Video není dostupné.
Omlouváme se.

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பாடல் - கிருஷ்ணர் கவசம் | Krishnar Kavasam | Tamil Lyrics | Anush Audio

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2021
  • Song : Krishnar Kavasam - Krishna Jayanthi Special Song
    Singer : Poornima
    Lyrics : Senkathirvanan
    Music : Pradeep
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    பாடல் : கிருஷ்ணர் கவசம்
    குரலிசை : பூர்ணிமா
    கவியாக்கம் : செங்கதிர்வாணன்
    இசை : பிரதீப்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    அஷ்டமி நாளில் அவதரித்தவனே
    இஷ்ட தெய்வமே குழந்தை வடிவமே
    கோகுல கண்ணா கோபியர் மன்னா
    ஏழு உலகுமே வாழுது உன்னால்
    செய்யும் குறும்புகள் ஒன்றா இரண்டா
    செல்லக் கண்ணனே எழில்மிகு முகுந்தா
    வையம் செழிக்க வந்து பிறந்தாய்
    வளமாய் இருக்க நீயே வரம் தா
    அன்னையர் விரும்பும் அழகிய பிள்ளை
    அழகில் உனக்கு ஈடே இல்லை
    கண்ணா என்றால் வருவாய் ஓடி
    அன்பால் அழைக்கும் அன்பரைத் தேடி
    கார்முகில் வண்ணா கமல கண்ணா
    காண்பவர் விழிகள் மயங்குது உன்னால்
    தேரென அசைந்து நீயே வருக
    தெய்வ குழந்தையே நலமே புரிக
    மதுராபுரியில் கம்சன் தனது
    அன்பு தங்கை தேவகி மகிழ
    வசுதேவர் கையில் அடைக்கலம் தந்து
    திருமணம் நடத்தி கடமையை செய்தான்
    புதுமண மக்களை ரத்தினில் ஏற்றி
    புறப்படும் வேளை வானம் அதிர
    அசரீரி ஒன்று கம்சன் கேட்க
    அதிர்ந்தே போனான் ஆத்திரமானான்
    தேவகி வயிற்றில் பிறக்கப் போகும்
    எட்டாம் பிள்ளை உனக்கு எதிரி
    உன்னை அழிப்பான் எனும்குரல் கேட்டு
    தங்கையைக் கொல்ல அண்ணன் துணிந்தான்
    இருகரம் குவித்து வசுதேவர் வேண்ட
    சிறையினில் இருவரை விலங்கென அடைத்தான்
    இரக்கமில்லா அரக்கனைப்போலே
    ஒவ்வொரு நாளும் துன்பம் தந்தான்
    ஆறு குழந்தையும் அலறியே துடிக்க
    கூரிய வாளால் கூரிப்போட்டான்
    ஏழாம் கர்பம் இடும்மரை ரோகிணி
    சுமந்திடும் படியாய் செய்தது காலம்
    எட்டாம் முறையாய் தேவகி அன்னை
    இனிதாய் வயிற்றில் சுமந்தாள் உன்னை
    வசுதேவர் நண்பர் நண்பரின் மனைவி
    யசோதையும் கர்பிணியானாள் ஒன்றாய்
    சிறையினில் நீயும் சிரிப்புடன் பிறக்க
    பெண் சிசு ஒன்றை ஈன்றாள் யசோதை
    குழந்தைகள் இருவரை இடம் மாற்றிவைக்க
    குரல் கொடுத்தானே ஸ்ரீ ஹரி விஷ்ணு
    அதன் படி உன்னை கூடையில் சுமந்து
    ஆதிசேஷன் துணையுடன் வசுதேவர்
    யமுனையைக் கடந்து குழந்தையை மாற்றி
    பிறப்பிடம் வந்து சேர்ந்தார் விரைந்து
    எட்டாம் பிள்ளை பிறந்தது அறிந்து
    இரக்கமில்லா கம்சன் வந்தான்
    பெண் சிசு இருப்பதை வெறுப்புடன் கண்டான்
    பிள்ளையைக் கொல்ல வாளுடன் நின்றான்
    பெண் சிசு உடனே மேலே பறந்து
    உந்தன் எதிரி கோகுலம் தன்னில்
    நலமாய் வளரும் நல்ல சேதியை
    சொல்லிய உடனே மறைந்தது காற்றில்
    பத்மநாபா பாற்கடல் வாசா
    புருஷோத்தமனே பாண்டுரங்கா
    கேசவமூர்த்தி நாராயணனே
    மதுசூதனனே வாமனரூபா
    தாமோதரனே வாசுதேவா
    மாதவா மாலவா முரளிதரனே
    பார்த்தசாரதி ஸ்ரீஹரி கிருஷ்ணா
    எம் கடன் உன்னை அழைப்போம் கண்ணா
    எத்தனை நாமம் எத்தனை பெருமை
    சொல்லிடும் போதே பெருகிடும் இனிமை
    பித்தரைப்போலே எங்களை மாற்றி
    நித்தம் உன்னை நினைத்திட வைத்தாய்
