் பராபரமே. 131.
    என்று மிருந்தபடிக் கென்னை யெனக்களித்த
    தொன்றும்போ தாதோ உரையாய் பராபரமே. 132.
    எண்திசைக்கீழ் மேலான எல்லாம் பெருவெளியாக்
    கண்டவிடத் தென்னையும்நான் கண்டேன் பராபரமே.133.
    பித்தனையே தும்மறியாப் பேதையனை ஆண்டவுனக்
    கெத்தனைதான் தெண்ட னிடுவேன் பராபரமே.134.
    தாயர்கர்ப்பத் தூடன்னமுந் தண்ணீருந் தந்தருளும்
    நேயவுனை யாரோ நினையார் பராபரமே.135.
    விரிந்த மனமொடுங்கும் வேளையில்நா னாகப்
    பரந்தஅருள் வாழி பதியே பராபரமே.136.
    சிந்தனைபோய் நானெனல்போய்த் தேக்கஇன்ப மாமழையை
    வந்து பொழிந்தனைநீ வாழி பராபரமே.137.
    தந்தேனே ஓர்வசனந் தந்தபடிக் கின்பமுமாய்
    வந்தேனே யென்றனைநீ வாழி பராபரமே.138.
    மண்ணும்விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளைக்
    கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே.139.
    என்றுங் கருணைபெற்ற இன்பத் தபோதனர்சொல்
    சென்றசென்ற திக்கனைத்துஞ் செல்லும் பராபரமே.140.

  • @radhakavi6724
    @radhakavi6724 Před 8 měsíci +6

    இன்று கேட்டுப் பராபரக்கண்ணி என்னுள்ளே புதிய உணர்வுகளை தோற்றுவித்து மனதை உருக்கிவிட்டதே

  • @KoteswaranV-bu7fc
    @KoteswaranV-bu7fc Před rokem +1

    இதயம்.உருகுது.ஐய.யா

  • @babuAriyalur
    @babuAriyalur Před rokem +3

    அருமையான பதிவு நன்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @paramanandamkrishna3475
    @paramanandamkrishna3475 Před 4 lety +14

    அழகு தமிழில் ஆழ ஆழமாக ஊடுருவும் பாடலை பண்ணுடன்பாடியது.அருமை.

  • @dhayalananitha6597
    @dhayalananitha6597 Před 3 lety +8

    கேட்டால் ஜெயம் ஓன்று உ‌ண்டு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaranp3980
    @chandrasekaranp3980 Před 3 lety +3

    Anandham Anandham Paraparam

  • @Jagath-mata
    @Jagath-mata Před 3 lety +62

    ஐயா இந்த வரிகளையும், இசையையும் கேட்காமல் என் இரவுகள் கண்ணுறங்குவதில்லை. என் உயிரை தொட்ட வரிகள். இந்த இசைக்கு நான் அடிமை ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏

    • @jasdubai
      @jasdubai Před rokem +4

      Me too

    • @dhanashekar8513
      @dhanashekar8513 Před 11 měsíci +2

      சொர்கம் நான் அடைந்தேன்.....அருமை...பரபரமே... 48:28

    • @sabapathi8382
      @sabapathi8382 Před 11 měsíci +2

      Bro na Vivekananda College Latha padiche thapovanam vanthuruke.

    • @jagadish8996
      @jagadish8996 Před 11 měsíci

      ​@@jasdubaiaz

    • @user-ci2uq5eb5v
      @user-ci2uq5eb5v Před 10 měsíci

      வாரிகளுடன்

  • @sramamoorthimoorthi4373
    @sramamoorthimoorthi4373 Před rokem +6

    🙏நன்றிகள்....இறைவனுக்கும். தமிழுக்கும்.......

