🛑வங்கதேசத்தில் பரபரப்பு.. மாணவர்களை தமிழகத்திற்கு மீட்டெடுத்த அரசு|அமைச்சர் செந்தில் மஸ்தான் speak

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • பங்காளதேஷில் இருந்து முதற்கட்டமாக 49 மாணவர்கள் சென்னை வந்தனர் அயலக நலத்துறையில் வெளிநாடு செல்லும் மாணவர்களும் பதிவு செய்ய வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
    வங்கதேசத்தில் வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் மற்றும் கலவ்ரம் நடந்து வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தூதரக அதிகாரிகள் முலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பங்காளதேஷில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப இயலாத சூழலில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் முலம் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பங்காளதேஷ் எல்லையில் வந்த கிருஷ்ணகிரி, கடலூர், தர்மபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 49 மாணவர்கள் முதற்கட்டமாக கொல்கத்தா, கவுகாத்தி, அகர்தலா ஆகிய பகுதிகளின் விமான நிலையங்களில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் முலம் சென்னை வந்தனர்.
    சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் முலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
    தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வங்கதேசம் சென்று படித்து வந்த மாணவர்கள் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது முதற்கட்டமாக 49 மாணவர்கள் பத்திரமாக வந்துள்ளனர்.
    மேலும் 2வது கட்டமாக 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.
    தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.
    மாணவர்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான முறையில் மாணவர்களை அழைத்து வரும் பணியில் ஈடுப்பட்டு உள்ளோம்.
    எந்த நாட்டிற்கு படிக்கவோ, வேலைக்கோ சென்றாலும் அயலக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து உள்ளனர். படிக்க சென்றுள்ள மாணவர்கள் பட்டியலை கேட்டு உள்ளோம். சில மாணவர்கள் பதிவு செய்து உள்ளனர். சிலர் பதிவு செய்ய தயங்குகின்றனர். இது போன்ற சம்பவங்களின் போது பதிவு செய்ததால் பாதுகாப்பான நிலை இருக்கும் என மாணவர்கள் நினைக்கும் சூழ்நிலை உள்ளது.
    மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டிய பணி நடைபெற்று வருகிறது. கல்வியை தொடர வேண்டியது குறித்து மாணவர்கள் தெரிவிப்பார்கள். பதட்டம் ஒரளவு தணிந்து இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 144 தடை உத்தரவு போட்டதால் ஒரளவு சகஜ நிலை இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை திரும்பிய சேலம் மாணவி ஆசிபா கூறுகையில்,
    கடந்த ஒரு வாரமாக நாங்கள் நிறைய சிரமங்கள் சந்தித்தோம். உணவு, இணைய வசதி இல்லாமல் இருந்தோம். முதலமைச்சர் உத்தரவின் பேரில் எல்லையில் தமிழக அரசு முகாம் அமைத்து உணவு வழங்கி விமான டிக்கெட் போட்டு பாதுகாப்பாக அழைத்து வந்து உள்ளனர்.
    இணைய வசதி இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் பேச முடியாத நிலை இருந்தது. தூதரக அதிகாரிகள் முலமாக எல்லை வரை வந்து சேர்ந்தோம்.
    144 தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளதால் எங்களால் விடுதியில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை.
    தமிழகம் மற்றும் இந்திய மாணவர்கள் யாரும் அங்கு தாக்கப்படவில்லை என கூறினார்.
    கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவி ஹர்சிகா கூறுகையில்,
    பங்காளதேஷ் எல்லையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் கலவ்ரம் ஆரம்பிக்காத இடமாக இருந்ததால் தூதரக அதிகாரிகள் முலம் எல்லைக்கு வந்தோம். தமிழக அரசு முலமாக விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தோம். கல்லூரி விடுதியில் யாரும் வெளியே வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
    மதுரையை சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா கூறுகையில்,
    டாக்காவில் தமிழக மாணவர்கள் நிறைய பேர் அங்கு உள்ளார்கள். நாங்கள் எல்லையில் இருக்கவே நாங்கள் முதலில் இங்கு வந்து விட்டோம்.
    இன்னும் நிறைய பேர் அங்கு உள்ளார்கள். அங்கு இணைய வசதி முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    இங்கு மீண்டும் இது போன்ற செயல் நடக்காது என்று அரசு சொல்லும் வரை நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் என்றார்.
    கிருஷ்ணகிரியை சேர்ந்த சூர்யா கூறுகையில், பங்காள தேஷ் எல்லையை கடந்து இந்திய எல்லையான அகர்தலாவிற்கு வந்து சேர்ந்து தமிழக அதிகாரிகளிடம் பேசினோம். 10 நிமிடத்தில் விமான டிக்கெட் வந்து சேர்ந்து. தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டது போலீஸ் வந்து எங்களை பாதுகாப்பாக அழைத்து எல்லையில் விட்டு விடுகின்றனர் என்றார்.
    தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சிறப்பு குழு அமைத்து உள்ளோம். தூதரக அதிகாரிகள் முலம் கண்காணித்து பாதுகாப்பாக எல்லைக்கு வரக்கூடியவர்களை அழைத்து வரப்படுகின்றனர். பதற்றம் ஏற்படும் பகுதியில் உள்ள தூதரக ம் முலம் மாணவர்கள் கண்கானிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Komentáře •