    கண்ணா நீயும் மண்ணில் பிறந்த
    கரும்பாய் இனிக்கும் இன்றைய நாளில்
    உன் புகழ் பாட உருகுது நெஞ்சம்
    உலகின் உயிரினம் உன்னிடம் தஞ்சம்
    நந்தகோபர் யசோதை வீட்டில்
    செல்லப் பிள்ளையாய் நீயும் வளர்ந்தாய்
    உன் திருத்தலமே கோகுலமாகும்
    அடியவர் வந்தால் பாவங்கள் தீரும்
    சொல்லிலடங்கா லீலைகள் நடத்தி
    உள்ளம் திருடிய கள்வன் நீயே
    வெள்ளம் போலே பக்தியில் நாங்கள்
    வீழ்ந்திட வைத்த வித்தகன் நீயே
    வெண்ணெயுண்ட வாயனும் நீயே
    மண்ணைத் தின்ற மாயனும் நீயே
    கன்றுகள் மேய்த்த யாதவன் நீயே
    கைதொழுவோரைக் காப்பவன் நீயே
    ஆயர்பாடியில் ஆலயம் கொண்டு
    அருளும் உன்னை வணங்கிடுவோமே
    நவ மோகனகிருஷ்ணா என்றுனை அழைக்க
    கிழக்கு நோக்கியே நீ அருள்வாயே
    கண்ணா நீயும் செய்திடும் குறும்புகள்
    எல்லை மீறி போனதனாலே
    உன்னை உரலில் கயிறால் கட்டி
    அன்னை யசோதை தடை விதித்தாளே
    தாம்பு என்பது கயிறைக் குறிக்கும்
    உதரன் என்பது வயிற்றோன் ஆகும்
    அதுவே பின்னால் தாமோதரனென
    அகிலம் அழைக்க காரணமன்றோ
    கோகுலம் தன்னில் இன்றைய நாளில்
    ஊரே கூடி உன்னைப் போற்றும்
    ஆடல் பாடல் ஆனந்தம் பொங்கும்
    பக்தரின் உள்ளம் சந்தோஷம் காணும்
    அன்புடன் உனக்கு பூஜைகள் செய்து
    ஆசியும் அருளும் பெற்றிடத் திரள்வார்
    நன்மைகள் செல்வம் நாளும் தந்து
    நந்தகோபாலா எங்களை காப்பாய்
    குழந்தை பேறு வேண்டும் அடியார்
    நாகர்கோயில் நாடியே வருவார்
    நவநீத கிருஷ்ணன் நீயும் எமக்கு
    நல்லருள் தந்து நலமே புரிவாய்
    திருவண்ணாமலை பூதனார் ஆயனர்
    ஆலயம் தனிலே கண்ணன் நீயும்
    தேகம் பெருட்டு எழிலாய் அமர்ந்து
    தேடி வருவோர்கருள்கின்றாயே
    சனி பகவானை வணங்கிடும் நாளில்
    உன்னை வணங்கிட சங்கடம் தீரும்
    ஒன்பது கோளும் உன் கீழ் படியும்
    உலகம் வியக்கும் வளமே வழங்கும்
    உன் தாள் பணியும் உன்னடியார்க்கு
    ஒவ்வொரு நாளும் உன்னதமாகும்
    எண்ணியதெல்லாம் இனிதாய் நிகழும்
    மூன்று வயது முடியும் வரையில்
    கோகுலம் தனிலே நீயிருந்தாயே
    பூதனை அழித்து சகடாசுரனை
    சம்ஹாரம் செய்த வல்லவன் நீயே
    ஆறு வயது வரையினில் நீயும்
    பிருந்தாவனித்தில் ஆவினம் மேய்த்தாய்
    பகாசுரன் அகாசுரன் பூத கணங்களை
    மாய்த்திட்டாயே மாமணிவண்ணா
    கோபியர் நெஞ்சை கவர்ந்தவன் நீயே
    ஆடல் பாடல் ரசித்தவன் நீயே
    மதுராபுரியில் மல்யுத்தம் நடத்தி
    எதிரியை வீழ்த்தி வென்றவன் நீயே
    கலைகள் அறுபத்து நான்கையும் கற்றாய்
    மாமுனி பலரிடம் தேர்ச்சியும் பெற்றாய்
    துவாரகாபுரியில் ஆட்சியும் பிடித்தாய்
    தொழுவோர் நெஞ்சில் நீயே நிலைத்தாய்
    ருக்மணி தன்னை திருமணம் முடித்தாய்
    குருக்ஷேத்ரத்தில் கீதையும் உரைத்தாய்
    ஆண்டுகள் நூற்று இருபத்தியாறு
    உலகில் வாழ உன் பணி செய்தாய்
    ஒருநாள் உன்னை கோபியர் ஒருத்தி
    கட்டுத் தறியில் கட்டிப் போட்டாள்
    கள்வனை பிடித்த மனநிறைவோடு
    யசோதாவை அழைக்க இல்லம் சென்றாள்
    உரிய உடைத்து தயிரைக் கொட்டி
    உன் மகன் செய்யும் வேலையை பார் என
    தாயிடம் சொல்லி அழைத்தே வந்தாள்
    கட்டிய இடத்தை காண்பித்தாளே
    கன்றாய் நீயும் நின்றிருந்தாயே
    கண்டதும் அன்னை சினம் விடுத்தாளே
    யசோதை சென்று மறைந்ததும் அந்த
    கோபியர் பெண்ணே காரணம் கேட்டாள்
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