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh2782 Před 2 lety +5

    பாடல் வரிகளும் அருமை குரலும் அருமை

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +3

    தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப
    வானாகச் செய்தஇன்ப வானே பராபரமே.241.
    பற்றற் றிருக்குநெறி பற்றிற் கடல்மலையுஞ்
    சுற்ற நினைக்குமனஞ் சொன்னேன் பராபரமே.242.
    படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்
    துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே.243.
    சத்தாகி நின்றோர் சடங்க ளிலிங்கமென
    வைத்தாரும் உண்டோயென் வாழ்வே பராபரமே.244.
    சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல்தீபம்
    வைத்தகர்ப்பூ ரம்போல் வயங்கும் பராபரமே.245.
    ஆதிகா லத்தில்எனை ஆண்டனையே இப்பால்நீ
    போதியெனில் எங்கேநான் போவேன் பராபரமே.246.
    நாவழுத்துஞ் சொல்மலரோ நாளுதிக்கும் பொன்மலரோ
    தேவையுனக் கின்னதென்று செப்பாய் பராபரமே.247.
    கன்னல்தரும் பாகாய்க் கருப்புவட்டாய்க் கற்கண்டாய்
    இன்னமுதாய் என்னுள் எருந்தாய் பராபரமே.248.
    சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதிசொன்ன
    அற்புதமே அன்பே அறிவே பராபரமே.249.
    அறிவிப்பான் நீயென்றால் ஐம்புலன்க டந்தந்
    நெறிநிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே.250.
    அந்தக் கரணமெனும் ஆகாத பேய்கள்எனை
    வந்துபிடித் தாட்ட வழக்கோ பராபரமே.251.
    ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த
    தெய்வ அறிவே சிவமே பராபரமே.252.
    அருளாகி நின்றசுகம் ஆகாமல் ஐயோ
    இருளாகி நிற்க இயல்போ பராபரமே.253.
    அன்பரெல்லாம் இன்பம் அருந்திடவும் யான்ஒருவன்
    துன்புறுதல் நன்றோநீ சொல்லாய் பராபரமே.254.
    சந்ததமும் நின்கருணை சாற்றுவதல் லால்வேறு
    சிந்தைஅறி யேன்உன்றன் சித்தம் பராபரமே.255.
    நான்நான் எனக்குளறும் நாட்டத்தால் என்னைவிட்டுப்
    போனாலும் உன்னைவிட்டுப் போகேன் பராபரமே.256.
    இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத் துனக்கபயம்
    புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.257.
    தானாதல் பூரணமே சாருமிடம் உண்டுயிரும்
    வானாதி யும்ஒழுங்காய் மன்னும் பராபரமே.258.
    உன்னுமனங் கர்ப்பூர வுண்டைபோ லேகரைய
    மின்னும்ஆ னந்த விளக்கே பராபரமே.259.
    நாட்பட் டலைந்த நடுக்கமெலாந் தீரவுனக்
    காட்பட்டுந் துன்பம்எனக் காமோ பராபரமே.260.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 7 měsíci +1

    Om om siva om om om siva om om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sampathvenkatesan346
    @sampathvenkatesan346 Před 2 lety +2

    நாதம் தியானம் தருகிறது ஐயா

  • @STATUSKIRUKKAL
    @STATUSKIRUKKAL Před 2 lety +3

    எனது மனம் மிகுந்த குழப்பத்திலும் கவலையிலும் இருக்கும் பொழுது இந்த பாடல் கேட்கும் போது கவலை கரைகிறது. மனம் குழப்பத்தில் இருந்து விடுபடுகிறது.

  • @laxmikrishma524
    @laxmikrishma524 Před 11 měsíci +1

    சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @dhanan8521
    @dhanan8521 Před 3 lety +7

    உயிரே உருகும் பாடல்கள். அதை பாடிய விதமும் அருமை

  • @kannankalyani5093
    @kannankalyani5093 Před 3 lety +4

    அமைதி சாந்தம் நிறைந்த அருமையான பாடல். உயிரில் கலந்து ஏதோ செய்கிறது.

  • @kanimozhivelusamy7637
    @kanimozhivelusamy7637 Před 5 lety +65

    அருமையான குரல். இனிமையான இசை. தாயுமானவரின் உருக்கமான பாடல்கள்... தெய்வீகக் கூட்டணி. தபோவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 Před 3 lety +14

    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் என மனதார வாழ்த்துகிறேன். இந்த குரலில் பாடியவர்க்கும், இசை அமைத்தவர்க்கும். தாயுமானவர் பாடலை உள் வாங்கிக் பாடி, எங்கள் உயிர் நாடியை உருக சொய்து விட்டீர். அருமையாக இருந்தது. ஒரு கோடி நன்றி உங்கள் அனைவருக்கும். மகாபெரியவா சரணம்.

    • @shyamalap4757
      @shyamalap4757 Před 6 měsíci

      பராபர கண்ணிகள் சித்தி மேலேற்ற உயர் சாதனம்

  • @laxmikrishma524
    @laxmikrishma524 Před 3 lety +2

    Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shivaசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 2 lety +1

    நன்றி ராமகிருஷ்ன தபோவனத்தாருக்கு

  • @SelvaKumar-df4iu
    @SelvaKumar-df4iu Před 4 lety +17

    நல்ல அருமையான ஞானியர் பாடல்

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +4

    சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்
    பாராதி யாண்ட பதியே பராபரமே. 1.
    கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்
    விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே. 2.
    சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவ
    வந்த கருணை மழையே பராபரமே. 3.
    ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்
    பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4.
    ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்
    பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே. 5.
    உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்
    கரையிறந்த இன்பக் கடலே பராபரமே. 6.
    எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
    தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே. 7.
    திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
    கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே. 8.
    முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
    சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே. 9.
    கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
    விண்ணேஆ னந்த வியப்பே பராபரமே. 10.

