முயல் வேட்டை | Legal Rabbit hunting | கிராம திருவிழா | பெரம்பலூர் மாவட்டம் | Weired hunting

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2022
  • Legal Rabbit hunting in Tamil Nadu
    குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல் வேட்டைக்கு காட்டு பகுதிக்குள் புறப்பட்டு சென்றனர். அவர்கள் காடுகளில் புதர்களில் மறைந்து இருக்கும் முயல்களை வேட்டையாடினர்
    Rabbit hunting festival in the villages of Perambalur district
    பெரம்பலூரில்_முயல்_வேட்டை_திருவிழா
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துறைமங்கலம், எளம்பலூர், சிறுவாச்சூர், சத்திரமனை, கீழக்கணவாய், குரும்பலூர், அரணாரை, செஞ்சேரி, அம்மாபாளையம், லாடபரம், மேலப்புலியூர், நாவலூர், களரம்பட்டி, தம்பிரான் பட்டி ஆகிய 14 கிராமங்களில் மற்றும் ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட சில கிராமங்களிலும் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் வீட்டுக்கு ஒருவர் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு கூடினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்தவுடன், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல் வேட்டைக்கு காட்டு பகுதிக்குள் புறப்பட்டு சென்றனர். அவர்கள் காடுகளில் புதர்களில் மறைந்து இருக்கும் முயல்களை வேட்டையாடினர்.
    இதையடுத்து வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் மாலை கூடினர். அப்போது அங்கு வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு வருகை புரிந்தனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, பின்னர் அங்கிருந்து முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஊர்வலத்தின் போது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, ஊர்வலமாக அழைத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு முயல்களை பலி கொடுத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் முயல் கறி சமமாக பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலேயே அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து, உண்டு மகிழ்ந்தனர்.
  • Zábava

Komentáře • 6