Komentáře • 37

  • @narayanasamybalakrishnan5804

    Kanna ennai kathiduvayae.karmugilvanna.🙏🙏❤️❤️🙏🙏

  • @mathialagan254
    @mathialagan254 Před rokem +1

    SRI KRISHNA SRI KRISHNA SRI KRISHNA🙏🙏🙏

  • @nandhunandy6556
    @nandhunandy6556 Před 2 lety

    Jai shree krishna paramathma 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 3 lety +7

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

  • @nandhunandy6556
    @nandhunandy6556 Před 2 lety

    Super song ❤️❤️❤️❤️🙌🙌🙌🙌

  • @malarvizhymahalingam5777

    Jai sri krishna ❤

  • @kanika5951
    @kanika5951 Před 3 lety +8

    கண்ணன் எனநான் நாவால் சொல்ல ......................
    மண்ணில் துள்ளி அழகு பொங்க ..........................
    இன்பம் தந்திடும் ஊற்றென மெல்ல ...............................
    உள்ளம் கொள்ளும் எண்ணம் யாவும் ....................................
    பள்ளம் செல்லும் வெள்ளம் போல ..................................
    பாவென அனைத்தும் மைவழி பொங்க ..................................
    தருவாய் அருளும் கருணைக் கண்ணனே!
    ஓம் கண்ணா போற்றி!
    ஓம் கிருஷ்ணா போற்றி!