  • @user-od9wh3tc4q
    @user-od9wh3tc4q Před 3 lety +6

    உயிரே உருகுதய்யா இப்பாடலால். தாயுமானவர் உங்கள் குரலால் எனக்கு குருவுமானார்.இவரைப்பின்பற்றி வள்ளலார் பாடல் பாடியுள்ளார் எனில் அவர் பாடலையும் இசையமைத்து பாடி உயிர்கள் உய்ய உதவுங்கள் ஐயா.

  • @kalpanaselvi247
    @kalpanaselvi247 Před hodinou

    பாடியவர் தெய்வ திருவடிகளே சரணம்

  • @devavalar4473
    @devavalar4473 Před 7 měsíci +2

    ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤........

  • @vasanthineelamegam6731
    @vasanthineelamegam6731 Před 3 lety +27

    Caption ஐ போட்டால் பராபரக்கண்ணி பாடல் எழுத்துடன்வருகிறது.மிகவும்நன்றி.

  • @srinevasan777
    @srinevasan777 Před 2 lety +2

    Iyya vanakkam

  • @MuthuKrishnan-hz2ch
    @MuthuKrishnan-hz2ch Před 5 měsíci

    என்னுயிர் சிவமே.உமது பாட்டில் உருகிப்போனேன்

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 2 lety +3

    தெய்வ நமக்குத் துணை பாப்பா - ஒரு
    தீங்குவர மாட்டாது பாப்பா.

  • @ATHMALAYAMCREATIONS
    @ATHMALAYAMCREATIONS Před 2 lety +13

    ஆகா, மெய்சிலிர்க்கும் தாயுமானவர் சுவாமிகளின் பாடல் உங்கள் குரலில் கேட்டு தழுதழுத்த விழிகள் ஓம் நமசிவாய

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem +4

    ஆகச் சிறந்த கருத்தாழமிக்க பாடல் வரிகள் ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @karunakaran7779
    @karunakaran7779 Před 3 lety +9

    தமிழ்த்தேனை செவிகள் அருந்திய உணர்வு🙏

  • @jayakumar5353
    @jayakumar5353 Před 4 lety +23

    மனசையும் மற்றும் மூளைக்கு அமைதி தரும்
    அருமையான பாடல்

  • @kumareshbabu2709
    @kumareshbabu2709 Před 3 lety +1

    Thayumanavar thiruvadigalea saranam

  • @kumarmuttu7661
    @kumarmuttu7661 Před 4 lety +13

    This best song of the world.
    Nice songs I love this song.
    Excellent and divine voice.
    Vazhga swamiji vazhga vazhamudam
    Thanks.

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +1

    சிந்திக்குந் தோறும்என்னுள் சிற்சுகமாய் ஊற்றூறிப்
    புந்திக்குள் நின்றஅருள் பொற்பே பராபரமே.301.
    என்றும்அடைந் தோர்கட் கிரங்கார் குறிப்பனைத்துங்
    கன்றையுதை காலி கதைகாண் பராபரமே.302.
    குற்றங் குறையக் குணமே லிடஅருளை
    உற்றவரே ஆவிக் குறவாம் பராபரமே.303.
    ஓருரையால் வாய்க்குமுண்மைக் கோரனந்த நூல்கோடிப்
    பேருரையாற் பேசில்என்ன பேறாம் பராபரமே.304.
    சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும்
    அல்லல் ஒழிவதென்றைக் கையா பராபரமே.305.
    பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை
    அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரமே.306.
    நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவுடையார்
    ஆசைக் கடலில் அழுந்தார் பராபரமே.307.
    கள்ளாது கட்டுணவுங் காரியமோ நானொருசொல்
    கொள்ளாத தோடமன்றோ கூறாய் பராபரமே.308.
    சென்றவிட மெல்லாந் திருவருளே தாரகமாய்
    நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே.309.
    நீட்சி குறுகல்இல்லா நித்யசுகா ரம்பசக
    சாட்சியாம் உன்னைவந்து சார்ந்தேன் பராபரமே.310.
    வானாதி தத்துவமாய் மன்னிநின்ற காரணநீ
    நானாகி நிற்பதெந்த நாளோ பராபரமே.311.
    காட்டத்தில் அங்கி கடையவந்தால் என்னவுன்னும்
    நாட்டத்தின் ஊடுவந்த நட்பே பராபரமே.312.
    நித்திரையாய்த் தானே நினைவயர்ந்தால் நித்தநித்தஞ்
    செத்தபிழைப் பானதெங்கள் செய்கை பராபரமே.313.
    இன்பநிட்டை எய்தாமல் யாதெனினுஞ் சென்றுமனந்
    துன்புறுதல் வன்பிறவித் துக்கம் பராபரமே.314.
    பொய்யகல மெய்யான போதநிலை கண்டோர்க்கோர்
    ஐயமிலை ஐயமிலை ஐயா பராபரமே.315.
    மந்திரத்தை உன்னி மயங்கா தெனக்கினியோர்
    தந்திரத்தை வைக்கத் தகாதோ பராபரமே.316.
    விண்கருணை பூத்ததென்ன மேவி உயிர்க்குயிராய்த்
    தண்கருணை தோன்றஅருள் தாய்நீ பராபரமே.317.
    தன்மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
    நின்மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.318.
    ஏங்கி இடையும்நெஞ்சம் ஏழையைநீ வாவென்றே
    பாங்குபெறச் செய்வதுன்மேற் பாரம் பராபரமே.319.
    ஆண்டநின்னை நீங்கா அடிமைகள்யாம் ஆணவத்தைப்
    பூண்டதென்ன கன்மம் புகலாய் பராபரமே.320.

  • @VeraLevelChannel-by2md
    @VeraLevelChannel-by2md Před 9 měsíci +3

    அமைதியான பாடல். அருமை 🙏🙏

  • @dhanan8521
    @dhanan8521 Před 3 lety +3

    எத்தனையோ தடவை கேட்டு விட்டேன்👌👏

  • @dhanan8521
    @dhanan8521 Před 3 lety +10

    அடிக்கடி கேட்டாலும் அலுக்காது.அவ்வளவு அருமை 🙏

  • @chidambarambabuji
    @chidambarambabuji Před 3 lety +2

    பராபரமே

  • @radhakavi6724
    @radhakavi6724 Před 3 měsíci

    இன்றைய என் மன. நிலையில் ஆறுதல் அமைதி தரும் பாடல்

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 Před 2 lety +3

    வாழ்க வளமுடன் 🙏
    கண்ணி பாடி கண் கலங்கி என் நெஞ்சத்து கல்லம் அழிந்து, நாளுமே வண்ணமும் உன் புகழ் பாடி நின்றேன் , தாயூமானவனே!!!!

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani Před 2 lety

      ஞாலத்தை மெய் என நம்பி என்ன கண்டேன் பராபரமே!!!
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
      தாயுமானவ சாமிகள் போற்றி போற்றி!!
      அருள் தாகம் வளர்க்கும் கண்ணி அருளிய சாமி போற்றி!!
      அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +2

    ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்னைத்
    தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே.141.
    பொங்கியநின் தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்
    கெங்கெழுந்தென் ஞாயி றியம்பாய் பராபரமே.142.
    பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே
    சீலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே.143.
    உண்டுடுத்துப் பூண்டிங் குலகத்தார் போல்திரியுந்
    தொண்டர்விளை யாட்டே சுகங்காண் பராபரமே.144.
    கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
    எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.145.
    காயநிலை அல்லவென்று காண்பார் உறங்குவரோ
    தூயஅருட் பற்றாத் தொடர்வார் பராபரமே.146.
    அப்பும்உப்பும் போன்ற அயிக்யபரா னந்தர்தமக்
    கொப்புவமை சொல்லவும்வாய் உண்டோ பராபரமே.147.
    சித்தந் தெளிந்து சிவமானோ ரெல்லோர்க்குங்
    கொத்தடிமை யான குடிநான் பராபரமே.148.
    தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர்
    செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே.149.
    விண்ணுக்கும் விண்ணாகி மேவும்உனக் கியான்பூசை
    பண்ணிநிற்கு மாறு பகராய் பராபரமே.150.
    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே
    மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே.151.
    கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான
    சிட்டருனைப் பூசை செய்வார் பராபரமே.152.
    கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின்
    மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.153.
    பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசைசெய்தால்
    விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே.154.
    அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
    இன்பநிலை தானேவந் தெய்வதும் பராபரமே.155.
    மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
    வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.156.
    விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
    அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.157.
    தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வர்சிவ
    ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.158.
    சொன்னத்தைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப்பேய்க்
    கின்னல் வருவதெந்நாள் எந்தாய் பராபரமே.159.
    இன்றே இருவினைவந் தேறியது நானென்றோ
    அன்றே விளைந்ததன்றோ ஆற்றேன் பராபரமே.160.