  • @blackstyles202
    @blackstyles202 Před 3 lety +2

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
    வாழ்த்துக்கள்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 3 lety +3

    கண்ணாகிருஷ்ணாமுகுந்தாகேசவாமாதவா போற்றி போற்றி போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்பாண்டுரங்கன்போற்றி ஓம்மாதவன்போற்றி ஓம்பலராமன்போற்றி ஓம்கோவிந்தன்போற்றி ஹரேராமஹரேராமராமராமஹரேஹரே ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ணகிருஷ்ணகிருஷ்ணஹரேஹரே🌿🌹🌸🌷🌺🏵🌼🌻☘️🥀🍀🍌🍌🍌🍇🍐🍉🍒🍎🍋🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔱🔔🙏🙏🙏🙏🙏

  • @nandhunandy6556
    @nandhunandy6556 Před 2 lety

    Happy Krishna jayanthi 👣👣👣👣👣👣👣👣

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 Před 3 lety +1

    Iniya Krishna jayanthi vazhukkal 🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👏👏👏👏👌🏻😍😍

  • @Sangeetha23134
    @Sangeetha23134 Před 3 lety +1

    Arumai

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 3 lety +5

    அஷ்டமி நாளில் அவதரித்தவனே
    இஷ்ட தெய்வமே குழந்தை வடிவமே
    கோகுல கண்ணா கோபியர் மன்னா
    ஏழு உலகுமே வாழுது உன்னால்

  • @anandavallysockalingam5506

    Vazhthukal ma vazhka valamudan

  • @menamaaskmenamaa3507
    @menamaaskmenamaa3507 Před 3 lety +6

    Happy Birthday Appa🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 3 lety +3

    கண்ணா நீயும் செய்திடும் குறும்புகள்
    எல்லை மீறி போனதனாலே
    உன்னை உரலில் கயிறால் கட்டி
    அன்னை யசோதை தடை விதித்தாளே

  • @jayalakshmiln5600
    @jayalakshmiln5600 Před 3 lety +4

    Hare Krishna 🙏🙏

  • @SakthiSeelan-qo1pr
    @SakthiSeelan-qo1pr Před 2 měsíci

    ❤❤❤❤❤❤

  • @KALLANDAPERUMAL_SINGER

    ஆயனே மாயனே மாதவனே யாதவனே.. குழந்தை வடிவோனே.. கீதையின் நாயகனே ராதையின் காதலனே.. கோகுல மைந்தனே.. கோபியர் நாயகனே.. கண்ணா கிருஷ்ணா...🙏🙏🙏🙏🙏

  • @kuppusamyt684
    @kuppusamyt684 Před 2 lety +1

    Super 👍👍👍🙏🙏🙏

  • @rajaratnampathmanathan2034

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹

  • @Sandylub
    @Sandylub Před 3 lety +7

    கார்முகில் வண்ணா கமல கண்ணா 🤗🤗😍 காண்பவர் கண்கள் மயங்குது உன்னால்🤗😘ஹரே கிருஷ்ணா 💙✨

  • @ramachandranb6784
    @ramachandranb6784 Před 3 lety +1

    Super 👌 🙏🙏🙏🙏🙏🙏

  • @gunanidhikalanidhi4852

    Really this is not
    Like a kavasam like a krishna life story

  • @smsm8608
    @smsm8608 Před 3 lety +3

    TNQ TNQ TNQ ANUS AUDIOS

  • @dhanalakshmidhanalakshmi6281

    😘😘❤️😘👍👍

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 3 lety +3

    👌👌👌👌👌👌👌👌⚘

  • @dhanalakshmidhanalakshmi6281

    🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 3 lety +6

    தாம்பு என்பது கயிறைக் குறிக்கும்
    உதரன் என்பது வயிற்றோன் ஆகும்
    அதுவே பின்னால் தாமோதரனென
    அகிலம் அழைக்க காரணமன்றோ

  • @saravanan-pr6dr
    @saravanan-pr6dr Před 11 měsíci

    😢😮😅😊😊🎉🎉❤❤

  • @gunanidhikalanidhi4852

    Very slow little faster please

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Před 3 lety

    JsiSriKridhns