  • @vishnupriya1882
    @vishnupriya1882 Před 4 lety +16

    Thayumanavar pathigam- very nice..for everyone hear this songs mind will be very clear and happy ..

  • @rameshkuppan4998
    @rameshkuppan4998 Před 6 měsíci +1

    Touching the soul
    Ayya vazhga Pallandu

  • @kennedylazar2854
    @kennedylazar2854 Před 4 lety +4

    அற்புதம் 25.5.20

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 2 lety +1

    அந்த பிரம்மத்தை அடைய
    ஓம் ஸ்ரீ தாயுமானவரின் இந்த பதிகத்தை ஒன்றி கேட்டால் அர்த்த புரிதலுடன்
    கேட்பவர் அதனை பின்பற்றினால்
    முக்தி நிலை நிச்சயம்

  • @SenthilKumar-ej5jv
    @SenthilKumar-ej5jv Před 3 lety +8

    அருமை.... அருமை.....
    நன்றி இறைவா..

    • @radhakavi6724
      @radhakavi6724 Před rokem

      உள்ளத்தை ஊடுருவும் தெப்வீகப்பாடல்

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +3

    வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
    தாக்காதே தாக்குந் தனியே பராபரமே. 11.
    பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
    வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே. 12.
    வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்(கு)
    ஆனந்தம் தந்த அரசே பராபரமே. 13.
    அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த
    இன்பப் பெருக்கே இறையே பராபரமே. 14.
    வான்மெல் லாங்கொண்ட மௌனமணிப் பெட்டகத்துக்
    கானபணி யான அணியே பராபரமே. 15.
    ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்
    நாடும் பொருளான நட்பே பராபரமே. 16.
    சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்
    உத்தமர்கட் கான உறவே பராபரமே. 17.
    போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும்
    வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே. 18.
    முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே
    சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே. 19.
    ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற
    ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே. 20.

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +6

    பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்
    ஆவிக் குறுதுணையார் ஐயா பராபரமே.261.
    நின்னிறைவே தாரகமாய் நின்றுசுகம் எய்தாமல்
    என்னிறைவே பாவித்தேன் என்னே பராபரமே.262.
    நின்னைச் சரண்புகுந்தால் நீகாக்கல் வேண்டுமல்லால்
    என்னைப் புறம்விடுதல் என்னே பராபரமே.263.
    மாறாத துன்பமெல்லாம் வந்துரைத்தால் நின்செவியில்
    ஏறாத வாறேது இயம்பாய் பராபரமே.264.
    விஞ்சுபுலப் பாடனைத்தும் வீறுதுன்பஞ் செய்யவந்த
    அஞ்சுபுல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே.265.
    கன்னங் கரியநிறக் காமாதி ராட்சசப் பேய்க்
    கென்னையிலக் காகவைத்த தென்னே பராபரமே.266.
    சித்திநெறி கேட்டல் செகமயக்கஞ் சன்மமற
    முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.267.
    சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்
    எந்தவகை யாலேவந் தெய்தும் பராபரமே.268.
    கூர்த்தஅறி வால்அறியக் கூடா தெனக்குரவன்
    தேர்த்தபடி தானே திரிந்தேன் பராபரமே.269.
    பத்த ரருந்தும் பரமசுகம் யானருந்த
    எத்தனைநாள் செல்லும் இயம்பாய் பராபரமே.270.
    தீர்த்தி னால்துறவு சேராமல் இவ்வுலகில்
    பாரத் தனம்பேசல் பண்போ பராபரமே.271.
    இந்த வெளியினையுண் டேப்பமிடப் பேரறிவாத்
    தந்தவெளிக் கேவெளியாய்ச் சார்ந்தேன் பராபரமே.272.
    உணர்த்தும்உனை நாடா துணர்ந்தவையே நாடி
    இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே.273.
    உண்டுபோல் இன்றாம் உலகைத் திரமெனவுள்
    கொண்டுநான் பெற்றபலன் கூறாய் பராபரமே.274.
    உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
    கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே.275.
    சித்த மவுனஞ் செயல்வாக் கெலாமவுனஞ்
    சுத்த மவுனம்என்பால் தோன்றிற் பராபரமே.276.
    எண்ணில்பல கோடிஉயிர் எத்தனையோ அத்தனைக்குங்
    கண்ணிற் கலந்தஅருட் கண்ணே பராபரமே.277.
    எனக்கினியார் உன்போலும் இல்லையென்றால் யானும்
    உனக்கினியா னாகா உளவேன் பராபரமே.278.
    அண்டபிண்டங் காணேன் அகமும் புறமும் ஒன்றாக்
    கண்ட என்னை நீகலந்த காலம் பராபரமே.279.
    எத்தனையோ கோடி யெடுத்தெடுத்துச் சொன்னாலுஞ்
    சித்தம் இரங்கிலைஎன் செய்வேன் பராபரமே.280.

  • @varatharajanvaratharajan2092

    உள்ளம் உருகுகிறது கண்ணீரோ பெருகுகிறது ஐயா........🙏

  • @sriraji9253
    @sriraji9253 Před 4 měsíci

    குருநாதரின் திருவடிகளுக்கு கோடி நமஸ்காரம் திருமூவரின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் இலங்கை பக்தன்

  • @varatharajanvaratharajan2092

    🙏🙏🙏🙏🙏

  • @saiswaminathan8430
    @saiswaminathan8430 Před 2 lety +1

    En sath guruve anantha kodi namaskkaram.

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před rokem +1

    Thanks a lot to late swamy Saradhananda

  • @airflow270
    @airflow270 Před 3 měsíci

    அருமை ஆனந்தம் பிரபாகர் சார்
    எங்க சார் இருக்கீங்க
    பாதம் தொட்டு வணங்குகிறோம் ❤❤❤❤❤

  • @wantedevilff3210
    @wantedevilff3210 Před 7 měsíci +6

    ஊண் உருக மனம் உருக பாடலைப் பாடிய திரு. பிரபாகரனுக்கு வணக்கங்கள். கடவுளுடைய அருள் இல்லாமல் இது நடக்காது. அவரை சந்திக்க ஆவல்.

  • @Sellakasu
    @Sellakasu Před 2 lety +5

    இந்நற்பணிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @maniarasus6304
    @maniarasus6304 Před rokem

    எண்ணாத எண்ணமெலாம்எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம்
    புண்ணாகச் செய்ததினிப் பே௱தும் பராபரமே! 670

  • @gdjanardhanan123
    @gdjanardhanan123 Před 3 lety +2

    சுவாமி ஜி அவர்களுக்கு வணக்கம்

  • @ManojKumar-dz1eb
    @ManojKumar-dz1eb Před 3 lety +2

    Super

  • @radhakavi6724
    @radhakavi6724 Před 4 měsíci

    You are thr only source for my salvation ohm nams sivays

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 2 lety +8

    All these Songs are Great Contribution to Humanity

  • @saravananmanogaran3529
    @saravananmanogaran3529 Před 4 měsíci

    கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க
    எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே
    தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தார்போல் எவ்விடத்தும்
    நீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே
    எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 Před 8 měsíci +2

    ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய❤❤❤

  • @Jagath-mata
    @Jagath-mata Před 3 lety +9

    வாழி நின் பெருஞ்சீர்!!! வாழி நின் பெரும் புகழ்!!!

  • @thiyaguctr9051
    @thiyaguctr9051 Před 3 lety +8

    அமைதி சாந்தம்🙏🙏🙏🙏

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +4

    எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.221.
    முன்னாள்மெய்ஞ் ஞான முனிவர்தவம் ஈட்டுதல்போல்
    இந்நாளிற் காணஎனக் கிச்சை பராபரமே.222.
    கன்மமென்ப தெல்லாங் கரிசறவே மெய்ஞ்ஞான
    தன்மநிலை சார்ந்ததன்பர் தன்மை பராபரமே.223.
    கண்துயிலா தென்னறிவின் கண்ணூடே காட்சிபெற
    மண்டிய பேரொளிநீ வாழி பராபரமே.224.
    நானான தன்மையென்று நாடாமல் நாடஇன்ப
    வானாகி நின்றனைநீ வாழி பராபரமே.225.
    அகத்தூ டணுவணுவாய் அண்டமெல்லாந் தானாய்
    மகத்தாகி நின்றனைநீ வாழி பராபரமே.226.
    காரகமாங் கர்ப்பஅறைக் கண்ணூடும் என்கண்ணே
    வாரம்வைத்துக் காத்தனைநீ வாழி பராபரமே.227.
    புரந்தோர்தந் தேசமென்பார் பூமியைப்போ ராடி
    இறந்தோருந் தம்மதென்பார் என்னே பராபரமே.228.
    மூர்த்தியெல்லாம் வாழியெங்கள் மோனகுரு வாழிஅருள்
    வார்த்தையென்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே.229.
    சொல்லும் பொருளுந் தொடரா அருள்நிறைவில்
    செல்லும் படிக்கருள்நீ செய்தாய் பராபரமே.230.
    இற்றைவரைக் குள்ளாக எண்ணரிய சித்திமுத்தி
    பெற்றவர்கள் எத்தனைபேர் பேசாய் பராபரமே.231.
    நாடும் நகரும்நிசா னாட்டிய பாளயமும்
    ஈடுசெயு மோமுடிவில் எந்தாய் பராபரமே.232.
    தேடுந் திரவியமுஞ் சேர்ந்தமணிப் பெட்டகமும்
    கூட வருந்துணையோ கூறாய் பராபரமே.233.
    தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்
    வாடாச் சமனிலையில் வாழ்வார் பராபரமே.234.
    நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
    பாராத தென்னோ பகராய் பராபரமே.235.
    உள்ளபொருள் ஆவி உடல்மூன்றும் அன்றேதான்
    கொள்ளைகொண்ட நீயென் குறைதீர் பராபரமே.236.
    ஆழ்ந்தாயே யிவ்வுலகில் அல்லலெல்லாந் தீர்ந்தருளால்
    வாழ்ந்தாயே என்றனைநீ வாழி பராபரமே.237.
    தாரா அருளையெல்லாந் தந்தெனையும் நின்னருளின்
    வாராயோ என்றனைநீ வாழி பராபரமே.238.
    ஆசையுன்மீ தல்லால் அருளறிய வேறுமொன்றில்
    பாசம்வையேன் நின்கருணைப் பாங்காற் பராபரமே.239
    ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்னையன்றிப்
    போதனையும் உண்டோ புகலாய் பராபரமே.240.

  • @suganraj4375
    @suganraj4375 Před 3 lety +1

    Miusik super👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandinis747
    @nandinis747 Před 11 měsíci +3

    Kodi pranams Prabhakar* The divinity and melody the bhava and. intensity of bhakthi every word carries instantly connects us with the Ultimate Thanks to Ramakrishna Guru Thapovan and Prabhakar Amma

  • @dhayalananitha6597
    @dhayalananitha6597 Před 3 lety +1

    எனக்கு இந்த புத்தகம் வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏

    • @sriramakrishnatapovanam
      @sriramakrishnatapovanam  Před 3 lety

      தபோவனம் புத்தக விற்பனை நிலையம்
      கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
      +91 94879 35632

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +11

    Thanks a lot to Singer Mr.Prabhakar and Sri Ramakrishna Tapovanam

  • @user-jp3re3eg7m
    @user-jp3re3eg7m Před 2 lety +1

    அது அதுவாகவே இருக்கிறது.

  • @kumarvennavasal4875
    @kumarvennavasal4875 Před 6 lety +15

    பரம் / அன்பு/ சிவம் /ஆதிகுரு எல்லாமே ஒன்று என்கிறார் தாயுமானவர்-
    இதுவரை இப்பூவுலகில் தோன்றிய ஞானிகளில் இவரை விட எளிமையாக யாருமே நம் பிரபஞ்சத்தை பாடவில்லை.
    தேன் ததும்பும் பராபரக் கண்ணியை பரத்தில் பதிந்த மெய்ஞ்ஞான தமிழிசை வேள்வி இது. திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண தபோவனத்தின் பெரும் கொடை /
    எங்களின் அருட்கண்ணீர் சித்பவானந்தரின் பாதத்தில் உருண்டோடுகிறது-பராபரமே!
    வாழ்கவே வாழ்க இசையமைத்துப் பாடிய பிரபாகர்.
    ---------------------------------------------------------------------
    5 அல்லது 10 மதிப்பெண்ணுக்காக எங்களை ஒன்றிரெண்டு பராபரக்கண்ணியை மனப்பாடம் செய்ய வைத்த தமிழ்நாடு அரசு கல்வித்துறை, மற்றும் நம் தமிழாசிரியார்களுக்கும்;
    ஒரு பராபரக்கண்ணியை தனது caption ஆக வைத்த ஆனந்த விகடனுக்கும்;
    1998களில் தாயுமானவரின் வரலாற்றை அழகிய நாவலாக வடித்த பாலகுமாரன் அய்யாவுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

    • @panneerselvameswaran9754
      @panneerselvameswaran9754 Před 6 lety +1

      Kumar Vennavasal sir you have the book by Balakumaran on Swamijo

    • @user-mt2jr1ni9c
      @user-mt2jr1ni9c Před 6 lety +1

      Kumar Vennavasal அற்புதமான கருத்து அருமையான விளக்கம் நன்றி ஐயா

    • @kumarvennavasal4875
      @kumarvennavasal4875 Před 5 lety

      1998ல், 15ரூபாய் பாக்கெட் நாவலில் நான் படித்தேன். தற்போது தனிப்புத்தகமாக பாலகுமாரன் புத்தகங்கள் listல் கிடைக்கிறது.

  • @ashokkumar-hz1yr
    @ashokkumar-hz1yr Před rokem +1

    Vazgha valamudan

  • @ganesanramasamy9234
    @ganesanramasamy9234 Před 12 dny

    அருமைஅருமை
    இப்பாடல்பாடியவர்களுக்குமிகமிகநன்றி

  • @jayammarketing3720
    @jayammarketing3720 Před 11 měsíci +2

    Iyaa valga valga

  • @ramvis4u
    @ramvis4u Před rokem +4

    Thanks for this spiritually awakening song with lyrics in CC

  • @venkataramanan6169
    @venkataramanan6169 Před 4 lety +8

    பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி யானாலும்
    மோசம்போ னேன்நான் முறையோ பராபரமே. 41.
    நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவனார்
    என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே. 42.
    இன்றுபுதி தன்றே எளியென் படுந்துயரம்
    ஒன்றும்அறி யாயோ உரையாய் பராபரமே. 43.
    எத்தனைதான் சன்மமெடுத் தெத்தனைநான் பட்டதுயர்
    அத்தனையும் நீயறிந்த தன்றோ பராபரமே. 44.
    இந்தநாள் சற்றும் இரங்கிலையேற் காலன்வரும்
    அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே. 45.
    உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவியைநீ
    சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே. 46.
    எள்ளளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்
    தள்ளுதலால் என்னபலன் சாற்றாய் பராபரமே. 47.
    பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்கோ
    தேடி யெனையடிமை சேர்த்தாய் பராபரமே. 48.
    சொன்னதைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
    கென்னததைச் சொல்வேன் எளியேன் பராபரமே. 49.
    சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
    அல்லும் பகலுமெனக் காசை பராபரமே. 50.
    நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்
    காசையுண்டோ நீயறியா தன்றே பராபரமே. 51.
    துச்சனென வேண்டாஇத் தொல்லுலகில் அல்லல்கண்டால்
    அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே. 52.
    கண்ணாவா ரேனும்உனைக் கைகுவியா ராயின் அந்த
    மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே. 53.
    கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க
    எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே. 54.
    எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
    பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே. 55.
    வாயினாற் பேசா மவுனத்தை வைத்திருந்துந்
    தாயிலார் போல்நான் தளர்ந்தேன் பராபரமே. 56.
    அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார
    என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. 57.
    உற்றுநினைக் கில்துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப்
    பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே. 58.
    பொய்யன் இவன் என்றுமெள்ளப் போதிப்பார் சொற்கேட்டுக்
    கைவிடவும் வேண்டாமென் கண்ணே பராபரமே. 59.
    எண்ண மறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
    வண்ணந் திருக்கருணை வையாய் பராபரமே. 60.

  • @sundararajvelusamy8820
    @sundararajvelusamy8820 Před 5 měsíci +1

    உள்ளம் உருகதய்யா ❤

  • @waytosuccess122
    @waytosuccess122 Před 3 lety +7

    பராபரமே..... 🙏

  • @kailashcmi6549
    @kailashcmi6549 Před 5 lety +10

    அறுமையான பாடல் மனதை அமைதி படுத்துகிறது. நன்றி.

  • @adhirohit1990
    @adhirohit1990 Před 5 lety +11

    best song of the world

  • @kandank5027
    @kandank5027 Před 6 lety +24

    அமைதி சாந்தம் மனதி ல் ஒரு மாற்றம் அருமையான பாடல்

  • @muthucumarasamyparamsothy4747

    நன்றி ஐயா மிக அருமையான கருத்துள்ளபாடலும் இசையும்.மனதைக்குவித்து இப்பாடலைகேட்டால்,நிச்சயம் பரவசநிலைஏற்படும்.வாழ்க்கையில் அமைதிபெற்று,சந்தோசம்பெறச்சிறந்தது.